வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

என்னுடைய ஓட்டு இரட்டை இலைக்கு உங்கள் ஓட்டு யாருக்கு?

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான்  இரட்டை இலைக்கு வாக்களிக்கப் போகிறேன். இரட்டை இல்லை அந்த தகுதியை பெற்றுள்ளதா என பார்த்தால். இரட்டை இலை அந்த தகுதியை பெறுகின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

காங்கிரசுக்கும், தி மு க விற்கும் இனி  எக்காலத்திலும் நான் வாக்களிக்க மாட்டேன் என்றுதான் நினைக்கின்றேன்.  ராஜபக்சே கொத்து கொத்தாய் ஈழத்தமிழர்களை கொன்று  குவிக்க காரணமாக இருந்த இந்த இரண்டு கட்சிகளும் இனி ஆட்சிக்கே வரக்கூடாது என்பதே என்னுடைய ஆசை.

இந்திய அளவிலும் உலக அளவிலும் தமிழனை தலைகுனிய வைத்த 2ஜி ஊழல் செய்த திமுகவுக்கும் பல ஊழல் புரிந்த காங்கிரசுக்கும் ஒட்டுபோடுபவர்களின் அறியாமயை என்னவென்று சொல்ல?

இன்று திமுகவிற்கும் காங்கிரசுக்கும் ஒட்டுப்போடுபவர்கள் சொல்லும் ஒரே காரணம். மதசார்பின்மை.  அது என்ன மண்ணாங்கட்டி மதசார்பின்மை என தெரியவில்லை. பாஜ கவிற்கு ஆதரவு தருவார்கள், மந்திரி பதவி பெற்றுக்கொள்வார்கள் ஆனால் மதசார்பின்மை என்று சொல்லி இப்பொழுது அவர்களுக்கு ஒட்டுபோடவேண்டாம் என்பார்கள்.

குஜராத் கலவரத்தின் போதும் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தவர்கள் தான் இந்த் சிறுபான்மையினர் நலவாதிகள். ஆனால் அம்மா  பொடாவால் பயம் காட்டியவுடன்   உதவிக்கு பாஜக  வராததால் கூட்டணியை முறித்து  கொண்டு அடுத்து காங்கிரசுடன் கூட்டணி கண்டு ஊழல் புரிந்தவர்கள் தான் இவர்கள்.

இப்பொழுது கூட மோடி எனது நல்ல நண்பர், உழைப்பாளி என்று கூறி பாஜக கூட்டணிக்கு தயாராக இருந்த இவர்களுக்கு முஸ்லிம்கள் ஓட்டாம். கேட்டால் மதசார்ப்பின்மையாம்.

தமிழகத்தை பொருத்தவரை திமுக தரை மட்டமாக்கப்பட வேண்டும். கடந்த ஆட்சியில் திமுக வின் ரௌடிகளினால் மக்கள் பட்ட பாடு போதும்.

அம்மா ஆட்சியை பொருத்தவரை முதன் முதல் முதல்வரான பொழுது செய்த ஊழல்தான் அவர் செய்த ஒரே குற்றம்.

தன்னுடைய இரண்டாவது ஆட்சியில் எந்த  பிரச்சனையும் இல்லை. இன்று சென்னையில் தண்ணீர் பிரச்சனை இல்லை என்றால் அதற்க்கு அம்மாதான் காரணம்.

இன்றைய அம்மாவின் ஆட்சியில் பிரச்சனை இல்லையா என்றால் உண்டு. மின்வெட்டு தான் இந்த ஆட்சியின் மிகப்பெரும் குறை. 8000 மெகா வாட்டிலிருந்து  12000 மெகா வாட்டாக உற்பத்தியை பெருக்கி  இருந்தாலும் எத்தனை மணி நேரம் மின்சாரம் வீட்டிற்கு வருகிறது என்பதே பொது மக்களின் கணக்கு. அந்த விதத்தில் இது ஒரு குறையே.

மற்றபடி அம்மாவின் இந்த ஆட்சி திருப்தியாகவே உள்ளது. எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. மலிவு விலை உணவகம், மலிவு விலை குடி நீர்,சிற்றுந்து  என்பன மக்களுக்கு பெரிதும் பயன் அளிக்கின்றது. விலையில்லா மடிக்கணினி,வீட்டு உபயோக பொருட்கள், தானே புயல் நிவாரனத்தால் பலரும் பயன் அடைந்துள்ளனர்.

திமுகவின் ஆட்சியை போல மனஉலைச்சலை அம்மாவின் ஆட்சி தரவில்லை என்பதால் இரட்டை இலைக்கே  என்னுடைய ஓட்டு.

தமிழர்களை கொன்ற திமுகவிற்கா உங்கள் ஒட்டு?
பாஜக கூட்டணிக்கு நீங்கள் ஒட்டளித்தாலும் அது திமுகவுக்கு சாதகமாக அமையும். திமுக வெற்றி பெறவா உங்கள் ஓட்டு?

ஊழல் பற்றி கேள்வி கேட்டதினால்தான் எம்ஜிஆர்  வெளியேற்றப்பட்டார் அன்று முதல் இன்றவரை ஊழலில் திளைக்கும் திமுகவிற்கா உங்கள் ஒட்டு?

சிந்தித்து வாக்களியுங்கள். திருடர்கள் கையில் ஆட்சியை கொடுத்து விடாதீர்கள்.

என்னுடைய ஓட்டு இரட்டை இலைக்கு..உங்கள் ஓட்டு யாருக்கு?

24 கருத்துகள்:

 1. அம்மா ஆட்சியில் எல்லாமே அராஜகம் தான் ....

  1.வந்தவுடனேயே எல்லா பொருள்களின் வரியையும் உயர்த்தினார் .
  2.அடுத்து பேருந்து கட்டணத்தை உயர்த்தினார் 50% வரை .
  3.அடுத்து மின்சார கட்டணத்தை உயர்த்தினார் 60% வரை
  4.CBSE க்கு இணையான தரத்துடன் அமல்படுத்தப்பட்ட சமர்சீர் கல்வியை முடக்கி 2 மாதம் பள்ளிகளில் பாடமே நடக்காமல் செய்தார். பின்னர் நீதிமன்றத்தில் கேவலப்பட்டு மீண்டும் அமல்படுத்தினார்
  5.ஆசியாவின் மிக பெரிய நூலகத்தை மண்டபமாக்க முயற்சித்தார். அறிவுள்ள ஒருவனும் இதை ஏற்க மாட்டான் .. உங்களுக்கு எப்புடி?..அதிலும் நீதிமன்றம் கேட்ட வார்த்தையில் திட்டாத குறையாக கண்டனம் தெரிவித்தது
  6. புதிய சட்டமன்றத்தை தனக்கு வாஸ்த்து சரியில்லை என்று அதை முடக்கியது .கேட்டால் இட வசதி இல்லையாம். அந்த எஸ்டேட் மவுண்ட் ரோட்டிலிருந்து பீச் வரைக்கும் காலியா இருக்கு. ஆனா இவருக்கு இடம் இல்லையாம் ...முட்டா பயல்கள் மட்டும்தான் இதை நம்புவார்கள் நீங்க எப்புடி ?
  7.8000MW ,12000MW ஆனதுக்கு காரணம் கருணாநிதி தொடங்கிய திட்டங்கள் நடைமுறைக்கு வந்ததால் .இவர் ஆட்சி வந்த பிறகு திட்டமிட்ட எல்லாம் இன்னும் டெண்டர் நிலையையே தாண்டவில்லை. எப்புடி கரண்டு வரும்
  8.மெட்ரோ ரயில் திட்டத்தை மோனோ ரயிலா மாத்த போறேன்னு அடம் புடிச்சாங்க .. வேலை பாதி முடிஞ்சுருச்சு இனி ஒன்னும் பண்ண முடியாதுன்னு வேற வழி இல்லாம அதை அப்படியே விட்டுட்டு இப்போ வெக்கம் இல்லாம போய் போஸ் குடுக்குறாங்க ..
  9. மூணு வருஷ ஆட்சியில புதிதாக தொடங்கப்பட்ட ஒரு தொழிற்சாலை சொல்ல முடியுமா ? தொழில் வளர்ச்சிக்கு ஏதாவது செய்தாரா? 6% GDP 3கு வந்ததுதான் மிச்சம் ..

  இப்படி எல்லா வகையிலும் கேவலமான கழிசடையான எந்த முன்னேற்றமும் இல்லாத ,அதற்க்கான சிந்தனையும் இல்லாத ஆட்சியை மானமுள்ள தமிழன் எவனும் ஆதரிக்க மாட்டான் ...நீங்க எப்புடி ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இப்னு,

   பெட்ரோல் டீசல் விலை உயரும்பொழுது பிற பொருட்களின் விலை, பேருந்து கட்டணத்தை உயர்த்தத்தான் வேண்டும். நீங்கள் கூட்டணியில் இருந்த காங்கிரசை ஏன் எந்த கேள்வியும் கேட்காவில்லை.

   சமசீர் கல்வி பாடநூல் போன்ற கேவலமான மிக மட்டமான பாட நூல்களை நான் படித்ததே இல்லை. அவ்வளவு பிழைகள் முதலில் ஏதேனும் ஒரு புத்தகத்தை படித்து பார்த்து விட்டு மேற்கொண்டு பேசவும்.இதுபற்றி பிறகு பதிவு எழுதுகிறேன்.

   சட்டப்பேரவைக்கு அம்மாவால் பார்த்து வைக்கப்பட்ட இடத்தில் வேண்டும் என்றே நூலகத்தை கட்டியது யார்? வேண்டும் என்றே அவர் செய்ததால் இவரும் செய்தார்.

   பொய் சொல்ல கூடாது தமிழகத்தின் GDP 4.1%. இது குறைவு என்றாலும் இதற்க்கு காரணம் மின்வெட்டுதான். மின்வெட்டை முதலில் கொண்டுவந்தது யார் என்று நான் சொல்ல வேண்டுமா?

   40000 கோடி கடன் சுமையையும் 4000 MW மின்குறைவையும்தான் விட்டு சென்றது திமுக. அதை சரி செய்யவே இந்த ஆட்சியில் இதுவரை நேரம் சரியாகிவிட்டது. இந்த ஆட்சியில் மட்டும் 2500 MW புதிதாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

   தொழில் முனைவோரை ஊக்குவிக்க 25 லட்சம் வரை அரசு மானியம் வழங்குகிறது.

   பல நான்கு சக்கர வாகன,உபரி தொழிற்சாலைகளை கொண்டுவந்தது போல இப்பொழுத் வானவூர்தி தொழிற் பூங்காவை விமான நிலையத்திற்கு அருகில் கொண்டுவந்துள்ளது, இப்பொழுது செயல்படுத்தப்படுகிறது. இது முடிவடையும் பொழுது 100,000 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்ப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


   உங்கள் திருடர்கள் முன்னேற்ற கழகம் பற்றி நான் கூறிய கருத்துக்களுக்கு எதிர் கருத்து கூறாததன் மூலம் நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்கள்தானே?

   நீக்கு
  2. முதலில் ஒன்றை தெளிவு படுத்தி கொள்கிறேன் ..நான் திருடர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவன் இல்லை . ஆனா இந்திய அரசியலிலே எனக்கு பிடிக்காதது ஜெயலலிதாதான்.

   உங்களுடைய எல்லா பதிலும் ஜெயாவின் திமிர் சரிதான் என்று சொல்கிறதே தவிர அவர் நல்லது செய்தார் என்று சொல்ல வில்லை,

   சமச்சீர் கல்வி புத்தகத்தை முழுமையாக நான் படித்திருக்கிறேன் . இருந்த பாட திட்டத்தை விட தரத்தில் , சொல்லி கொடுக்கும் விதத்தில் பல மடங்கு உயர்வானது அது . உங்க மனசாட்சியிடம் கேளுங்கள் ஜெயா அதை தடை செய்ய எழுத்து பிழை தான் காரணமா என்று ? அது குத்தும் உங்களை .

   //சட்டப்பேரவைக்கு அம்மாவால் பார்த்து வைக்கப்பட்ட இடத்தில் வேண்டும் என்றே நூலகத்தை கட்டியது யார்? வேண்டும் என்றே அவர் செய்ததால் இவரும் செய்தார்//
   நீங்களே ஒத்து கொண்டீர்கள் ஜெயாவின் பழி நடவடிக்கை இது என்று .ஜெயாவை எப்படி ஆதரிக்கிறீர்கள்?.

   மின்வேட்டையே இன்னும் எத்தனை நாளுக்குத்தான் சொல்லி கொண்டு இருப்பீர்கள் ? ஜெயா ஆட்சிக்கு வந்து 3 வருடம் முழுதாக முடிந்து விட்டது .

   //இந்த ஆட்சியில் மட்டும் 2500 MW புதிதாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது//.. 2500MW உற்பத்தி செய்யவே ஜெயாவுக்கு 3 வருடம் வேணுமுன்னா 4000MW பற்றாக்குறைக்கு கருணாவுக்கு நீங்கள் இன்னும் 5 வருடம் கொடுத்திருக்க வேண்டும்.இந்த 2500ம் கருணாவால் தொடங்கப்பட்ட உற்பத்தி நிலையங்களின் செயல்பாட்டால் வந்தது .ஜெயா இன்னும் தான் உட்டுட்டு இருக்காங்க.இந்த அளவுக்கு வேகமா செயல்பட்டுகிட்டு இருக்காங்க

   //பல நான்கு சக்கர வாகன,உபரி தொழிற்சாலைகளை கொண்டுவந்தது போல// எங்க கொண்டு வந்தாங்க ? குறிப்பிட்டு சொல்லணும்.

   //தொழில் முனைவோரை ஊக்குவிக்க 25 லட்சம் வரை அரசு மானியம் வழங்குகிறது.//அப்புறம் ஏன் ஒரு பயலும் தமிழ் நாட்டுல வந்து தொழில் மாட்டேங்குறான். சட்டமன்றத்தில் பேசும் அடிமைகள் மாதிரி பதில் சொல்ல கூடாது. கண்மூடிதனமா கூடாது .

   //பொய் சொல்ல கூடாது தமிழகத்தின் GDP 4.1%. இது குறைவு என்றாலும் இதற்க்கு காரணம் மின்வெட்டுதான்// கருணா காலத்திலையும் மின் வெட்டு இருந்துச்சு அப்போ ஏன் கொறயல ?

   //பெட்ரோல் டீசல் விலை உயரும்பொழுது பிற பொருட்களின் விலை, பேருந்து கட்டணத்தை உயர்த்தத்தான் வேண்டும். நீங்கள் கூட்டணியில் இருந்த காங்கிரசை ஏன் எந்த கேள்வியும் கேட்காவில்லை// ஜெயா இதை எல்லாம் கூட்டினதுக்கு பெட்ரோல் விலை காரணம் இல்லை. தான் அறிவித்த இலவசங்களை கொடுக்க தான்னு அவங்களே சொல்லிட்டாங்க.

   //உங்கள் திருடர்கள் முன்னேற்ற கழகம் பற்றி நான் கூறிய கருத்துக்களுக்கு எதிர் கருத்து கூறாததன் மூலம் நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்கள்தானே?// ... ஒரு முக்கியமான விஷயம் ஊழல் பத்தி பேசுறதுக்கு ஜெயாவுக்கும் ஜெயாவை ஆதரிக்கின்றவர்களுக்கும் எந்த அருகதையும் கெடையாது .. அவங்களே 50000000 கோடி ஊழல் வழக்குல இப்போவோ அப்பவோன்னு இழுத்துகிட்டு இருக்காங்க ..வெட்கம் இல்லாம மத்தவங்கள பத்தி பேச எப்புடி மனசு வருது ?இவங்க மந்திரி சபைல உள்ளாட்சி அமைச்சரா இருந்த செல்வகணபதி இவங்க கூட சேர்ந்து செஞ்ச ஊழலுக்காக இப்போ உள்ள இருக்கார் தெரியுமோ ? அவரும் தி மு க MP தான் ...... அவர் ஊழல பத்தி ஜெயா வாயே தொறக்கல ........ தொரக்கவும் முடியாது ஏன்னா ரெண்டும் கூட்டு கலவானிக தானே ......

   அதனால இந்த ஊழல் ராணி திமிர் பிடித்த சொந்த அறிவே இல்லாமல் சொசியகாரன் சொன்னான்னு எதை வேண்டுமானாலும் செய்யும் இந்த அறிவிலிக்கு பரப்புரை செய்யாமல் ........//போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க ...... சும்மா ஜோக்கு ..dont take it seriously ....//

   நீக்கு
  3. வாங்க இப்னு,
   சரி வேற யாருக்கு ஒட்டு போடலாம்னு சொல்லுங்க.....புள்ள குட்டிகள படிக்க வைக்க போகணும் :)

   நீக்கு
  4. press the NOTA button..lets tell them we are fed up with this politics..otherwise give ur vote to an independent.......

   நீக்கு
  5. Hi Ibnu,
   I don't see any benefit in pressing NOTA. Because.Because anyway somebody is going to elected. So I wanted to make sure that I vote to the less corrupt or criminal.
   What do you say is it better to vote to less corrupt? or allowing the most corrupt to come to power by not voting?

   நீக்கு
 2. என்னோட ஓட்டு ஒரு நாய்க்கு அத பத்திலாம் உமக்கு ஏன் கவலை நீர் எங்கே வேண்டும்னா குத்தும் :-))

  பதிலளிநீக்கு
 3. amma ku sema JJJJJJJJJJ poduringa pola..

  en vote udhayasooriyam for Alandur Assembly
  and bambaram for sriperumbudhur loksabha

  amma will soon be blocked in Bangalore..

  பதிலளிநீக்கு
 4. //என்னுடைய ஓட்டு இரட்டை இலைக்கு உங்கள் ஓட்டு யாருக்கு?

  வெகு நிச்சயமாக இ.இ.க்கு எப்போதும் கிடையாது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தருமி ஐயா,
   வேறு யாருக்குதான் உங்க ஓட்டு?

   நீக்கு
 5. ஓட்டு வாங்கும் தகுதி அதிமுக உட்பட எவருக்கும் தகுதி இல்லை!!
  என் ஓட்டு நோட்டா சகோ
  நன்றி!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ சார்வாகன்,
   ரொம்ப நாளாச்சு நலமா?
   உங்கள் முடிவு தவறு சகோ. தகுதி இருக்கோ இல்லையோ...குறைவாக குறை உள்ளவர்களை தேர்ந்தெடுப்பதே நல்லது. நோட்டாவினால் எந்த பயனும் இருப்பதாக இப்போதைக்கு தெரியவில்லை.

   நீக்கு
 6. பதில்கள்
  1. Alienஅவனுங்களும் படு மோசமான ஆளுங்கதான். டெல்லி ஆட்சியை விட்டு விட்டு மோடிக்கு எதிரா நின்னு என்னத்த சாதிக்க போறார்கள். டெல்லியில் போற இடத்த்துல இல்லாம் பளார் பளார்னு ஏன் அறை விழுது?. வெறுப்பு. சிந்தித்து பாருங்க. அடுத்தது அரவிந்த அறையப்போறது நீங்கதான்னு நினைக்கிறேன் :)

   நீக்கு
 7. தலைவரே (வவ்வால்),
  ஆம் ஆத்மி ங்கிற நாய் ஒகே வா?

  பதிலளிநீக்கு
 8. தமிழகத்தில் உள்ள பெரும்பாலானோர் வீடுகளில் மக்கள் வரிப்பணத்திலிருந்து வழங்கப்பட்ட விலையில்லாப் பொருட்கள் உள்ளது. எங்கும் எதிலும் அம்மையார் படம். அதை தினமும் பர்ர்க்கும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 4 வோட்டுக்கள். கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

  அவரது கட்சியினர் ஒருவர்கூட தலைவியின் பெயரையே உச்சரிக்கத் தயங்கும் அளவு உருவாக்கப் பட்டிருக்கிறார்கள்.

  எனது ஓட்டு நிச்சயம் அதிமுக-விற்கு இல்லை. மதச்சார்பின்மை கூறி வேசம் போடாத கட்சிக்குத்தான்.

  கோபாலன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மதச்சார்பின்மை கூறி வேசம் போடாத கட்சிக்குத்தான்.//
   அப்படி ஒரு கட்சி இருக்கா என்ன? சொல்லுங்க நானும் அவர்களுக்கு ஓட்டு போட தயாரா இருக்கேன்.

   நீக்கு
 9. இரட்டை இலைக்கு, அம்மாவுக்கு வாக்களிப்பதை நான் ஒருபோதுமே நினைத்தும் பார்க்க மாட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ்நாட்டுக்கு எது நல்லதுனு நான் நினைக்கிறேனோ அத சொன்னேன். நீங்க யாருக்க போடலாம்னு சொல்லுங்க சிந்திப்போம் நண்பா.

   நீக்கு
 10. //ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த இந்த இரண்டு கட்சிகளும் இனி ஆட்சிக்கே வரக்கூடாது என்பதே என்னுடைய ஆசை.//

  ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்தது என்கின்றபோ கொஞ்சம் சிந்தித்து பாருங்க நண்பர். சிரியாவானாலும், ஆப்கானிஸ்தானாலும், சிறிலங்காவானாலும் புனித யுத்தம் என்று சொல்லி யுத்தம் புரியும் யுத்த வெறி கொண்ட பன்னாடைகளின் யுத்த வெறிக்கு முதலில் பலியாவது அப்பாவி மக்களே என்ற உண்மையை நீங்க முதலிலே உணர்ந்துக்கணும்.
  உங்க தலைவி அம்மா அப்போ ஒரு உண்மை மட்டும் சொன்னாங்க போர் என்றால் மக்கள் இறப்பாங்க என்று. கலைஞருக்கு கூட அந்த உண்மையை மக்களிடம் சொல்லும் துணிச்சல் இருக்கல்ல. யுத்தத்தில் இலங்கை தமிழர்கள் கொல்லபட காரணமான அப்பாவி தமிழ் மக்களை பயணம் பிடித்து வீர போர்(?) புரிந்த அதை ஊக்குவித்த வெளிநாடுகளில் இருந்து பணம் பெறும் புலிகளின் தமிழக செயற்பாட்டவர்களை தான் நீங்க இதற்காக குற்றம் சாட்டணும்.இந்திய முக்கியமான அரசியல் கட்சிகளை அல்ல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இந்திய முக்கியமான அரசியல் கட்சிகளை அல்ல.// இவர்கள் தான் இலங்கை அரசுக்கு பல உதவிகள் செய்தார்கள். இவர்களுக்கும் கொலையில் பங்கு உண்டு. இன்னும் ராஜபக்சேவை காப்பாற்றுவதும் இவர்களே.அதனால்தான் இவர்களை குறை சொல்கிறேன்.

   நீக்கு
 11. வணக்கம் நண்பர்களே

  உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...