வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 13 ஆகஸ்ட், 2014

ஜிகர்தண்டா செம தண்டம்?

 நான் ஒரு சாதாரண ரசிகன். படங்களுக்கு நான் செல்ல இரண்டு  காரணங்கள். ஒன்று பொழுது போக்கு, இரண்டாவது ஏதாவது கற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில். நான் திரைப்படங்களை இந்த இரண்டு அளவுகோலின்படிதான் மதிப்பீடு செய்வேன். கூடவே சமுதாய அக்கறையும் சேர்ந்துகொள்ளும்.

படம் ஆரம்பித்த கொஞ்ச  நேரத்தில்  படம் மரண மொக்கையாக இருக்குமோ என்று தோன்றியது. ஆங்காங்கே நகைச்சுவையோடும், மிரட்டலோடும், திருப்பங்களோடும் படம் செல்கிறது.ஒரு சில இடங்களில் நிச்சயமாக அட! போட  வைத்துள்ளார். படம் இடையில் கொஞ்சம் என்னடா இது :( என்றும் சொல்ல வைக்கிறது. இறுதியில்  சுபமாக முடிகிறது.

ஜிகர்தண்டா  ஒரு நல்ல பொழுதுபோக்கு படமா என்றால் சுமார் என்றுதான் சொல்வேன்.
ஜிகர்தண்டா  ஒரு வித்திய்சாமான முயற்சியா என்றால் எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை.

சித்தார்த்- தவிர்த்திருக்க வேண்டிய படம்.
பாபி சிம்மா - இயக்குனருக்கு நிச்சயம் கடமைப்பட்டுள்ளார். இப்படத்தின் நாயகன் இவர்தான். இவரை திரையில் பார்த்த உடன் சிரிப்பு தான் வந்தது. இறுதியிலும் அவ்வாறே முடிந்தது.

விஜய் சேதுபதி - இந்த படத்தின் நடுவே ஏன் இவரை காட்டுகிறார் கள்  என்று புரியவில்லை. விளம்பரங்களிலும் இவருக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? என்ன அரசியலோ...ஏற்றுகொள்ளும்படி இல்லை.

 கார்த்திக் சுப்புராஜ் - இப்படத்தின் இயக்குனர். பிட்சா என்ற  படத்தை தந்தவர். இப்படத்திலும் பிட்சா போலவே  சில திருப்பங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.

ஜிகர்தண்டா  - கொஞ்சம் சுவை, கொஞ்சம் சலிப்பு.  

2 கருத்துகள்:

  1. புரச்சிமணி,

    //இரண்டாவது ஏதாவது கற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில். //

    அப்போ பொண்ணுங்கள ஈவ் டீசிங் செய்யவும், டாஸ்மாக்கில சரக்கடிச்சிட்டு சலம்பல் பண்ணவும் கத்துக்கிட்டிங்களா பேஷ் பேஷ் :-))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வவ்வால் வணக்கம் வருக :)
      தங்களை நீண்ட நாட்களுக்கு பிறகு காண்பதில் மிக்க மகிழ்ச்சி.
      உங்கள் பின்னூட்டத்திற்கு பதிலாக ஒரு பதிவை விரைவில் வெளியிடுகிறேன்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...