சில நாட்களாக சில பதிவர்கள் விநாயகர் பற்றி சங்க இலக்கியங்களில் இல்லை அதனால் அவர் தமிழர்களின் கடவுள் அல்ல என்று கூறினர். சங்க இலக்கியங்களில் விநாயகர் இருக்கிறா இல்லையா என்பது எனக்கும் தெரியாது.
அந்த பதிவர்கள் திருமந்திரத்தில் விநாயகர் பற்றி எந்த குறிப்பும் இல்லை என்றனர். திருமந்திரத்தின் காலம் சர்ச்சைக்குரியது. ஆனால் அதில் விநாயகர் பற்றி எந்த குறிப்பும் இல்லை என்பது அவர்களின் அறியாமை எனலாம். எல்லோரும் எல்லாமும் கற்க இயலாது. கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு. அதனால் நான் அவர்களை குறை கூறவில்லை. தவறான செய்தி நிலைநிறுத்தப்படக் கூடாது. வாய்மையே வெல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.
சரி திருமந்திரத்தில் விநாயகர் பற்றி எங்கே உள்ளது?
உண்மையில் விநாயகர் பற்றி திருமந்திரத்தில் பாடல்கள் உண்டா இல்லையா என்பது எனக்கும் தெரியாது :)
பின்பு ஏன் இந்த பதிவு எனலாம்...சற்று பொறுங்கள்...
விநாயகர் பற்றி நேரடியாக திருமந்திரத்தில் உள்ளதா இல்லையா என்பது எனக்கும் தெரியாது.
ஆனால் விநாயகரின் சமயம் பற்றி திருமந்திரம் கூறுகிறது என்றே நான் நினைக்கின்றேன்.
சில பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆறு முக்கிய சமயங்கள் இந்தியாவில் இருந்ததாக செய்திகள் உள்ளன. திருமந்திரப் பாடல்கள் சில இந்த ஆறு சமயங்களை தொட்டு செல்கிறது.அந்த ஆறு சமயங்களில் ஒன்று விநயாகரை அல்லது கணபதியை தெய்வமாக கொண்ட காணபத்தியம் என்பர்.
பின்வரும் பாடல் வரிகளை காண்க
"சமையங்கள் ஆறும் தன் தாள் இணை நாட"
"ஆம் ஆறு உரைக்கும் அறு சமய ஆதிக்குப்"
என்ற இப்பாடல்கள் மூலம்......திருமந்திர காலத்திற்கு முன்பு ஆறு முக்கிய சமயங்கள்இருந்துள்ளது என்பது தெரியவருகிறது. ஆறு சமயங்களில் ஒன்று விநயாகரை வணங்கும் சமயம் என்று பிற நூல்கள் மூலம் தெரியவருகிறது. எனவே விநயாகரை வணங்கும் வழக்கம் திருமந்திர காலத்திற்கு முன்பே தமிழகத்தில் இருந்துள்ளது என்பதை அனைவரும் ஏற்பர் என்றே நம்புகிறேன். மாற்று கருத்து உள்ளவர்கள் தெரிவிக்கவும்.
விநாயகர் சங்க இலக்கியங்களில் இருக்கலாம் அது நமக்கு தெரியாமால் இருக்கலாம். விநாயகர் சங்க இலக்கியங்களில் இல்லை என்பதால் அவர் தமிழர் கடவுள் இல்லை என்று ஏளனம் செய்ய வேண்டாம்.
இந்திரன் பற்றி சங்க காலத்து சிலப்பதிகாரத்தில் உண்டு என்பதால் அவரை தமிழர் கடவுள் என்று இவர்கள் ஏற்ப்பார்களா என எனக்கு தெரியவில்லை.
என்னைப்பொருத்த வரை உலகில் யார் எந்த கடவுளை வணங்கினாலும் அவர்களது உரிமையை மதிக்க வேண்டும்.ஏளனம் செய்யக்கூடாது. தமிழர் கடவுள் எனபதற்கு எந்த ஒரு இலக்கணமும் இல்லை."தமிழர் வணங்கும் எந்த கடவுளும் தமிழர் கடவுளே" என்று நாம் இலக்கணம் வகுத்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். இவ்விலக்கனத்தின் படி ஏசுவும் அல்லாவும் கூட தமிழர் கடவுள்களே.
தமிழ் வளர்த்ததால் முருகனை தமிழ் கடவுள் என்கிறோம் தவறில்லை. (சிவனும் தமிழ் வளர்த்ததாக கூறுகின்றனர்.)
தமிழ் கடவுள் வேறு தமிழர் கடவுள் வேறு இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
---> "விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களின் சிந்தனைக்கு" <---
பதிலளிநீக்கு.
ஆபாசம் என்று நினைத்தால் இவ்வுலகின் பிறந்த ஒவ்வொரு உயிரின் பிறப்பும் ஆபாசமே.
நீக்குஇவ்விடயத்தில் பகுத்தறிவு குருடர்களின் உண்மையான நோக்கம் இந்துக்களுக்கு தாழ்வு மனப்பானமையை ஏற்ப்படுத்தி மதமாற்றத்திற்கு துணை போவதே. சீர்திருத்தமே இவர்களின் உண்மையான நோக்கம் என்றால் இசுலாமிய கிருத்துவ மதங்களில் உள்ள ஆபாசங்களை அச்சிட்டு,பரப்புரையாற்றலாமே. அதற்க்கு தைரியம், ஆண்மை உண்டா?
சீர்திருத்தம் இன்றியமையாதது என்பதை நான் ஏற்கிறேன். அதே நேரத்தில் எந்த மாதிரியான விடயங்களில் சீர்திருத்தம் தேவை என்பதில் எனக்கு மாற்று கருத்து உண்டு. இசுலாமிய கிருத்துவ மதங்களில் ஆபசாமாக கூறப்படும் விடயங்களையும் நான் ஆபாசமாக பார்ப்பதில்லை. ஏன் எனில் இவை எல்லாம் அக்கால வரலாற்றின் எச்சங்கள். அதை அந்த விதத்தில் மட்டுமே பார்க்க வேண்டும். எந்த விடயத்தால் மனித குலத்திற்கு ஆபத்து நேருகிறதோ அதில் தான் சீர்திருத்தம் தேவையே தவிர...பிள்ளையாரை ஒழிப்பதால் யாதொரு நன்மையும் யாருக்கும் இல்லை
இந்த பதிவு சம்பந்தமாக உங்களிடம் கருத்து இருந்தால் தெரிவியுங்கள்,. கேள்வி இருந்தால் கேளுங்கள். மற்றவர்களின் கருத்தை இங்கே இழுதி என்னுடைய நேரத்தை வீணாக்காதீர்கள்.இப்பதிவிற்கு சம்பந்தமற்ற பிறரின் கருத்துக்கள் நீக்கப்படுகிறது. நன்றி
நீக்குதமிழகத்தில் பல்லவர்களின் ஆட்சி காலத்தில், பல்லவர்களின் படைத் தளபதி பரஞ்சோதி அவர்களால், வாதாபியில்இருந்து கொண்டுவரப்பட்ட கணபதிதான், தமிழ் நாட்டிற்கு வந்த முதல்கணபதி என்று படித்திருக்கிறேன் ஐயா
பதிலளிநீக்குஇன்றைக்கும் வாதாபி கணபதி என்னும் பெயரில், பரஞ்சோதியின் சொந்த ஊரான திருவெண்காடு என்ற ஊரில் இருப்பதாக படித்திருக்கிறேன்
ஐயா,
நீக்குதங்களுடைய மேலதிக தகவலுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி