வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

திங்கள், 27 அக்டோபர், 2014

அம்மா பால் வருமா?

அம்மா உணவகம், குடிநீர், உப்பு, மருந்தகம்,சிமெண்ட் வரிசையில் அம்மா பால் வருமா என்பது என்னுடைய சந்தேகம்.வரவேண்டும் என்பதே பலரது விருப்பமாகவும் இருக்கும் என நம்புகிறேன்.

பால் கொள்முதல் விலையேற்றத்தினால் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள். அதேநேரத்தில் நுகர்வோர்கள் பாதிக்கப்படுவார்கள். சில நேரங்களில் விலை ஏற்றம் என்பது தவிர்க்க இயலாதது. மேலும் இது காலத்தின் கட்டாயமாகவும் இருக்கின்றது.

கொள்முதல் விலையை ஐந்து ரூபாய்க்கு ஏற்றினால் அதே ஐந்து ரூபாய்க்கு பால் விலையையும் ஏற்றி இருக்க வேண்டும். பத்து ரூபாய் ஏற்றியது ஏன் என்று சிந்தித்தால்...ஊழியர்களின் சம்பளம், எரிபொருள்  மற்ற பிற செலவுகளை கணக்கில் கொண்டு உயர்த்தி இருப்பார்கள் என நினைக்கின்றேன்.

பால் என்பது குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் மிக மிக அத்தியாவசியமான உணவுப்பொருள். இதனால் சிரமப்பப்பட போவது நிச்சயமாக ஏழைகளே. ஏழைகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மட்டும் குறைந்த விலையில் பால் கிடைக்க அரசாங்கம் ஆவன செய்யவேண்டும். அம்மா பால் நிச்சயம் ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும். செய்யுமா அரசு? வருமா அம்மா பால்? அல்லது குறைந்த விலை ஆவின்பால்?

6 கருத்துகள்:

 1. மிகச் சரியான கோரிக்கை
  சொல்லிச் சென்றவிதமும் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

   நீக்கு
 2. அருமையான யோசனை ஐயா
  அரசு செயற்படுத்தினால் மகிழ்வோம்
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...