வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 8 அக்டோபர், 2014

கர்நாடக நீதிமன்றம் என்பதால் பிணை மறுக்கப்படலாம் என சுப்பிரமணியம் சுவாமி எதிர்பார்த்தது சரியா?

அம்மாவிற்கு பிணை கிடைக்காது என தான் எதிர்பார்த்ததாகவும் அதற்க்கு இரண்டு காரணங்களையும் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

முதல் காரணம்:

//லாலு பிரசாத் யாதவ், சுக்ராம், மதுகோடா, ஓம் பிரகாஷ் சவுதாலா போன்றவர்களின் ஊழல் வழக்கில், எலலாருக்கும் அவ்வளவு எளிதாக ஜாமின் கிடைத்து விடவில்லை. ஊழல் வழக்கை இப்படித்தான்,ரொம்பவும் சீரியஸாகவே கோர்ட் பார்க்கிறது.//

இரண்டாவது காரணம்

//கர்நாடகா உயர் நீதிமன்றமும், அங்கிருப்பவர்களும் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் தீர்க்கமாக இருப்பவர்கள் என, பலரும் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். அதனால் தான், ஆரம்பத்தில் இருந்தே ஜெ., ஜாமின் அவ்வளவு எளிதல்ல என, நான் சொல்லி வந்தேன்//

முதல் காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால் இரண்டாவது காரணம்?

//கர்நாடகா உயர் நீதிமன்றமும், அங்கிருப்பவர்களும் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் தீர்க்கமாக இருப்பவர்கள்// என்று சுவாமி கூறுவதன் மூலம் அவர் இரண்டு செய்தியை மறைமுகமாக தருகிறார்.

ஒன்று. சில  நீதிமன்றங்கள் ஊழலுக்கு  எதிராக இல்லை.
இரண்டாவது: கர்நாடகா நீதிமன்றம் என்பதால்தான் அவருக்கு பிணை மறுக்கப்பட்டது...அல்லது மறுக்கப்படும் என்று அவர் எதிர்பார்த்தார்.


நீதிமன்றம் எங்கு இருந்தாலும் தீர்ப்பு ஒரேமாதிரியாக  வரும் என்றால்தான் நீதித்துறை ஒழுங்காக உள்ளது என அர்த்தம். மாநிலத்திற்கு மாநிலம் தீர்ப்பு வேறுபாடும் என்றால் அது சரியான நீதித்துறை அல்ல.

//கர்நாடகா உயர் நீதிமன்றமும், அங்கிருப்பவர்களும் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் தீர்க்கமாக இருப்பவர்கள்//  என சுப்பிரமணியம் கூறுகிறார்..."இதேபோல கர்நாடகா அரசாங்கமும் , அங்கிருப்பவர்களும் அம்மாவிற்கு  எதிரான நிலைப்பாட்டில் தீர்க்கமாக இருப்பவர்கள்" என்பதை அனைவரும் அறிவர்.

இது  சந்தேகத்தை அதிகப் படுத்துகிறதா அல்லது  இது சுவாமியின் தவறான பேச்சா  அல்லது இது என்னுடைய தவறான புரிதலா எனபதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

அம்மா செய்தது குற்றம் என்றே நானும் நினைக்கின்றேன்.இருப்பினும் தீர்ப்பில் சந்தேகம் உள்ளதை மறுப்பதற்கில்லை. அம்மாவே தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டாள் அவர் அரசியல்வாதிகளுக்கு ஒரு முன் மாதிரியாக திகழ்வார். ஒருவேளை குற்றம் செய்யவில்லை எனில் அதை நிரூபித்தே ஆகவேண்டிய கடமை அவருக்கு உண்டு.

2 கருத்துகள்:

  1. ஒருவருக்கு, தான் நிரபராதி என்று நிரூபிக்க அனைத்து வசதிகளையும் சட்டம் தரவேண்டுமல்லவா
    மேல் முறையீட்டிற்கு வழி இருக்கும் பொழுது, ஜாமின் மறுப்பது, மீண்டும் மீண்டும் மறுப்பது, பல வகையான ஊகங்களுக்கு வழிவகுக்கிறதே

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் ...இதற்க்கு அவர்கள் கூறும் காரணம் இது ஊழல் வழக்காம்...நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...