வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வியாழன், 30 ஜூலை, 2015

கலாம் மற்றும் யாக்குபின் வாழ்க்கை நமக்கு சொல்வது என்ன?

இருவருமே பிறப்பால் இசுலாமியர்....
இருவருமே நன்கு கல்வி கற்றவர் ...
இருவருமே குரானை படித்தவர்கள் தான்....
கலாம் அனைத்து மக்களையும் நேசித்தார்....
யாக்குப் மக்களை கொன்றான் ...
கலாம் மதத்ததை கடந்தவர்...யாக்குப் மதத்தால் மரணித்தவன்
மதத்தை கடந்தால் மகானாகலாம் என்று கலாம் வாழ்க்கை சொல்கிறது
மதவெறி பழிவாங்கும் வெறி கொண்டு மக்களை கொன்றால் கொல்லப்படலாம் என்று யாக்குப் வாழ்க்கை சொல்கிறது

கலாமின் வாழ்க்கையும் யாக்குபின் வாழ்க்கையும் நிச்சயம் படிப்பினைதான்...இதை சரியாக புரிந்து கொண்டால் நீங்களும் மகானாகலாம் தவறாக புரிந்து தவறாக நடந்தால் கொல்லப்படலாம்.

கலாமின் மரணம் எனக்கு வருத்தத்தை தரவில்லை .....
அவர் கடைசி மூச்சு உள்ளவரை மக்களுக்காக உழைத்து கொண்டிருந்தார் என்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.வருத்தமும் கொஞ்சம் உண்டு...இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் உயிரோடு இருந்திருக்கலாமே என்று.

யாக்குபின் மரணம் எனக்கு சற்று வருத்தத்தை தந்தது இந்தியா நீதி தவறி விட்டதோ என்று...
--------------------------------------------------

கலாம் பற்றிய சில எதிர்மறை விமர்சனங்களை  படிக்க நேரிட்டது...அவை அர்த்தமற்றவை....அவர்களில் ஒரு சிலர் அடுத்த யாகூபாக கூட மாறலாம் எனபது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
அவர்களுக்கு அவர்கள் வழியிலேயே எனக்கு பதில் சொல்ல தெரியும். என்னுடைய கருத்துக்கள் பிற நல்ல இசுலாமியர்கள் மனதையும் புண்படுத்தும் என்பதால் என்னுடைய  எதிர்வாதத்தை இங்கு தவிர்க்கிறேன்.

 கலாம் கூடங்குளம் குழுவினரை சந்தித்து தன்னுடைய கருத்தை பகிர்ந்து கொண்டிருக்கலாம். மற்றபடி அவர் கூடங்குளம்  விடயத்தில் தவறு செய்தார் என்பதற்கில்லை.

யாக்குப் பற்றி சில நேர்மறை விமர்சனங்களை படிக்க நேர்ந்தது...அவற்றில் பாதி அர்த்தமற்றவை....பாதி அர்த்தம் உள்ளவை.
யக்குப் நிரபராதி அல்ல ...அவர் விசாரணைக்கு ஒத்துழைத்தும் மரணதண்டனை அளித்தது என்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.

இனி ஒரு யாக்குப்  இந்த மண்ணில் பிறக்க கூடாது...யாரும் யாக்குபாக மாறக்கூடாது
இனி பல கலாம்கள் பிறக்க வேண்டும்...பலரும் கலாம்களாக மாற வேண்டும்
அதற்க்கு எல்லாம் வல்ல இறைவன்,கடவுள், இயற்கை துணை நிற்கட்டும்.

என்றும் மனிதத்துடன்
இராச.புரட்சிமணி 

6 கருத்துகள்:

  1. அனைவரும் படிக்க வேண்டி பதிவு!அருமையான கருத்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  2. பாரபட்சமற்ற கருத்துக்கள்! யாக்கூப்புக்கு நிறைவேற்றப்பட்ட தண்டணை இங்கே இருக்கும் தீவிரவாதிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  3. அருமையான பதிவு.அறிஞர் கலாம் எல்லோருக்கும் ஒரு ரோல் மாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் வேகநரி. கலாம் மதத்தை கடந்து மக்களை நேசித்தார். இதை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...