எந்த அரசியல் கட்சி தலைவராவது தன்னுடைய தொண்டர்களை பார்த்து மது அருந்தாதீர்கள் என்று கூறியது உண்டா? மது அருந்துவதின் பாதகங்களை எடுத்துரைத்தது உண்டா? மதுவிற்கு அடிமையாக உள்ளவர்களை எப்படி மீட்பது என்று சிந்தித்து சொன்னதுண்டா? இதை எதையும் செய்யாமல் போராட்டம் நடத்துபவரை போலி மது ஒழிப்பு போராளிகள் என்றுதானே சொல்லவேண்டும்?
எனக்கு தெரிந்து ஒரு சில அரசியல் தலைவர்கள் உண்மையாகவே மது ஒழிப்பிற்காக குரல் கொடுத்து வருகின்றனர். அதில் முக்கியாமானவர் மருத்துவர் ஐயா அவர்கள். இவர் அவப்பொழுது போராட்டங்களும் அறிக்கைகளும் விட்டு வருகின்றார். அடுத்ததாக வைகோ அவர்களை சொல்லலாம். இவர் மது விலக்கை வலியுறுத்தி நடைபயணம் செய்துள்ளார். நடை பயணத்திற்கு பிறகு இவர் இதில் எந்த அளவு அக்கறை காட்டினர் என்பது தெரியவில்லை.(இப்பொழுது நடத்தும் போராட்டங்கள் தவிர்த்து).
மது விலக்கு வேண்டிய இந்த தலைவர்கள் தங்கள் தொண்டர்களுக்கு தன்னுடைய கருத்தை எடுத்து கூறி இருக்கின்றனரா? குடிக்கின்ற எத்தனை பேரை இவர்கள் திருத்தியுள்ளனர்? முதலில் ஒருவன் ஏன் குடிக்கின்றான் என்ற உளவியல் காரணம் இவர்களுக்கு தெரியுமா? மது கிடைக்காவிட்டால் ஒருவனின் மனநிலை என்னவாகும் என்று இவர்களுக்கு தெரியுமா?மதுவால் அடிமை பட்டுள்ளவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது எப்படி என்ற திட்டத்தை முன் வைத்துள்ளனரா?
எனக்கு தெரிந்து இவ்வாறான செயல்களில் இவர்கள் ஈடுபடவில்லை என்றே நினைக்கின்றேன். இவர்களிடம் இதற்கான திட்டங்கள் இருக்கலாம். ஆனால் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. இதுவரை திட்டங்கள் இல்லை எனில் இனி சிந்தித்து திட்டங்களை வகுக்க வேண்டும்.செயல்படுத்த வேண்டும். இவர்களை தவிர்த்து இன்று தமிழகத்தில் நடக்கும் மது ஒழிப்பு போராட்டங்களில் பல போலியானது. பலர் இதை அரசியலாக்கவே முற்படுகின்றனர்.
மதுவிலக்கு பற்றி பேச திமுகவிற்கு எந்த அருகதையும் கிடையாது. அம்மாவின் ஆட்சியில் குறை சொல்ல ஏதுமில்லை என்பதால் மது விலக்கு என்று நாடகம் ஆடுகின்றனர். இதர உதிரி கட்சிகளும் அரசியல் லாபத்திற்காகவே போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
ஐயா சசி பெருமாள் அவர்களின் மரணம் வேதனையானது. அவர் கோபுரத்தில் ஏறி இருக்க கூடாது. அவரை தூண்டிவிட்டவர்கள் மீது ஏன் எந்த வழக்கும் போடவில்லை?
மது விலக்கு போராட்டம் என்று வன்முறையில் இறங்காமல் அமைதியான முறையில் போராடவேண்டும். இவ்விடயத்தில் போராட்டத்தை விட விழிப்புணர்வே அவசியம். கட்சிக்காரகர்களுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும்.
திரைப்படங்களில் வரும் மது, புகைபிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
படிப்படியாகத்தான் மது விலக்கை அமுல் படுத்த வேண்டும். நிச்சயம் மதுவிலக்கு சாத்தியம். எப்படி என்பதை மற்றும் ஒரு பதிவில் பார்க்கலாம்.
இப்பொழுது நடக்கின்ற போராட்டங்கள் எல்லாம்
பதிலளிநீக்குஓட்டிற்காக நடக்கின்ற போராட்டங்களாகவே தோன்றுகிறது.
இத்தனை ஆண்டுகள் குடித்துக் குடித்தே வளர்ந்தவனை, திடீரென்று ஒரே நாளில்குடிக்காதே என்பது சாத்தியமா?
அவர்களுக்கான மாற்று சிகிச்சை முறைகள் என்ன இருக்கின்றன.
மதுவிலக்கினைக் கொண்டு வருவதற்கு முன்சிகிச்சை முறைகளை அல்லவா ஊரெங்கும் கொண்டுவர வேண்டும்
நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
நீக்கு