இன்றைய நிலையில் மிகப்பெரிய மதங்களாக கருத்தப்படுவது இந்து, இஸ்லாம், கிருத்துவம். இவற்றிற்குள் பல ஒற்றுமைகள் உள்ளது. இங்கே நான் சொல்லப்போவது ஒரே ஒரு ஒற்றுமை.
அந்த ஒற்றுமை சொல்வது மிகப்பெரிய மிக சூட்சுமமான உண்மை. இது சிலருக்கு தெரிந்திருக்கலாம்.
அது என்ன ஒற்றுமை?
அதுதான் அ உ ம். இது அனைத்து மதங்களிலும் முக்கிய இடம் பெறுகின்றது. இது இல்லையேல் உலகமும் இல்லை உயிரும் இல்லை
என்பது சிலரின் கருத்து. இது இந்து மதத்தில் ஓம் என்று அழைக்கப்படுகின்றது.
இது இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தில் ஆமின் என்றழைக்கபடுகின்றது.இந்த மதத்தில் ஓம் என்பது எதற்கும் முதிலில் உபயோகப்படுத்தப் படுகின்றது. இதேபோல் கிருத்துவம் மற்றும் இஸ்லாமில் ஆமின் என்பது எதற்கும் முடிவில் உபயோகப்படுத்தபடுகின்றது.
இந்த ஓம் என்பதன் முக்கியத்துவம் இந்து மதத்தில் உள்ள பலருக்கு தெரியும் என்று நினைக்கிறேன். ஆனால் ஆமின் என்பது எப்படி ஏன் வந்தது என்பது இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தினருக்கு தெரியமா எனபது சந்தேகமே.
கிருத்துவம் மற்றும் இஸ்லாமில் உள்ள மிகப்பெரிய குறை என்னவெனில் அவர்கள் பைபிள் மற்றும் குரானை தாண்டி சிந்திப்பதே இல்லை. அப்படி சிந்தித்தாலும் அதை தன் மதத்திற்கு மட்டும் எப்படி சாதகமாக்குவதே என்று சிந்திக்கின்றனர். இதை எப்படி மனித சமுதயாத்திற்கு சாதகமாக்குவது என்று சிந்திப்பதே இல்லை.
அ உ ம் என்பது மிகப்பெரிய ரகசியம் பொருந்திய உண்மையான ஒற்றுமை. இதை ஏன் அனைத்து மதங்களும் பயன் படுத்த வேண்டும்?
அனைத்தின் மூலம் இதுதான் எனபதை அவர்களின் முன்னோர்கள் உணர்ந்திருந்தனர் என்பதையே காட்டுகின்றது.
மூலமே ஒன்றாக இருக்கும் பொழுது
நான் வேறு நீ வேறு என்பது எப்படி சாத்தியம்?
என் கடவுள் வேறு உன் கடவுள் வேறு என்பது மூடத்தனம் அல்லவா?
அனைத்து மக்களும் ஒருவனின் படைப்பே எனும் பொழுது....
என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் எனபது மூடத்தனத்தின் உச்சம் அல்லவா?
சிந்தியுங்கள் மக்களே...சிந்தியுங்கள்.
இது சம்பந்தமான இரு பதிவுகள் உங்கள் பார்வைக்கு