வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

Monday, June 20, 2011

எல்லா மொழியின் முதல் எழுத்தும் அ என்பது உங்களுக்கு தெரியுமா?

உலகில் உள்ள அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அ தான் என்பது  உங்களுக்கு  தெரியுமா?   ( மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்கலாம்).  அது தமிழானாலும் சரி... ஆங்கிலம் ஆனாலும் சரி...அரபியானாலும்  சரி. இது ஏன்? எப்படி சாத்தியம் என்று கேட்டால் எனக்கு பதில் தெரியாது. தெரிந்தவற்றை சொல்ல முயல்கிறேன்.


 நமது வள்ளுவரின் முதல் குறள் என்ன சொல்கிறது
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

இதற்கு பொருள்

'' மு.வ : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
நன்றி:தினமலர் "

ஆனால் இந்த குறளுக்கு உண்மையான பொருள் எப்படி இருக்க வேண்டும் எனில்

 "எப்படி  அனைத்து மொழிகளின் எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றதோ அதுபோல் உலகமானது கடவுளிலிருந்தே தொடங்கியது".

அதாவது மற்ற அறிஞர்கள்  கூறியது போல் அல்லாமல் எழுத்துக்களுக்கு பதில் மொழி என்று இருக்க வேண்டும் எனபதே என் கருத்து.

(வள்ளுவர் தமிழ் எழுத்துக்களுக்கு மற்றும் இதை சொல்லி இருக்க வாய்ப்பு  இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது அவர் அனைத்து மொழிகளுக்கும் தான் இதை கூறி இருக்க வேண்டும்)
எனக்கு தெரிந்து அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அகரத்தில் தான் ஆரம்பிக்கின்றது.

ஏன் அனைத்து மொழிகளும்  அகரத்தில் ஆரம்பிக்க வேண்டும்? தெரியவில்லை....ஒரு வேலை இதுவும் கடவுளின் செயலா?

ஒருவேளை வள்ளுவர் மொழியைக் காட்டி கடவுளை நிரூபிக்கின்றாரா?
வள்ளுவர் கடவுள் என்று எதை குறிப்பிடுகிறார்  என்பது ஆய்வுக்குரிய ஒன்று ஆனால் கடவுளிலிருந்தே உலகம் தோன்றியது என்ற கூற்றில் அவர் உறுதியாக உள்ளார்.

உலகத்தில் முதலில் ஒரு வார்த்தை தோன்றியது  என்று வேதங்களும் கூறகிறது பைபிளும்  கூறுகிறது...
அது என்ன எழுத்து?
ஓம் எனும் எழுத்துதான் அது.

சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
இருக்கின்றது...உண்மையில் அது ஓம் அல்ல
அது "அ உ ம்"  என்ற வார்த்தை தான்.அதாவது அகரம் உகரம் மகரம் என்பார்கள் இதை.
அடிக்கடி சொல்ல சொல்ல அது "ஓம்" என  மாறும்.

ஆக உலகில் முதலில் எழுந்த  ஒலி  அகரம் ஆதலால் தான் அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அகரத்தில் ஆரம்பிக்கின்றது.


இவ்வுலகில் பிறந்த அனைவரும் ஓம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள்  என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
ஆனால் அதுதான் உண்மை.

ஒவ்வொரு மனிதனின்  மூச்சு காற்றும்  ஓம்  என்று தான் சொல்லும்....உன்னித்து கவனித்து பாருங்கள். ஓம் நின்றால் உயிர் இல்லை உலகும்  இல்லை.ஆக உலகில் முதலில் எழுந்த  ஒலி  அகரம் ஆதலால் தான் அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அகரத்தில் ஆரம்பிக்கின்றது. அது மட்டுமல்ல அந்த அ உ ம - ஓம் ஒலியினால் தான் இவ்வுலகமே இயங்குகின்றது. 
 

40 comments:

 1. //மதுரை சரவணன் said...

  nalla vilakkam... vaalththukkal. thotarattum//
  thangal paaraattukku nandri sarvanan

  ReplyDelete
 2. ஆகா அருமை அருமை..

  வள்ளுவரையே மிஞ்சிட்டீக ?!

  ஏற்கனவே என்னையும் உங்களையும் தவிர எல்லோரும் திருக்குறளுக்கு பொருள் எழுதிட்டாங்க..
  இப்போ நீங்களும் என்னை மட்டும் விட்டுட்டு ..
  திருக்குறளுக்கு பொருள் எழுத ஆரம்பிச்சிட்டீக...
  அவ்வ்வ்வ்..


  //"எப்படி அனைத்து மொழிகளின் எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றதோ அதுபோல் உலகமானது கடவுளிலிருந்தே தொடங்கியது".//

  எழுத்து என்பதற்கும் - மொழி என்பதற்கும் பேதம் தெரியாதவரா திருவள்ளுவர் ?

  சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து
  சிறிசா இருக்கையில் திருத்திக்கோ...
  தவறு சிறிசா இருக்கையில் திருத்திக்கோ..

  தவறாக நினைக்காதீர்கள் தோழரே..

  உலகையே ஒண்ணே முக்கால் அடிக்குள் அடக்கிய திருவள்ளுவருக்கு,

  எழுத்து என்பதற்கும் - மொழி என்பதற்கும் பேதம் தெரியாது போனது என்பதை ஏற்க முடியவில்லை..

  எமது கருத்துக்களில் பிழையிருப்பின் பொறுத்தருள்க..

  ReplyDelete
 3. //
  ஆக உலகில் முதலில் எழுந்த ஒலி அகரம் ஆதலால் தான் அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அகரத்தில் ஆரம்பிக்கின்றது. அது மட்டுமல்ல அந்த அ உ ம - ஓம் ஒலியினால் தான் இவ்வுலகமே இயங்குகின்றது.
  //

  புதிய தகவல் நன்றி

  ReplyDelete
 4. //
  ஓம் எனும் எழுத்துதான் அது.

  சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
  இருக்கின்றது...உண்மையில் அது ஓம் அல்ல
  அது "அ உ ம்" என்ற வார்த்தை தான்.அதாவது அகரம் உகரம் மகரம் என்பார்கள் இதை.
  அடிக்கடி சொல்ல சொல்ல அது "ஓம்" என மாறும்.

  ஆக உலகில் முதலில் எழுந்த ஒலி அகரம் ஆதலால் தான் அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அகரத்தில் ஆரம்பிக்கின்றது. //

  Super Mani :)

  ReplyDelete
 5. //

  சிவ.சி.மா. ஜானகிராமன் said...

  ஆகா அருமை அருமை..

  வள்ளுவரையே மிஞ்சிட்டீக ?!

  ஏற்கனவே என்னையும் உங்களையும் தவிர எல்லோரும் திருக்குறளுக்கு பொருள் எழுதிட்டாங்க..
  இப்போ நீங்களும் என்னை மட்டும் விட்டுட்டு ..
  திருக்குறளுக்கு பொருள் எழுத ஆரம்பிச்சிட்டீக...
  அவ்வ்வ்வ்..


  //"எப்படி அனைத்து மொழிகளின் எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றதோ அதுபோல் உலகமானது கடவுளிலிருந்தே தொடங்கியது".//

  எழுத்து என்பதற்கும் - மொழி என்பதற்கும் பேதம் தெரியாதவரா திருவள்ளுவர் ?

  சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து
  சிறிசா இருக்கையில் திருத்திக்கோ...
  தவறு சிறிசா இருக்கையில் திருத்திக்கோ..

  தவறாக நினைக்காதீர்கள் தோழரே..

  உலகையே ஒண்ணே முக்கால் அடிக்குள் அடக்கிய திருவள்ளுவருக்கு,

  எழுத்து என்பதற்கும் - மொழி என்பதற்கும் பேதம் தெரியாது போனது என்பதை ஏற்க முடியவில்லை..

  எமது கருத்துக்களில் பிழையிருப்பின் பொறுத்தருள்க..//  அடியாரே , உங்கள் கருத்து எனக்கு புரியவில்லை.
  நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் வள்ளுவர் எழுத்து என்று எழுதியுள்ளதால் அதை எழுத்து என்று தான் எடுத்து கொள்ள வேண்டுமா. மொழி என்று எடுத்து கொள்ள கூடாதா? நான் மற்ற அறிஞர்கள் அதாவது மு.வ மற்றும் சாலமன் பாப்பையா எழுத்தை மொழி என்று பொருள் படுத்தி இருக்க வேண்டும் என்றுதானே கூறியுள்ளேன். வள்ளுவரை நான் குறை கூறவில்லையே. அவர் கூறிய எழுத்துக்கு மொழி என்று பொருள் படுத்துவதே சரி என்ற முறையில் தானே கூறி யுள்ளேன்.....உங்களின் விளக்கம் தேவை...நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே :)

  ReplyDelete
 6. //"என் ராஜபாட்டை"- ராஜா said...

  //
  ஆக உலகில் முதலில் எழுந்த ஒலி அகரம் ஆதலால் தான் அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அகரத்தில் ஆரம்பிக்கின்றது. அது மட்டுமல்ல அந்த அ உ ம - ஓம் ஒலியினால் தான் இவ்வுலகமே இயங்குகின்றது.
  //

  புதிய தகவல் நன்றி
  //


  இதை படிப்பதால் என் நன்றி உங்களுக்கும்

  ReplyDelete
 7. //"என் ராஜபாட்டை"- ராஜா said...

  என்று எனது வலையில்

  ஆத்தாவா?தாத்தாவா ?- மாறன் குழப்பம்
  //

  படித்தேன்...இருப்பினும்...இவர்களை மறக்க நினைக்கின்றேன் :)

  ReplyDelete
 8. //

  தனி காட்டு ராஜா said...

  //
  ஓம் எனும் எழுத்துதான் அது.

  சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
  இருக்கின்றது...உண்மையில் அது ஓம் அல்ல
  அது "அ உ ம்" என்ற வார்த்தை தான்.அதாவது அகரம் உகரம் மகரம் என்பார்கள் இதை.
  அடிக்கடி சொல்ல சொல்ல அது "ஓம்" என மாறும்.

  ஆக உலகில் முதலில் எழுந்த ஒலி அகரம் ஆதலால் தான் அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அகரத்தில் ஆரம்பிக்கின்றது. //

  Super Mani :)//
  உங்களை போன்ற ஒரு ஆராய்ச்சியாளர் சூப்பர் என்று சொல்வதால்...இது சூப்பர் தான் போல :)

  ReplyDelete
 9. //

  சி.பி.செந்தில்குமார் said...

  அடேங்கப்பா//
  "அட்ரா சக்க" அப்படின்னு சொல்வீங்கன்னு நினைச்சேன் :)....பரவா இல்ல....நன்றி

  ReplyDelete
 10. வணக்கம் புரட்சித் தோழரே..

  //எமது கருத்துக்களில் பிழையிருப்பின் பொறுத்தருள்க..//

  என்று குறிப்பிட்டிருக்கிறேனே கவனிக்கவில்லையா ?
  உங்கள் கருத்தை நீங்கள் எழுதுவது போல எனது கருத்தை நான் பின் ஊட்டமிடக் கூடாதா ?

  ஒரு வலைப் பதிவரை புகழ்ந்து மட்டுமே பேச வேண்டும் என்பதில் நியாயம் இருக்காது..

  வலைப்பதிவர் என்பதை விட நீங்கள் எனக்கு நல்ல நண்பர் என்பதையே நான் அதிகம் யோசிக்கிறேன்..

  ஆதலால் வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப,

  நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
  மேற்சென்று இடித்தற் பொருட்டு..

  என்னும் திருக்குறளுக்கு ஏற்ப
  நான் உங்களுக்கு ஆலோசனைகள் வழங்கலாம் தானே ?

  இல்லை.. எனக்கு ஆலோசனைகள் பிடிக்காது என்று சொல்லுங்கள்..

  இனி பின் ஊட்டங்களில் புகழ்ந்து பேசிவிட்டு விட்டுவிடுகிறேன்.

  பின் ஊட்டம் என்பது நம்மை ( பதிவரை ) ஊக்கப்படுத்துவது மட்டுமல்ல தோழரே

  பின் ஊட்டம் என்பது நமது எழுத்துக்களை + எண்ணத்தை செம்மை படுத்துவதும் கூட...

  என்றும் உங்கள் நலம் விரும்பி...

  ReplyDelete
 11. //.உங்களின் விளக்கம் தேவை...நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே :)//

  வணக்கம் தோழரே..

  இந்த

  " நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே "

  என்ற வார்த்தையே எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா ?

  இதற்கு பதில் விரைவில் ஒரு ஆக்கமாக சிவயசிவ - வில் நண்பரே..

  நீங்கள் எனது நண்பர் ... உங்களை நான் நேசிக்கிறேன்..

  நீங்கள் தவறு செய்துவிடக்கூடாது ( இறை குற்றம் ) என்பதில் கவனமாக இருக்கிறேன்..

  நன்றி..

  ReplyDelete
 12. வணக்கம் நண்பரே இவ்வாக்கம் குறித்து எனது இறுதி கருத்து ----------------------

  மொழி என்பது பேச்சையும் குறிக்கும் எழுத்தையும் குறிக்கும்.அதாவது மொழியின் இரு கூறுகளான பேச்சு வழக்கு எழுத்து வழக்கு இரண்டையும் குறிப்பது.மொழிந்தான் என்ற சொல்லை அறிந்திருப்பீர்களே.

  ஒரு மொழியின் இருப்பை உறுதிப் படுத்துவது அதன் எழுத்து வழக்குதான். எனவே எழுத்துக்களை முன் நிறுத்திப் பேசி இருக்கிறார்கள்.

  அது மட்டுமல்லாமல் எழுத்து வழக்கு இல்லாமல் பேச்சு வழக்கு மட்டுமே உள்ள மொழிகளும் உண்டு.அவை நிலைத்த தன்மை இல்லாதவை.

  எனவே மொழி என்று பொருள் சொன்னால் எழுத்து வழக்கில்லா மொழி என்றும் குழப்பம் வரும்.எனவே எழுத்து என்று பொருள் கொள்வதே சரியானது.

  மீண்டும் சொல்கிறேன்..

  எமது கருத்துக்களில் பிழையிருப்பின் பொறுத்தருள்க

  ReplyDelete
 13. கிழிஞ்சது கிருஷ்ணகிரி...:)


  சிவனடியரே,
  உங்களின் கருத்து எனக்கு புரியவில்லை அதலால் தான்
  உங்களின் கருத்தை நான் கேட்டேன் குற்றம் சொல்ல கூடாது என்றா சொன்னேன்.
  என் கூற்றை தவறாக புரிந்து கொண்டுவிடீர்கள் என நினைக்கின்றேன்....
  ////மீண்டும் சொல்கிறேன்..

  எமது கருத்துக்களில் பிழையிருப்பின் பொறுத்தருள்க//

  அதையே தான் நானும் சொல்கிறேன் எமது கருத்துக்களில் பிழையிருப்பின் பொறுத்தருள்க :)
  தொடர்ந்து உங்களது நண்பரை செம்மை படுத்துங்கள் சிவனடியாரே :)
  இன்னைக்கு சந்திராஷ்டமமானு பாக்கணும் :)

  ReplyDelete
 14. நல்ல பதிவு, ஆனால் பக்கா PRO-HINDU கருத்துக்களைத் தூவி இருக்கின்றீர்கள் ....

  ஆதி பகவன் என்பது யார் என விளக்களிக்கவில்லையே.

  ஆதி பகவன், ஆதிநாத பகவன் வேறு யாருமில்லை. சமண மத நிறுவனர் இடபத் தேவரைத் தான் அவர்கள் ஆதி பகவன் என அழைக்கின்றார்கள் .... ஆதிஸ்வர், ஆதிபகன், ஆதிநாத பகவன் என அழைக்கின்றார்கள்.

  திருக்குறள் ஒரு சமண நூல் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது .... என்பது எனது வாதம் ...

  அகரம் என்பதை ஓம் என மாற்றியது புதிய கண்டுப் பிடிப்பாகத் தெரிகின்றது. நானறிந்து எந்த பழைய உரையாசிரும் அப்படி சொன்னதாக நியாபகம் இல்லை...

  தொடர்.. மீண்டும் வருவேன் ..

  ReplyDelete
 15. வணக்கம் இக்பால்.

  புரட்சிமணி அவர்கள் இருப்பதைத்தான் சொல்லி இருக்கிறார்.ஒவ்வொரு சமயத்தாரும் தத்தம் சமயத்தில் தம் கடவுளை ஆதி என்றுதான் சொல்லி இருப்பார்கள்.இதில் அது சமண நிறுவனரைத் தான் குறிக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்.?

  திருக்குறளுக்குப் பழமையான உரை எழுதிய பத்து ஆசிரியர்களில் பரிமேலழகரும் ஒருவர்.அவர் உரையே சிறந்தது.

  கடவுள் வாழ்த்துப் பகுதியில் எண்குணத்தான் என்ற சொல்லுக்கு அவர் சிவபெருமான் என்று உரை சொல்லி இருப்பதை நீங்கள் பார்த்ததில்லையா?

  இப்போது போல் பல கடவுளை வழிபடும் வழக்கு எங்களுக்கு இல்லை.கடவுள் பலவாக இருந்தாலும் வழிபடுவது ஒரே கடவுளைத்தான்.

  அது முருகன், சிவன் இப்படி மூர்த்தி வேறுபாடுதான்.

  சிலர் சிவனை மட்டுமே வணங்குவர்.சிலர் முருகனை மட்டுமே.

  கருத்தை கவனியுங்கள்.

  அதில் கடவுள் வாழ்த்துப் பகுதியில் வருவதைத் தேடித் பொருத்திப் பார்க்காதீர்கள்.

  உள்ளதை உள்ளவாறு ஏற்றுக் கொள்ளுங்கள்.

  ReplyDelete
 16. தோழர் புரட்சிமணி..

  //இன்னைக்கு சந்திராஷ்டமமானு பாக்கணும்//

  நீங்க பாக்க வேணா .. நான்தான் பார்க்கணும்..
  ஏன்னா ? தோழர் இக்பாலோட கமண்ட் ஐ பார்த்து
  நானும் சும்மாதான் இருக்கணும் னு தோணுது ..

  ஆனா.. முடியலே...

  சோ..

  ReplyDelete
 17. வணக்கம் இக்பால்,

  //திருக்குறள் ஒரு சமண நூல் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது .... என்பது எனது வாதம் ...//

  இப்படி சொன்ன பெரியார் தாசன் - இப்ப என்னவா ஆயிருக்காரு ன்னு தெரியுமா ?

  சோ.. அவங்க அவங்க மதத்திலே இருக்கிற நூல்களை போற்றுங்கள் - அதைவிட்டுவிட்டு அடுத்தவங்க சொத்துக்கு நாம ஏன் ஆசைப்படனும் ?

  திருக்குறள் ஒரு சைவ நூல்... ஆதாரங்களோடு நிறைய பேர் விளக்கியிருக்கிறார்கள்..

  வாய்ப்பிருக்கும போது எனக்குத் தெரிந்த உண்மைகளைத் தருகிறேன்.

  நன்றி சகோதரரே..

  ReplyDelete
 18. //அகரம் என்பதை ஓம் என மாற்றியது புதிய கண்டுப் பிடிப்பாகத் தெரிகின்றது. நானறிந்து எந்த பழைய உரையாசிரும் அப்படி சொன்னதாக நியாபகம் இல்லை...//

  நிறைய பெரியவங்க சொல்லியிருக்காங்க

  ReplyDelete
 19. @இக்பால் செல்வன்

  //அகரம் என்பதை ஓம் என மாற்றியது புதிய கண்டுப் பிடிப்பாகத் தெரிகின்றது. நானறிந்து எந்த பழைய உரையாசிரும் அப்படி சொன்னதாக நியாபகம் இல்லை...//
  அகரம் என்பது ஓம் ஆக மாறவில்லை அகரம் மகரம் உகரம் இவை தான் ஓம் ஆக மாறுகிறது...ஓமுக்கு ஏற்க்கனவே இந்த விளக்கம் கொடுத்துள்ளனர். ஆனால் இந்த குறளுக்கு ஓம் உடன் இணைத்து யாரும் பொருள் தந்த மாதிரி எனக்கும் நினைவில்லை
  தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 20. @சிவ. வே. கங்காதரன்
  தங்களுடைய கருத்துக்கு நன்றி சகோ

  ReplyDelete
 21. ////

  சிவ.சி.மா. ஜானகிராமன் said...

  //அகரம் என்பதை ஓம் என மாற்றியது புதிய கண்டுப் பிடிப்பாகத் தெரிகின்றது. நானறிந்து எந்த பழைய உரையாசிரும் அப்படி சொன்னதாக நியாபகம் இல்லை...//

  நிறைய பெரியவங்க சொல்லியிருக்காங்க////
  திருக்குறளுக்கு இவ்வாறு உரை ஏற்க்கனவே இருக்கா தோழரே, இருந்தால் அந்த சுட்டி கொஞ்சம் தாருங்கள்.
  நன்றி...கோபம் தீர்ந்திருக்கும் என நினைக்கின்றேன் :)

  ReplyDelete
 22. அருமை சகோ,
  அன்று உங்களை மன்க்கஷ்டப் படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.உங்கள் கருத்து உங்களுக்கு.மன்னிக்கவும்.
  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 23. @ சிவ. வே. கங்காதரன் - //.ஒவ்வொரு சமயத்தாரும் தத்தம் சமயத்தில் தம் கடவுளை ஆதி என்றுதான் சொல்லி இருப்பார்கள்.இதில் அது சமண நிறுவனரைத் தான் குறிக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்.?//

  இல்லை சகோ. அது ஒரு சமண நூல் என்பதை தெளிவான ஆராய்சியில் கூறிவிட்டனர். அது மட்டுமல்ல.. நாலடியார் என்ற இன்னொரு சமண மத நூலிலும் திருக்குறளின் பலக் கருத்துக்கள் இருக்கின்றன.

  ஆதிபகவன் என்பது ரிஷபதேவர் தான் என்பதை பல தமிழில் எழுதப்பட்ட சமண நூல்களே உறுதியாகிவிட்டது..

  பரிமேலழகர் ஒரு வைணவர் அவரும் பிற உரையாசிரியர்களும் 10 நூற்றாண்டுக்குப் பின் அதனை தத்தமது சமயத்தோடு இணைக்க முயன்றுள்ளனர்.

  இதுக் குறித்து ஜெயமோகன் எழுதியுள்ளதையும் படிக்கலாம்..

  ஒன்னும் வேணாமுங்க.. கிபி 1 நூற்றாண்டில் தானே திருக்குறள் வந்துச்சு.. எனக்கு ஒரு கிபி 7ம் நூற்றாண்டுக்கு முன் எழுந்த திருக்குறள் உரை ஒன்றைக் காட்டுங்கள்.. அப்புறம் தொடர்ந்து பேசுவோம்.

  ReplyDelete
 24. திருக்குறள் முதலான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் வேளாண்மை சிறப்பிக்கப்படுவதைக் கண்டோம். ”வேளாண்மை செய்து விருந்தோம்பல்” எனப் பழமொழி நானூறும் (பா 175), “பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது” என முதுமொழிக் காஞ்சியும் (துவ்வாப்பத்து), ”பொருளிலான் வேளாண்மை காமுறுதல் இன்னா” என இன்னா நாற்பதும் (பா. 36) கூறுகின்றன. நட்பில்லாதவர்களுடைய இல்லத்திற்குச் சென்று அவர்கள் உபசரித்து வழங்குகின்ற கறிச் சோற்றினை உண்பது இனியதன்று என்று பொருள்படும் வகையில், “நாள்வாய்ப் பெறினும் நள்ளாதார் இல்லத்து வேளாண்மை வெங்கருனை வேம்பாகும்” என நாலடியார் (பா. 207) கூறுகிறது. இனியவை நாற்பது (பா. 3) வேளாண்மை என்பது உழவர்களிடம் இருப்பது சிறப்பு என்ற பொருளில் “ஏருடையான் வேளாண்மை தானினிது” எனக் கூறுகிறது. இவ்வாறெல்லாம் இருப்பினும், சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நாலடியார் மட்டுமே வேளாண் வேதம் எனக் குறிப்பிடப்படுகிறது. இது குறித்து இரு பாடல்கள் உள்ளன:

  ஆலின் அரசின் அசோகின் அணியிருளின்
  மேலை மறையின் விரிந்த பொருள் - நாலடியாம்
  வெள்ளாஅன் வேதத்தின் இன்னுரையைக் கண்டக்காற்
  கொள்ளாரோ நல்லார் குறித்து

  வெள்ளாண் மரபுக்கு வேதமெனச் சான்றோர்கள்
  எல்லாருங் கூடி எடுத்துரைத்த - சொல்லாய்ந்த
  நாலடி நானூறும் நன்கினிதா என்மனத்தே
  சீலமுடன் நிற்க தெளிந்து1

  இதற்கு என்ன காரணம் என ஆராய்வோம்.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனக் குறிப்பிடப்படும் இலக்கியங்கள், கி.பி. 4ஆம் நூற்றாண்டு தொடங்கிக் கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் எழுதப்பட்டவை. சங்க இலக்கியத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையை (பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்) அடிப்படையாகக்கொண்டு இப்பதினெட்டு இலக்கியங்களும் - எண்ணிக்கையை நிறைவு செய்வதற்காகச் சில, புதியனவாக எழுதிச் சேர்க்கப்பட்டும் - கி.பி. 10ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டிருக்கலாம்.

  தமிழ் எழுத்து வரிசையை நெடுங்கணக்கு எனக் குறிப்பிடுவதுபோல, எண்களின் கூட்டல், கழித்தல் முதலியவற்றின்மூலம் கிடைக்கின்ற இறுதி விடையைக் கீழ்க்கணக்கு எனக் குறிப்பிடுவதுண்டு. மனித வாழ்வின் பாவ புண்ணியங்களை ஈசன் கணக்கிடுகிறான் என்ற பொருளில் “எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே” என அப்பர் பெருமான் (ஐந்தாம் திருமுறை, இன்னம்பர்ப்பதிகம், பா. 8) குறிப்பிடுகிறார். அந்த வகையில் வாழ்க்கைக்குரிய நீதி நெறிகளைக் கூறும் நூல்கள் என்ற பொருளில் கீழ்க்கணக்கு நூல்கள் என இவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

  இருப்பினும் இப்பதினெட்டு நூல்களுள் பதினொரு நூல்கள் மட்டுமே நீதி நூல்கள் ஆகும். கார் நாற்பது, களவழி நாற்பது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, கைந்நிலை ஆகியவை சங்க இலக்கியங்களை முன்மாதிரியாகக்கொண்டு அகத்திணை, புறத்திணை சார்ந்து எழுதப்பட்டவை ஆகும். பதினொரு நீதி நூல்களுள் நாலடியார், பழமொழி, ஏலாதி, சிறுபஞ்சமூலம் ஆகியன மட்டுமே சமணர்களால் எழுதப்பட்டவை. (திருக்குறளே இந்நீதி நூல்களுள் பழமையானது எனினும் முற்றிலும் சமண சமயச் சார்புடைய நூல் என்று கூறிவிட முடியாது.) நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, முதுமொழிக் காஞ்சி ஆகியவை சைவ, வைணவ மரபுகளையும் வைதிக ஸ்மிருதி மரபையும் சார்ந்தவை.

  ReplyDelete
 25. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் சைவ சமய பக்தி இயக்கத்தின் எழுச்சியால் பாண்டிய நாட்டில் சமண சமயம் வீழ்ச்சியடைந்தது. ஆனால், கி.பி. 8ஆம் நூற்றாண்டில் மதுரையைச் சுற்றியுள்ள எண் பெருங்குன்றங்களிலும் மீண்டும் சமணம் உயிர்த்தெழுந்தது. அத்தகைய நிலையில்தான் நானூறு பாடல்கள் கொண்ட நாலடியார் தோன்றிற்று. எண் பெருங்குன்றத்துச் சமண இருடியர்தாம் இப்பாடல்களை இயற்றினர் எனக் கருதப்படுகிறது. இந்நூலுள் இரு பாடல்களில் (பா. 200, 296) பாண்டியரின் கீழ்ச் சிற்றரசர்களாகப் புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர்ப் பகுதிகளை ஆண்ட பெருமுத்தரையர் குறிப்பிடப்படுகின்றனர். பா. 296இல், செல்வர்களிடம் சென்று பிச்சை ஏற்காமல் தன்மானத்துடனும் சுயமுயற்சியுடனும் வாழ்வோர்க்கு முன்மாதிரியாகப் பெருமுத்தரையர் குறிப்பிடப்படுகின்றனர். சிங்கம்புணரிப் பகுதியிலுள்ள மேலைச் சிவபுரி, மிதிலைப்பட்டியை உள்ளடக்கிய பூங்குன்ற நாட்டுத் தலைவனான பூங்குன்ற நாடன் பெயர் பா. 128, 212 ஆகியவற்றில் முன்னிலை விளித்தொடராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.2 நாலடியாரை இயற்றிய சமண முனிவர்கள் இவ்விருவரின் அரசியல் ஆதரவுடன் செயல்பட்டனர் என எண்ணுவதற்கு இடமுண்டு.

  ReplyDelete
 26. புலால் மறுப்பு என்பது சமண சமயத்துக்கே உரிய அறமாகும். வைதிக பிராம்மணர்கள் உட்பட அனைத்து வர்ணத்தவரும் புலால் உண்ணும் வழக்கம் உடையோராகவே இருந்தனர் என்பதற்கும், சமண சமயத்தின் தாக்கத்தால்தான் ஊனுண்ணாமையைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர் என்பதற்கும் வரலாற்றில் பல சான்றுகள் உண்டு. பௌத்தமும் ஆசீவகமும் புலால் மறுப்பைக் கடுமையாகக் கடைப்பிடிக்க வலியுறுத்தவில்லை. அதனால்தான் பௌத்தம் - குறிப்பாக சௌத்ராந்திக பௌத்தம் - மீனவர்கள் போன்ற கடலோடிச் சாதியினரிடையே செல்வாக்குடன் நீடித்து நிற்க இயன்றது.4 ஆனால் சமணம், அனைத்து உயிர்களும் இப்பிரபஞ்சத்தில் வாழ்வதற்கு உரிமையுடையனவே என்பதால் புலால் மறுப்பையும் கொல்லாமையையும் அடிப்படையான வாழ்வியல் அறமாக வலியுறுத்திற்று. சிலப்பதிகாரம் (10:11-18) பௌத்த விகாரையைக் குறிப்பிடும்போது,

  பணையைந் தோங்கிய பாசிலைப் போதி
  அணி திகழ் நீழல் அறவோன் திருமொழி
  அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்
  இந்திர விகாரம்

  - என்றும், சமண அருகத்தானத்தைக் குறிப்பிடும்போது,

  புலவூண் துறந்த பொய்யா விரதத்து
  அவல நீத்தறிந்தடங்கிய கொள்கை
  மெய்வகை யுணர்ந்த விழுமியோர் குழீஇய
  ஐவகை நின்ற அருகத்தானம்

  - என்றும் கூறுகிறது. போதிதருமம் என்பது புத்த சமயத்துக்கு அடிப்படையென்பதும், கொல்லாமை என்பது சமண சமயத்துக்கு அடிப்படையென்பதும் தெளிவாகின்றன. திருக்குறளில் சமண சமயக் கோட்பாடு இடம்பெற்றுள்ளது என்பதற்கு வலிமையான சான்றாகக் கொல்லாமை அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள, பின்வரும் குறட்பாவினைச் சுட்டுவதுண்டு.

  பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
  தொகுத்தவற்றுளெல்லாம் தலை

  இவ்வுலகம் பலவகைப்பட்ட உயிரினங்களின் வாழ்விடமாதலால் அவ்வவற்றின் வாழ்விடத்தையோ வாழ்க்கை முறையையோ பாதிக்காத வகையில் உணவு உற்பத்தி செய்து அவ்வுணவையும் பிற உயிர்களுடன் பகுத்துண்டு வாழ்வதே மிகவுயர்ந்த அறம் என வள்ளுவர் அறிவிக்கிறார்.

  ReplyDelete
 27. இன்றுதான் உங்க பதிவைப் முதன் முதலில் பார்த்தேன். அருமையான வலைப்பதிவு.உண்மையை பதிவில் சொன்னதற்கு நன்றி

  ReplyDelete
 28. //

  சார்வாகன் said...

  அருமை சகோ,
  அன்று உங்களை மன்க்கஷ்டப் படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.உங்கள் கருத்து உங்களுக்கு.மன்னிக்கவும்.
  வருகைக்கு நன்றி.//

  அப்படி ஒன்றும் இல்லை சகோ, உண்மையை சொல்ல வேண்டுமானால் உங்களிடமிருந்து ஒன்றை கற்றுக்கொண்டேன். நன்றி அனைத்திற்கும்.

  ReplyDelete
 29. @ இக்பால் செல்வன் said...
  உங்களின் புலமை என்னை ஆச்சர்ய பட வைக்கின்றது சகோ . திருக்குறள் ஒரு உலக பொதுமறை இதுதான் என் நிலைப்பாடு. .
  உங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 30. //

  குணசேகரன்... said...

  இன்றுதான் உங்க பதிவைப் முதன் முதலில் பார்த்தேன். அருமையான வலைப்பதிவு.உண்மையை பதிவில் சொன்னதற்கு நன்றி//
  தோழரே, இதை படித்தமைக்கும் அதை சொன்னமைக்கும் என் நன்றி உங்களுக்கும்.

  ReplyDelete
 31. வணக்கம் இக்பால் நீண்ட கருத்துரை இட்டிருக்கிறீர்கள்.

  திருவள்ளுவர் ஆண்டு என்ற ஒன்று இருப்பதை அறிந்திருக்கிறீர்களா?

  திருவள்ளுவர் கிறிஸ்து பிறப்பதற்கு முன் 31 ஆண்டுகளுக்கு முன் பிறந்து வாழ்ந்தவர் என்பதால் ஆங்கில வருடத்தோடு 31 வருடத்தைக் கூட்டி எழுதுவார்கள்.

  இப்போதைய திருவள்ளுவர் ஆண்டு 2042

  இதைத் தமிழக அரசு பயன்படுத்தி வந்தது.பின்னால் விட்டுவிட்டார்கள்.

  உரை ஆசிரியர்கள் பிற்காலத்தவர் என்பதால் அவர் சொல்வது பொய் என்று நீங்கள் கருதினால் இப்போதுள்ள எழுத்தாளர் சொல்வதையும் பொய் என்றே கருதலாமே.

  அதில் அவர் சமண சமய நூல் என்று குறிப்பிடுவதால் அதை மட்டும் படிக்க வேண்டுமா?

  ReplyDelete
 32. @ இக்பால் செல்வன்

  இதை ஒரு முறை பார்த்து விட்டு சொல்லுங்கள்.
  இதை பார்த்தால் திருக்குறள் ஒரு இந்து நூல் என்பதில் மாற்று கருத்து இருக்காது.

  http://www.tamilhindu.com/2010/04/thiruvalluvar-a-hindu-sage-in-tn-emblem/

  ReplyDelete
 33. @சிவ. வே. கங்காதரன்
  @skm

  தோழர்களே தங்களது விளக்கத்திற்கு நன்றி. மேலும் skm அவர்கள் தந்த உரலி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.

  ReplyDelete
 34. //இதை ஒரு முறை பார்த்து விட்டு சொல்லுங்கள்.
  இதை பார்த்தால் திருக்குறள் ஒரு இந்து நூல் என்பதில் மாற்று கருத்து இருக்காது.//

  தாங்கள் கொடுத்த லிங்கை பார்வையிட்டோம்..
  அருமை..

  நன்றி SKM அவர்களே..

  எமது பங்களிப்புக்கு விரைவில் எமது வலைத்தளத்திலேயே ஆக்கமாக தருகிறேன்..

  http://sivaayasivaa.blogspot.com

  ReplyDelete
 35. //

  சிவ.சி.மா. ஜானகிராமன் said...

  //இதை ஒரு முறை பார்த்து விட்டு சொல்லுங்கள்.
  இதை பார்த்தால் திருக்குறள் ஒரு இந்து நூல் என்பதில் மாற்று கருத்து இருக்காது.//

  தாங்கள் கொடுத்த லிங்கை பார்வையிட்டோம்..
  அருமை..

  நன்றி SKM அவர்களே..

  எமது பங்களிப்புக்கு விரைவில் எமது வலைத்தளத்திலேயே ஆக்கமாக தருகிறேன்..

  http://sivaayasivaa.blogspot.com//
  அடியாரின் பங்களிப்பு வித்தியாசமாக இருக்கும் என நம்புகிறேன். நன்றி

  ReplyDelete
 36. அன்புடன் வணக்கம் புரட்சியாளரே..

  பின்வரும் வலைத்தளத்தை பார்வையிட வேண்டுகிறேன்..

  நன்றி.

  http://tamizhvirumbi.blogspot.com/2011/07/blog-post_20.html

  ReplyDelete
 37. நீங்கள் சொல்வதற்கு முன்பே பார்த்துவிட்டேன் தோழரே...மிக்க நன்றி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...