வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

கடவுள் உண்மையிலேயே இருக்கின்றாரா?

கடவுள் என்ற வார்த்தைக்கு ஆழமான பொருள் உள்ளது.
கட + உள் என்பதே கடவுள். உன்னை நீ கடந்தால் அதவாது உன்னுள் சென்றால் நீ கடவுளை காணலாம், கடவுளை உணரலாம். இவ்வுலகம் எப்படி தோன்றியது, நீ யார், நான் யார் என்ற அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

நீ என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு கடவுள் என்பதும் உண்மை.
நீ என்பது எந்த அளவு பொய்யோ அதே அளவு கடவுள் என்பதும் பொய்.

கடவுள் என்பது ஒரு தன்மை. அந்த தன்மையிலிருந்து வந்ததுதான் அனைத்தும். வந்த அனைத்தும் அந்தத் தன்மைக்கு திரும்பும். அது முடிவல்ல......................
தொடர்ச்சியாகவும் இருக்கலாம்.

2 கருத்துகள்:

  1. கடவுள் எனில் கட + உள் என்பது தான்.. ஆனால் அதன் அர்த்தம் கட ( PASS ) உள் ( SELF ) என்பதுவே ... இதனை எப்படியும் பொருள் கொள்ளலாம்.. அதாவது தன்னை மறந்த நிலை, தன்னை தாண்டிய நிலை, அல்லது தான் என்ற அகந்தை நீங்கிய நிலை எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம் ... அல்லது உள்ளத்தைக் கடந்துப் போ, சிந்திக்காதே, சிந்தனையை கட என்றும் கொள்ளலாம் .. அனைத்து திசைகளிலும் யோசித்துப் பாருங்கள் நன்கு விளங்கும் ..

    பதிலளிநீக்கு
  2. //இக்பால் செல்வன் said...

    கடவுள் எனில் கட + உள் என்பது தான்.. ஆனால் அதன் அர்த்தம் கட ( PASS ) உள் ( SELF ) என்பதுவே ... இதனை எப்படியும் பொருள் கொள்ளலாம்.. அதாவது தன்னை மறந்த நிலை, தன்னை தாண்டிய நிலை, அல்லது தான் என்ற அகந்தை நீங்கிய நிலை எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம் ... அல்லது உள்ளத்தைக் கடந்துப் போ, சிந்திக்காதே, சிந்தனையை கட என்றும் கொள்ளலாம் .. அனைத்து திசைகளிலும் யோசித்துப் பாருங்கள் நன்கு விளங்கும் //

    தாங்கள் சொல்வதும் உண்மைதான்...நன்றி

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...