சவுதியில் வசிக்கும் ஒரு சில வாகாபிய இசுலாமிய பதிவர்கள் இந்து மதத்தில் தீண்டாமை உண்டு அதனால் இசுலாமிற்கு மாற வேண்டும், தீண்டாமையை ஒழிக்க இசுலாம் தான் அருமருந்து என்று பிரச்சாரம் செய்வதை படித்திருப்பீர்கள்.
சவுதியில் இருக்கும் தீண்டாமை பற்றி இவர்கள் இதுவரை வாய் திறந்திருப்பர்களா? ஏன் இசுலாமினால் அந்த தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை?. தீண்டாமைக்கு காரணமே வாகாபிய இசுலாம்தானே பின்பு எப்படி இசுலாம் தீண்டாமையை ஒழிக்கும்?.
இசுலாமில் ஷியா, சுன்னி என்று இரு பிரிவுகள் (பல பிரிவுகள் இசுலாமில் உள்ளது என்பது வேறு விடயம்) உள்ளன. சவுதியில் பெரும்பான்மையானோர் சுன்னி பிரிவை சேர்ந்தவர்கள். சுன்னி பிரிவை சேர்ந்தவர்கள் கையில் தான் ஆட்சி அதிகாரம் உள்ளது.வாகாபிய இசுலாமை சவூதி அரசு ஊக்குவிக்கிறது. வாகபிய இசுலாம் என்பது சுன்னி பிரிவின் அங்கம் . இந்த வாகபிய இசுலாமை வளர்க்கும் சுன்னி பிரிவினர்/ அரசாங்கம் பத்து சதவீதம் முதல் பதினைந்து சதவீதம் உள்ள ஷியா சிறுபான்மையினருக்கு எந்த வித உரிமையும் தருவதில்லை.
அது பொருளாதார ரீதியாக ஆகட்டும், அரசியல் ரீதியாக ஆகட்டும், அரசாங்க வேலையாக ஆகட்டும் ஷியா பிரிவு மக்களை இவர்கள் கிட்டயே நெருங்க விடுவதில்லை.
அதுமட்டுமல்ல மத ரீதியாகவும் ஷியா பிரிவு மக்களுக்கு இவர்கள் தொந்தரவு செய்கிறார்கள்.
ஷியா பிரிவு மக்கள் மசூதி கட்ட கூட இவர்கள் அனுமதிப்பதில்லை. அதே நேரத்தில் ஷியா பிரிவு மக்கள் வசிக்கும் இடங்களில் அரசு சுன்னி மசூதி கட்டுகிறது.
இந்த ஷியா பிரிவு மக்கள் வசிக்கும் பகுதியில் தான் சவுதியின் பெரும்பான்மையான எண்ணெய் வளம் உள்ளது. இவர்களுக்கு எண்ணெய் முக்கியம் ஆனால் இந்த ஷியா பிரிவு மக்கள் முக்கியம் அல்ல.
முகமது நபி அவர்கள் பிறந்த நாட்டிலேயே இசுலாமியர்க்கு ஏன் இந்த அவல நிலை என்றால் நீங்கள் தான் சிந்தித்து பார்க்க வேண்டும். ஷியா சுன்னி இரண்டுமே இசுலாமின் பிரிவுகள் தான். மொத்தத்தில் இருவரும் கும்பிடுவது என்னவோ அல்லாவைத்தான் பிறகு ஏன் ஷியா பிரிவினர் மீது இந்த தீண்டாமை?
வாகாபிய இசுலாமியர்கள் இப்பொழுது தமிழகத்திலும் தங்கள் கொள்கைகளை பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள் .
இவர்கள் தர்க்காவிற்கு செல்வதையும்,சுபி ஞானிகள் வழிகளையும் குறை கூறுகின்றனர். ஏன் என்று கேட்டால் அவர்கள் இணை வைக்கிறார்கள் எனவே அல்லா அவர்களுக்கு நரகம் தான் தருவார் என்பர். இது தூய இசுலாம் அல்ல,நாங்கள் இசுலாமை சீர்திருத்தம் செய்கிறோம் என்று புலம்புவர்.
வாகபிய இசுலாமிய பதிவர்களை நான் கேட்கிறேன் (ஒரு இசுலாமியர் வேறுமாதிரி கேட்டதுதான்) வாகபிய இசுலாம் பதினெட்டாம் நூற்றாண்டில் தான் வந்தது அதற்க்கு முன்பு இருந்த அனைத்து இசுலாமியர்களுக்கும் நீங்கள் சொல்வதை பார்த்தல் நரகம் தான் அல்லா அளிப்பாரா? சுவனம் கிடைக்கும் என்று எண்ணி கிட்டத்தட்ட பன்னிரண்டு நூற்றாண்டுகள் வாழ்ந்த இசுலாமியர்கள் கதி அவ்வளவுதானா?
ஏன் இனில்
சூஃபி பிரிவாக இருந்தாலும் சரி சுன்னி பிரிவாக இருந்தாலும் சரி இரண்டு பிரிவினருமே இணை வைத்துத்தான் வழிபட்டனர். புரியும்படி சொல்லவேணும் என்றால் தர்க்காவிற்கு செல்வதை இருவருமே கடைபிடித்தவர்கள் தான்.
வகாபிய பதிவர்கள் நல்லவர் என்று போற்றும் ஒளரங்கசீப்பும் சுன்னி பிரிவை சேர்ந்தவர் தான். ஆனால் அவரும் தர்க்காவிற்கு சென்றவர் தான். தர்க்காவிற்கு பண உதவி செய்தவர்தான். எனவே அவருக்கும் சுவனத்தில் இடம் இல்லையோ? (பின்னே பிறர் அல்லாவுக்கு இணை வைக்க உதவி இருக்கிறார் அல்லவா?) பாவம் நமது சகோக்கள். ஒருவேளை இவர்களுக்குத்தான் சுவனத்தில் முதல் இடம் கிடைக்கப்போகின்றதோ என்னவோ.
தனிமனிதர்கள் தவறு செய்தால் அரசாங்கத்திடம் செல்லலாம் இசுலாமிய அரசாங்கமே தவறு செய்தால் ஷியா மக்கள் எங்கு போவார்கள் என்ன செய்வார்கள்?
நமது தமிழ் முஸ்லிம்களும் சுன்னி பிரிவை சேர்ந்தவர்கள் தான் ஆனால் என்ன சுபி ஞானிகளின் தாக்கம் இவர்கள் மத்தியில் அதிகம் உண்டு. இதுதான் அவர்கள் நல்ல தன்மைக்கு காரணம். அதுமட்டுமல்ல இந்திய/இந்து கலாச்சாரத்தில் இருக்கும் மத சகிப்புத்தன்மை அவர்கள் மனதிலும் உள்ளது.
தமிழர்களுக்கு ஏன் இந்தியாவிற்கே பெருமை தேடி தந்த நமது ரகுமான்
சூஃபி ஞானிகளின் பாதையில் செல்பவர். சேர்ந்தவர். (அவர் ஒருமுறை சொன்னார் என் முன்னே வெறுப்பு அன்பு என்று இரு வழிகள் இருந்தன நான் அன்பு வழியைத் தேர்ந்தெடுத்தேன் என்று) அப்படிப்பட்ட நல்ல இசுலாமியர்கள் மனதில் வாகபிய இசுலாமை(அதாவது வெறுப்பை) பரப்புவதை இப்பொழுது சவுதியில் இருக்கும் நமது சகோதரர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.(சில பலருக்கு ஏற்க்கனவே பரப்பி விட்டார்கள் என்பது வேதனையான செய்தி) இதற்கு எதிராக பிற சகோதரர்கள் ஏதும் செய்வதாக தெரியவில்லை. ஏதோ இசுலாம் வளர்ந்தால் போதும் என்று நினைக்கின்றார்களா அல்லது வாகபிய இசுலாமியர்களை கண்டு பயப்படுகிறார்களா என்று தெரியவில்லை.
சூஃபி இசுலாமின் ஆன்மீக மார்க்கம் என்று சொல்லலாம். மதங்களை சாடிய ஓஷோ தன்னை
சூஃபியாகத்தான் பார்த்தார்.
சூஃபி ஞானிகள் மதத்திற்கு அப்பாற் பட்டவர்கள் என்பது அவரின் கருத்து. பல இசுலாமியர்களும் சில பல இந்துக்களும் செல்லும் நாகூர் தர்க்கா, அஜ்மீர் தர்க்கா போன்றவை
சூஃபி ஞானிகளின் சமாதிதான். இந்த தர்க்காக்களை இடிக்க வேண்டும் என்பது வாகபியத்தின் ஒரு கொள்கை. வாகபிய இசுலாம் என்பது அடிப்படை வாதம். இது மனிதத்திற்கும் அவர்களின் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் தருவதில்லை. ஆன்மீகம் என்பது அதில் இல்லை.
இந்துக்கள் எல்லா மதங்களும் இறைவனை அடையும் வழிகள் என்று ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் கிருத்துவமும் இசுலாமியமும் இது ஒன்றே இறைவனை அடையும் வழி என்று வம்பு செய்கிறது. வாகாபியமோ இது ஒன்றே அல்லாவை அடையும் வழி என்று இன்றைய இசுலாமிலும் பல குறைகளை சொல்லி பிடிவாதம் பிடிக்கின்றது அனைவரையும் மதமாற்றம் செய்ய துடிக்கின்றது.
இந்து மதத்தில் இந்தியாவில் அது அப்படி இருந்தது இது எப்படி இருந்தது என்று எழுதி மதமாற்றம் செய்ய முயலுபவர்கள் இங்கே ஏற்ப்பட்டுள்ள மாற்றத்தை கண்டுகொள்வதே இல்லை. இங்கே அந்த உரிமையை தந்தது தன்னை இந்து நாடு என்று கூறிக்கொள்ளாத இந்தியா. தன்னை இசுலாமிய நாடு என்று கூறிக்கொள்ளும் சவூதி இசுலாமியர்கலையே இரண்டாம் தர குடிமகன்களாக நடுத்துகின்றது. இதுதான் நம் தாய் திருநாடான மதசார்பற்ற இந்தியாவிற்கும் மதசார்புள்ள சவுதிக்கும் உள்ள வித்தியாசம்.
சவுதியில் ஷியா மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள அரசியல் தீண்டாமை,தமிழகத்தில் தர்க்கா வழிபாடு மற்றும் சூஃபி வழிமுறைகளின் மீது ஆரம்பித்துள்ள எதிர்ப்பு ஆகியவை நாளை உலகம் முழுக்க பரவும் அபாயம் உண்டு. இதற்கு நமது வாகபிய இசுலாம் சகோதரர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்ன செய்யப்போகிறார்கள்? தவறான கேள்வியோ?அவர்களுக்கும் மனசாட்சி இருக்கும் என்பதால் தான் கேட்கிறேன் ஏன் எனில் அவர்களும் தமிழர்கள் தானே. ஷியா,சூஃபி பிரிவு மக்கள் தான் தங்களது சுதந்திரத்தை காக்க முயல வேண்டும்.பல இந்துக்கள் இந்துக்களாக இருக்கும் வரை இந்தியாவில் ஷியா,சூஃபி பிரிவு மக்க்ளுக்கானாலும் சரி எந்த மததிற்க்கானாலும் சரி மதத்தை தாண்டி மனித நேய அடிப்படையில் ஆதரவாக நிற்பர் என்பதை அனைவரும் அறிவர். ஆனால் அது அவர்கள் இந்துக்களாக இருக்கும்வரைதான்.
என்னதான் இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை என்றாலும் எந்த
மதத்தினர்களானாலும் சரி அவர்களுக்கு சகல உரிமைகளும் உண்டு. இந்துக்களை விட ஒரு படி மேல் என்று கூட சொல்லலாம். (ஒரு சிலரால் ஓரிரு அசம்பாவிதங்கள் நடந்ததை மறுப்பதற்கில்லை) பிற மதத்தினருக்கு எந்த பிரச்சனை என்றாலும் முதலில் குரல் கொடுப்பவன் ஒரு இந்துவாக இருப்பான். மோடியின் மீது வழக்கு தொடர்ந்தது ஒரு இந்துப் பெண். இதற்கு காரணம் பலரும் தங்களை இந்துவாக நினைப்பதில்லை மாறாக மனிதர்களாகத்தான் பார்க்கின்றனர். ஆனால் சில பல இசுலாமியர்கள் தங்களை மனிதன் என்று கூறிக்கொள்வதை விட முஸ்லிம் என்று கூறிக்கொள்வதில் தான் பெருமைப்படுகின்றனர். இசுலாமிலும் தங்களை மனிதர்களாக பார்ப்பவர் இல்லை என்று சொல்லவில்லை மாறாக அவர்களின் குரல் சரியாக கேட்கவில்லை என்றே சொல்கிறேன்.
இந்தியாவில் இந்து மதத்தில் ஜாதி ஒரு பெரிய பிரச்சனைதான் மறுப்பதற்கில்லை. ஆயினும் பல இந்து இந்திய தலைவர்கள் ஜாதியை எதிர்த்தனர். இன்று தீண்டாமையின் வீச்சு பன்மடங்கு குறைந்துள்ளது.அரசியல் ரீதியாக எந்த ஒரு தீண்டாமையும் பாராட்டப்படுவதில்லை. பல தனி மனிதர்களும் ஜாதி பார்க்காமல் தான் இன்று பழுகுகின்றனர். இந்து மதம் இவ்வாறு தன்னை சீர் திருத்திக் கொள்கிறது அதற்கு வழி வகுக்கின்றது. ஆனால் இசுலாமில் சீர்திருத்தம் என்பது 1400 ஆண்டுகள் பின்னோக்கி செல்வதாகத்தான் உள்ளதே தவிர காலத்திற்கு ஏற்றார் போல் அல்ல. அரசியல் ரீதியாகவே சவூதி இசுலாமில் இன்று தீண்டாமை தலை விரித்தாடுகின்றது .
அமெரிக்காவில் மசூதிகள் நிறைய வந்துள்ளன அதனால் இசுலாம் வளர்கிறது என்று பெருமை பட்டுக்கொள்ளும் பதிவர்கள் சொந்த நாட்டிலேயே ஷியா பிரிவு மக்களுக்கு சவூதி இசுலாமிய அரசு மசூதி கட்டிக்கொள்ள அனுமதி தருவதில்லையே இதுதான் இசுலாமின் சிறப்பா? வளர்ச்சியா? அமெரிக்காவில் மசூதிகள் கட்டிக்கொள்ள அனுமதி அளித்த அமெரிக்க அரசின் பெருமையும் கிருத்துவர்களின் பெருமையும் அல்லவா இதில் தெரிகிறது. இங்கே இசுலாமின் பெருமை தெரியவில்லை வாகபிய இசுலாமியர்களின் சிறுமையும் குறுகிய மனப்பான்மையும் தான் தெரிகிறது. எங்கே போனது இசுலாமின் மத சகிப்புத்தன்மை?
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.’ (அல்-குர்ஆன் 109:6) இறைவனின் வார்த்தைகளாக நம்பும் இவற்றை நீங்கள் ஏன் கடைபிடிப்பதில்லை ? இது பொய்யா அல்லது நீங்கள் பொய்யர்களா?
இப்பதிவின் நோக்கம் இசுலாமியர்களை (நமது வாகபிய சகோக்கள் உட்பட) புண்படுத்துவது அல்ல மாறாக சிந்திக்க வைக்க வேண்டும் என்பதே. இப்பதிவில் தவறு இருப்பின் சுட்டி காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்.
என்றும் அன்புடனும் உண்மையுடனும்
இராச.புரட்சிமணி
இதை எழுத உதவிய கட்டுரைகள்: