இசுலாமியத் தீவிரவாதம் என்றழைப்பது சரியா தவறா என்று உலகின் எந்த
மூலையில் விவாதம் நடந்தாலும் அது சரியே என்று வாதிட்டு என்னால் வெல்ல முடியும். ஆனால் சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.
உலகில் உயிரோடு இருப்பவர்கள் முஸ்லிம்களாக மட்டுமே இருக்கவேண்டும்.
அப்படி முஸ்லிம் அல்லாதவர்கள் மதம் மாற்றப்பட வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என்று குண்டு வைப்பவர்கள் தீவிரவாதிகள்,மதப் பிரச்சாரம்
செய்பவர்கள் மதவாதிகள். இப்படி செய்பவர்கள் வெகு சிலரே.
ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் இதனோடு எந்த விதத்திலும் தொடர்பு
கொள்ளாமல் அமைதியாக வாழ்கிறார்கள்,அமைதியை விரும்புகிறார்கள். ஊடகங்கள்
இசுலாமியத் தீவிரவாதம் எனும் பொழுது இந்த பெரும்பாலான முஸ்லிம்களையும்
இது கடுமையாக பாதிக்கும்.
என்னடா நம்ம மதத்தை தீவிரவாதம் என்கிறார்கள், நம்மையும் தீவிரவாதியை பார்ப்பது போல பார்க்கிறார்கள் என்று ஒருவனின் மனது பல இன்னல்களுக்கு உள்ளாகும். ஒரு கட்டத்தில் ஏன் நான் தீவிரவாதி ஆக கூடாது என்று எண்ண ஆரம்பிக்கலாம்.
எனவே இசுலாமியத் தீவிரவாதம் என்ற சொல்லை இனி ஊடகங்களும், யாரும் பயன்படுத்துவதை கைவிட வேண்டும்.
முஸ்லீம்களில் சிலர் தீவிரவாதிகளாக இருப்பது உண்மை. இவர்களை, இவர்கள் செய்யும் செயலை எவ்வாறு அழைப்பது என்ற கேள்வி எழுகிறது. குரானில் ஜிகாத் என்று கூறப்படும் ஒரு விடயத்தை மனதில் வைத்துத்தான் இவர்கள் கொடிய செயல்களில் ஈடுபடுகிறார்கள். எனவே இந்த மாதிரி குற்றங்களை, குற்றம் புரிபவர்களை ஜிகாத் தீவிரவாதம்,ஜிகாத் தீவிரவாதி என்று அழைக்கலாம். அல்லது வேறு ஒரு சொல்லை
பயன்படுத்தாலாம்.
தயவு செய்து மதத்தோடு தீவிரவாதத்தை தொடர்பு படுத்தி ஒட்டுமொத்த சமுதாயத்தையும் துன்புறுத்த வேண்டாம் என்று ஊடகங்களை கேட்டுக்கொள்கிறேன்.