வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

செவ்வாய், 8 அக்டோபர், 2013

காங்கிரசுக்கும், திராவிட கட்சிகளுக்கும் ஞானி சொம்பு தூக்காமல் திருந்துவாரா?


தன்னுடைய சமீபத்திய கட்டுரையில் ராமதாசும் மணியனும் எப்பொழுது திருந்துவார்கள்  என்று ஞானி கேள்வி எழுப்பியுள்ளார். எனக்கு என்ன சந்தேகம் எனில் இவர் காங்கிரசுக்கும் திராவிட கட்சிகளுக்கும், கம்யுநிச தோழர்களுக்கும் மறைமுகமாக சொம்பு தூக்காமல் திருந்துவாரா என்பதே.

ரமாதாசும் தமிழருவி மணியனும் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.ஞானி என்ன செய்கிறார் என்பதை முதலில் அவர் அறிகின்றாரா  என்பதே தெரியவில்லை.

சாதி ரீதியில் ராமதாசும் மத ரீதியில் மோடியும் வேண்டாம் என்கிறார் ஞானி. இது ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

சரி இவர்களுக்கு மாற்றாக அவர் யாரை வழிமொழிகிறார் என்பதே இங்கே சிக்கல்.

மத்தியில் இமாலய ஊழலில் திளைக்கும் காங்கிரசை இவர் ஆதரிக்கிறாரோ என்ற சந்தேகம் வருகிறது. காங்கிரசு ஆட்சிக்கு வந்தால் தான் இவருடைய சிவப்பு சட்டை தோழர்களும் ஆட்சிக்கு வரமுடியும். இதனால் அவர் மோடியை எதிர்க்கிறாரா?

இல்லை தமது இடதுசாரி கட்சிகளுக்கு மூன்றாவது அணி அமைக்க முயல்கிறாரா என தெரியவில்லை.

ஆண்டவனுக்கு அடிமை என்பது மதங்களின் கூற்று. அரசாங்கத்திற்கு அடிமை என்பது இடதுசாரிகளின் மறைமுக கூற்று.
எனவே இடதுசாரிகளின் கொள்கைகளும் எனக்கு ஏற்ப்புடையது அல்ல.

தமிழகத்தில் சாதிக் கட்சி நடத்தும் ராமதாசு வேண்டாம் என்கிறார்.இவர் மட்டும்தான் இவர் கண்ணுக்கு தெரிவார். ஆனால் இன அரசியல் செய்த,செய்யும் திராவிட கட்சிகள் வேண்டும் என்று மறைமுகமாக கூறுகிறார்.

சாதி,மத கட்சிகள் வேண்டாம் என்பதே என்னுடைய நிலைப்பாடும். இவைகளுக்கு  மாற்றாக யாருக்கு ஒட்டு போடுவது என்பதையும் ஞானி கூறினால் பலருக்கு உதவியாக இருக்கும்.

ஒருவேளை எல்லா மக்களும் நோட்டா என்ற தோட்டாவை  மட்டும்  பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறாரோ என்னவோ.

நடைமுறையில் இருக்கும் எந்த சித்தாந்தமும் தற்போதைய உலக  சூழலுக்கு ஏற்ப்புடையதல்ல.

சரி வேறு எந்த சித்தாந்தம் தேவை என்பதை நான் சொல்லியா தெரியவேண்டும்.


9 கருத்துகள்:

  1. நானும் இன்றிலிருந்து தாடி வளர்க்கலாம் என்று இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @கலியபெருமாள் புதுச்சேரி

      ஏன் இப்பாடி சொல்கிறீர்கள் புரியலையே

      நீக்கு
  2. இருப்பதில் யார் குறைவாக சாதி மத அரசியல் பண்ணாமல் இருக்கிறார்களோ அவர்களை சார வேண்டியது மட்டுமே வழி என்று நினைக்கிறேன். ஒட்டு போடாமல் விட்டால் வீண்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்து நடைமுறைக்கு ஒத்துவருவது.

      ஆனால் இப்படி சிந்திப்பதே நமது தவறு என்பேன்
      எத்தனை நாளைக்கு சகித்துக்கொண்டு வேண்டா வெறுப்பாக ஓட்டுபோடுவது?

      நாம் ஒட்டு வாங்குவது எப்போது?மாற்றத்தை கொண்டு வருவது எப்போது?

      நீக்கு
  3. சாதி இரண்டொழிய வேறில்லை
    என்று சொல்லிக் கொடுத்த நாட்டில்
    இந்நிலை....

    பதிலளிநீக்கு
  4. சில சமயம் ஞாநி அவர்கள் நம்மை குழப்புவதில் சுப்ரமணிய சுவாமியை மிஞ்சி விடுகிறார். இங்கு சாதிய / மத அரசியல் இல்லாமல் அவர் பாராட்டும் இடதுசாரி கட்சிகள் கூட தேர்தலில் வெல்ல முடியாது. அதிகம் படிப்பபறிவு கொண்ட கேரள மாநிலத்தில் 2011 தேர்தலில் ஹிந்துக்கள் இடதுசாரி முன்னணியை ஆதரிததனர். முஸ்லிம் மற்றும் கிருஸ்துவ மக்கள் வலதுசாரி முன்னணியை ஆதரித்த்னர். இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  5. போங்க போங்சார் காமடி பண்ணாம

    பதிலளிநீக்கு
  6. // சரி இவர்களுக்கு மாற்றாக அவர் யாரை வழிமொழிகிறார் என்பதே இங்கே சிக்கல் //

    அருமையான கருத்து. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. Avar than karuthu sonar - neengal ungal karuthu pathintheer - enaku sombu theriyavillai - tharasu kolil irandum samame. Voter's choice - they decide at last minute - hail democracy

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...