வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 18 அக்டோபர், 2013

ஊடகங்கள் இசுலாமியத் தீவிரவாதம் என்றழைப்பது சரியா தவறா?

இசுலாமியத்  தீவிரவாதம் என்றழைப்பது  சரியா தவறா என்று உலகின் எந்த
மூலையில் விவாதம் நடந்தாலும்  அது சரியே என்று வாதிட்டு என்னால் வெல்ல முடியும். ஆனால் சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.

உலகில் உயிரோடு இருப்பவர்கள் முஸ்லிம்களாக மட்டுமே இருக்கவேண்டும்.
அப்படி முஸ்லிம் அல்லாதவர்கள் மதம் மாற்றப்பட வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என்று குண்டு வைப்பவர்கள் தீவிரவாதிகள்,மதப் பிரச்சாரம்
செய்பவர்கள் மதவாதிகள். இப்படி செய்பவர்கள் வெகு சிலரே.

ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் இதனோடு எந்த விதத்திலும் தொடர்பு
கொள்ளாமல் அமைதியாக வாழ்கிறார்கள்,அமைதியை விரும்புகிறார்கள். ஊடகங்கள்
இசுலாமியத் தீவிரவாதம் எனும் பொழுது இந்த பெரும்பாலான முஸ்லிம்களையும்
இது கடுமையாக பாதிக்கும்.

என்னடா நம்ம மதத்தை தீவிரவாதம் என்கிறார்கள், நம்மையும் தீவிரவாதியை பார்ப்பது போல பார்க்கிறார்கள் என்று ஒருவனின் மனது  பல இன்னல்களுக்கு உள்ளாகும். ஒரு கட்டத்தில் ஏன் நான் தீவிரவாதி ஆக கூடாது என்று  எண்ண ஆரம்பிக்கலாம்.

எனவே இசுலாமியத்  தீவிரவாதம் என்ற சொல்லை இனி ஊடகங்களும், யாரும் பயன்படுத்துவதை கைவிட வேண்டும்.

முஸ்லீம்களில் சிலர் தீவிரவாதிகளாக இருப்பது உண்மை. இவர்களை, இவர்கள் செய்யும் செயலை எவ்வாறு  அழைப்பது என்ற கேள்வி எழுகிறது. குரானில் ஜிகாத் என்று கூறப்படும் ஒரு விடயத்தை மனதில் வைத்துத்தான் இவர்கள் கொடிய செயல்களில்  டுபடுகிறார்கள். எனவே இந்த மாதிரி குற்றங்களை, குற்றம் புரிபவர்களை ஜிகாத் தீவிரவாதம்,ஜிகாத் தீவிரவாதி என்று  அழைக்கலாம். அல்லது வேறு ஒரு சொல்லை
பயன்படுத்தாலாம்.

தயவு செய்து மதத்தோடு தீவிரவாதத்தை தொடர்பு படுத்தி ஒட்டுமொத்த சமுதாயத்தையும் துன்புறுத்த வேண்டாம் என்று ஊடகங்களை கேட்டுக்கொள்கிறேன்.

2 கருத்துகள்:

  1. நல்ல கருத்து..மனசாட்சி உள்ளவர்கள் நிச்சயம் யோசிப்பார்கள்..

    பதிலளிநீக்கு
  2. இஸ்லாமியத் தீவிரவாதம் என்றழைப்பதால்- உண்மையை சொல்வதால் எந்த பிரச்சனையும் இல்லை.
    பாதிப்பு இஸ்லாமிய மதவாதிகளுக்கு மட்டுமே.

    இஸ்லாமில் தீவிரவாதத்திற்கு எதிரான நல்லவங்க , மனிதாபிமானம் உள்ளவங்க,இஸ்லாமில் இருப்பதை எல்லோரும் அறிவார்கள்.
    இந்துக்களும் இதே போல் இஸ்லாமியத் தீவிரவாதிக மாதிரி மதத்தை சொல்லி குண்டுக்கள் வைக்க தொடங்கினாலோ, கிறிஸ்தவங்களும் இதே போல் இஸ்லாமியத் தீவிரவாதிக மாதிரி மதத்தை சொல்லி குண்டுக்கள் வைக்க தொடங்கினாலோ அவர்களை எல்லாம் ஊடகங்கள் இந்து தீவிரவாதி, கிறிஸ்தவ தீவிரவாதி என்றே அழைக்கும்.
    மதத்தோடு தீவிரவாதத்தை தொடர்பு படுத்தி ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தையும் இழவுபடுத்தும் இஸ்லாமிய பயங்கரவாதிகளை இஸ்லாமியர்கள் தான் முன்வந்து கண்டிக்க வேண்டும்.
    உதாரணத்திற்கு கென்யா -நைரோபியில் நடந்த காபிர் மீதான இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலை ரஹீம் கஸாலி என்ற தமிழ்மண இஸ்லாமியர் கண்டிச்சிருந்தார். இப்படியான நல்லவங்க இருக்காங்க. அவர்களுக்கு தலைவணக்குகிறோம்.ஆனா பொதுவாக தமிழ் இஸ்லாமிய மதவாதிங்க தமிழ்மணத்தில் என்ன எழுதுவாங்க? நைரோபி சம்பவம் இஸ்லாமின் மீது பழி போடுவதற்காக இஸ்ரேலால் செயல்படுத்தபட்ட சதி அமெரிக்காவினால் செயல்படுத்தபட்ட சதி என்பார்கள்.
    உண்மையில் இஸ்லாமிய மதவாத பயங்கரவாத செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அவர்கள் விரும்பவில்லை. இஸ்லாமிய மதவாத பயங்கரவாதத்தின் ஆதரவாளர்கள்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...