வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

பகுத்தறிவுக் குருடர்கள் எங்கே?

சாதிக்கொரு சுடுகாடு ஏன் என்று பகுத்தறிவுக் கேள்வி எழுப்பிய பகுத்தறிவுவாதிகள் மதத்திற்க்கொரு சுடுகாடு கேட்கப் படும் பொழுதும், ஒதுக்கப்படும் பொழுதும் அதையொட்டி பிரச்சனை நடக்கும் பொழுதும் ஒன்றுமே,நடக்காதது போல் குருடர்களாகவும், செவிடர்களாகவும் இருப்பது ஏன்?

இந்துமதம் என்றால் மட்டும்தான் பகுத்தறிவு வேலை செய்யும் பிற மதங்கள் என்றால் மூளை மழுங்கிவிடுமோ.?
மதக்கலவரம் வரும்வரை காத்திருந்து அதைவைத்து ஒட்டு அறுவடை செய்ய பகுத்தறிவுவாத , கம்யூநிச, தலித்திய கட்சிகள் காத்திருப்பதாகவே தெரிகிறது.
ஜாதியை  ஒழிக்க பாடுபடுவதாக கூறும் இவர்கள் மதங்களுக்கு துணைபோவதன் மூலம் இவர்களின் உண்மையான முகத்திரை கிழிகிறது.

இவர்கள் அறியாமையில் இருந்தால் உண்மையில் மதங்களை ஒழிக்கவும் பாடுபடவேண்டும். செய்வார்களா?.

 

5 கருத்துகள்:

 1. இந்துமதத்தை போட்டு தாக்க மட்டும் தான் பகுத்தறிவு வேலை செய்யும் தமிழகத்தில் :(

  பதிலளிநீக்கு
 2. கல்வி பெற்றால் சாதி மதங்கள் ஒழியும் என்றார்கள்...ஆனால் அதற்கு எதிர்மாறாக கல்வியில் வளர்ச்சி அடைந்தபின்தான் சாதிய வன்முறைகள் அதிகம் நடக்கின்றன...அந்தக் காலத்தில் படிக்காத பாமரர்களை தங்கள் பகடைக்காய்களாய்ப் பயன்படுத்தினார்கள் அரசியல்வாதிகள்..இன்று அவர்கள் கையில் படித்த இளைஞர்கள்...

  பதிலளிநீக்கு
 3. @வேகநரி
  @கலியாபெருமல்புடுசெர்ரி

  சீர்திருத்தவாதிகளை சீர்திருத்தும் நேரம் வந்துவிட்டது என நினைக்கின்றேன்.
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 4. எல்லா மதங்களிலும் மூட நம்பிக்கை உள்ளது .. ஆனால் மதத்தை வைத்து மக்களை கீழ் நிலை படுத்துவது இந்து மதம்.. சாதியின் மூல வேர் இந்து மதம் ..மேலும் இங்கு அதிகம் பேர் பாதிக்க பட்டுள்ளதும் இந்து மதத்தால் தான். மற்றவரின் மதங்கள் இருப்பது வேறு தேசங்களில். இங்குள்ளதை நம்மை பாதிப்பதை சொல்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...