பெரியாரின் செய்கையும் ராமதாசின் செய்கையும் ஒன்று போலவே தெரிகிறது.பெரியார் என்ன முட்டாள்தனத்தை செய்தாரோ அதேபோல ஒரு முட்டாள்தனத்தைத் தான் ராமதாசும் செய்கிறார்.
பெரியார் பார்பனர்கள் எனும் இனத்திற்கு எதிராக செயல்பட்டார்.
ராமதாசு தலித்துகளுக்கு எதிராக செயல்படுகிறார்.
இருவர் செய்கையிலும் சிலருக்கு நன்மை சிலருக்கு தீமை. இருவர் செய்கையையும் நான் ஆதரிக்கவில்லை.
பார்பனர்களிடம் தவறு இருந்திருந்தால் தவறு செய்யாத நல்ல பார்ப்பனர்களை அரவணைத்துக் கொண்டு அவர்களைக்கொண்டே பார்ப்பனர்களை திருத்த முயன்றிருக்க வேண்டும். மாறாக அவர் பார்ப்பன இனத்தையே அழிக்கும் எண்ணம் கொண்டதாக தெரிகிறது.ஒட்டுமொத்த இனத்தையும் எதிரியாக சித்தரித்துள்ளார்.
இதேபோலத்தான் தலித்துகளில் சிலர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் ஒட்டுமொத்த தலித்துகளுமே தவறு செய்வதுபோல ஒரு பிம்பத்தை ராமதாசு ஏற்ப்படுத்துகிறார்.
எல்லா ஜாதிகளிலும் மதங்களிலும் தவறு செய்பவர்கள் இருக்கின்றார்கள் அதே நேரத்தில் எல்லா ஜாதிகளிலும் மதங்களிலும் தவறு செய்யாதவர்களும் உள்ளார்கள். எனவே ஒட்டுமொத்த இனத்திற்கு, ஜாதிக்கு,மதத்திற்கு எதிராக மக்களை திரட்டுவது என்பது மகா முட்டாள்தனம். அது மனிதத்திற்கு எதிரானது.
தவறை திருத்துவதுதான் சீர்திருத்தமே தவிர தவறு தவறு செய்பவர்களின் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் எதிரியாக பார்ப்பது அல்ல. சீர்திருத்தவாதிகளாக விரும்புபவர்கள் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
தவறு செய்பவர்களை எப்படி மனிதர்களாக மாற்றுவது என்று ஆராய்வதே, சிந்திப்பதே, அந்த வழியில் செயல்படுவதே உண்மையான மனிதம்.
ராமதாசை எதிர்மறையாக நான் பெரியாருடன் ஒப்பிட்டேன் ஆனால் அவரை நேர்மறையாக ஒப்பிட்டதே பல தலித்துகள்தான். பெரியாருக்கு அடுத்தபடியான நல்ல தலைவராக ராமதாசு சிலபலரால் பார்க்கப்பட்டுள்ளார் எனபது மறுக்க முடியாத உண்மை.
தன்னுடைய தவறை உணர்ந்து ராமதாசு தலித்துகளுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்காமல் தவறு செய்பவர்களுக்கு எதிராக மட்டும் மக்களை ஒன்றிணைத்து தவறு செய்பவர்களை திருத்துவார் எனில் அவரை மனிதம் போற்றும். இல்லையேல் சிலர் அவரை ஜாதி தலைவராகவும் பலர் ஜாதி வெறியராகவும் பார்ப்பர். முடிவு அவர் கையில்.
1. Periyar was against Brahminism and not against brahmins.
பதிலளிநீக்கு2. Try to Know the friendship of Periyar with Rajaji.
3. Periyar was fighting for the right of women including Brahmin women.
@kkk
நீக்கு1. He is not just against Brahminism he is against brahmins too.
2.Even Ramadoss has/had good friendship with Thirumavalavan. Many people say Ramadoss is the one who promoted Thirumavlavan. so now, how do you justify his actions?
3.May I say even Ramadoss is fighting to safeguard Women of several castes?
புரட்சிமணி உங்கள் கருத்து மிக மிக சரியே. இன்று பகுத்தறிவு என்று பேசுபவர்கள் எல்லாம் சுற்றி வளைத்து பார்ப்பனீயம் என்று ஜல்லியடிப்பார்கள் ஆனால் அவர்கள் நோக்கம் ஊரறிந்தது.
பதிலளிநீக்கு@கும்மாச்சி
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
உங்களுடைய பெரியார் எதிர்ப்புக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபெரியாரின் நண்பராக இருந்தவர் ராஜாஜி என்ற பார்ப்பனர்தான், தனது திருமணம் குறித்த முடிவைக் கூட அவரிடம் ஆலோசித்துத்தான் எடுத்தார். தனிப்பட்ட நிலையில் பல பார்ப்பனருடன் நட்பில் இருந்தார். பார்ப்பனியத்தைக் கைவிட்டவரை தனது கூட்டத்திலேயே வாழ்த்தியிருக்கிறார். இதெல்லாம் உங்களுக்குத் தெரியாதாக்கும். ஆதிக்கம் செய்யும் பார்ப்பனர்களை எதிர்த்த பெரியாரும், தாழ்த்தப்பட்ட ஜாதியினரை ஆதிக்க ஜாதிகள் அனைவரின் ஆதர்வுடன் இணைந்து எதிர்க்கும் ராமதாசரும் ஒன்றுதான் என்று புரிந்து கொண்டேன்.
நீங்கள் இப்படி ராமதாஸ், ராஜபக்சே என்று பெரியாருடன் ஒப்பிடுவதை விட்டு விட்டு ஒரேயடியாக ஹிட்லருடனோ அல்லது இடி அமீனுடனோ ஒப்பிட்டு விடலாமே.
@தமிழானவன்
நீக்குராமதாசுவும் திருமாவளவனுடன் நட்பில் இருந்தவர்தான்,
பட்டியல் சாதியினருக்கு தன்னுடைய கட்சியில், அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை வாங்கி தந்தவர்தான் இருப்பினும் அவர் செய்வதில் இருக்கும் தவறு தெரியும்பொழுது,
ஆரியன் என்று பார்ப்பனர்களை தனிமைப்படுத்திய, அவர்களின் மொழியை அழித்த,அவர்களை ஒட்டுமொத்த மக்களின் எதிரியாக சித்தரித்த பெரியார் செய்தது தவறு என்று தெரியாதது ஏனோ?
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
நீங்க சொன்னது சரி நண்பர். எல்லா ஜாதிகளிலும் தவறு செய்பவர்கள் இருக்கின்றார்கள். ஆனா பார்பனர்களையும் தலித்துகளையும் ஜாதி பார்த்து போட்டு தாக்குவது நியாயமல்ல. பார்பன அயோக்கியர்கள் என்பது ஜாதி சொல்லி தாக்குவதே தவிர பிராமினிஸ்சத்துக்கு ? எதிரானதல்ல.
பதிலளிநீக்கு@வேகநரி
நீக்குவாங்க நண்பா...இவர்கள் என்று திருந்தப்போகிறார்களோ தெரியவில்லை. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓர்நிறை என்ற மந்திரத்தை என்று அரசாங்கம் கடைப்பிடிக்கிறதோ அதுவரை சாதிகள் ஒழியாது..
பதிலளிநீக்கு@கலியபெருமாள் புதுச்சேரி
நீக்குஇன,மத,ஜாதி ரீதியாக அரசியல் செய்து ஆட்சிக்கு வருபவர்களிடம் இதை எப்படி எதிர்பார்க்கமுடியும்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி