வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

இந்து மதம், இந்திய நாடு என்ற பெயர் எப்படி வந்தது?


சிந்து நதியின் பெயரிலிருந்து  இந்து, இந்தியா என்ற பெயர் வரவில்லை மாறாக அது நாடு சார்ந்தது, மதம் சார்ந்தது என்பதை பற்றி பார்ப்போமா? 

 சிந்து கருத்து என்னவெனில் சிந்து நதிக்கு அப்பால் இருந்தவர்கள் சிந்து நதியோரம் வசித்தவர்களையும், அதை தாண்டிய நிலப்பரப்பையும் அவர்கள்  மொழியில் ஹிந்த் என்று சொல்ல ஆரம்பித்து, அது கிரக்கேர்கள் மூலம், ஐரோப்பிய   மொழிகளுக்கு சென்று ஆங்கிலேயர்களால் இந்தியா என்று அழைக்கப்பட்டது . 

ஆனால் இந்த கருத்து தவறானது  இந்து மதம், இந்திய நாடு என்பதற்கு மூலம் வேதத்தில் உள்ளது என்பது  மாற்று கருத்தாகும். 

 பழமையான ரிக் வேதத்திலேயே(கி. மு. 1700 முதல் 1100 வரை)  இந்து, இந்துஸ்தான் என்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்கான ஆதாரம் இதோ 

-------------------------------------------------------------------------------------------------------------
हिमालयं समारभ्य यावदिंदुसरोवरम् ।
तं देवनिर्मितं देशं हिंदुस्थानं प्रचक्ष्यते ।।
"The land created by the gods which stretched from the Himalayas to the Indu (i.e. Southern) ocean is called Hindusthan
 -----------------------------------------------------------------------------------------------------------

Himalyam Samarabhya
Yavadindusarovaram
Tam Deonirmitam Desham
Hindusthanam Prachakshate
Translation: "The country which starts from Himalayas and the borders of which reach till the Indian Ocean (Indu Sarovaram), has been created by devas and its name is Hindusthan.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இமயமலையில்  தொடங்கி  இந்திய பெருங்கடல்  வரை எல்லை  கொண்டிருக்கும்  நாட்டை  தேவர்கள் (இறைவன்கள் )  படைத்தனர் அதன் பெயர்  இந்துஸ்தான்  என்று ரிக் வேதம் கூறுகின்றது.



வேதங்களின் படியும் இந்திய அரசிலமைப்பின்படியும்  இந்து, இந்தியா என்ற பெயர் எப்படி, யாரை குறிக்கின்றது  என்று பார்த்தோம். மற்றொரு பதிவில் இந்து மதம் என்பது உலகெங்கிலும் எப்படி இருந்தது, இருக்கின்றது, எப்படி உலகில் பெரும்பாலான மக்கள் இந்துக்களே என்பதை பற்றி பார்ப்போம். 

என்றும் அன்புடனும் உண்மையுடனும் 
இராச.புரட்சிமணி

பிற்சேர்க்கை: 
ரிக் வேதத்தில் விக்கி கூறும் பிரகஸ்பதி சுலோகம் இல்லை. எனவே விக்கியில் தவறு நிகழ்துள்ளது.  பிரகஸ்பதி சுலோகம் எப்பொழுது இயற்றப்பட்டது என்பதற்கான விவரங்கள் தெரியவில்லை. 

சிந்து நதியின் பெயரால் தான் இந்து/இந்தியா என்ற பெயர் வந்திருந்தாலும் அது ஆங்கிலேயேர்கள் கூறுவது போல  எட்டாம் நூற்றாண்டில் முதன் முதலில் அராபியர்களால்  இது பயன்படுத்தப்படவில்லை. அதற்கு  .முன்பே  இந்து, இந்தியா என்ற பெயர் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது என பின்வரும் கட்டுரை கூறுகிறது. இந்து, இந்தியா என்ற சொல்லானது கிரேக்கர்களாலும் ஏன் அசோகர் காலத்தில் கூட இந்து, இந்தியா என்பதற்கு ஒப்பான சொல் புழக்கத்தில் இருந்துள்ளது.


சௌரட்டியர்களின் புனித நூலான பால்வி அவெஸ்தா என்ற நூலில் 'சப்த சிந்து' என்று சொல்லுக்கு பதிலாக 'ஹப்த ஹிந்து' என்று குறிபிடப்பட்டுள்ளது. இந்த அவெஸ்தா கி.மு. 1000 முதல் 5000 ஆண்டுகளில் இயற்றப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனவே ரிக் வேதத்தை போல ஹிந்து என்ற சொல்லும் பழமையானதே என்று இக்கட்டுரை கூறுகின்றது. 

20 கருத்துகள்:

  1. புரட்சிமணி,

    ரிக் வேதத்தில் சொல்லி இருப்பதால் இந்தியா ஆனதாக சொல்லி இருந்தாலும் , கிமு 1700 இல் ரிக் வேத ஆரியர்கள் சிந்து நதிக்கு இந்த பக்கம் வசிக்கவில்லை எனவே அவர்கள் சொன்னதாக வைத்துக்கொண்டாலும் அது நாட்டுக்கே பொருந்தும், மதத்திற்கு அல்ல.

    சிந்து சமவெளி நாகரீகம் எனப்படுவது திராவிட நாகரீகம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள், அதன் காலமும் கி.மு 1700 தான்.எனவே அப்போது ஆரிய மதம் எனப்படும் வேத மதம் இந்தியாவுக்குள் வரவில்லை.வேத மதமானது தற்போதைய மத்திய தரைக்கடல் பகுதியில் குறிப்பாக இராக் அருகே தோன்றியிருக்க வேண்டும்.

    //The Aryans first settled on the Oxus (AMU DARYA in BACTRIA) around 4000 B.C. They called this river the Sarasvati and here Vedic culture developed. Around this time agriculture begins, allowing the population to move from the foothills into oases along the rivers that flow into the Central Asian desert. The new settlements include large fortified buildings. //

    சிந்து சமவெளிநாகரீகம் கி.மு 1700 இல் அழிவுற்றது, அதற்கு காரணம் ஆரிய படை எடுப்பாக இருக்கலாம்,அல்லது வெள்ளமாக இருக்கலாம் என்கிறார்கள். அதன் பின்னரே வேத மதம் சிந்து ஆற்றினை கடந்து இந்தியா எனப்படும் நிலப்பகுதிக்கு வந்தது,ஆனால் அதற்கு முன்னரே இங்கு மக்கள் தொன்மையான சூர்ய வழிப்பாட்டினையும் ,சிலைகளையும் வணங்கியுள்ளனர்.


    இது குறித்து விரிவாக எனது திரும்பிப்பார் என்ற சரித்திரப்பதிவு தொடரில் எழுத இருக்கிறேன், அப்போது இன்னும் சில விவரங்களை அளிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க வவ்வால் :),
    இதை ஆராய்ச்சியின் தொடர்ச்சியாக பார்க்கவேண்டுமே தவிர முடிவாக அல்ல.....

    // அவர்கள் சொன்னதாக வைத்துக்கொண்டாலும் அது நாட்டுக்கே பொருந்தும், மதத்திற்கு அல்ல. //
    இந்துஸ்தான் என்ற பெயரே ஒரு கோட்பாட்டிலிருந்து (அதை மதம்னு வேணும்னா சொல்லலாம்) உருவானதாக தெரிகிறது.
    இது ஆரியர்களால் உருவானது என்று சொல்வதற்கில்லை. அதற்க்கு முன்பே இருந்தவைகளை தெரிந்து கொண்டு அவர்கள் எழுதி இருக்கலாம்.
    இதற்க்கு உதாரணமாக வேதத்தில் பிரகஸ்பதியை பற்றி குறிப்பிடுவதை கூறலாம்.சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட யோகி சிலை பிரகஸ்பதி என்று கூறுகிறார்கள். மேலும் சமண சமயத்தவர்கள் செய்த யோகத்தை பற்றியும் வேதத்தில் குறிப்பு மறைவாக உள்ளது.

    ஆரியர்கள் என்போர் வெளியிலிருந்து வந்திருப்பார்கள் என்பது உண்மையானாலும்(எனக்கு சரியா தெரியல) அவர்கள் இந்த நிலப்பரப்பில் இருப்பவைகளையும் அவர்கள் நூல்களில் குறிப்பிட்டிருக்கலாம் என்பதை மறுக்க முடியாதுதானே? அதுமட்டுமல்ல இங்கிருந்த பழக்க வழக்கங்களை தெரிந்துகொண்டு அதை பற்றி கூட எழுதி இருக்கலாம். எனவே ஆரியர்கள் எழுதிய நூல்களில் இருப்பவைகள் எல்லாம் ஆரியருடையது என்று சொல்ல முடியுமா? முடியாது தானே.

    தொ.........

    பதிலளிநீக்கு
  3. ஆரியர்கள் கொஞ்சம் வெண்மை நிறத்தவர் என்றும், திராவிடர்கள் கருப்பு நிறத்தவர் என்றும் கூறுகிறார்கள் allaavaa ....
    விவேக் சொல்ற மாதிரி ....ராமன் கருப்பு, கிருஷ்ணர் கருப்பு, பாஞ்சாலி கருப்பு, சீதா கருப்பு இப்படி எல்லாம் கருப்பா இருக்கிறபொழுது அவர்கள் எப்படி ஆரியர்கள் ஆனார்கள்?

    இவர்கள் அனைவருமே திராவிடர்கள் தான்.....oruvelai இங்கு வந்த ஆரியன் நான் ஏற்க்கனவே குறிப்பிட்டது போல இங்கு நடந்த நிகழ்வுகளை எழுதி இருக்கலாம் .......

    தொ.........

    பதிலளிநீக்கு

  4. அல்லாவிற்கு இணை வைக்க கூடாது என்று குரான் கூறுகிறது அல்லவா இந்த கருத்தை முதலில் கூறியவன்
    கிருஷ்ணன் ....அவன் ஆரியர்கள் என்று சொள்ளபடுபவர்களின் முதல் தெய்வமான இந்திரனை வழிபட கூடாது என்னைத்தான் வழிபட வேண்டும் என்று கூறுகிறான்.இந்திர விழா தடை செய்யப்படுகிறது (நினைவில் கொள்க சிலப்பதிகாரத்திலும் இந்திர விழா உண்டு) பிறகு இந்திரன் கோபப்பட்டு அதிக மழையை கொட்ட கிருஷ்ணன் கோவர்த்தன மலையை தூக்கி மக்களை காக்கிறான்......
    தொ............

    பதிலளிநீக்கு

  5. மேற்கூறியவற்றை இன்னொரு மாதிரி கூட யோசிக்கலாம் ....இங்கு வந்த பிறகு ஆரியர்களால் இந்திர விழா மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பிறகு கிருஷணர் வந்து இந்திர விழாவை தடை செய்யும்படி கூறி இருக்கலாம்.
    கிருஷ்ணன் ராமர் பற்றி சொல்றார் எனவே கொஞ்சம் ராமயணத்துக்கு போவோம்
    தொ............

    பதிலளிநீக்கு
  6. ராமாயணம் கிருஷ்ணர் காலத்தை விட முற்காலத்தில் நடந்ததா சொல்றாங்க...

    ராமர் தமிழ்நாட்டுல சிவனை வணங்குகிறார், அவுங்க ஊர்ல வணங்கினாரானு தெரியல...
    ராவணன் தீவிர சிவபக்தன்,
    இப்படிப்பட்ட சிவனை பற்றி கீதையில வட இந்தியாவுல வாழ்ந்த கிருஷணர் சொல்லி இருக்கிற மாதிரி தெரியல.(ஒருவேள சொல்லி இருப்பாரோ கொஞ்சம் பார்த்து படிக்கணும் )
    ஏன் இப்படி :)

    தென்னகத்தில் சிவன் பிரபலம், கைய்லாத்துல சிவன் பிரபலம் ஆனா நடுவுல....தெரியல
    தொ....

    பதிலளிநீக்கு
  7. //இது குறித்து விரிவாக எனது திரும்பிப்பார் என்ற சரித்திரப்பதிவு தொடரில் எழுத இருக்கிறேன், அப்போது இன்னும் சில விவரங்களை அளிக்கிறேன்.//
    எழுதுங்க வாழ்த்துக்கள் வவ்வால்.....neenga சிவன அதான் அனைத்து மதங்களின் ஒரே ஏக இறைவன் ஈசன். அந்த ஈசனின் மூலத்தை அறிந்தால் பல உண்மைகளுக்கு விடை கிடைக்கும் ....
    எனவே சிவனை பற்றி கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள்...
    நன்றி :)

    பதிலளிநீக்கு

  8. ஏன் இத்தனை பின்னூட்டம் என்று நீங்கள் நினைக்கலாம்
    சும்மா ஒரு ஆய்வுதான் :)

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோ நல்ல பதிவு,
    நாம் எதிலும் நல்ல விடய்ங்களையே தேடுவோம்.ஏற்போம். இபோதிய பொதுவான கருத்து சிந்து நதிக்கு அப்பால் வாழ்ந்த ம்க்களை குறிக்க இந்து, இடம் இந்துஸ்தானம் என அரபுகளால் முதன்முதலில்[ பொ ஆ 712] அழைக்கப்பட்டது என்பதுதானே.

    ஆனால் நீங்கள் ரிக் வேதத்தில் சான்று காட்டி உள்ளீர்கள்.
    // பழமையான ரிக் வேதத்திலேயே(கி. மு. 1700 முதல் 1100 வரை) இந்து, இந்துஸ்தான் என்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்கான ஆதாரம் //

    ரிக் வேதம் என்பது நீங்கள் குறிப்பிட்ட கால்த்தில் தோன்றியதாக்வே பொதுவான் கருத்து. ஆகவே இந்த செய்யுள் ரிக் வேதத்தில் இருக்கும் ஆயின் உங்களின் கருத்தே சரி!!

    இதுவரை யாரும் சொல்லாத ஒன்று சகோ வாழ்த்துக்கள்.

    ஆரியன் திராவிடம் பொறுத்த்வரை நம் கருத்து. இந்தியாவில் வாழும் பெரும்பானமையோர் திராவிட இனத்த்வரே, ஆரியர்கள் வருகையே மிக குறைவாக் இதர இனத்த்வர் அள்வே இருந்து இருக்கும்.ஆகவேதான் மரபியல் ஆய்வுகள் இந்தியர்களிடையே அதிக வித்தியாசம் காட்டுவது இல்லை.

    சம்ஸ்கிருதம் ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்றாலும் அதிகம் பயன்பாட்டுக்கு வந்தது இந்தியாவில்தான், இந்திய பிராமி,கிரந்த ,குபத எழுத்து முறைகளில்தான் அதிகம் எழுதப் பட்டது.ஆரியர்களின் மொழியை சம்ஸ்கிருதம் என்பதில் நமக்கு உடன்பாடு இல்லை, அந்த மொழியும் இங்கேயுள்ள மொழிகளும் இணைந்தே முழுப் பரிமாணம் அடைந்து இருக்கும் என்வே ஏற்கிறேன். சம்ஸ்கிருதத்தில் தமிழின் தாக்கமும் உண்டு.
    http://www.scribd.com/doc/24500060/Tamil-Words-in-Sanskrit
    கிரேக்கர்கள் அலெக்சாண்டர் கால்த்தில் இலட்சக் கணக்கில் [ கி.மு 300]இங்கேயே தங்கி விட்டனர் என்பதையும் கருத்தில் கொள்வது நல்லது.
    வெள்ளை நிறம் இப்படி கூட வந்து இருக்க்லாம்.கிரெக்க புராணம்,கடவுள்கள், சோதிடம் போன்றவை கூட இங்கே கிரேக்கர்களால் வந்தவையே.

    வேதங்களில் தமிழ் சொற்கள் உண்டா என்பதும் நம் தேடல் இது குறித்து அறிந்தால் பகிரலாம்.

    நன்றி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வேதங்களில் தமிழ் சொற்கள் உண்டா என்பதும் நம் தேடல் இது குறித்து அறிந்தால் பகிரலாம்.//

      அகம் என்பது தமிழா சமஸ்கிருதமா தெரியவில்லை. அகம் பிரம்மாஸ்மி இது சமஸ்கிருதத்திலும் தமிழிலும் ஒருபொருளை குறிப்பது போல் தான் உள்ளது. உள்ளம் உள்ளமே கடவுள்/கோயில்.
      எனக்கு தெரிந்து தமிழுக்கும், சம்ஸ்கிருதத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இதுபற்றி எவரும் சரிவர ஆய்ந்தத்தாக தெரியவில்லை.
      குட்டி சுற்றுப்பயணத்தில் இருப்பதால் இதுபற்றி விரிவாக பிறகு பேசலாம். தங்களுடைய கருத்துக்கும் சுட்டிகளுக்கும் மிக்க நன்றி தோழா :) (சகோ vaarthaiyai vittuvidalaam என்று பேச்சு நிலவுகிறது :)

      நீக்கு
  10. இந்தியர் அனைவரும் இரு இனத் தன்மைக‌ளும் கொண்ட ஓரினத்தவரே!!

    Indian ancestry revealed
    The mixing of two distinct lineages led to most modern-day Indians.
    http://www.nature.com/news/2009/090922/full/news.2009.935.html


    The population of India was founded on two ancient groups that are as genetically distinct from each other as they are from other Asians, according to the largest DNA survey of Indian heritage to date. Nowadays, however, most Indians are a genetic hotchpotch of both ancestries, despite the populous nation's highly stratified social structure.

    "All Indians are pretty similar," says Chris Tyler-Smith, a genome researcher at the Wellcome Trust Sanger Institute near Cambridge, UK, who was not involved in the study. "The population subdivision has not had a dominating effect."
    ....
    இந்தியர்களின் ஜீனோம் அனைத்து சாதியினரும் தங்களுக்குள்ளேயே அகமண முறை மேற்கொண்டு இருப்பினும் அதிக ஒற்றுமை கொண்டுள்ளது வியப்பளிக்கிறது
    ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள்.

    ஆகவே சாதி என்பது கிடையாது!!!

    அனைவரும் ஓரின ,ஒருதாய் மக்களே!!

    The evidence that most Indians are genetically alike, even though anthropological data show that Indian groups tend to marry within their own group, is "very puzzling", says Aravinda Chakravarti, a human molecular geneticist at the Johns Hopkins University School of Medicine in Baltimore, Maryland, who wrote an accompanying News & Views article3. For example, Chakravarti notes that the study can't establish a rough date for when the ancient mixing between the two ancestral populations took place. "There are very curious features of the data that are hard to explain," he says, adding: "This is not the end of the story."

    நன்றி!!!!

    பதிலளிநீக்கு
  11. புரட்சிமணி,

    நீங்கள் இந்து என்ற பெயர் எப்படி வந்தது என்பது பற்றி கேள்வி எழுப்பியுள்ளீர்கள். அதற்கு விக்கியில் இருந்து இரண்டு தரவு கொடுத்துள்ளீர்கள்.

    1. நீங்கள் கொடுத்த இரண்டு தரவும் ஒன்றே. Brihaspati Agama,
    Barhaspatya Samhita பெயர் மட்டுமே வேறு அங்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரே ஸ்லோகம் ஆங்கிலத்திலும், தேவநாகரியிலும் எழுதப்பட்டுள்ளது.
    2. Brihaspati Agama, Barhaspatya Samhita இவை இரண்டும் ரிக்வேதத்தில் இல்லை. சந்தேகம் இருந்தால் விக்கியில் இவற்றிற்கான தொடுப்புகளைப் பார்க்கவும். ரிக்வேதத்தில் நீங்களே பாருங்கள்.
    http://www.sacred-texts.com/hin/rigveda/rvi10.htm
    3. கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தின் மொழி பெயர்ப்பு சந்தேகத்திற்கிடமானது. அதில் இமயத்திற்கும் இந்து சரோவருக்கும் இடைப்பட்ட இடம் என கொடுக்கப்பட்டுள்ளது. நம்ம வகாபிகள் போல அடைப்புக்குறியிட்டு இந்துசரோவரை இந்துமகா சமுத்திரமாகப்பட்டுள்ளது. சரோவர் என்பது அகண்டநீர்நிலையை (குளம், ஏரி) முதலியவற்றை குறிக்கப் பயன்படுத்துகிறார்கள், கடலை அல்ல(எ.கா.மானசரோவர், ப்ரமசரோவர்). கடலுக்கு சமுத்திரம், சாகரம் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //1. நீங்கள் கொடுத்த இரண்டு தரவும் ஒன்றே. Brihaspati Agama, //
      உண்மை தான் இதை நான் அறிந்தே தந்துள்ளேன்.

      //2. Brihaspati Agama, Barhaspatya Samhita இவை இரண்டும் ரிக்வேதத்தில் இல்லை. சந்தேகம் இருந்தால் விக்கியில் இவற்றிற்கான தொடுப்புகளைப் பார்க்கவும். ரிக்வேதத்தில் நீங்களே பாருங்கள்.//
      அருமை...விக்கியில் தான் ரிக் வேடம் என்று குறிப்பிடப்படுகிறது மூலத்தில் தரப்பட்டுள்ளதா என்பதை அறிய பின்வரும் சுட்டியில் இருக்கும் புத்தகத்தில் குறிப்பிடப்படும் எண் 12 மூலத்தை பார்க்க வேண்டும். அதை என்னால் பார்க்க முடியவில்லை. நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

      http://books.google.co.in/books?id=Dz-5B8_jMpEC&pg=PA59&dq=%22Brihaspati+Agama%22&hl=en#v=onepage&q&f=false
      http://www.vhp-america.org/dynamic_includes/ebooks/0503hv-1_final.pdf

      //நம்ம வகாபிகள் போல அடைப்புக்குறியிட்டு இந்துசரோவரை இந்துமகா சமுத்திரமாகப்பட்டுள்ளது.//
      :)
      நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். இது பற்றி மேலும் கொஞ்சம் ஆய்வு செய்யுங்கள்...நானும் பார்க்கிறேன்.
      குட்டி சுற்றுப்பயணத்தில் இருப்பதால் பிறகு பேசலாம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

      நீக்கு
  12. சகோ புரட்சிமணி அவர்களுக்கு,
    " இசுலாமிய சவுதியில் தீண்டாமை இல்லையா? "
    என்ற தங்களது பதிவில்... எனது பின்னூட்டம்....

    "தீண்டாமை" என்ற பதத்திற்குரிய சரியான அர்த்தம் என்ன என்பதை சற்று விளக்குவீர்களா??

    என்றும் அன்புடன்
    அ. ஹாஜாமைதீன்.September 29, 2012 1:18 AM

    பதிலளிநீக்கு
  13. கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


    தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


    தீண்டாமை ஒரு சமூகக் குழுவினரை ஏனைய சமூகக் குழுவினரோடு சம உரிமையோடு தொடர்புகளைப் பேணுவதைத் தடுக்கும் ஒரு சமூக முறைமையாகும். சமூகத்தின் பொது விதிகளுக்குள் வரையறுக்க முடியாதவர்கள் வழமையாக தீண்டாமைக்குட்படுத்தப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக வெளிநாட்டவர்கள், ஆதிவாசிகள், குற்றவாளிகள், ஓரின சேர்கையாளர்கள், திருநங்கைகள், கழிவகற்றும் தொழி செய்பவர்கள் போன்றவர்கள் தொடர்ச்சியாக தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தீண்டாமை சமூகத்தின் பொது விதிகளுக்கு அமையாதவர்களையும், விதிகளை மீறியவர்களையுன் தண்டித்து பொது சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் செயற்பாடகவும் பயன்பட்டுள்ளது.

    தீண்டாமை பரவலாக இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தலித் மக்கள் நடத்தப்படும் முறைமையைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த்ய விடுதலைக்குப் பின்னர் தீண்டாமை சட்டவிரோதமாதாகும்.[1]

    யேமனில் நிலவிவரும் அல்- அக்டாம் இனத்தவருக்கு எதிரான பாகுபாடும், யப்பானில் புரகுமின் மக்களுக்கு எதிரான பாகுபாடும், ஐரோப்பாவில் நாடோடிகளுக்கெதிரான பாகுபாடும் தீண்டாமைக்கான எடுத்துக்காட்டுகளாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு.சார்வாகன் அவர்களுக்கு,
      தங்களது விளக்கத்திற்கு மிக்க நன்றி, பதிவரின் பதிலை எதிர்பார்க்கின்றேன்.

      என்றும் அன்புடன்,
      அ. ஹாஜாமைதீன்.

      நீக்கு
    2. அ. ஹாஜாமைதீன்,
      உங்களுடைய இந்த பின்னூட்டத்தை இப்பொழுதான் பார்த்தேன். என்னுடைய கருத்தை இதற்க்கு அடுத்த பதிவில் கூறியுள்ளேன். தங்கள் கருத்தை தாரளாமாக கூறுங்கள்.
      என்றும் அன்புடனும் உண்மையுடனும்
      இராச.புரட்சிமணி

      நீக்கு
  14. அடங்கொக்க மக்க இவ்வளவு பெரிய பின்னோடாத நான் இப்ப தான் பார்க்குறேன். எல்லோரும் ஆராசியாலர்களே இன்று எனது தலத்தில் http://eththanam.blogspot.in/2012/10/blog-post_4.html?

    பதிலளிநீக்கு
  15. மிகத்தவறான கட்டுக்கதைகளைக் குறிப்பிடுகிறீர்கள் என்று கருதுகிறேன்.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள Brihaspati Agama இந்துஸ்தான் என்கிற நாட்டைத்தான் குறிப்பிடுகிறது. மதத்தைக் குறிப்பிடவில்லை. மேலும் Brihaspati Agama என்பது ரிக் வேதத்தில் உள்ளதுதான் என்பதற்கும் ஒரு ஆதாரமும் இல்லை என்றே கருதுகிறேன்.

    காந்தி கொலைசெய்யப்பட காரணமான, சாவர்க்கர் தான் இந்த Brihaspati Agama-வை ஆதாரமாகக் காட்டியுள்ளார்.

    எனவே, "இராமர் பாலம்" போன்று இந்துத்வ பயங்கரவாதிகளின் கட்டுக்கதை பிரச்சாரத்தில் இந்த Brihaspati Agama-வும் ஒன்று என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  16. பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனக்காக பதில் கூறிய நண்பர் சார்வாகானுக்கும் மிக்க நன்றி.
    நண்பர்களே பிற்சேர்க்கையாக பதிவில் ஒரு சுட்டி கொடுத்துள்ளேன் அதையும் படித்து பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எது உண்மை என்றுதான் நான் தேடிகொண்டிருக்கிறேனே தவிர இதுதான் உண்மை என்று நான் கூறவில்லை. நீங்களும் தேடுங்கள். தெரிந்ததை கூறுங்கள் நன்றி :)

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...