வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

திங்கள், 22 அக்டோபர், 2012

ஜாதியை ஒழிப்பது எப்படி?

இந்தியாவில் இருக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று ஜாதி. ஜாதி அமைப்பு இன்றைய  கால கட்டத்திற்கு தேவையற்றது. தீண்டாமையை ஒழிக்க ஜாதியை ஒழிக்க வேண்டும். 

ஜாதியை ஒழிக்க எனக்கு தெரிந்து சில் வழிகள். உங்களது கருத்துக்களையும் கூறுங்கள்.

கல்வி கல்வி கல்வி.....மனிதத்தை பற்றிய கல்வி. இதுவே பல சமுதாய, உலக பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாகும்.   

ஜாதி பிரச்சனயை  மனிதம் ரீதியில் அணுக வேண்டும்.
நாம் அனைவரும் மனிதர்களே  நம்மில் ஏற்றத்தாழ்வு பார்க்க கூடாது என்று மக்களுக்கு  புரிய வைத்தல் வேண்டும். கலை, கல்வி மற்றும் ஒவ்வொரு மனிதனின் ஈடுபாடு இதில் இன்றியமையாதது. 


கிராமங்கள் இருக்கும் வரை ஜாதி இருக்கும். நகர்மயமாக்கலை (விவசாயத்தை பாதிக்காமல்) துரிதப்படுத்துவதன் மூலம் ஜாதி வேறுபாட்டை குறைக்கலாம். இன்று நகரங்களில் ஜாதி பிரச்சனை இல்லை. 


ஜாதி சான்றிதழ் என்ற ஒன்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.அரசாங்கம்  ஜாதி சான்றிதழ்களை வழங்ககூடாது.

அந்நிய துணி எரிப்பு போராட்டம் நடந்தது போல் ஜாதி சான்றிதழ் எரிப்பு போராட்டம் நடத்த வேண்டும். அனைவரது ஜாதி  சான்றிதழ்களையும் தீயிட்டு கொலுத்த    வேண்டும்.


ஜாதி ரீதியான இட ஒதுக்கீட்டை  நிறுத்திவிட்டு விட்டு பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டை  செயல்படுத்த வேண்டும்.


கல்வியில் இட ஒதுக்கீடு   ஏழைகளுக்கும், பணக்காரர்களாக இருந்தும் கல்வி கற்காத குடும்பத்தினருக்கும் கிடைக்கும்படி வழிவகை செய்திடல் வேண்டும்.

வேலை வாய்ப்பில் ஏழைகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும்.

இவற்றில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் அதை களைய நாம் முற்ப்பட வேண்டும். 
யாரும் எந்த விதத்திலும் ஜாதி பெயர்களை உபயோகிக்க கூடாது என்ற சட்டத்தை கொண்டு வரவேண்டும்.

 திருமணம் செய்யும் பொழுதும் யாரும் ஜாதி பார்க்க கூடாது என்ற சட்டத்தை கொண்டு வரவேண்டும்.

இதன் மூலம்  சில தலைமுறைகளுக்கு பிறகு ஒருவன்  எந்த  ஜாதியை சார்ந்தவன் என்று அவனே அறிய முடியாத நிலை ஏற்ப்படும்.  இதன் மூலம் ஜாதியானது முற்றிலும் ஒழிக்கப்படும்.

ஆனால் சுய நலவாத அரசியல் கட்சிகள் இதை செய்யப்போவதில்லை. ஜாதி ரீதியாக கணக்கெடுப்பு வேறு எடுத்து விட்டார்கள்.

 ஜாதி கணக்கெடுப்பு இன்றும் நடந்து கொண்டிருந்தாள் அதை நிறுத்த நீதிமன்றத்தை அணுகலாம் என்று நினைக்கின்றேன்.  ஜாதி கணக்கெடுப்பு எடுத்திருந்தாலும் அதை வெளியிட கூடாது என்று உயர், உச்ச நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க வேண்டும்.  உங்களுக்கு தெரிந்து ஏதாவது வழக்கறிஞர் தெரிந்தால் சொல்லுங்கள். முதல் வேலையாக ஜாதி கணக்கெடுப்பு  கணக்கை முடிப்போம். பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம்.

யாரெல்லாம் ஜாதி கணக்கெடுப்பை ஆதரிக்கின்றார்களோ அவர்கள் தீண்டாமையை  ஆதரிப்பதாகத்தானே அர்த்தம்?

மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்க வேண்டுமே ஒழிய அவனது ஜாதி,  மதம் இவற்றை பார்க்க கூடாது. ஜாதியும் மதமும் கண்டிப்பாக இந்தியாவில் அழிக்கப்பட  வேண்டியவை .இவற்றை அழிக்காத வரை இந்தியாவில் இந்தியர்களுக்கு மத்தியில் ஒற்றுமை என்பதை கொண்டு வருதல் சாத்தியம் இல்லை. மதங்களை ஒழிப்பது எப்படி என்று மற்றொரு பதிவில் பார்ப்போம். 

குறிப்பு: சட்டங்களை படிப்படியாக செயல்படுத்த வேண்டும். ஒரே இரவில் செயல்படுத்தினால்  ஒட்டு மொத்த மக்களும் எதிர்க்க செய்வார்கள். மக்கள் மனதில்  மாற்றத்தை,புரிதலை ஏற்ப்படுத்திக்கொன்டே சட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

34 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வாங்க சேக்காளி,
   இது வெறியல்ல வெறியை குறைக்க வழிகள்.
   தங்கள் வருகைக்கு மிக்க நன்றி :)

   நீக்கு
 2. ஜாதியை எப்படிஒழிப்பது என்பது பற்றி நீங்களே சரியான பாதையை காட்டி விட்டீர்கள்.ஒன்றில் மட்டும் எனக்கு நம்பிக்கையில்லை. ஜாதிக்கு கல்வி தீர்வு- ஏனெனில் கல்வி கற்றவனே ஜாதி கட்சி தொடங்கி தனது சுயநலத்திற்காக ஜாதியை பாதுகாக்கிறான்.
  நீங்கள் சொன்ன ஆலோசனைகளில் அவசியம் அரசு கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமானது.
  ஜாதி பிரச்சனயை மனிதம் ரீதியில் அணுக வேண்டும்.
  ஜாதி சான்றிதழ் என்ற ஒன்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.அரசாங்கம் ஜாதி சான்றிதழ்களை வழங்ககூடாது.
  ஜாதி ரீதியான இட ஒதுக்கீட்டை நிறுத்திவிட்டு விட்டு பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்.
  யாரும் எந்த விதத்திலும் ஜாதி பெயர்களை உபயோகிக்க கூடாது என்ற சட்டத்தை கொண்டு வரவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வேகநரி,
   //ஒன்றில் மட்டும் எனக்கு நம்பிக்கையில்லை. ஜாதிக்கு கல்வி தீர்வு- ஏனெனில் கல்வி கற்றவனே ஜாதி கட்சி தொடங்கி தனது சுயநலத்திற்காக ஜாதியை பாதுகாக்கிறான். ஜாதிக்கு கல்வி தீர்வு- ஏனெனில் கல்வி கற்றவனே ஜாதி கட்சி தொடங்கி தனது சுயநலத்திற்காக ஜாதியை பாதுகாக்கிறான்//
   நீங்கள் சொல்வது உண்மைதான். அதனால் தான் மனிதத்தை பற்றிய கல்வி என்றேன். சாதாரண கல்வியால் மனிதத்தை, மனித நேயத்தை மக்கள் மத்தியில் கொண்டு வர முடியாது.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 3. ///இந்தியாவில் இருக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று ஜாதி. ஜாதி அமைப்பு இன்றைய கால கட்டத்திற்கு தேவையற்றது. தீண்டாமையை ஒழிக்க ஜாதியை ஒழிக்க வேண்டும். ////

  இந்தியாவில் இருக்கும் முக்கிய பிரச்சனை மதம். மதம் என்ற ஒன்று என்றுமே தேவைப்படாத ஒன்று. தீவிரவாதத்தை ஒழிக்க மதத்தை ஒழிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ராவணன்,
   உங்கள் கருத்தை நான் நூற்றுக்கு நூறு சதவீதம் ஏற்றுக்கொள்கிறேன். மதங்களை கண்டிப்பாக ஒழித்தே ஆகவேண்டும். அதைஎப்படி அழிப்பது அதற்க்கு நாம் என்ன செய்யலாம் என்பது பற்றி மற்றொரு பதிவில் பார்ப்போம்.....நடவடிக்கையை எடுப்போம். உங்கள் கருத்தையும் உதவியையும் தாருங்கள்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 4. ஜாதி நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும். வேலைக்கும், கல்விக்கும் ஜாதியைக் கேட்பதை அரசாங்கம் நிறுத்திவிட்டாலே ஜாதி வலுவிழந்து விடும். அருமையான சிந்தனை. முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துரைடேனியல்,
   கண்டிப்பாக இதை நாம் முன்னெடுத்து செல்லவேண்டும்...செல்வோம் வாருங்கள்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 5. //வேலைக்கும், கல்விக்கும் ஜாதியைக் கேட்பதை அரசாங்கம் நிறுத்திவிட்டாலே ஜாதி வலுவிழந்து விடும்//
  வீடு வாடகைக்கு கொடுக்க ஜாதி கேட்கிறார்களே அதை எப்படி ஒழிப்பது நண்பர்களே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சேக்காளி,
   படிப்படியாக மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்ப்படுத்திக்கொண்டு சட்டத்தையும் கொண்டுவர வேண்டும். பெரும்பாலான இடங்களில் ஜாதி கேட்பத்தில்லை. சில இடங்களில் இது நடக்கலாம். இதை நம்மால் மாற்ற முடியும். ஒரு புறம் நாம் மாறுவோம், மக்கள் மனதில் மாற்றத்தை கொண்டுவர முயல்வோம் , மறுபுறம் அரசாங்கம் மனது வைக்க வேண்டும் அவ்வளவே.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 6. சேக்காளி@
  வீடு வாடகைக்கு கொடுக்க ஜாதி சில இடங்களில் கேட்கிறார்கள் என்றால் அதற்கு அரசாங்கமே பெரும் பகுதி பொறுப்பு.அரசாங்கமே ஜாதி சான்றிதழ்களை மனிதர்களுக்கு வழங்குகிறது. அரசாங்கமே ஜாதி பார்த்தே இட ஒதுக்கீட்டு உதவிகளை மனிதர்களுக்கு வழங்குகிறது.
  அரசாங்கம் தனது மக்களிடம் ஜாதி கேட்பதை நிறுத்துவது ஜாதி ஒழிப்புக்கான அவசியமான முதல் படி.
  நண்பர் புரச்சிமணி,
  ஜாதி கணக்கெடுப்பை ஆதரிப்பவர்கள் ஜாதி வேறு பாடுகளை காப்பாற்றும் தீண்டாமையின் பாதுகாவலர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி எல்லாரும் யோசிச்சாசீக்கிரமே ஜாதி பிரச்னைய ஒழிச்சுரலாம்.

   நீக்கு

  2. //நண்பர் புரச்சிமணி,
   ஜாதி கணக்கெடுப்பை ஆதரிப்பவர்கள் ஜாதி வேறு பாடுகளை காப்பாற்றும் தீண்டாமையின் பாதுகாவலர்கள்.//
   அவர்கள் அறியாமையில் அவ்வாறு செய்கிறார்களா அல்லது தெரிந்தே அவ்வாறு செய்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை.

   தங்கள் ஜாதியை சார்ந்தவர்களுக்காக போராடவேண்டும் என்ற அவர்கள் நோக்கத்தை நான் வரவேற்கிறேன்.ஆனால் ஜாதி கணக்கெடுப்பு எனபது தீண்டாமையை ஒழிக்க பயன்படாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.மேலும் இது வருங்காலத்தில் ஜாதி சண்டைகளுக்கு வித்திடலாம் என்பதையும் அவர்கள் உணரவேண்டும்.
   எல்லா ஜாதிகளிலும் பணக்காரர்களும் உள்ளனர் ஏழைகளும் உள்ளனர். . இட ஒதுக்கீடு எனபது ஏழைகளை மட்டும் சென்றடைய வேண்டும் என்ற புரிதல் தான் இந்த பிரச்னையை தீர்க்கும்.

   நீக்கு
 7. and one more important thing to strictly follow is....

  No differentiation in all the religious and temple related activities based on thee cast system. This is the main source which keeps the cast system in live.

  Supiramani

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Hi Thamizhan,
   Caste is alive mainly because government asking caste in the school stage itself. of course whoever interested in becoming priest should be allowed to become a priest.
   Thanks for your comments :)

   நீக்கு
 8. இக்பால் செல்வனின் பதிவு ஒன்றில் ரொபின் என்னிடம் ஜாதி கேட்டார். பின்னோட்டமிடுவதற்க்கே ஜாதி பார்க்கும் நிலையில் தான் இந்தியா இருக்கிறது. அரசாங்கம் ஜாதி கேட்பதை சகலவற்றிலும் நிறுத்துவது தான் ஜாதி ஒழிப்புக்கான முதல் படி.
  நண்பர் புரச்சிமணி, பாபர் மசூதிவிவகாரம் சிலருக்கு இன்னும் முடியவில்லையாமே!? சிலர் ஒரு மார்க்கமாக தான் திரிறாங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வேகநரி,
   ஜாதியை வளர்க்கத்தான் பலர் பார்க்கிறார்களே தவிர ஒழிக்க அல்ல.
   ஒரு மார்க்கமா அலைஞ்சா பிரச்சனை இல்ல "ஒரே மார்க்கமா " அலையுறாங்க அதான் பிரச்சனை :)
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 9. தம்பி புர்சிமணி... சாதி ஒழிப்பு பற்றி டாக்டர் அம்பேத்கர் அவர்கள் "சாதி ஒழிப்பு" என்று ஒரு நூலே எழுதியிருக்கிறார். இது போன்ற கட்டுரைகளை எழுதும் முன்பு அது போன்ற இரண்டு மூன்று நூல்களை படித்து ஆராய்ந்து எழுதவும். அப்போதுதான் கத்துக்குட்டித்தனங்கள் ஒழியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணே கீழே இருக்கும் பின்னூட்டங்களையும் பார்த்துவிட்டு ஒரு கருத்து சொல்லுங்களேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 10. சோ.சுப்புராஜ் said...
  அய்யா புரட்சிமணியாரே! இந்திய அரசியல் சட்டப்படி அதிக பட்சமாக 50% சதவிகிதத்தைத் தான் இடஒதுக்கீடு படி ஒதுக்க வேணுடும். மீதி 50% அப்படியே இருக்கிறதே! அதை பொருளாதார அடிப்படையில் சாதி எதுவும் பார்க்காமல் ஏழைகளுக்குக் கொடுக்க சட்டம் இயற்றுவதற்கு உங்களின் உயர் ஜாதி மனோபாவம் ஒத்துக் கொள்ளுமா? சில குறிப்பிட்ட இழி தொழில்களை கார்ப்பரேசன் தோட்டி போன்ற வேலைகளை 100% இட ஒதுக்கீடே இல்லாமல் கீழ்நிலை ஜாதியினர் தானே செய்கிறார்கள். அதை ஏன் உயர் ஜாதியினர் வந்து செய்யக் கூடாது; வர மாட்டேனென்கிறார்களே! அதே சமயத்தில் அர்ச்சகர் மாதிரியான சொகுசான வேலைகளைச் செய்ய மட்டும் எந்த ஜாதியினரையும் அனுமதிக்க மாட்டேனென்கிறார்களே! ஒன்று செய்யலாம்; இப்போதைய அர்ச்சகர்கள் எல்லாம் தோட்டி வேலை செய்யப் போகட்டும்;இப்போது தோட்டி வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் பயிற்சி கொடுத்து அர்ச்சகர்கள் ஆக்கி விடலாம். அதற்கு உயர்ஜாதி இந்துக்கள் எல்லாம் தயாரா? தயாரென்றால், அதிக் கொஞ்சகாலம் அமல் படுத்தி விட்டு, சாதிய ரீதியிலான இட ஒதுக்கீட்டை படிப்படியாய் ரத்து செய்து விடலாம்.

  November 02, 2012 2:39 AM

  பதிலளிநீக்கு
 11. R.Puratchimani said...  ஐயா சோ.சுப்புராஜ்,
  ஜாதி இருப்பதால் தானே தீண்டாமை இருக்கின்றது?. ஜாதி இருக்கும் வரை ஜாதி தீண்டாமை இருக்கும் தானே?
  ஜாதியை ஒழிப்பதன மூலம் (ஜாதி) தீண்டாமையை ஒழிக்க முடியுமா முடியாதா? என்பதை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.
  உணர்ச்சிவசப்படுவதால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. ஜாதியையும் வைத்துக்கொள்ள வேண்டும் தீண்டாமையும் ஒழிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அது சாத்தியம் என்றால் அதற்க்கான வழிகளையாவது கூறுங்கள்.நீங்கள் கூறிய வழிகள் உணர்சிவசப்பட்டதினால் வந்தது.
  மனிதநேயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தரவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு தருவதில் எந்த தவறும் இல்லை. எனது கருத்தில் தவறு இருப்பின் எனக்கு புரிய வையுங்கள். புரிந்துகொள்ள நான் தயாராகவே உள்ளேன்.
  தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

  November 02, 2012 4:35 AM

  பதிலளிநீக்கு
 12. சோ.சுப்புராஜ் said...
  நம்முடைய இந்திய சமூகத்தில் ஜாதியை ஒழிக்கவே முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை! ஏனென்றால் சாதிய உணர்வு பாராட்டுவதென்பது நம்முடைய இரத்தத்திலேயே விஷம் மாதிரி விரவிக் கிடக்கிறது. இப்போதும் நம்முடைய அரசியல் சட்டப்படி ஜாதியைக் குறித்துக் கேவலமாகப் பேசுவதென்பது வன்கொடுமையாகக் கருதப்படத் தான் செய்கிறது. ஆனாலும் ஜாதி துவேஷங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அதற்காகத் தண்டிக்கப் படுவதென்பது மிக மிக அபூர்வமான நிகழ்வு தான். திண்ணியத்தில் தலித்துகளின் வாயில் மலத்தைக் கரைத்து ஊற்றியவர்கள் கூட ஏதெதோ காரணங்களால் தப்பித்து போய் விட்டார்கள். அனைவரும் அர்ச்சகராகலாம் என்று சட்டமியற்றி அதற்கான கல்வியும் கற்பிக்கப்பட்டு, அவர்கள் அர்ச்சகர்களாக ஆகும் நேரத்தில் அதற்கான தடை ஆணை பிறப்பிக்கப் பட்டு விட்டு, அவர்கள் இப்போது வேலை இல்லாமல் கிடக்கிறார்கள். அந்தத் தடையாணையைப் பெற்றவர்கள் என்ன கல்வி அறிவு இல்லாதவர்களா இல்லை கிராமத்துக்காரர்களா? தனக்குக் கீழே உள்ளவன் தனக்குச் சமமாக மேலே வருவதை சகித்துக் கொள்ள முடியாத ஜாதிய மனோபாவம் தானே காரணம்? அதனால் தான் சொல்கிறேன். இட ஒதுக்கீடு என்பது ஜாதிய இழிநிலையை கருத்தில் கொண்டு அவர்களைக் கொஞ்சமாச்சும் முன்னேற்றுவதற்காகச் செய்யப் படுவது; அதற்கு எப்படி பொருளாதார அளவுகோலைக் கொண்டுவர முடியும்? அப்படி பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்தால் மேல்நிலை ஜாதியிலிருக்கும் ஏழைகள் தான் பயனடைவார்கள்; கீழ் நிலையிலிருப்பவர்கள் அப்படியே தேங்கிப் போவார்கள். சமநிலையிலிருப்பவர்களுக்கிடையில் தான் போட்டி சாத்தியம்; நம்மிடம் எதுவுமே சம நிலையில் இல்லை. அப்படி இருக்கும் போது எப்படி பொருளாதார அளவு கோல்படி இட ஒதுக்கீடு செய்ய முடியும்? ஒரு தலித் இந்து கிறிஸ்துவனாகவோ முஸ்லீமாகவோ மாறினால் அவனை நம்முடைய அரசியல் சட்டம் தாழ்த்தப்பட்டவனாகக் கருதுவதில்லை; காரணம் அந்த நபர் மதம் மாறியவுடன் அவனுடைய ஜாதிய இழிவுகள் போய்விட்டது என்று கருதி அந்தச் சலுகைகளை ரத்து பண்ணி விடுகிறது. ஆனால் அந்த மதங்களிலும் நம்முடைய இந்திய மனோபாவமே மேலோங்கி இருப்பதால் அவர்கள் அங்கும் தலித் கிறிஸ்துவர், நாடார் கிறிஸ்துவர் என்று தான் பிரித்து வைக்கப் படுகிறார்கள். அதனால் தான் நான் முதலிலேயே குறிப்பிட்டேன். நம் இந்தியர்கள் எங்கு போனாலும் தன்னுடைய ஜாதியையும் சுமந்து கொண்டு தான் செல்கிறார்கள்.எனக்கும் ஜாதிகள் ஒழிந்த சமத்துவ சமுதாயம் தான் கனவு! ஆனால் அது இப்போதைக்கு சாத்தியமில்லை என்பது தான் நிதர்சனம்! அதனால் தான் பொருளாதார அளவு கோல்படி இட ஒதுக்கீடு செய்யக் கூடாது என்கிறேன். உண்மையிலேயே பொருளாதார அளவில் பின் தங்கி இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென்றால் அதை பொதுப்பிரிவிலிருந்து (ஓ.சி.)தொடங்க வேண்டுமென்கிறேன். அப்புறம் இடஒதுக்கீடு கோட்டாவுக்கும் அதை விஸ்தரிக்கலாம். ஆனால் இடஒதுக்கீட்டில் பயனடையும் பிரிவுக்கு மட்டும் பொருளாதார அளவுகோலைக் கொண்டு வருவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்பது தான் என் நிலை!

  November 02, 2012 5:33 AM

  பதிலளிநீக்கு
 13. R.Puratchimani said...
  ஐயா சுப்பாராஜ்,
  //அப்படி பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்தால் மேல்நிலை ஜாதியிலிருக்கும் ஏழைகள் தான் பயனடைவார்கள்; கீழ் நிலையிலிருப்பவர்கள் அப்படியே தேங்கிப் போவார்கள்//
  உங்களுக்கு பின்னூட்டம் இட்டுவிட்டு நானும் கொஞ்சம் சிந்தித்து கொண்டு இருந்தேன். அப்பொழுது நீங்கள் இங்கே கூறி இருப்பவற்றைத்தான் நானும் உணர்ந்தேன்.
  நானும் புரிந்துகொண்டேன் நீங்களும் எனக்கு புரியவைத்துள்ளீர்கள் நன்றி :)


  சரி இதை எப்படி சரி செய்வது
  ஒவ்வொரு ஜாதியிலும் ஏழைக்கு மட்டும் இட ஒதுக்கீடு அளிக்கலாம்....
  சரி இது இருக்கட்டும் ஒருபுறம் இதை நடைமுறை படுத்தலாம்.

  பிறகு எப்படி ஜாதியை ஒழிப்பது.
  எல்லோரும் பொருளாதார அளவில் முன்னேற்றம் அடைந்தவுடன் தான் ஜாதியை ஒழிக்க அனைவரும் முன்வருவார்களா?
  அப்படியே எண்ணுவோம்

  தொடர்ந்து சிந்திப்போம் நன்றி :)

  பதிலளிநீக்கு
 14. R.Puratchimani said...
  aiyaa சோ.சுப்புராஜ்,
  // உண்மையிலேயே பொருளாதார அளவில் பின் தங்கி இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென்றால் அதை பொதுப்பிரிவிலிருந்து (ஓ.சி.)தொடங்க வேண்டுமென்கிறேன்.//
  ungalathu intha sinthaniyum pariseelanaikku uriyathey

  aezhaigal எந்த ஜாதியில் இருந்தாலும் அவர்களும் பயனடையவேண்டும் என்பதே manithaneyaththai virumbubavargalathu ennamaaga irukkum ena ennugiren.

  nandri

  பதிலளிநீக்கு
 15. வவ்வால் said...
  புரட்சி மணி,

  போகாத ஊருக்கு வழி சொல்லிக்கிட்டு இருக்கீங்க.

  ஜாதிய வச்சுக்கோங்க ,வைக்காம இருங்க, ஆனால் அதை வைத்து அடுத்தவர்களை அடக்க முயல வேண்டம் என்பதே முக்கியம்.

  மதத்தை வச்சுக்கோங்க, வைக்காம இருங்க,ஆனால் எம்மதம் தான் உசத்தின்னு பீத்திக்கிட்டு இருக்க வேண்டாம்.

  2000 வருடம் அடக்கியாளப்பட்டு கடந்த 66 வருடங்களாக தானே இடஒதுக்கீட்டின் பலனால் கொஞ்சம் முன்னேறுகிறார்கள் ,அதற்குள் ஓடி வந்து பொருளாதார அளவுகோல் வை என்றால் எப்பூடி?

  ஒடுக்கப்பட்ட மக்களில் கிரிமீ லேயர் தான் அனுபவிக்கிறது என்ற வியாக்கியானம் எல்லாம் மற்றவர்கள் சொல்ல தேவையில்லை, அதனை அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.

  முதலில் பொருளாதார ஒதுக்கீடு என சொல்லி ,அப்படியே படிப்படியாக கிடைத்த உரிமையையும் புடுங்கும் திட்டம் எல்லாம் நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்.

  சுப்புராஜ் சொல்வதில் நியாயம் இருக்கு.

  குப்பை அள்ள வாங்க சம்பளம் தரோம்னு சொன்னால் ஏன் வர மாட்டேன்கிறாங்க, கோயிலில் சம்பளம் இல்லை, தட்டில் வரும் வருமானம் என்றாலும் அதில் போய் உட்கார்ந்துகொண்டு நான் ஏழை பிராமணன் ,வருமானம் இல்லை, என நீலிக்கண்ணீர் வடித்தால் அதை வைத்து பொருளாதார இட ஒதுக்கீடு கொடுக்கணுமா?

  ஒடுக்கப்பட்ட மக்கள் பொங்கினால் பின்னர் சமூகத்தில் வன்முறை பெருகிடும் என்பதை உணர்ந்து ,அரசும், மற்றவர்களும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

  November 02, 2012 4:54 AM

  பதிலளிநீக்கு
 16. R.Puratchimani said...
  Hi வவ்வால்,
  We should try to find the ways to create casteless, religionless society. as long as there is caste and religion fight will continue.
  Thanks for your comments :)
  November 02, 2012 7:17 AM

  பதிலளிநீக்கு
 17. வேகநரி said...
  நண்பர் புரச்சிமணி,
  //நானும் புரிந்துகொண்டேன் நீங்களும் எனக்கு புரியவைத்துள்ளீர்கள் நன்றி//
  ஜாதி வேறுபாடுகள் பார்க்காம பொருளாதார அளவுகோலைக் கொண்டு மக்களை பார்த்து அரசு உதவி செய்தா எப்படி ஒரு ஜாதி ஏழை பயனடையும், இன்னொரு ஜாதி ஏழை பயனடையாது?
  நீங்க புரிந்து கொண்ட அந்த அதிசயத்தை தெரிவியுங்கள்.
  ஜாதி வேறுபாடுகள் பார்த்து அரசு உதவி, இட ஒதுக்கீடு செய்தால் ஜாதி வேறுபாடுகள் இந்தியாவில் மேலும் செழித்து வளரும்.

  பதிலளிநீக்கு
 18. R.Puratchimani said...
  நண்பா வேக நரி,
  எல்லா ஜாதிகளிலும் ஏழைகள் உள்ளனர்.
  இருப்பினும் உயர்ந்த ஜாதிகளில் இருப்பவர்கள் இழிவாக கருதப்படும் தொழில்களை செய்வதில்லை.
  இப்பொழுது ஏழை எனும் பொருளாதார அளவுகோலை கொண்டுவரும்போழுது இப்படிப்பட்டவர்கள் முன்னேற வாய்ப்பில்லாமல் பிற உயர்ந்த ஜாதிகளில் இருக்கும் ஏழைகள் மட்டும் முன்னுக்கு வந்துவிடுவர் என்பதுதான் சுப்புராஜ் சொன்னதும் என்னுடைய புரிதலும்.

  உதாரணத்திற்கு ஒரு பொது நிறுவனத்தில் ஏழைகளுக்கு ஐந்து காலியிடங்கள் ஒதுக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். இந்த ஐந்து இடங்களும் ஒரே ஜாதியை சேர்ந்த ஐந்து ஏழைகளுக்கு சென்றடையலாம். இதில் ஒருவேலை கூட தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கிடைக்காமல் போகலாம். ஏன் எனில் உயர்த்தப்பட்ட ஜாதியில் இருக்கும் ஏழையைவிட தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஏழைக்கு கல்வி கற்க ஏற்ற சூழ்நிலை இருப்பதில்லை எனபதே உண்மை. இதை ஏன் சொல்கிறேன் எனில் ஏழை என்பது மட்டும் இட ஒதுக்கீடை அளித்துவிடாது அவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணும் கணக்கில் கொள்ளப்படும். ஏழை இட ஒதுக்கீட்டில் அனைத்து ஜாதி ஏழைகளும் போட்டி இடுவர். இதில் உயர்த்தப்பட்ட ஜாதியனருக்கு மட்டும் அதிக இடங்கள் கிடைக்கலாம் பிறருக்கு இடங்கள் கிடைக்காமல் போகலாம் என்பதே எனது அச்சம், புரிதல்.

  இதனால் என்ன ஆகிறது எனில் இழிவான தொழிலை செய்பவர்கள் அதை தொடர்ந்து செய்யும் நிலை மேலும் சில காலத்திற்கு தொடரும்.

  இதனால் தான் ஒவ்வொரு ஜாதியிலும் அது உயர்த்தப்பட்ட ஜாதியாக இருந்தாலும் சரி தாழ்த்தப்பட்ட ஜாதியாக இருந்தாலும் சரி அந்த ஜாதியில் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும்பொழுது அனைத்து ஜாதியினரும் பொருளாதார அளவில் சமமாக,வேகமாக முன்னேற வாய்ப்பாக அமையும்.

  எனவே ஒவ்வொரு ஜாதியிலும் ஏழைக்கு மட்டும் இட ஒதுக்கீட்டை சில காலத்திற்கு செயல்படுத்தி விட்டு, அனைத்து ஜாதியினரும் பொருளாதார ரீதியாக , தொழில் ரீதியாக அந்த அடிமட்ட நில்லையை விட உயர் நிலைக்கு வந்தபிறகு
  இட ஒதுக்கீட்டை ஒரேயடியாக நீக்கலாம் அல்லது அந்த சூழ்நிலைக்கு தகுந்தற்போல பொருளாதார அளவுகோலை அனைத்து ஜாதியினருக்கும் கொண்டுவரலாம். பிறகு ஜாதியை முற்றிலும் ஒழிக்கலாம்.

  இதுதான் நண்பரே இப்போது
  என்னுடைய புரிதல். தவறு இருந்தால் சுட்டிகாட்டுங்கள்

  November 02, 2012 8:22 AM

  பதிலளிநீக்கு
 19. வேகநரி said...
  உங்க பதிலுக்கு நன்றி நண்பர் புரச்சிமணி.
  //உயர்ந்த ஜாதிகளில் இருப்பவர்கள் இழிவாக கருதப்படும் தொழில்களை செய்வதில்லை//
  இந்தியாவில் ஊரை அடித்து சுருட்டியவனின் பிள்ளைகளை தவிர, மற்ற பிள்ளைகள் வெளிநாடு படிக்க வரும் போது மலசலகூடம் கழுவுதல், கோப்பை கழுவுதல், கார் கண்ணாடி கழுவி துடைத்து விடுதல் வேலைகள் எல்லாம் செய்து தான் படிக்கின்றனர்.அந்த வேலைகளை வெளிநாடுகளில் இழிவாக பார்ப்பதில்லை. வேலை செய்யாம இருப்பது தான் இழிவு.இந்தியாவுக்கு மட்டும் இவைகள் தெரியாம பார்த்து கொள்வார்கள்.
  நீங்க உயர்ந்த ஜாதி ஏழை, நான் தாழ்ந்த ஜாதி ஏழை என வைத்துக்கொள்வோம். நான் ஏழ்மைகாரணமாக இந்தியாவில் விரும்பபடாத வேலைக்கு செல்கிறேன். நீங்களும் ஏழை தானே நீங்கள் அந்த வேலைக்கு போகாவிட்டால் எப்படி குடும்பத்தை காப்பாற்றுவிங்க? எப்படி வருமானம் வரும்?
  //தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஏழைக்கு கல்வி கற்க ஏற்ற சூழ்நிலை இருப்பதில்லை எனபதே உண்மை//
  சகலரையும் கல்விகற்க வைப்பது,அதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதுஅரசின் அத்தியாவசிய கடமை.

  November 02, 2012 4:14 PM

  பதிலளிநீக்கு
 20. R.Puratchimani said...
  வேகநரி said...
  //
  நீங்க உயர்ந்த ஜாதி ஏழை, நான் தாழ்ந்த ஜாதி ஏழை என வைத்துக்கொள்வோம். நான் ஏழ்மைகாரணமாக இந்தியாவில் விரும்பபடாத வேலைக்கு செல்கிறேன். நீங்களும் ஏழை தானே நீங்கள் அந்த வேலைக்கு போகாவிட்டால் எப்படி குடும்பத்தை காப்பாற்றுவிங்க? எப்படி வருமானம் வரும்?//

  நண்பா உயர்ந்த ஜாதிக்காரன் எவ்வளவுதான் ஏழையாக இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் செய்யும் வேலையை செய்ய மாட்டான். அந்த அந்த ஜாதிக்கு ஏத்த மாதிரி ஒரு கடைநிலை வேலை இருக்கும் அதை செய்துகொள்வான். நான் சொல்வது புரிகிறதுதானே. இன்னும் சொல்லவேண்டுமானால் உயர்ந்தஜாதிக்காரன் எந்த ஏழ்மையிலும் பிணத்தை தூக்க,எரிக்க போக மாட்டான், சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்ய மாட்டான்.
  சில இழிவான தொழில்களுக்கு இயந்திரத்தை கண்டுபிடிப்பது சில மாற்றங்களை கொண்டு வர வழிவகுக்கும்.
  நீங்கள் கூறியது உண்மையாக இருப்பிலும் இந்தியாவில் அந்த தொழில்களை பெரும்பாலும் செய்வதில்லை.
  நன்றி
  November 03, 2012 2:26 AM

  பதிலளிநீக்கு
 21. மேலே உள்ள பின்னூட்டங்கள் கோடங்கி தளத்தில் இடப்பட்டவை
  http://www.kodangi.com/2012/11/anti-dalit-casteist-speech-by-driector-rajamouli.html#.UJ0Jo29JPkq

  பதிலளிநீக்கு
 22. //நண்பா உயர்ந்த ஜாதிக்காரன் எவ்வளவுதான் ஏழையாக இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் செய்யும் வேலையை செய்ய மாட்டான். அந்த அந்த ஜாதிக்கு ஏத்த மாதிரி ஒரு கடைநிலை வேலை இருக்கும் அதை செய்துகொள்வான். நான் சொல்வது புரிகிறதுதானே. இன்னும் சொல்லவேண்டுமானால் உயர்ந்தஜாதிக்காரன் எந்த ஏழ்மையிலும் பிணத்தை தூக்க,எரிக்க போக மாட்டான், சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்ய மாட்டான். //
  இது நான் ஏற்க்கனவே சொன்னது.

  உயர்த்தப்பட்ட ஜாதிக்காரன் தாழ்த்தப்பட்டவர்கள் செய்யும் வேலைகளை செய்வதில்லை என்பது தவறு என பின்வரும் கட்டுரை கூறுகின்றது.
  http://www.rediff.com/news/2006/may/23franc.htm

  உண்மை நிலையை நாம் தீர ஆராய வேண்டும்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...