இது சற்று கவனத்துடன் கையாள வேண்டிய சிக்கலான பிரச்சனை. எதிர் காலத்தையும் கருத்தில் கொண்டு சில முடிவுகளை எடுக்க வேண்டியது இங்கே அவசியம் என கருதுகிறேன்.
ஆபாசமான வார்த்தைகள் என்பது தமிழகத்தில் சில இடங்களில் மிகவும் சர்வ சாதரணமாக பேசக்கூடிய ஒன்று.
சில நண்பர்களுக்கு மத்தியில் இவைகள் சர்வ சாதாரணம். நண்பர்களுக்கு மத்தியில் எந்த ஒரு பிரபலத்தை பற்றியும் எப்படியும் பேசுவார்கள்.இவர்களை எல்லாம் தண்டிக்க நினைத்தால் அது சாத்தியம் இல்லை. அப்படி ஒரு சட்டம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
இப்படி நண்பர்களுக்கு மத்தியில் ஆபாசமாக பேசிக்கொள்பவர்கள் இணையத்தில் கருத்து பரிமாறிக்கொள்ளும் பொழுதும் அதே சொல்லாடல்களை அவர்களுக்குள் பயன்படுத்துகின்றனர். இது தவறுதான்.
சின்மயி: தன்னை நேரிடையாக ஆபாசமாக பேசியவர்களை காவல் துறையின் உதவியுடன் தண்டிக்கும் உரிமை அவருக்கு உண்டு. ஆனால் பல பிரபலங்களை பற்றி ஆபாசமாக பேசியதை அவர்கள் படம் எடுத்து காட்டுவது என்பது தங்களுக்கு சாதகமாக பலரை திரட்ட வேண்டும், அவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற உள் நோக்கத்தில் செய்யப்படுவதாக எனக்கு தோன்றுகிறது. . இதை செய்தது சின்மயியா அல்லது அவர்களது ஆதரவாளர்களா எனபது தெரியவில்லை.
யார் செய்திருந்தாலும் இது சரியான செயல் அல்ல. ஏன் எனில் பல பிரபலங்களை பற்றி பலரும் ஆபாசமாக எழுதியுள்ளனர். எனவே அது பற்றி இவர்கள் தற்பொழுது கவலைப்பட வேண்டாம்.
இங்கே சின்மயியும் சரி காவல் துறையினரும் சரி சிந்திக்க விடயம் ஒன்று உள்ளது.
அதாவது சின்மயியை நேரிடையாக தாக்கியதற்கு உரியவர்களின் மேல் நடவடிக்கை எடுக்கலாம் தவறில்லை ஆனால் நண்பர்களுக்கு மத்தியில் ஆபாசமாக சின்மயியை பற்றி பேசியதற்கு நடவடிக்கை எடுக்கலாமா எனபது தெரியவில்லை.ஏன் எனில் இது சில நண்பர்களுக்குள் பேசிக்கொண்டது.
இங்கே அடுத்து வைக்கப்படும் வாதம் என்னவெனில் இணையம் என்பது பொது அங்கே பேசினால் அதை பலரும் அல்லது அவர்களில் நண்பர்கள் பலரும் படிக்க நேரிடும். இது தவறில்லையா?
இது சரியான கேள்விதான்.
இங்கே ஒரு கேள்வி கேட்கிறேன் (சிந்திக்க மட்டுமே :) )
இணையம் அல்லாமல் தனியில் வெளியே
இரண்டு நண்பர்கள் ஒரு பிரபலத்தை பற்றி ஆபாசமாக பேசிக்கொள்கின்றனர். அங்கே இருக்கும் மூன்றாவது நண்பர் இவர்கள் பேசியதை ஒலி /ஒளி பதிவு செய்து அந்த பிரபலத்திடம் கொடுத்து விடுகிறார் அல்லது அதை இணையத்தில் ஏற்றிவிடுகிறார்.. இப்பொழுது அந்த பிரபலத்தின் மனம் புண்படும் தான் மறுப்பதற்கில்லை.ஆனால் இதை ஆதாரமாக வைத்து அந்த இருவரின் மீதும் நடவடிக்கை எடுப்பது சரியா?
சட்டத்தை உருவாக்குபவர்களும் நடைமுறை படுத்துபவர்களும்,பாதிக்கப்படு பவர்களும் இதை கருத்தில் கொள்ள வேண்டும். இங்கு கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இது எதிர்காலத்தில் பல வழக்குகளுக்கு தீர்ப்பாக அமையும்.
மீண்டும் சொல்கிறேன் சின்மயியை நேரிடையாக ஆபாசமாக பேசிய ஆதாரங்கள் இருக்குமானால் சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க சின்மயிக்கு சகல உரிமையும் உண்டு. நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க கருணையின் அடிப்படையில்
அவர்களை மன்னித்து விடவும் உரிமை உண்டு. எந்த முடிவையும் அவர்தான் எடுக்க வேண்டும்.
சின்மயி மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. சம்பந்தப்பட்டவர் கள் தங்களது தவறை இந்நேரம் உணர்ந்திருப்பார்கள் என எண்ணுகிறேன். அவர்களின் செயல் இவ்வுலகிற்க்கே தெரிந்து விட்டது. இந்த கறை அவர்களை விட்டு சீக்கிரம் மறையப்போவதில்லை. எனவே இதுவரை எடுத்த நடவடிக்கையே பெருமளவு தண்டனையை கொடுத்தது விட்டது. இனியும் அவர்களுக்கு தண்டனை வேண்டுமா எனபதை சின்மயிதான் தீர்மானிக்க வேண்டும்.அவர் நல்ல முடிவை எடுக்கட்டும்.
காவல்துறையினர்,நீதிபதிகள் செய்ய வேண்டியது:
நான் முன்பே கூறியது போலநேரிடையாக பேசியதற்கு தண்டனை அளிப்பது தவறல்ல. ஆனால் பல பிரபலங்களை பற்றி பேசியதற்கும், நண்பர்களுக்குள் சினமயியை பற்றி ஆபாசமாக பேசியதற்கும் நடவடிக்கை எடுக்கலாமா வேண்டாமா எனபதை ஆழ்ந்து சிந்தித்து செயல் படவேண்டும்.
மிக முக்கியமாக இணையத்தில் எந்த மாதிரியான வார்த்தைகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என்று ஒரு குழு அமைத்து, கலந்தாலோசித்து அதை வெளியிட வேண்டும். அதை பின்பற்றி பலரும் ஆபாசமான வார்த்தைகளை தவிர்க்க இயலும்.
கைதானவர்கள் செய்ய வேண்டியது: அவர்கள் உண்மையாக தவறு செய்திருப்பின் சின்மயிடம் மன்னிப்பு கோர வேண்டும்.இந்த மன்னிப்பு சின்மயி இவர்களை மன்னிக்க உதவும். தவறு செய்யவில்லை என்று நினைத்தால் துணிந்து போராடலாம்.
கலைத்துறையினர் செய்யவேண்டியது: ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துவதையும், ஆபாசமான காட்சிகளை வைப்பதையும் தவிர்க்க ேண்டும். ஆபாசம் சமுதாயத்தில் பல பிரச்சனைகளை ஏற்ப்படுத்துகிறது. இதற்க்கு கலைத்துறையும் ஒரு காரணம் என்பதை இவர்கள் உணரவேண்டும்.
அரசியல்வாதிகள் செய்யவேண்டியது: மேடைக்கு மேடை நீங்கள் எதிர் கட்சியினரை ஆபாசமாக பேசிவிட்டு இணையத்தில் ஆபாசமாக பேசுபவர்களை தண்டிக்க சட்டம் கொண்டு வருதல் சரியாகுமா? மேடையில் என்ன பேச வேண்டும் என்று ஒரு நாகரிகம் தெரிய வேண்டாமா? ஒரு தலைவன் எப்படி செயல்படுகிறானோ அப்படியே தொண்டனும். நல்லொழுக்கங்களை கடைபிடிக்க முயலுங்கள்.
பதிவர்கள் செய்ய வேண்டியது: எந்நேரத்திலும் எங்கும் எப்பொழுதும் யாரை பற்றியும் ஆபாசமாக பேசுவதை தவிர்த்தல் நல்லது. இணையத்தில் மட்டுமல்ல தங்கள் வாழ்விலும் இதை கடைபிடித்தல் நல்லது..
சிறு விமர்சனம்: ஏற்க்கனவே இணையத்தில் ஆபாசமாக எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு கைதானவர்களை விமர்சிக்க என்ன உரிமை உள்ளது?
குறிப்பு: எனக்கு சின்மயியையும் தெரியாது, கைது செய்யப்பட்டவர்கள் பற்றியும் தெரியாது. ஒரு பதிவராக எனது கருத்தை பதிவு செய்கிறேன் அவ்வளவே. இதில் தவறான கருத்துக்கள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.
ஆபாசமான வார்த்தைகளை அனைவரும் அறவே தவிர்க்க வேண்டும். இணையத்திலும் சரி, வீட்டிலும் சரி, வெளியிலும் சரி. இதுவே நாட்டிற்கும், வீட்டிற்கும், தமிழிற்கும் நல்லது.
என்றும் அன்புடன்
இராச.புரட்சிமணி
excellent post.Thank you sir
பதிலளிநீக்குஆபாசம் சமுதாயத்தில் பல பிரச்சனைகளை ஏற்ப்படுத்துகிறது. இதற்க்கு கலைத்துறையும் ஒரு காரணம் என்பதை இவர்கள் உணரவேண்டும்.///
பதிலளிநீக்குஉண்மைதான்
அவர்களில் சிலருக்கு உண்மை தெரிந்தாலும் தெரியாததுபோல் நன்றாகவே நடிக்கின்றனர்.
நீக்குதங்கள் வருகைக்கு நன்றி
சின்மயி விவகாரத்தில் பெண்,இணைய கருத்துரிமை,சொற்பிரயோக மீறல்,சாதி இன்ன பிற விவாதம்,பிரபலத்துக்காக முந்தும் கைது என பல பரிமாணங்கள் உள்ளன.
பதிலளிநீக்குசொற்பிரயோக மீறல் என்பதை தவிர எந்த அடிப்படையில் இந்த பிரச்னையை அணுகினாலும் அது தவறாகவே முடியும்.
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
நல்ல பதிவு..ரொம்ப தெளிவாக சொல்லி உள்ளீர்கள்.
பதிலளிநீக்குஒருவரை பற்றி ஆபாசமாக இரு நண்பர்கள் இணையத்தில் அனைவர்க்கும் தெரியும்படி பேசினால் அதுவும் என்னை பொறுத்த வரை தவறு தான்.
ஆபாசத்தை எங்கும் தவிர்த்தலே நலம்.
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ராஜ நடராஜன் தெளிவாகச் சொல்லி இருக்கிறார், திட்டமிட்ட சுற்றி வளைப்புகள் எதிர்பாராத ஒன்று, பதிவர்கள் வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி உரையாடினால் இது தான் கதி
பதிலளிநீக்கு//பதிவர்கள் வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி//
நீக்குநான் கூட இப்படித்தான் போல மற்றவற்றை என்னாலும் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. பிரபலம் என்பதால் தான் இந்த பிரச்சனை பிரபலமாகியுள்ளது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Net Etiquette - எனப்படும் இணைய சொல்லாடல் நாகரிகம் குறைவதால் வரும் வினை இது, ஆபாசமாக திட்டுவதற்கும், எள்ளலாக விமர்சிப்பதற்கும் வேறுபாடு ஒரு மயிரிழை தான், கற்றுக் கொண்டவர்கள் தப்பித்துவிடுவார்கள் .. !!! இல்லை என்றால் பெண் என்றால் பேயும் இறங்கி நம்மை சாமி ஆடிவிடும், நிற்க !!! சாமி'னா சொன்னேன். ஐயோடா !
பதிலளிநீக்கு// நாகரிகம் குறைவதால் வரும் வினை இது//
நீக்குநாகரிகம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.
//ஆபாசமாக திட்டுவதற்கும், எள்ளலாக விமர்சிப்பதற்கும் வேறுபாடு ஒரு மயிரிழை தான், கற்றுக் கொண்டவர்கள் தப்பித்துவிடுவார்கள் .//
மிகச்சரி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
<< இணையம் அல்லாமல் தனியில் வெளியே
பதிலளிநீக்குஇரண்டு நண்பர்கள் ஒரு பிரபலத்தை பற்றி ஆபாசமாக பேசிக்கொள்கின்றனர். அங்கே இருக்கும் மூன்றாவது நண்பர் இவர்கள் பேசியதை ஒலி /ஒளி பதிவு செய்து அந்த பிரபலத்திடம் கொடுத்து விடுகிறார் அல்லது அதை இணையத்தில் ஏற்றிவிடுகிறார்.. இப்பொழுது அந்த பிரபலத்தின் மனம் புண்படும் தான் மறுப்பதற்கில்லை.ஆனால் இதை ஆதாரமாக வைத்து அந்த இருவரின் மீதும் நடவடிக்கை எடுப்பது சரியா? >>
இது தேவையில்லாத கேள்வி.
இருக்கலாம். இதை படிக்கும் முன்பு அதிகாலையில் அரை தூக்கத்தில் இருக்கும்பொழுது இது தேவையில்லையோ என்றே எனக்கும் தோன்றியது.இருப்பினும் இது ஒரு சிக்கலான விடயம் என்றே தோன்றுகிறது.
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
எப்படியோ, இது "வேலீல போற ஓணானை......" கதை மாதிரி ஆகிப்போச்சு.
பதிலளிநீக்குபதிவர்கள் இனி மேல் ஜாக்கிரதையாக செயல்படவேண்டும். வீண் கொள்கைப் பிடிப்பு நடைமுறைக்கு ஆகாது என்பதைப் பிரிந்து கொள்ளவேண்டும்.
எல்லாம் புரிகிறது
நீக்கு//வீண் கொள்கைப் பிடிப்பு நடைமுறைக்கு ஆகாது என்பதைப் பிரிந்து கொள்ளவேண்டும்.// இது எனக்கு புரியவில்லை ஐயா.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
சின்மயியின் மீனவர்கள் தொடர்பான கருத்துக்கு ஆதாரம்
பதிலளிநீக்குசின்மயியின் மீனவர்கள் தொடர்பான கருத்துக்கு ஆதாரம்
http://goo.gl/ACN6I
எமக்கு பிடித்த விடயத்திற்கு எதிராக கருத்து சொல்லிவிட்டார் என்பதிற்காக ஒரு பெண்ணை ஆபாசமாக தூற்ற முடியாது.
நீக்குநண்பன் வேகநரிக்கு,
நீக்குசின்மயியை ஆபாசமாக திட்டியதை நான் நியாயப்படுத்தவில்லை. நியாயப்படுத்த போவதும் இல்லை.
சின்மயி மீனவர்கள் தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்க வில்லை என்று முன்பு இணைய தளங்களில் கூறப்பட்டு வந்தது. அதுதான் நான் சின்மயி மீனவர்கள் தொடர்பாக கூறிய விடயங்களுக்கான ஆதாரத்தை தந்தேன்.
முக நூலினுள் உள் சென்றால் அதனை பார்க்கலாம். (லோக் இன்)
Ethicalist EOctober 25, 2012 11:59 AM
பதிலளிநீக்குசின்மயியின் மீனவர்கள் தொடர்பான கருத்துக்கு ஆதாரம்
சின்மயியின் மீனவர்கள் தொடர்பான கருத்துக்கு ஆதாரம்
http://goo.gl/ACN6I
-------------------------------------------------------
This content is currently unavailable
முக நூலினுள் உள் சென்றால் அதனை பார்க்கலாம். (லோக் இன்)
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குhttp://www.facebook.com/permalink.php?story_fbid=10152120039829041&id=130027849040
பதிலளிநீக்குtamil amanan - மீன்களை மீனவர்கள் கொல்கிறார்கள், மீனவர்களை இலங்கை கடற்படை கொல்கிறது, இரண்டும் ஒன்றுதான், இதில் இலங்கையை கண்டிப்பதற்கு என்ன இருக்கிறது? ithu ungalin karutha chinmayi sripasda
chinmayi - Yaen ongala tag panni sonna dhan puriyuma??
இந்த கருத்தை ஏதோ வேகத்தில் அறியாமையில் சொல்லிவிட்டார் என்றிருந்தேன். இன்னும் அதே கருத்தில் அவர் உறுதியாக இருப்பதால். இந்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். இது ஒரு மனிதத்தன்மை அற்ற செயல்.இந்த கருத்தை நான் அவர் முக நூலில் பதிவு செய்யப்போகிறேன்.
நீக்குதங்கள் வருகைக்குக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ஒரு திறமைக்குள்ளேயும் ஒரு அசிங்கம் இருக்கின்றது என்பதுக்கு சின்மயி ஒரு உதாரணம்
பதிலளிநீக்குகடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நாம். அவரின் பல கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் மீனவர் பிரச்சனையில் அவர் சொன்னதை ஏற்க்க இயலாது.
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ஆபாசமான சொல்லை எங்கும் யாரும் பயன்படுத்தக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு.
பதிலளிநீக்குஇப்படி தவறான சொற்களை உபயோகித்தது ஏற்ப்புடையதல்ல.நண்பர்கள் மத்தியில் பேசிக்கொள்வதுபோல அவர்கள் பேசிக்கொண்டுள்ளனர்.
சட்டப்படி முதல்வர் அவர்கள் வழக்கு தொடுக்காமல் இதை தண்டிக்க முடியுமா என்று தெரியவில்லை. இந்த மாதிரி பிரச்சனை இதுவே முதல் முறை என நினைக்கின்றேன்.
இனிமேல் தவறுகள் நடக்காமல் இருக்க தவறான சொற்களை பயன்படுத்தக்கூடாது என்று நாம் அறிவுறுத்த வேண்டும்,காவல்துறையும் ஒரு ஒழுங்கு வரைமுறையை கொண்டுவரவேண்டும் என்பதே எனது கோரிக்கை.படித்த ஒவ்வொரு மனிதனுக்கும் தெரியவேண்டும் நாம் என்ன பேசுகிறோம் எழுதுகிறோம் என்று.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி