வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 26 அக்டோபர், 2012

சின்மயி கைது செய்யப்படுவாரா?

சின்மயி மீது வன்கொடுமை சட்டத்தின் அடிப்படையில் யாரோ புகார் தெரிவித்துள்ளார். அது மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக  ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சின்மயி புகாரின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டதை நாம் அறிவோம். இப்பொழுது சின்மயி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் யாரோ புகார் அளித்துள்ளனர். இதை அடுத்து அவர் கைது செய்யப்படுவாரா அல்லது வெறும் விசாரணையோடு நின்று விடுமா என்று தெரியவில்லை.

சின்மயி செய்த தவறுதான் என்ன?
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்ப்படையினரால்  சுடப்படுவது சம்பந்தமாக  அவரிடம்  சிலர் தொடர்ந்து ஆதரவு  கோரியபோது சின்மயி   "பைத வே மீனவர்கள் மீன்களை கொல்வது  பாவம் இல்லையா? " என்று டுவிட்டியதாக  தெரிகிறது.

இட ஒதுக்கீடு சம்பந்தமாக டுவிட்டும் பொழுது "சோ கால்டு தாழ்த்தப்பட்டவர்கள்"  என்றும் டுவிட்டியுள்ளார் என்றும் தெரிய வருகிறது. தாழ்த்தப்பட்ட சமுதாய  மக்கள் மனதும் மீனவ சமுதாய மக்கள் மனதும் புண்படும்படி அவர் கூறியுள்ளார் என  அவர் பேரில் புகார் கொடுக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.

இணையத்தில் ஆபாச கருத்து மட்டுமல்ல நல்ல வார்த்தையில் மோசமான சிந்தனையை வெளிப்படுத்தினாலும் பிரச்சனை தான் எனபது இதன் மூலம் தெரியவருகிறது.

எனவே இணையத்தை உபயோகிப்பவர்கள் தங்கள் கருத்தில் கண்ணியத்தை கடைபிடிப்பது  நல்லது.

சின்மயி என்ன செய்யலாம்?
நான் ஏதோ ஒரு ஆவேசத்தில் அறியாமல் செய்துவிட்டேன் எனவே மக்கள் என்னை மன்னிக்கவும் என்பதுபோல பொது மன்னிப்பு கேட்பதுதான் சரி என்று தோன்றுகிறது.
அதேபோல சின்மயி பற்றி ஆபாசமாக பேசியது உண்மை எனும் பட்சத்தில் கைதானவர்களும்  மன்னிப்பு கேட்க வேண்டும்.

இருவரும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு மனிப்பு வழங்கிக்கொண்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே பலரது விருப்பமாக இருக்கும் என நினைக்கின்றேன். அவர்களை தெரிந்தவர்கள் அதை செய்ய அறிவுறுத்த வேண்டுகிறேன்.8 கருத்துகள்:

 1. வணக்கம் சகோ,
  நல்ல பதிவு.
  சட்டம் என்பது கழுதை மாதிரி.முன்னால் போனால் கடிக்கும், பின்னால் போனால் உதைக்கும். ட்விட்டர் விவாதத்தில் சின்மயி மற்றும் ராஜன் & கோ இருவருமே பொறுப்பில்லாமல் செயல் பட்டனர். இதில் சில சொற்கள் எல்லை மீறியதும் தன் பிரபலம் என்பதால் சின்மயி சட்டத்தை ராஜன்& கோவிற்கு எதிராக் செயல் படுத்தினார்.
  இபோது சின்மயி மீதும் சட்டம் பாய்கிறது.இதை நான் எதிர்பார்த்தேன். இன்னொரு சின்மயி ஆதர்வு ட்விட்டரும் ஒடுக்கப்பட்டோர் மீது ஆபாச சொல் கூறியுள்ளார். அவர் மீதும் சட்டம் பாயலாம்.
  *******8
  நீங்கள் சொல்வது போல் சின்மயி& ராஜன்& கோ இருவருக்குமே நல்ல எதிர்காலம் இருக்கிறது. அறிய,புரிய வாழ்வில பல் உண்டு.ஆகவெ சுமுகமாக கடந்த காலத்தை மறந்து தீர்வு காண்பதே நல்லது.

  மன்னிப்போம்,மறப்போம்,மனிதம் வளர பாடுபடுவோம்!!!

  சட்டம் எப்போதும் யாருக்கும் சாதகமாக் இருக்காது? மனிதமே காயங்களை ஆற்றும் அருமருந்து.

  நன்றி சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சார்வாகன் வணக்கம்,
   //மன்னிப்போம்,மறப்போம்,மனிதம் வளர பாடுபடுவோம்!!!//

   //மனிதமே காயங்களை ஆற்றும் அருமருந்து.//

   மிகவும் அருமையாக சொல்லிவிட்டீர்கள். இதனால் தான் நாம் மதப்பற்றாளர்களை மனிதப்பற்றாளர்களாக மாறச்சொல்கிறோம்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 2. ***இப்பொழுது சின்மயி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் யாரோ புகார் அளித்துள்ளனர். இதை அடுத்து அவர் கைது செய்யப்படுவாரா அல்லது வெறும் விசாரணையோடு நின்று விடுமா என்று தெரியவில்லை.****


  எனக்கு என்ன தோணுதுனா, இந்த கேஸை, அவர் கேஸ் போடும் முன்பே, அவர் சொன்ன காலகட்டத்தில் போட்டு இருந்தால் அதற்கு மதிப்பு அதிகம் இருந்து இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வருண்,
   அப்பொழுது இந்த விடயம் பலருக்கும் தெரிந்திருக்காது என நினைக்கின்றேன்.
   மேலும் இது வழுக்குக்கு வழக்காக கூட இருக்கலாம்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 3. Win Exciting and Cool Prizes Everyday @ www.2vin.com, Everyone can win by answering simple questions.Earn points for referring your friends and exchange your points for cool gifts.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...