விசுவரூபம் படத்திற்கு தடை கோரும், துப்பாக்கி படத்தில் திருத்தம் கேட்ட எனதருமை இசுலாமிய சகோதரர்களே,
5:33. அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.
ஒருவனுக்கு நல்லது செய்வதால் உனக்கு சுவனம் கிடைக்கும்,பிறர் மீது அன்பு செலுத்தினால் உனக்கு சுவனம் கிடைக்கும் என்று கூறினால் நியாயம். ஆனால் போர் புரிபவர்களுக்கு மட்டுமே என்று கூறி அனைவரையும் போர் புரிய வைப்பது எந்த விதத்தில் நியாயம் எனதருமை சகோதரர்களே? பின்வரும் வசனத்தை பாருங்கள்.
ஒரு திரைப்படம் இசுலாமியர்கள் பற்றி மக்கள் மனதில் தவறான பாதிப்பை ஏற்ப்படுத்தும்,இசுலாமியர்களுக் கும் பிற மக்களுக்கும் பிரச்சனையை உண்டாக்கும் என்று தடை கோருகிறீர்களே உங்கள் நல்லெண்ணத்தை நான் பாராட்டுகிறேன்.
ஆனால் நீங்கள் இறைநூலாக கருதும் குரானிலே பிற மத மக்களை பற்றி தவறான கருத்துக்கள் உள்ளதே. இது பற்றி என்றேனும் நீங்கள் கவலைப்பட்டதுண்டா? இந்த வசனங்களை நீங்கள் படித்ததே இல்லையா?இதில் திருத்தம் வேண்டும் என்று நீங்கள் கேட்டதுண்டா?
உங்களில் சிலர் இது பற்றி படிக்காமல் இருந்திருக்கலாம் அவர்களுக்காக சில வசனங்கள்.
5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.
இந்த வசனத்தில் தெள்ளத்தெளிவாக யூதர்களையும், இணைவைப்பவர்களையு ம் அதாவது இந்துக்களையும் பகைவராக பார்க்கும்படி குரான் கூறுகிறது. இது எந்த விதத்தில் நியாயம்? இதை நீங்கள் வரவேற்கிறீர்களா?
அல்லாவை வணங்குபவர்களை எதிரிகளாக பாருங்கள் என்று ஒரு நூலில் எழுதி இருந்தால் நீங்கள் சும்மா விட்டு விடுவீர்களா? பொழுதுபோக்கான திரைப்படத்தில் கூட உங்களை அவமதிக்கும் காட்சிகள் இருக்க கூடாது என்கிறீர்களே ஆனால் இறைவேதம் எனப்படும் குரானில் இப்படிப்பட்ட வசனங்கள் இருக்கலாமா? சிந்தியுங்கள் எனதருமை சகோதரர்களே.
மேற்கூறிய வசனத்தில் கிருத்துவர்கள் பற்றி நல்லபடியாக இருந்தாலும் பின்வரும் வசனம் அவர்களையும் நம்பவேண்டாம் என்கிறது அதையும் பாருங்கள்.
5:51. முஃமின்களே! யூதர்களையும் , கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
இதில் யூதர்களும் கிருத்துவர்களும் அநியாயக்காரர்கள் என்கிறது குரான்.
இப்படிப்பட்ட வசனங்களை படிக்கும் ஒரு முஸ்லிம் மனதில் யூதர்களும்,கிருத்துவர்களும், இந்துக்களும் முஸ்லிம்களுக்கு பகைவர்கள் என்ற எண்ணம் வருமா? வராதா? சொல்லுங்கள் சகோதரர்களே.
கற்களை வணங்குபவர்கள்-இந்துக்கள் சாத் தான்களின் நண்பர்களா?
சகோதரர்கள் நீங்கள் அல்லாவை வணங்குகிறீர்கள் அது உங்கள் விருப்பம். ஆனால் கற்களை வணங்குபவர்களை சாத்தானின் நண்பர்கள் என்று கூறுவது எந்த விதத்தில் சரி?
அப்படிக்கூறும் இறைவேதம் குரானின் வசனங்களை படியுங்கள்:
5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
4:76. நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்; நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில்போர் செய்கிறார்கள்; ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.
சாத்தான்கள் என்று மட்டும் சொல்லவில்லை அவர்களுக்கு எதிரா க போர் புரியுங்கள் என்று வேறு இந்த வசனம் கூறுகிறது. இதைபடிக்கும் முஸ்லிம் மக்கள் மனதில் இந்துக்களை பற்றி தவறான எண்ணமும் இந்துக்களுக்கு எதிராக போர் புரியவேண்டும் என்ற எண்ணமும் வருமா? வராதா? என்று நீங்களே சொல்லுங்கள் சதோதரர்களே.
போர் கொலை இது பற்றி கூறும் வசனங்கள்:
ஒரு இறைவேதத்தில் ஏன் கொலைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என எனக்கு புரியவில்லை.
9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
மேலே உள்ள வசனங்கள் அல்லாவை நம்பாதவர்களை கொல்ல சொல்கிறது என்றால் கீழே உள்ள வசனம் உங்கள் உயிர்களையும் கொடுக்க சொல்கிறது.
9:41. நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.
முகமது நபி ஏதோதோ சொல்லி போர் புரிய சொன்னாலும் சிலர் மறுக்கின்றனர். எனவே அவர்களுக்கு நரக நெருப்புதான் கிடைக்கும் என்று பின்வரும் வசனத்தின் மூலம் பயமுறுத்துகிறார்.
9:81. (தபூக் போரில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாக(த் தம் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்; அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருட்களையும், உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிவதையும் வெறுத்து (மற்றவர்களை நோக்கி); “இந்த வெப்ப (கால)த்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்” என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் “நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் விளங்கியிருந்தால் (பின் தங்கியிருக்க மாட்டார்கள்).
அடைப்பு குறி என்பது அல்லா போட்டது அல்ல நமது மார்க்க அறிஞர்கள் போட்டதுதான். இதை நான் வரவேற்கிறேன்.ஆனால் பல பதிப்புகளில்
இந்த பதிப்பில் உள்ளதுபோல தேவையான இடத்தில் அடைப்புக்குறி இல்லை. அடைப்புக்குறி இல்லாமல் படித்தால் தான் பின்வரும் வசனத்தின் வீரியத்தை நீங்கள் உணரமுடியும்.
47:4. (முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்; கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்; அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்; ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்; ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.
இப்படி கொலை, போர் பற்றி ஒரு இறைவேதத்தில் இருந்தால்...அதை இறைவேதம் என்று நம்புபவன் இந்தமாதிரி செயல்களில் ஈடுபடமாட்டான் என்று கூற இயலுமா?
பின்வரும் வசனம் பிற சமூகத்தினருடன் நட்புறவு கொள்ள வேண்டாம் என்கிறது.
60:13. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ, அந்தச் சமூகத்தாருடன் நேசம் கொள்ளாதீர்கள்; ஏனெனில் மண்ணறை வாசிகளைப் பற்றி (எழுப்பப்பட மாட்டார்கள் என்று) நிராகரிப்போர் நம்பிக்கை இழந்தது போல், மறுமையைப் பற்றி, நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்.
ஒரு திரைப்படம் மக்கள் மனதில் தவறான பிம்பத்தை ஏற்ப்படுத்தும் என்றால்.குரான் முஸ்லிம்கள் மனதில் தவறான பிம்பத்தை ஏற்ப்படுத்தாதா?
பல முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக மாற இந்த வசனங்கள் உதவியதா அலல்து வேறு காரணமா என இறைவனுக்கே தெரியும்.
புனிதப்போர்-ஜிஹாத்-அறப்போர்,தீவிரவாதம் அல்லாவின் வியாபாரமா?
சகோதரர்களே அல்லா உங்களுடன் வியாபாரம் செய்கிறார். அதாவது நீங்கள் உங்கள் உயிர்களையும்,உடமைகளையும் கொண்டு போர் புரிந்தால் அவர் சுவனம் தருவாராம். இந்த வசனத்தை மனதில் வைத்துத் தான் உலகெங்கிலும் பல இசுலாமியர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனரோ எனக்கு அச்சம் ஏற்ப்படுகிறது சகோதரர்களே.
61:10. ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?
61:11. (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
இந்த வசனங்களின் வீர்யத்தை நீங்கள் உணர்வீர்கள் என நினைக்கின்றேன்.
61:12. அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்; சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.
சுவனத்த்தில் என்ன உள்ளது பார்த்தீர்களா ஆறு ஓடுமாம். பாலைவனத்தில் இருப்பவர்கள் ஆற்றின் மேல் ஆசைப்படலாம்
என்பதில் நியாயம் உள்ளது.சரி ஆற்றின் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு? போதிய குடிநீர் கிடைப்பவர்களுக்கு?
பின்வரும் வசனத்தில் அல்லா தன்னுடைய வியாபாரத்தை உறுதிபடுத்துகிறார். அவர்களுக்காக முஸ்லிம்கள் எதிரிகளை (அதாவது யூதர்கள்,கிருத்துவர்கள் ,இந்துக்கள் (இதில் நாத்திகவாதிகளும் அடக்கம்) ) கொன்றால் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்கிறார். இதை நினைத்து இசுலாமியர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்கிறது பின்வரும் வசனம்.
9:111. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
இது நியாயமா தர்மமா? சொல்லுங்கள் எனதருமை சோதரர்களே. இதை படிக்கும் ஒரு முஸ்லிம் மனதில் பிற மதத்தினரை கொல்வது சரி என்ற எண்ணம் உண்டாகும் இல்லையா? தற்கொலைப் படைகளை ஊக்குவிப்பது போலவே அல்லவா இந்த வசனங்கள் உள்ளன. இது தவறில்லையா எனது சகோதரர்களே. இதை திருத்த வேண்டாமா?
மேலும் ஒரு வசனம்
2:191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.
பின்வரும் வசனத்தில் பிற மதத்தவர்களை நண்பர்களாக ஆக்கிக்கொள்ளக்கூடாது என்கிறது.
4:89. (முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.
இது எந்த விதத்தில் நியாயம் சகோதரர்களே? இதை நீங்கள் ஏற்க்கிறீர்களா? இதை படிக்கும் ஒரு முஸ்லிம் பிற மதத்தவரை எதிரியாகத்தானே பார்ப்பான்?
ஒருவனுக்கு நல்லது செய்வதால் உனக்கு சுவனம் கிடைக்கும்,பிறர் மீது அன்பு செலுத்தினால் உனக்கு சுவனம் கிடைக்கும் என்று கூறினால் நியாயம். ஆனால் போர் புரிபவர்களுக்கு மட்டுமே என்று கூறி அனைவரையும் போர் புரிய வைப்பது எந்த விதத்தில் நியாயம் எனதருமை சகோதரர்களே? பின்வரும் வசனத்தை பாருங்கள்.
3:142. உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா?
இது பற்றி நான் என்ன சொல்ல? :(
எந்த ஒரு மதமும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்ற வசனம் நன்றாகவே உள்ளது. ஆனால் குரான் வசனங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா இல்லையா என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகின்றேன்.
என் புரிதலில் சில வசனங்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவே உள்ளது. இல்லை இந்த வசனங்களுக்கு வேறு அர்த்தம் என்றால் அந்த அர்த்தம் என்னவென்று நீங்கள் மக்களுக்கு சொல்லவேண்டாமா? ஒவ்வொரு குரானிலும் விளக்கத்தை தரவேண்டாமா? போதிய திருத்தத்தை செய்யவேண்டாமா ? கூறுங்கள் எனதருமை சகோதரர்களே.
ஒரு திரைப்படத்தினால் பாதிப்பு ஏற்ப்படும் என்பது உண்மையானால் குரானால் பாதிப்பு ஏற்படுமா இல்லையா?
குரான் எனபது சாதரான புத்தகம் அல்ல. இதை நீங்கள் இறைவேதமாக நம்புகிறீர்கள். ஒவ்வொரு முறை தொழும்போழுதும் இதிலிருந்து வசனங்கள் படிக்கப்படுகின்றன என அறிகிறேன். ஒவ்வொரு மனிதனும் இதை இறைவேதமாக ஏற்க்கவேண்டும் என்று உங்களில் பலரும் பிரச்சாரம் கூட செய்கிறீர்கள்.
சமூக நல்லிணக்கத்தை திரைப்படம் கெடுக்கும் என்று தடை கேட்கிறீர்கள். குரான் வசனங்களும் சமூக நல்லிணக்கத்தை கெடுப்பதாக உள்ளது எனபதை நீங்கள் உணர்வீர்கள் என நினைக்கின்றேன்.
இந்த பதிவை படிக்கும்பொழுது நிச்சயம் என் மீது உங்களுக்கு கோபம் வரும். ஆனால் நீங்கள் சிந்தித்து பாருங்கள் நானாக எதையும் கூறவில்லை. குரானில் இருக்கும் சில வசனங்களைத்தான் எடுத்துக்காட்டியுள்ளேன். உங்களுக்கு கோபம் யார் மீது வரவேண்டுமெனில் இந்த குரான் வசனங்களை தீவிரவாதத்திற்கு பயன்படுத்துபவர்கள் மீது வரவேண்டும்.இதை மேலும் பலர் தவறாக பயன்படுத்தாதவரு நீங்கள் சிந்தித்து செயல்படவேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம் .
போர் பற்றி கூறும் வசனங்களுக்கு என்ன விளக்கங்கள் மார்க்கபந்துகள் கூறுகின்றனர் என அறிவேன்.
போர் என்பது வரலாற்றில் பிற நாட்டின் மீதுதான் எடுக்கப்பட்டுள்ளன். ஆனால் குரான் வசனங்கள் என்ன கூறுகின்றன?
முஸ்லிம் அல்லாதவர்களை அல்லவா வெறுக்க சொல்கிறது, எதிரியாக பார்க்க சொல்கிறது,கொல்ல சொல்கிறது?
எனவே இது மதத்தை அடிப்படையாக வைத்துத்தான் கூறப்படுகிறதே தவிர நாட்டினை அடிப்படையாக அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள் எனது சகோதரர்களே.(இது என்னுடைய புரிதல் இதற்க்கு சரியான விளக்கத்தை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.)
மற்றும் ஒரு விளக்கம் என்ன கூறலாம் எனில் இவைகள் அந்த காலத்தில் கூறிய வசனங்கள் இந்த காலத்திற்கு பொருந்தாது. அப்படி எனில் ஏன் இந்த வசனங்கள்? இதை திருத்தலாம் அல்லவா?
குரான் என்பது வாழ்வியல் நூலா வரலாற்று நூலா?
யூதர்களையும்,கிருத்துவர்களையு ம்,சிலை வணங்கிகளையும்,இணைவைப்பவர்களையு ம் எதிரியாக பாருங்கள் என்ற வசனம் ஒவ்வொரு முறை குரான் படிக்கும் பொழுதும் ஒரு முஸ்லிமை எந்த மனநிலைக்கு உள்ளாக்கும் என்று சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே.
உங்களில் சிலர் கேட்கலாம். நான் முஸ்லிம்தான் ஆனால் நான் பிறரை எதிரியாக பார்க்கவில்லையே என்று.
இதற்க்கு காரணம் குரானின் இந்த வசனங்களை நீங்கள் இதுவரை படிக்காமல் இருந்திருக்கலாம். அல்லது இந்த வசனங்களுக்கு சரியான / தவறான விளக்கங்கள் உங்களுக்கு அளிக்கபபட்டிருக்கலாம் . நமது தமிழ் சமூகத்தில் நிலவும்
மத சகிப்புத்தன்மை உங்கள் மனதிலும் இருக்கலாம். இது நல்ல விடயமே. ஆனால் எதிர்கலாத்தில் மக்கள் இந்த குரான் வசனங்களை மனதில் கொண்டு பிற மத மக்களை வெறுக்க ஆரமபிக்கலாம்,பிற மத மக்களை கொன்றால்தான் சுவனம் என நம்பி தீவிரவாதத்தில் ஈடுபடலாம் அல்லவா? சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே.
இப்படி நடக்க வாய்ப்புண்டா என்று நீங்கள் கேட்கலாம். பல தீவிரவாதிகளின் செயல்கள் இதற்க்கு வாய்ப்பு உண்டு என்றே நம்பசொல்கிறது.
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பேசிக்கொண்டது :
நாம் அல்லாவின் அடிமைகள்,இசுலாமை பரப்புவதற்காக அல்லா நம்மை அனுப்பியுள்ளார். சண்டையில் இறக்கவேண்டும்,இறந்தால் நமக்கு சுவனம். நாம் இறக்கும் விதம் எதிரிகளுக்கு பயத்தை உண்டாக்கவேண்டும் என்று பேசிக்கொண்டுள்ளனர்.
அவர்கள் பேசிக்கொண்டதன் ஆங்கில மொழிபெயர்ப்பு கீழே:
My friend, may Allah accept your deed. Balm has been put on the wounds of many people. Do not forget the prayer that we made you learn; wherever you sit recite the prayer three times.
"Tell my ‘Salaam’ to the rest of the brothers. Be strong in your actions; in your actions instill strength. You have left this world. Paradise is far better than this world. You must fulfil your promises, which are true promises. Pray for us too"
"God willing, you know, what I mean is at this time the issue is between Islam and heresy. We are the slaves of God whom he has sent for expansion of the true faith. I mean, death as a martyr is a big thing. But the style of martyrdom should be such as to put fright in the
heart of the enemies and that is the style of martyrdom. What I mean is there is nothing to fear, the message of the martyr must be put
forward"
''Pray. It is time for prayer and keep your promise to Allah. All right!''
Fight in such a way, they should feel that Allah’s lion is after them.
My brother you have to be strong. Do not be afraid. God willing. If you are hit by a bullet, in that is your success. God is waiting for you.
படித்தீர்களா சகோதரர்களே,
அல்லா குரானில் எனக்காக உங்களது உயிர்களை கொடுத்து சண்டையிட்டால் அதில் இறந்தால் உங்களுக்கு சுவனம் என்கிறார். அதைத்தான் இந்த தீவிரவாதிகளும் செய்துள்ளனர்.அப்படித்தான் பேசிக்கொண்டுள்ளனர். எனவே குரான் வசனங்களும் (அதை தவறாக அல்லது புரிந்துகொள்ளுதல்) இதற்க்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் அல்லாவா?
இந்த உண்மை உங்களுக்கு கசப்பாகத்தான் இருக்கும். இந்த தீவிரவாதிகளால் உயிரை இழந்தது இந்துக்களும்,யூதர்களு ம் மட்டுமல்ல இந்தியாவில் இருந்த அப்பாவி முஸ்லிம்களும் தான்.
குர்ஆனில் இருக்கும் வசனங்களுக்கு ஏற்ப்பத்தான் சிலர் தீவிரவாதத்தில் ஈடுபடுகின்றனர் என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும் என நினைக்கின்றேன்.
தீவிரவாதத்தால் முஸ்லிம் மக்களும் கொல்லப்படுகின்றனரே என்று நீங்கள் கேட்கலாம்.
உண்மைதான் ஷியா மக்கள் கொல்லப்படுவதற்கு குரானை நான் காரணம் காட்ட மாட்டேன் எனக்கு அதுபற்றி தெரியவில்லை. ஆனால் சூபி மக்கள் கொல்லப்படுவதற்கு சில குரான் வசனங்கள் காரணமாக இருக்கலாம்.
ஏன் எனில் இன்று வாகாபியம் சூபிக்களின் தர்க்கா வழிபாடும் இணைவைத்தலே என்கிறது.குர்ஆனில் சில வசனங்கள் இணைவைப்பவர்களை எதிரியாக பார்க்கவும்,கொல்லவும் சொல்கிறது . எனவே சில வசனங்கள் காரணமாக இருக்கலாம்.
குர்ஆனில் பல நல்ல கருத்துக்கள் உள்ளன என்பதை நான் ஏற்கிறேன். அதே நேரத்தில் சில வசனங்களால் மக்கள் மூளைசலவை செய்யப்பட்டு தீவிரவாதிகளாக மாற்றப்படுகிறார்கள் எனில் அந்த வசனத்திற்கு சரியான போதிய விளக்கமோ அல்லது அந்த வசனங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் அதை இடைச்சொருகல் என்று கூறி நீக்குதல் என்பது மக்களை நல்வழிப்படுத்தும் எனபதே என் கருத்து.
இப்பதிவின் நோக்கம் குரானை இழிவுபடுத்தவேண்டும் எனபதல்ல மாறாக குர்ஆனில் உள்ள சில வசனங்கள் தவறாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளன அதற்க்கு நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியே இந்த பதிவு .
ஒரு திரைப்படம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டினால் உங்கள் மனம் புண்படுவது போலத்தானே உங்கள் இறைவேதம் யூதர்களையும்,சிலை வணங்கிகளையும்(இந்துக்கள்,கிருத்துவர்கள்), இணை வைப்பவர்களையும் (இந்து,முஸ்லிம் சூபிக்கள்) எதிரிகள்,பகைவர்கள்,சாத்தான்கள் அவர்களை கொல்லுங்கள் என்பதும் அவர்கள் மனதை புண்படுத்தும்?. சிந்தித்து பாருங்கள் எனதருமை சகோதரர்களே. தேவையான திருத்தத்தை,விளக்கத்தை கொண்டுவர முயலுங்கள்.
இந்தப்பதிவு உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும்.இப்பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன். இந்த பதிவிற்கு மறுப்பை பதிவாக தந்தாள் அந்த பதிவை இதே தளத்தில் வெளியிடுகிறேன். என்றும் வாய்மையே வெல்லட்டும்.மனிதமே வெல்லட்டும். எல்லாம்வல்ல இறைவன் நம் அனைவர் மீதும் சாந்தியும் அமைதியும் உண்மையில் உண்டாக்குவானாக.
என்றும் அன்புடன்
இராச.புரட்சிமணி