வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

முகமது நபி உண்மையில் அருளிய மார்க்கம் என்ன?


இசுலாம் என்பது மதம் அல்ல  அது மார்க்கம் என்று கூறும்  மார்க்க சகோக்களே 
  உண்மையில் அதன் பொருளை  நீங்கள்  அறிந்திருந்தால் இசுலாம் மட்டுமே இறைவனை அடையும் ஒரே வழி என்று கூறுவீர்களா என்பது சந்தேகமே. ஏதோ எனக்கு புரிந்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

முகமது நபி இறைவனை அடைய இசுலாமியர்களுக்கு  மூன்று மார்க்கங்களை அதாவது வழிகளை  அளித்துள்ளார்.(இதை மூன்று வழியாகவும் பார்க்கலாம் அல்லது இறைவனை அடையும் 3 படி நிலைகளாகவும் பார்க்கலாம்.)
 அவை இசுலாம், ஈமான்,  இஹ்சான்.

சரி இசுலாம் என்பது என்ன?
முகமது நபியே சொலிகிறார்....
 "இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் "ஹஜ்' செய்வதும் ஆகும்'' 

.இது ஒரு அடிப்படை நிலை  அவ்வளவுதான். சரி அடுத்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் ? அவர்கள் ஈமான் கொள்ள வேண்டும்.

சரி ஈமான் என்பது என்ன?

 "அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்'' 

அதாவது குரான் எனும் ஒரு வேதத்தை மட்டுமே ஏற்காமல்,கிருத்துவம்,யூதம் ஆகியவற்றில் உள்ள வேதத்தையும்,அவர்களின் தூதர்களையும் ஏற்க்க வேண்டும்.

ஆனால்  இசுலாமை ஏற்காமலும்,ஈமான் கொள்ளாமலும் யூதர்களும், கிருத்துவர்களும் இருக்கலாம் என்று குரான் கூறுகிறது.

2:62ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

 இசுலாம் என்பது அடிப்படை ஈமான் என்பது இரண்டாம் நிலை.
சரி அடுத்த நிலை? அதுதான் இஹ்ஸான்.

“(இஹ்ஸான் என்பது) அல்லாஹுவை அவனைப் பார்ப்பது போன்று நீ வணங்குவதாக இருக்கும், அப்படி (அகப்பார்வையினால்) நீ அவனைப் பார்ப்பவனாக ஆகியிருக்கவில்லையானால், அவன் உன்னை நிச்சயமாக பார்த்தவனாகவே இருக்கின்றான்.


இங்கே கூறப்படுவது என்னவெனில் தியானம். உண்மையில் பார்ப்பனன் என்பதன் பொருளும் இதுவே. பார்ப்பனன் என்பதற்கு சிலர் தன்னை பார்ப்பவனை பார்ப்பவன் என்று கூறுகிறார்கள். தன்னை பார்க்கும் இறைவனை தான் பார்த்தல். இந்த நிலைதான் இஹ்சான் நிலை. இதைத்தான் சுபிக்கள் செய்கின்றனர்.
வாகாபிய சகோக்களே,
இது  பற்றி நீங்கள் இதுவரை பதிவு எழுதியுள்ளீர்களா?
இஹ்சான்  நிலையை அடைய நீங்கள் முயற்சி செய்துள்ளீர்களா?
சுபிக்கள் இந்த நிலையை அடைய முயல்வதை தடுப்பது மடமை என்று உங்களுக்கு தோன்றவில்லையா?

இறைவனை பார்த்தலே வணங்குதல். நீ பார்க்க முயற்சி செய். நீ பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதே அந்த ஹதீஸின் பொருள்.இதைத்தான் வள்ளலார் இறைவழிபாடு,ஒளிவழிபாடு என்கிறார்.

யூதர்களும்,கிருத்துவர்களும் இசுலாமை ஏற்காமல் நன்மை பெறலாம் என்றேன்.  சிலை வணங்கிகளுக்கு  அப்படி ஏதும் இல்லையா என்றால் நிச்சயம் உண்டு.

முகமது நபியும் ஒரு சிலை வணங்கியாக இருந்தவர்தான் என்பதை யாரும் மறக்க கூடாது. அவர் வஹி எனும் இறை தரிசனம் பெற காரணம் அவர் தியானம் செய்ததுதான். அவர் அடிக்கடி ஹிரா மலையில் தியானம் செய்துள்ளார். எனவே இங்கே இசுலாமை ஏற்க்க வேண்டும் என்று சிலை வணங்கிகளுக்கு (இந்துக்களுக்கு) எந்த அவசியமும் இல்லை. எது முக்கியம் எனில் தியானம் செய்தல்.


இசுலாமியர்கள் இசுலாம் எனும் அடிப்படையிலே நின்று விடாமல், அவர்கள் ஈமான் கொண்டவர்களாக மாறவேண்டும். தற்பொழுது ஈமான் கொண்டவர்கள் இஹ்சான் நிலையை அடைய வேண்டும். 

பிறரை எதிரியாக பாருங்கள், வெட்டுங்கள், குத்துங்கள் என்ற வசனங்களை புறந்தள்ளிவிட்டு, இசுலாமை நாம் காப்பாற்ற வேண்டும் அதற்க்கு பிரச்சாரம்  செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் விட்டுவிட்டு நாம் எப்படி இஹ்சான் நிலையை அடையலாம் என்று சிந்தியுங்கள். அதை நோக்கி செல்லுங்கள். 

யூதர்களையும்,கிருத்துவர்களையும்,இந்துக்களையும் மதம் மாற்றம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்பதை குரான் மூலமாகவும் ஹதீஸின் துணை கொண்டும் விளக்கியுள்ளேன் என்று நம்புகிறேன். மேலும் இசுலாமியர்கள் அடையவேண்டிய உயர்நிலை இஹ்சான் எனும் தியான நிலை என்பதும் விளங்கும் என்று நம்புகிறேன்.

 இடைச்சொருகல் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மார்க்கத்தை காலத்திற்கு ஏற்றவாறு சீர்திருத்தி கொள்வதே நல்லது.முன்னுக்குப்பின் முரணான பல விடயங்களை ஆராய்ந்தாலே உங்களுக்கு உண்மை புரியும்.

வஹி என்பது முகமதுவிற்கு மட்டுமே அளிக்கப்பட்டதல்ல ஒவ்வொரு மனிதனும் அவர் கண்டதை காணலாம். உணர்ந்ததை உணரலாம்.  இஹ்சான் எனும் உயர் நிலையை அடைய  முயலுங்கள்.

என்றும் அன்புடன் 
இராச.புரட்சிமணி 

இதை எழுத உதவிய பதிவு: http://onameen.blogspot.in/2011/08/blog-post_27.html
இஹ்சான் நிலையுடன் (மறைமுக) தொடர்புடைய பதிவு: http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2013/01/blog-post.html

22 கருத்துகள்:

  1. சகோ மணி,
    நம்மை சுண்டி இழுக்கும் படிமுக்மது(சள்0 அவர்களைப் பற்றி பதிவு போட்டு,நம்ம பங்காளிக கூட மீண்டும் வாய்க்கால் தகராறு ஏற்படுத்துவது சரியா? .எப்படி பங்காளி என்றால் நான் யூத கைக்கூலி என்றால் ,அவர்கள் அரபு கைக்கூலி என்றால் பங்காளிதானே ஹி ஹி[ அரபுக்களும் யூதர்களும் பங்காளிகள்!!]

    என் தேடல்,கருத்துகளின் படி.
    1. முக்மது(சல்) காலத்து அரபு குரேஷிகளின் மதம்,இந்துமதம் போல் பல் தெய்வ வழிபாடு.அதில் அல்லாஹ் ம் ஒரு கடவுள்.

    2.முக்மது(சல்) அல்லாஹ் ஐ மட்டும் வைத்துக் கொண்டு,பெண்கடவுள்களை தூக்கி விட்டு,வேறு தெய்வங்களை அல்லாஹ் ந் அம்சம் [ஹி ஹி வேறு பெயர்கள்!!] என காட்டி விட்டார்.

    3. ஆயினும் அக்கால சாமான்ய வழிபாட்டு முறைகளில் பெரும்பாலான விடயங்களை மாற்றவில்லை.[காபா,கிரிவலம்,சுன்னத்...] போன்றவை மட்டுமில்லாமல் அவருக்கு பின் வளரும் போது மதம் பல கலாச்சாரங்களின் சில விடயங்களையும் ஏற்றுக் கொண்டது.

    4. அஹ்லே பைத் பிரிவினரின் கொள்கையின் படி முக்மது(சல்) இன்னும் உயர்ந்த சக்திகள் உடையவர்.இஹ்சான் என்பது நமக்கு புதிய விடயம். இன்னும் கொஞ்சம் தகவல் கொடுங்களேன்.


    நன்றி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ சார்வாகன்,
      //நம்ம பங்காளிக கூட மீண்டும் வாய்க்கால் தகராறு ஏற்படுத்துவது சரியா?//
      தகராறை பேசி தீர்க்க ஒரு முயற்சி :)

      //இஹ்சான் என்பது நமக்கு புதிய விடயம். இன்னும் கொஞ்சம் தகவல் கொடுங்களேன்.//
      பதிவிலே கொடுக்கலாம் என்றுதான் இருந்தேன். அப்புறம்தான் யோசித்தேன் எங்கே நம்ம சகோக்கள் நான் ஏக இறைவன் ஈசனை பற்றி பிரச்சாரம் செய்கிறேன் என்று நினைத்துகொள்வார்களோ என விட்டுவிட்டேன். ஈசன் நிலை வேறு இஹ்சான் நிலை வேறு அல்ல சகோ. என்ன ஈசனில் இன்னும் பல நிலைகள் அடங்கும். இருப்பினும் இது பற்றி ஒரு பதிவு நேரம் கிடைக்கும் பொழுது எழுதுகிறேன்.
      தங்கள் வருகைக்கும் மேலதிக தகவல்களுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. @சர்வராகன் "நான் யூத கைக்கூலி என்றால் ,"
    நீங்க யூத கைகூலியா? சொல்லவேயில்லை.
    எவ்வளவு தாராங்க ?
    சுவனபிரியனுக்கு எவ்வளவு கொடுக்குறாங்க என்று தெரிய வேண்டும்? யூதனை விட சவூதி ராஜா கூட போட்டு கொடுப்பார் என்றால் நீங்கள் சவூதி பக்கம் போவது லாபகரமானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க Ethicalist E,
      எனக்கும் ஏதாவது பணம் இருந்தால் கொடுக்க சொல்லுங்க. எனக்கு பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நான் உண்மையை மட்டுமே கூறுவேன்.(மைன்ட் வாய்ஸ்:அப்புறம் யாரு உனக்கு பணம் கொடுப்பா :) )

      நீக்கு
  3. "யூதர்களையும்,கிருத்துவர்களையும்,இந்துக்களையும் மதம் மாற்றம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்பதை குரான் மூலமாகவும் ஹதீஸின் துணை கொண்டும் விளக்கியுள்ளேன் என்று நம்புகிறேன். "

    அவர்களை பொறுத்த இஸ்லாம் என்பது அரசியல்/அரசியல் கட்சி. கட்சி என்றால் ஆள் சேர்க்க வேண்டும். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான் சொன்னீர்கள் Ethicalist E, இசுலாம் அரசியலாக மாறியதுதான் கொடுமையே. அதனால் தான் அது உலக அமைதிக்கு சவாலாக உள்ளது.(இசுலாமியர்கள் அமைதி உட்பட).இப்பொழுது கிலாபத் -கலிபா தலைமையை கொண்டுவரவேண்டும் என்று சிலர் தமிழகத்தில் எழுத ஆரம்பித்துள்ளார்கள். இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      நீக்கு
  4. அண்ணே யூதர்கலிடமிருந்து எவ்வளவு பணம் வாங்கீனீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் என்னை கேட்கவில்லை என்று நினைக்கின்றேன். இருப்பினும் உண்மையை சொல்லவேண்டுமெனில் நான் யூதர்களை பார்த்ததே கிடையாது.
      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  5. இசுலாமியர் மத மாற்றத்தில் ஈடுபடுவதாக எங்கும் காணோம். இருந்தாலும் மிகச் சொற்பம். மத மாற்றத்தில் ஈடுபடுவது, மதப் பிரச்சாரம் என்று பார்த்தால் கிறிஸ்தவர்கள் தான் எக்கச் சக்கம். காசு கொடுப்பது, மூளைச் சலவை செய்வது, கல்வியில் முன்னுரிமை என எல்லாம் செய்கிறார்கள். இசுலாமியர் வெளியில் இருப்பவர்களை மாற்றுவதை விட தங்களுடைய "உற்பத்தி திறனையே" பெரிதும் நம்பியுள்ளனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க Jayadev Das,
      பதிவுலகை பொருத்தவரை இசுலாம் மதப்பிரச்சாரமே அதிகம். குறிப்பாக தமிழ்மணத்தில். இதனால் தான் இசுலாம் பற்றி நான் எழுத நேர்ந்தது.ஏன் எனில் பதிவுலகம் எனக்கு ஒரு உலகமாக உள்ளது. உண்மையில் கிருத்துவர்கள் தான் பணம் கொடுத்து அதிக அளவில் மதமாற்றத்தில் ஈடுபடுகின்றனர். இருப்பினும் அவர்களை பதிவுலகில் காணோம்.அப்படி அவர்கள் வந்தால் கண்டிப்பாக கிருத்துவத்தையும் விமர்சிப்போம். வராவிட்டாலும் விமர்சிக்கவேண்டுமெனில் அதையும் செய்வோம்.கிருத்துவத்தில் எனக்கு எரிச்சல் தரக்கூடிய வாசகம்
      "என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்". பிடித்த வாசகம் "நானே வழியும் சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன்".
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  6. "இசுலாமியர் வெளியில் இருப்பவர்களை மாற்றுவதை விட தங்களுடைய "உற்பத்தி திறனையே" பெரிதும் நம்பியுள்ளனர்."
    உண்மைதான். கிறிஸ்தவர்களை ஒப்பிடும் பொது பணம் கொடுத்து மதம் மாற்றுவது குறைவு.

    ஆனால் இஸ்லாமுக்கு வந்தால் சமூக ஒடுக்கு முறை இல்லை என்று பொய் சொல்லி மதம் மாற்றுவது நடக்கின்றது.

    லவ் ஜிகாத் வேறு நடக்கின்றது. இதற்க்கு ஆதாரம் இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  7. "அண்ணே யூதர்கலிடமிருந்து எவ்வளவு பணம் வாங்கீனீர்கள்"

    நீங்க சவூதி இளவரசரிடம் வாங்கியதை விட ரொம்ப குறைவு

    பதிலளிநீக்கு
  8. //இசுலாமியர் மத மாற்றத்தில் ஈடுபடுவதாக எங்கும் காணோம். இருந்தாலும் மிகச் சொற்பம்//
    எமக்கு விருப்பமானபடி நல்லததையே கற்பனை செய்து கொண்டிருந்தால் இந்தியாவில் மத நல்லிணக்கம் வந்துவிடாது.இஸ்லாமின் உண்மை முகம் அப்பட்டமாக அன்றாடம் வெளியே தெரிவதால் மத மாற்றும் முயற்ச்சி மிக கடினமானதாக இருக்கிறது.சவூதி அரேபியாவில் இருந்து பெருந்தொகை பணம் இந்தியா இலங்கைக்கு இதற்காகவே வருகின்றன. நான் அறிந்தவரை இலங்கைக்கு வரும் பணம் அங்கே காபிர்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் அமைதி வாழ்க்கையை விரும்பும் இஸ்லாமியர்களுக்கு மத வெறி ஏற்றி காபிர்களுக்கெதிராக ஜிகாத்செய்ய வைப்பதே நோக்கம்.இலங்கை காபிர்கள் போதுமான இஸ்லாமிய விழிப்புணர்ச்சி பெற்றவர்கள் அவர்களிடம் எல்லாம் இஸ்லாமி தக்கியா செல்லுபடியாகாது.ஆனால் தமிழகத்திற்க்கு தேவை சகோ சார்வாகன் புரச்சிமணியின் தன்னலமில்லா சேவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வேக நரி,
      //எமக்கு விருப்பமானபடி நல்லததையே கற்பனை செய்து கொண்டிருந்தால் இந்தியாவில் மத நல்லிணக்கம் வந்துவிடாது//
      நீங்கள் சொல்வது மிகவும் சரி. உலகில் நடக்கும் விடயங்கள் குறிப்பாக இசுலாமியர்களால் இசுலாமியர்கள் கொடுமைப்படுத்தப்படுவது அச்சத்தையும் கவலையையும் தருகின்றது.

      //ஆனால் தமிழகத்திற்க்கு தேவை சகோ சார்வாகன் புரச்சிமணியின் தன்னலமில்லா சேவை.//
      சார்வாகன் சரி ஆனால் நான் ஒன்னும் செய்யவில்லை. இந்திய அளவில் அலி சினா http://alisina.org/ பிச்சு உதறுகிறார். சில இடங்களில் கொஞ்சம் அதிகம் என்றும் சொல்லவேண்டும்.

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  9. அட...இது நல்லா இருக்கே....நன்றி சகோ.தேவையான பதிவுதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் புரிதலுக்கும்,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      நீக்கு
  10. நக்கூர் நாகப்பன் வந்து ஒரு நக்கு நக்கினால் ஒங்க நிலைமை
    …என்னாகும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஒன்னும் தப்பா எழுதலையே ராவணா. இதில் ஏதேனும் பொருட்குற்றம் இருந்தால் அடியேனை நீங்களோ, அல்லது மார்க்கபந்துக்களோ திருத்துங்கள் திருத்திக்கொள்கிறேன்.

      நீக்கு
  11. சகோதரர்களே !
    ஒரு நபருக்கோ, அல்லது ஒரு குழுவுக்கோ, அல்லது ஒரு சமுகத்திற்க்கோ, நல்லவைகளை எடுத்துரைக்கும்போது ஏன் வழங்கும் பக்கமுள்ள தீய செயல்களையோ அல்லது பிழைகளையோ அவர்கள் எடுத்துரைக்காமல் விடுவதற்கான காரணம் என்ன ?
    கிறிஸ்தவர்களோ அல்லது இஸ்லாமியர்களோ தமது பக்கம் அடுத்தவரை வரவழைக்க படாத பாடு படுகின்றனர். ஆனால் விதிவிலக்காக இந்துக்கள் யாரையுமே வலத்காரப்படுத்துவதாக நான் இதுவரை அறியவில்லை.

    இஸ்லாமியத்தை முழுமனதாக போற்றும் சவுதியில் அங்கு அவர்கள் தொழுகை நேரத்தின்போது இஸ்லாமிய மத போதகர்கள் இஸ்லாமியர்களை நெறிப்படுத்தும் முறையே வேறு. அதட்டி தொழுகைக்கு போ.. .போ.... என்றவாறே காணப்படுகின்றனர். மாறாக இஸ்லாத்தை தழுவாதவர்களையும் வீதியால் செல்பவர்களையும் இந்த மதபோதகர்கள் கண்டால் அதட்டி அருவருக்கத்தாக்கதாக பேசுவார்கள். எனக்கு இங்கு கேள்வியாக இருப்பது இறைவனாகிய "அல்லா" தன்னை தொழுகை நேரத்தில் யாராவது ( நோயாளிகள், வீதியால் செல்பவர்கள், தொழுகை செய்ய முடியாதோர் உட்பட) கண்டிப்பாக வணங்கியாக வேண்டும் என குர் ஆன் இல் குறிப்பிட்டுள்ளாரா? அல்லது மற்றயவர்களுக்கு அடிபணிந்து கண்டிப்பாக தொழ வேண்டும் என குறிப்பிடுகிறதா? இந்த கேள்விக்குரிய விடையை தயவுசெய்து எனக்கு தந்துதவவும்.

    கலால், கஹராம் என பிரித்துள்ள இஸ்லாம். ஏன் ஏழு திருமணங்களை புரிவதற்கு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ துணைபுரிகிறது. இங்கு ஒருத்திக்கோ அல்லது ஒருவனுக்கோ ஒழுங்காக இல்லற வாழ்வை திருப்தியளிக்க முடியாதோர் எப்படி மற்றைய பெண்களையோ அல்லது ஆண்களையோ திருப்தியளிக்க வைக்க முடியும். அத்தோடு இங்கு கலாச்சார சீர்கேடுகளும் தலைவிரித்தாடுகிறது. ஆனால் இதை இங்குள்ள இஸ்லாமியவாதிகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

    இங்கு சவுதியில் மது, மாது, களவு போன்ற அனைத்தும் உண்டு. இப்படி நான் பொய்யாக சொல்ல முடியும் இல்லையா சகோதரர்களே? ஆதாரமாக ஜீத்தா எனும் மாகாணத்தில் பலத் எனும் ஊரில் மிகவும் குறைந்த விலையில் பெண்கள் தங்கள் வயிற்று பிழைப்பிற்க்காக விபச்சாரம் செய்கிறார்கள். அதோடு இங்குள்ள சவுதி ஆண்களும் பெண்களும் அவர்களுள் திருமணமானவர்களும் கூட தங்களது துணையை விடுத்து அடுத்த துணையுடன் செல்வது இங்கு வெறுப்பை ஏற்படுத்துவதாகவே அமைகிறது. இவர்கள் அணியும் உடைகள். அதிலும் பெண்களே அதிகம் (சவுதியில்) இங்கு பெண்கள் தனது உடலை முழுமையாக மறைத்தவாறு சாரதியுடனோ அல்லது வேறு யாருடனோ அங்காடி சென்று இங்குள்ள அங்காடிகளுக்கு நான்கு பக்கமும் வாயில்கள் இருக்கும் ஒரு பக்கத்தால் உள் நுழைந்து மற்றைய வாயில் கதவால் தனது ஆடவருடன் செல்கின்றனர். பின்னர் அவரது ஆசைகளை பூர்த்தி செய்த பின்னர் மீண்டும் அப்பெண் இந்த அங்காடியை வந்தடைந்து தனது சாரதியுடன் பிரயாணத்தை தொடர்வாள். இங்கு என்ன கவலையளிக்கும் விடையமேன்றால் இங்குள்ள சாரதிகள் நமது ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களே. ஆனால் சாரதி இப்பெண் வரும்வரை தனது பணிக்காக பசியுடன் காத்திருப்பார் ஒருசிலர் உண்பதற்கு ஏதும் கொடுத்துச்செல்வதும் உண்டு என்பதே.

    அதுபோல் இங்கு மதுபானங்களும் தரத்திற்கேற்ப விலைகளில் கிடைக்கிறது. ஆனால் இங்கு கூறுவார்கள் இவையெல்லாம் தடையென ஆனால் இங்குதான் புகைத்தலும் அதிகமாக நடைபெறுகிறது. இவற்றை இங்கு இறக்குமதி செய்பவர்கள் யார்? எனும் கேள்விகள் உங்களுக்கு எழவில்லையா? இந்த சவுதி அரசுதான் இங்கு இவற்றை இறக்குமதி செய்து விநியோகிக்கிறது. ஏன் சவுதியில் தானே முகமது நபி அவர்கள் இஸ்லாத்தை விரிபுபடுத்தினார். இவற்றையெல்லாம் தவிர்க்கவேண்டுமென புனித குர் ஆன் தானே கூறுகிறது. அப்படியிருக்கையில் "வேசிக்கு (விபச்சாரிக்கு) ஏன் இந்த முக்காடு". நமக்கு குர் ஆன் தேவையில்லை நமக்கு நவீன உலகுதான் வேண்டுமென்றால் எதற்காக இந்த பம்மாத்து வேலைகள். குர் ஆன் வழி என்றால் அதன்படி செல்லவேண்டியதுதானே. ஏன் நவீன கலாச்சாரத்திற்கு இஸ்லாமியர்கள் வரவேண்டும்.

    நான் எந்தஒரு இஸ்லாமியருடைய மனதையும் புண்பட இதை தரவில்லை மாறாக புனிதமாக நீங்கள் போற்றும் குர் ஆன் படி இங்கோ(சவுதி ) அல்லது எங்கோ (வேறு நாடு ) இஸ்லாமியர்கள் என்று பெயரவில் மாத்திரமே இவர்கள் தங்களது செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டவே இதை பகிர்கின்றேன்.

    முதலில் தங்களிலுள்ள பிழைகளை திருத்திய பின் அடுத்தவரை மதம் மாற்றுவதற்கு முயற்ச்சித்தால் சரி அது வருபவரது உரிமை. மாறாக தங்களிலுள்ள பிழைகளை சுட்டிக்காட்டாது, அதில் பிழையுள்ளது இங்கு வா இங்கு வா என்பது எந்த விதத்தில் இது நியாயம்.

    சகோதரர் புரட்சிமணி அவர்களே !
    உங்களது சேவை தொடரட்டும் காரணம் இஸ்லாத்தை பற்றி தெரியாத என்போன்றோர் இஸ்லாத்தை அறிவதற்கு இது ஒரு சிறந்த இடம். வளர்க உமது பணி. பிழைகளை அறியட்டும் மக்கள் அதை திருத்தியமைக்கட்டும் சமுகம். இவ்வாறாக நல்ல மனிதர்களை காண்போம். வாழ்க மனிதநேயம்.
    நன்றி
    சவூதியிலிருந்து..........ஈழத்தமிழன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ ஈழத் தமிழன்,

      //சகோதரர்களே !
      ஒரு நபருக்கோ, அல்லது ஒரு குழுவுக்கோ, அல்லது ஒரு சமுகத்திற்க்கோ, நல்லவைகளை எடுத்துரைக்கும்போது ஏன் வழங்கும் பக்கமுள்ள தீய செயல்களையோ அல்லது பிழைகளையோ அவர்கள் எடுத்துரைக்காமல் விடுவதற்கான காரணம் என்ன ? //
      தீமைகளை எடுத்துரைத்தால் யாரும் (மனம்) மதம் மாற மாட்டார்கள் அல்லாவா அதனால்தான்.

      //"அல்லா" தன்னை தொழுகை நேரத்தில் யாராவது ( நோயாளிகள், வீதியால் செல்பவர்கள், தொழுகை செய்ய முடியாதோர் உட்பட) கண்டிப்பாக வணங்கியாக வேண்டும் என குர் ஆன் இல் குறிப்பிட்டுள்ளாரா? அல்லது மற்றயவர்களுக்கு அடிபணிந்து கண்டிப்பாக தொழ வேண்டும் என குறிப்பிடுகிறதா? இந்த கேள்விக்குரிய விடையை தயவுசெய்து எனக்கு தந்துதவவும்.//
      நோயாளிகளும் தொழுகை செய்யவேண்டும் என்று குர்ஆனில் உள்ளது,. ஆனால் முடியாத காலத்திலும் தொழ வேண்டும் என்று இருப்பதாக தெரியவில்லை. வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அழைத்தால் செல்ல வேண்டும் என்று குரான் கூறுகிறது
      5:6. முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்; தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.

      62:9. ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் {சில பதிப்புகளில் வெள்ளிக்கிழமை என்று உள்ளது} தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.

      என்னைப்பொருத்தவரை எந்த ஒரு வேதமும் இறைவேதம் அல்ல. எனவே இவற்றில் நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

      உங்களது மேலதிக தகவலுக்கும், கருத்துக்கும் எனக்கு அளித்த ஊக்கத்திற்கும், தங்கள் வருகைக்கும் மிக்க நன்றி :)

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...