கமல் இசுலாம் எதிரியா? இந்து எதிரியா?
கமலை முஸ்லிம்கள் இசுலாம் எதிரியாக கூறுகின்றனர். ஒரு இந்து கூறினார் அன்பே சிவம் இந்துக்களுக்கு எதிரான படம் என்று. இதையொட்டி அரைத்தூக்கத்தில் என் மனதில் எழுந்த சிந்தனையே இந்த பதிவு.
கமலை இசுலாமின் எதிரியாக சித்தரித்து பலரும் இணையத்தில் எழுதி வருகின்றனர். ஆனால் அவர் ஒரு இசுலாமிய அனுதாபி என்பதை ஏன் யாரும் கூறவில்லை? ஆம் கமல் ஒரு இசுலாமிய அனுதாபி.
1.சிறு வயதில் பொதிகை தொலைகாட்சி என நினைக்கின்றேன் அதில் குரானை தான் படித்ததாக சிலாகித்து கூறி இருந்தார். இவர் கீதையை பற்றி இப்படி கூறியதாக எனக்கு தெரியவில்லை.
2.உன்னைப்போல் ஒருவன் இசுலாமியர்களுக்கு எதிரான படம் என்று சில முஸ்லிம்கள் கூறுகின்றனர். உண்மையில் அந்த படத்தில் கமல் ஒரு முஸ்லிம். அவர் அதை மறைமுகமாக கூறியிருப்பார்.அதை புரிந்துகொள்ளும்
சக்தி நமது மக்களிடம் இல்லை. அந்தப் படத்தில் அவர் தனது மனைவியுடன் பேசும்பொழுது "இன்ஷா அல்லா" வேலை என்று கூறுவார். அரபி மொழியிலோ உருது மொழியிலோ கூட சில வசனங்கள்பேசுவார். கர்ப்பிணிப்பெண் கருவருக்கப் பட்டதை பற்றி அந்த படத்தில் பேசுவார் உண்மையில் அது குஜராத் கலவரத்தின் போது முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்தான். இந்த படத்தில் கமல் வெளிப்படையாக தன்னை முஸ்லிம் என்று கூறியிருக்க வேண்டும். மறைமுகமாக கூறப்போயி அது பலருக்கும் புரியாமல் போய்விட்டது.
3.ஹேராம் -படத்தில் முஸ்லிம் ஷாருக்கானை நல்லவனாகவும்,படத்தில் இந்துவாகிய தன்னை கெட்டவனாகவும் தான் காட்டி இருப்பார்.
3. அன்பே சிவம் இந்து மதத்தை ஆதரிக்கும் படம் என்று ஒரு முஸ்லிம் எழுதிருந்தார். நேற்று ஒருவர் அன்பே சிவம் இந்து மதத்திற்கு எதிரான படம் என்றார். சிந்தித்து பார்த்தால் அந்த படத்தில் வரும் வில்லன் ஒரு சைவ இந்து.சிவபக்தன். ஒவ்வொரு முறை தவறு செய்ய முடிவு எடுத்த பின்பும் "தென்னாடுடைய சிவனே போற்றி" என்று கூறுவார். கமலை மருத்துவமனையில் கொல்ல முயற்சிக்கும் காட்சியிலும் இப்படித்தான்.
எப்படிடா ஒரு சிவ பக்தனை கெட்டவனாக காட்டலாம் என்று எந்த இந்துவும் கேட்டமாதிரி தெரியவில்லை.
அதுமட்டுமல்ல அந்த படத்தில் தேவையே இல்லாமல் அந்த கெட்டவன் படையாட்சி என்ற சாதியை சார்ந்தவனாக காட்டப்ப்பட்டிருப்பான். பாபா திரைப்படத்தை எதிர்த்த பா.மா.க இந்த படத்தை எதிர்த்த மாதிரி தெரியவில்லை.
4. தசாவதாரம் திரைப்படத்திலும் சிவபக்தர்களை கெட்டவர்களாக காட்டியிருப்பார்.
5. விசுவரூபம் திரைப்படம் தலைப்பே அரபி மொழியை குறிப்பது போல இருக்கும். இது முஸ்லிம் ஆதரவு. தமிழ் மொழியை வட மொழியிடமிருந்து காப்பாற்றிய பகுத்தறிவாதிகள், தமிழ் மொழியை அரபி மொழி அழிப்பதை, அழிக்கப்போவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
சமஸ்கிருதத்தில் பூஜை செய்யகூடாது என சொல்லத் தெரிந்தவர்களுக்கு, அரபி மொழியில் தொழுகை அழைப்பு கூடாது என சொல்லத்தெரியவில்லை.
தமிழ் மொழியில் திரைப்படத்திற்கு பெயர் வைத்தால் அதற்க்கு சலுகை என்று கூறி தமிழ் வளர்க்கும் அதிபுத்திசாலிகளுக்கு தமிழ் மொழியில் பெயர் வைத்து சலுகை பெற்று தமிழ் வளருங்கள் முஸ்லிம்களே என கூற அறிவில்லாதது ஏனோ? ( அதேபோல கிருத்துவ மதத்திலும் தமிழ் பெயர்கள் குறைந்து வருகிறது. இந்து மத மக்களிடமும் ஒருசில அந்நிய மொழி பெயர்கள் வளர்கிறது என்பதை மறுப்பதற்கில்லை )
விசுவரூபம் படமும் இசுலாமியர்கள் ஆதரவு படமாகத்தான் கமல் எடுத்திருப்பார். ஆனால் என்ன அதை இசுலாமிய அமைப்பு தலைவர்கள் சரியாக புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன்.
ஒரு மதத்தை,அந்த மக்களை புண்படுத்துகிறது என தடை செய்ய ஆரம்பித்தால் ஒரு மத புத்தகத்தையே தடை செய்யலாம்.
மத பிரச்சாரங்களை தடை செய்யலாம்.
பெரியார் இந்து மதத்திற்கு எதிராக எழுதிய எழுத்துக்களை கூட தடை செய்யலாம்.
நாங்கள் போராட்டம் செய்வோம் என்று சிலர் மிரட்டினால் தான் அரசாங்கம் இவற்றை செய்யும் என நினைக்கின்றேன்.
எம்மதமும் சம்மதம்,பகுத்தறிவு,நாத்திகம்,மத சகிப்புத்தன்மை என்று வாழும் தமிழ் இந்து மக்களுக்கு இது தெரியாது..புரியாது. விசுவரூபம் பட எதிர்ப்பை பார்த்து,எதிர்காலத்தில் இந்த மாதிரி நிகழ்வுகளை பார்த்து இந்துக்களும் மத சகிப்புத்தன்மையை விட்டால் அது தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்.
என்னைப்பொருத்தவரை இதுநாள் வரை நான் கமலை இசுலாம் அனுதாபியாகத்தான் பார்க்கிறேன். அதே நேரத்தில் இந்து மத எதிரியாக அவரை பார்க்கவில்லை என்பதையும் தெளிவு படுத்த விரும்புகிறேன்.
எனது கவலை எல்லாம் இசுலாமியர்களுக்கு மத சகிப்புத்தன்மை குறைந்துவருவதுபோல தெரிகிறது.
இதற்க்கு இசுலாமிய சகோதரர்களை குறை சொல்வதைவிட நமது திராவிட அரசியல்வாதிகளையே நான் குறை கூறுவேன்.
ஒசாமா பின்லேடனையும்,அஜ்மல் கசாபையும்,தாலிபான்கள் செயல்களையும் சில முஸ்லிம்கள் ஆதரிப்பதாக சிலர் கூறுகின்றனர். அவர்களுக்கு மதவெறி அதிகமாகிறதா என என்னைக்கேட்டால் அதற்க்கு விடையாக நான் முகமது நபி
வார்த்தைகளைத்தான் விடையாக கொடுப்பேன்.
ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்).
குறிப்பு:இந்த பதிவு கமலுக்கோ ,இந்துக்களுக்கோ,முஸ்லிம்களுக்கோ ஆதரவானதும் அல்ல எதிரானதும் அல்ல. நான் உண்மையாக நினைப்பவற்றை பகிர்ந்துள்ளேன் அவ்வளவே.
தவறுகளை சுட்டிகாட்டினால் திருத்திக்கொள்கிறேன்.
பிற்சேர்க்கை: விசுவரூபம் திரைப்படத்தை இசுலாமிய அமைப்புகளுக்கு காட்ட வேண்டும் என்று சட்டப்படி எந்த அவசியமும் இல்லாதபொழுது அவர் முஸ்லிம் அமைப்புகளின் உணர்வுகளை மதித்து படம் காட்டி இருக்கிறார் எனும்பொழுது கமல் முஸ்லிம் மக்களுடன் நட்புறவை பேணவே விரும்புகிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
பிற்சேர்க்கை: விசுவரூபம் திரைப்படத்தை இசுலாமிய அமைப்புகளுக்கு காட்ட வேண்டும் என்று சட்டப்படி எந்த அவசியமும் இல்லாதபொழுது அவர் முஸ்லிம் அமைப்புகளின் உணர்வுகளை மதித்து படம் காட்டி இருக்கிறார் எனும்பொழுது கமல் முஸ்லிம் மக்களுடன் நட்புறவை பேணவே விரும்புகிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
மிலாடி நபி கொண்டாடும் முஸ்லிம் சகோதரர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன்
இராச.புரட்சிமணி
சகோ மணி,
பதிலளிநீக்குகமல் யாருக்கும் எதிரி அல்ல. எதார்த்தமான மனித நேய கலைஞன்.மதவாதிகளே மனித குல விரோதிகள்.
நன்றி!!
வாங்க சகோ,
நீக்குஇதை நானும் வழிமொழிகிறேன் சகோ.இசுலாமியர்களுக்கு புரியவேண்டும் என்பதற்காகத்தான் இவாறு எழுதினேன்.
மற்றபடி விமர்சிப்பவர்களை எதிரியாக பார்ப்பது நமது குணம் அல்ல. தவறாக பார்ப்பவர்களுக்கு அது அல்லா தந்த அமுத வாக்கு.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
"கமல் யாருக்கும் எதிரி அல்ல"
பதிலளிநீக்குYES
yes u right...critics are not enemies
நீக்குநண்பர்,
பதிலளிநீக்குநான் தமிழ் படங்களில் ஆர்வமானவன் இல்லை.ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதம் தமிழகத்தில் கமலகாஷன் என்பவருக்கு எதிராக செயல்படும் போது அவருக்கு நாம் எமது உறுதியான ஆதரவு கொடுக்க வேண்டும்.எனக்கு தமிழ் சினிமாவில் ஆர்வம் உள்ள பல தமிழர்கள் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து அறிந்து கொண்டதின் படி கமலஹாசன் ஒரு மதவாத இஸ்லாமியர் மாதிரியே தான். இஸ்லாமிற்காக பொய் சொல்லுவார்(இஸ்லாம் அன்பானது).
அவருக்கே இந்த நிலையா!!!
சிந்திக்க வேண்டியது அவசியம் நண்பரே.
//நமது திராவிட அரசியல்வாதிகளையே நான் குறை கூறுவேன்//
உண்மையிலேயே சவூதி அரேபியா நியாய அடிப்படையில் பணம் கொடுப்பதானால் தமிழக தலிபான்களுக்கு பணம் கொடுக்க கூடாது திராவிட அரசியல்வாதிகளுக்கே அந்த பணத்தை கொடுக்க வேண்டும்.என்ன மாதிரி சேவை செய்துள்ளார்கள்.
வாங்க நண்பா,
நீக்குஇது கமலுக்கு மட்டும் நேரவில்லை பெரியாருக்கே நேர்ந்தது. முதலில் இந்து மதத்தில் உள்ள கோபத்தில் இசுலாமிற்கு மாறுங்கள் என்று கூறியவர் பிறகு உண்மையை உணர்ந்த அவர் மதவெறி முஸ்லிம்களை(தனி நாடு,என் மதத்தில் கைவைக்க கூடாது அது இறைவன் தந்தது என்பவை காரணமாக இருக்கலாம்) மிகவும் கேவலாமாக விமர்சித்துள்ளார்.
ஆனால் நமது திராவிட பகுத்தறிவாதிகள் அதை மறைத்துவிட்டனர்...அதிலிருந்து பாடம் கற்கவில்லை.காரணம் ஒட்டு அரசியல்.
நிச்சயம் கமலுக்கு என் ஆதரவு உண்டு. திரைப்படத்தில் தீவிரவாதத்தின் உண்மையை கூறியிருந்தால் பாராட்டுவேன் தவறாக பதிவு செய்தால் விமர்சிப்பேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா