வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

செவ்வாய், 8 ஜனவரி, 2013

வன்புணர்வுகளுக்கு உண்மையில் என்ன காரணம்? அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?


இந்த பதிவு சிலருக்கு முட்டாள்தனமாக இருக்கலாம். இருப்பினும் சொல்லவேண்டியது என் கடமை.

வன்புணர்வுகள் சமீபகாலமாக அதிகரிப்பதாக தெரிந்தாலும் அது உண்மையல்ல. ஊடகத்துறை வளர்ச்சி பெற்றுள்ளதால் நமக்கு அவ்வாறு தெரிகின்றது.

காலம் காலமாக வன்புணர்வுகள் என்பது நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இதற்க்கு என்ன காரணம் என்று பார்த்தால் மனிதர்கள் மிருகங்கள் என்ற ஒரு விடைதான் கிடைக்கும். மிருகத்திலிருந்து பரிணமித்த மனிதர்களுக்கு இன்னும் மிருகக்குணம் குறையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். (இல்லை இறைவன் நம்மை படைத்து சோதனை செய்கிறான்,இறுதி நாளில் தீர்ப்பு, தண்டனை உண்டு  என்று உளறினால் கற்பழிப்புகள் என்ன மாதிரி சோதனை என்று  விளக்குங்கள்)

உணவு,உறைவிடம் இவைகள் மனிதனுக்கு அடிப்படைத்  தேவைகள்.மனிதனுக்கு மட்டுமல்ல மிருகத்திற்கும் இவை அடிப்படைத்தேவைதான்.( மனிதனுக்கு இதனுடன் உடை என்பதும்  அவசியமாகிறது.) மனிதனுக்கும் மிருகத்திற்கும் மற்றும் ஒரு அடிப்படை தேவை உள்ளது. அது உடல் உறவு.

உணவுப்பசியையும் உடல்பசியையும் கட்டுப்படுத்துவது சாதாரண மனிதர்களுக்கு சாத்தியமில்லை. எனவே இவைகள் மனித வாழ்வில் அதி முக்கியத்துவம் பெறுகின்றன. மனிதன் தன்னுடைய வாழ்வை இது இரண்டிற்காகத்தான் வாழ்கிறான். 


ஒருவன்  உணவுக்காக என்ன செய்வான்?
உழைத்து சம்பாதித்து உணவு பெற்றுக்கொள்வான். இதைத்தான் நாம் இன்றைய சூழ்நிலையில் வரவேற்கிறோம்.
அல்லது
திருடுவான். இது ஒழுங்கீனமான செயல்.  இது தண்டனைக்குரிய குற்றமாகும்.
அல்லது
பிச்சை எடுப்பான். உழைக்காமல் பிச்சையெடுப்பது என்பதை நாம் வரவேற்க கூடாது.


உணவுப்பசிக்கு மனிதர்கள் என்ன செய்கிறார்களோ அதுபோலத்தான் உடல் பசிக்காகவும் செய்கிறார்கள்.

சிலர்  ஒழுக்கத்துடன் இருந்து காலாகாலத்தில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.

சிலர் ஒழுக்கத்துடன் இருக்க முடியாமல் சிறு வயதில் காதல் என்ற திருட்டில் ஈடுபடுகின்றனர். (இந்த திருட்டை நாம் அங்கீகரிக்க ஆரம்பித்துவிட்டோம்.)
அல்லது

சிலர்  தகாத உறவில் ஈடுபடுன்றனர். (கள்ளக்காதல்)இதை சட்டம் தண்டிக்கிறதா என தெரியவில்லை. இருப்பினும் இதை நாம் வரவேற்க கூடாது. (நாளைய சமுதாயம் இதையும் அங்கீகரிக்கும் என்பது வேறு விடயம்)


சிலர் வன்புணர்வில் ஈடுபடுன்றனர். பசிக்கு சிலர் வழிப்பறிகளில் ஈடுபடு- வதைப்போலத்தான் இதுவும். திருட்டும் வழிப்பறியும்  ஒன்றல்ல. இருப்பினும் ஒரு விதத்தில் இதற்க்கான அடிப்படை காரணம் ஒன்றுதான்.

பசிக்கு ஒரு சிறுவன் திருடினால் மன்னிப்பதைபோல இன்று காதல் திருட்டை சில நேரங்களில் சிலர் ஏற்கிறார்கள் சில நேரங்களில் சிலர் எதிர்க்கின்றனர்.

உடல்பசி வன்புணர்வுக்கு வழிவகுக்குமா என்றால் அதற்க்கு வாய்ப்புகள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
உடல்பசியை சிலர் சுய இன்பம் மூலம் போக்கி கொள்கின்றனர். சிலர் மஞ்சள் பத்திரிகை, நீலப்படம் என்பவை மூலம் தீர்த்து கொள்கின்றனர்.(சிலருக்கு இவை வடிகால், சிலருக்கு இவைகளால் பிரச்சனையும் உண்டு )


சிலருக்கு காதலிக்க பெண் கிடைக்கிறாள் அதனால் சிலர் தங்களது உடல் தேவைகளை அவர்கள் மூலம் தீர்த்து கொள்கின்றனர். இவ்வாறு சிலர் கடற்க்கரையிலும், பூங்காக்களிலும்,தோப்புகளிலும்  காம லீலைகளில் ஈடுபடும்பொழுது காதலிக்க பெண் கிடைக்காதவன் என்ன செய்வான்?
பெண்ணுக்கு வலை விர்ரிக்கிறான் ,பெண்ணை இடிக்கிறான், கையை பிடித்து இழுக்கிறான், கற்பழிக்க முயற்சி செய்கிறான். கற்பழிக்கிறான்.

இப்பொழுதெல்லாம் ஒரு பெண் ஒரு ஆண் கூட மட்டும்தான் சுற்றுகிறாள் என்று சொல்வதற்கில்லை சில பெண்கள் பல ஆண்களுடன் சுற்றுகின்றனர். (பசங்கள் அதுக்கு மேல )இதை பார்க்கும் ஒருவன் அவர்களிடம் மட்டும் போகிறாய் என்னிடம் வரமாட்டாயா என்று  கேட்கமாட்டான் என்று சொல்லமுடியுமா?
சில இளைஞர்கள் பாலியல் குற்றங்களில்  ஈடுபட  இவைகளும் காரணிகளாக இருக்கலாம் என்றுதான்  கூறுகிறேனே தவிர வன்புணர்வை நான் ஆதரிப்பதாக யாரும் எண்ணவேண்டாம்.


ஒரு மனிதனின் உணவு,உடை, உறைவிட தேவைகளை நிறைவேற்றுவது எப்படி அரசாங்கத்தின் கடமையோ அவ்வாறே ஒரு மனிதனின் உடலுறவு தேவைக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அனைவருக்கும் குறிப்பிட்ட காலத்தில் திருமணம் நடைபெறுமாறு அரசாங்கம் பார்த்துக்கொள வேண்டும்.

இதுவரை நாம் இளைஞர்கள் பார்வையில் வன்புணர்வை அலசினோம்.


உடல்தேவைக்கு மனைவி இருந்தாலும் சிலர் தகாத உறவுகளிலும்,வன்புணர்விலும்  ஈடுபடத்தான் செய்கின்றனர்.
இவர்களை கொலை கொள்ளை செய்பவர்களோடு ஒப்பிடலாம். அதாவது தேவைக்கு  அதிகமான பணம் இருந்தாலும் அதீத ஆசையால் ஊழல், கொள்ளைகளில் ஈடுபடுபவனும் உடல் தேவைக்கு மனைவி இருந்தும் தகாத உறவில், வன்புணர்வில் ஈடுபடுபவன் மனநிலையும் ஒன்றுதான்.இருப்பினும் கொடுமைகளின், குற்றங்களின் வீரியம் வேறு என்பதை மறுப்பதற்கில்லை.


இப்படிப்பட்டவர்கள் செய்யும்  குற்றங்களையும் சரி இளைஞர்கள் செய்யும் குற்றங்களையும் சரி தடுக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியும்.

மனிதத்தை பற்றிய கல்வியும் அதில் ஒழுக்கத்தின் அவசியத்தையும் மக்களுக்கு எடுத்து கூற வேண்டும்.பிறந்ததிலிருந்து இவற்றை குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும்.

ஒழுக்கம் தவறுவது குற்றம் என்பது ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இன்று  காதல் எனும் ஒழுங்கீனத்தை நாம் ஆதரிக்க ஆரம்பித்துவிட்டோம். தமிழ் நாட்டில் சில அரசியல் கட்சிகள் கடற்கரையில் காதலிப்பவர்களுக்கு (? :) )குடை கொடுத்தாலும் கொடுப்பார்கள் போல. (ஒரு ஆணும் பெண்ணும் ஊர் சுற்றாமல் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்யலாம் என்பதே என்னுடைய நிலைப்பாடு)

நாளை கள்ளக்காதலையும் சிலர் ஆதரிப்பார்கள்.

ஆண் ஆண்,பெண் பெண் உறவு ஒழுங்கீனத்தையும் பல நாடுகள் அங்கீகரிக்க  ஆரம்பித்துவிட்டன.
மனிதன் மிருகம் உறவை  கூட இந்த மானிட சமூகம் நாளை அங்கீகரிக்கும். இவற்றை எல்லாம் இப்பொழுதே தடுத்து நிறுத்துவதுதான் சரி. அதற்க்கான முயற்சியை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு சிறு வயது முதலே உண்மை,நேர்மை,ஒழுக்கம்,மனித நேயம் போன்றவற்றை பின்பற்றும்படி கலை,கல்வியை அமைக்க வேண்டும்.

என்னதான் ஒழுக்கம் என்று சொல்லி கொடுத்தாலும் ஒருவனால் உடல்  பசியினால் எத்தனை வருடங்கள் தான்  காலத்தை ஓட்ட முடியும்?

எனவே திருமண வயதை அரசாங்கம் குறைக்க வேண்டும்.தற்ப்பொழுதைய சூழ்நிலையில் 16 என்பது சரியான வயதாக இருக்கும் என எண்ணுகிறேன்.  இது பிற்போக்குத் தனமான பழமைவாத சிந்தனையாகத்தான் தோன்றும். ஆனால் இதனால்  இளைஞர்கள் செய்யும்  பாலியல் குற்றங்கள் குறையும்.(வன்புணர்ச்சி குற்றங்களில் ஈடுபட்டுள்ள சிறுவர்களில் பலரின் வயது 16 முதல் 18 வரை என்பதை நினைவில் வைக்க வேண்டும் .)  இன்று இது சாத்தியமா என்றால் அதுவும் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. (ஆனால் கிராமப்புறங்களில், இவை சாத்தியம்.)

இன்றைய வாழ்க்கைமுறை பொருளாதாரத்தை மையாமாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது. ஒருவன் தன்னிச்சையாக சம்பாதித்து சொத்து சேர்க்காமல் (அல்லது பாட்டன் சொத்து இல்லாமல்) கல்யாணம் என்பது சாத்தியமல்ல.
கூட்டு குடும்பமாக வாழும்பொழுது இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம். யாருக்கு இது சாத்தியமோ அவர்கள் இதை செயல்படுத்தலாம்.


பெண்ணின் ஆடை வன்புணர்வுக்கு காரணமா?: பெண்ணின் ஆடை ஈர்ப்பை   தூண்டலாமேயோழிய அது வன்புணர்வுக்கு காரணம் அல்ல.இருப்பினும் ஆபாசமான உடைகளை தவிர்த்தல் நல்லது.மூன்று வயது குழந்தை  முதல் அறுபது வயது கிழவி வரை கற்ப்பழிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு எந்த ஆடை கொடுப்பது?  காம கொடூரர்களுக்கு ஆடை ஒரு தடை அல்ல.

சினிமா காரணமா?
இப்பொழுதெல்லாம் தொலைக்காட்சியை அதிலும் பாடல் அலைவரிசைகளை பார்த்தால் அதில் பெரும்பாலான பாடல்கள் பாலியல் உணர்ச்சியை தூண்டுவதாகவே உள்ளன. மிட்நைட் மசாலா விருப்பம் உள்ளவர்கள் பார்க்கட்டும் ஏன் அந்த மாதிரி பாடல்களை பகல் பொழுதில் போட வேண்டும்,சிறுவர்கள் மனதில் நஞ்சை விதைக்க வேண்டும்?

ஆடை ,சினிமா இவற்றால் வன்புணர்வுகள் அதிகரிக்கின்றன என்பதை நான் ஏற்கவில்லை. அவனவனுக்கு ஒரு பெண் இருந்தால் அவன் ஏன் இந்த மாதிரி செயல்களில் ஈடுபட போகிறான்?. அப்படி இருந்தும் ஈடுபடுபவர்கள் மிருகங்கள். 

பெண்களுக்கு தனியாக பேருந்துகள், பள்ளிகள்?
இது தவறில்லை. ஆனால்  இவைகள் வன்புணர்வை குறைக்காது. தவறு செய்ய வேண்டும் என்று முடிவு செய்த பிறகு யாராலும்,எதனாலும் தடுக்க முடியாது.  பெண்-பெண் உறவும் அதிகரித்து வரும் வேளையில் இதுவும் சரியான தீர்வல்ல. 


உடனடித்தீர்வு:
காதலர்கள் பூங்காக்களிலும்,கடற்க்கரைகளிலும்  காமலீலைகளில் ஈடுபடுவதை தடை செய்யவேண்டும். 
பெண்கள் குறைவான ஆள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தனியாக செல்வதை தவிர்த்தல் நல்லது.
வீட்டிலும் தனியாக இருக்கும்பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. 
வன்புணர்வை ஒரு விபத்தாக பார்க்கும்படி சமுதாயத்தை மாற்றவேண்டும்.என்ன தண்டனை?
குற்றத்தின் கொடுமையையும், குற்றவாளியின்  வயதையும், சந்தர்ப்ப சூழ்நிலையையும் பொறுத்து  கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படவேண்டும்.


நிரந்தரத் தீர்வு ?
மனிதத்தை,ஒழுக்கத்தை  பற்றிய கல்வி.புறக் கட்டுப்பாட்டை விட அகக் கட்டுப்பாடே நீடித்த தீர்வு தரும்.
குறிப்பிட்ட காலத்தில் அனைவருக்கும் திருமணம்  நடைபெறுமாறு பார்த்துகொள்ளுதல்.


இதை செய்யாத பட்சத்தில் முதலில் காதல் திருமணங்கள் அதிகரிக்கும்,பிறகு கள்ளக் காதல் உறவுகள்-திருமணங்கள் அதிகரிக்கும்பிறகு ஆண் -ஆண், பெண்-பெண் திருமணங்கள் அதிகரிக்கும், பிறகு மனிதன்-மிருக உறவுகள் அதிகரிக்கும், பிறகு மனித இனம் சின்னப்பட்டு சீரழிந்து ஒருவனுக்கு ஒருத்தி என்ற புதிய  கருத்தை முன்மொழியும். 


2 கருத்துகள்:

 1. வணக்கம் சகோ,
  நல்ல விடயங்கள் சொல்லி இருக்கிறீர்கள்.
  1. பாலியல் வன்புணர்வு என்பது மனிதனில் உள்ள விலங்கு குணம். மிக சரி.விலங்குகளும் பாலியல் வன்புணர்வு செய்யும்.

  பாலியல் தேவை தீர்க்கப்படுவது இல்லை. இந்தியாவில் வயிற்றுப் பசிபோல்,பாலியல் பசி,பஞ்சம் அதிகம்.

  இந்த இயல்பை உணர்ந்து தீர்வும் சொல்லி இருக்கிறீர்கள்!

  2. ஒரு வயது வந்த ஆண்/பெண்களின் பாலியல் தேவையை முறையாக தீர்க்க அரசு ஆவண செய்ய வேண்டும்.

  குடும்பம் குழந்தை என வாழும் பெரும்பான்மையான மனிதர்கள் தவறு செய்ய அஞ்சுவது சரிதான்.
  அதுவும் அறிந்த ஊரில் த்வறு செய்ய மாட்ட்டார்கள்.

  திருமணம்,குடும்பம் என ஒரே இடத்தில், பொருளாதார பிரச்சினையின்றி வாழும் சூழல் இந்தியாவில் இல்லை.

  பிறந்த ஊர் ,குடும்பம் விட்டு தொலை தூரத்தில்,ஓய்வின்றி,குறைந்த கூலிக்கு உழைத்து வாழ்வதே இந்தியாவின் பெரும்பான்மை உழைக்கும் வர்க்கம்.

  ஒவ்வொருவருக்கும் பிறந்த ஊரில் 50 கி.மீ தூரத்திற்குள் வாழ வழிவகை சார் பொருளாதார தீர்வு கொடுத்தாலே திருமணம் செய்து அமைதியாக வாழ ஆரம்பித்து விடுவார்கள்.

  நகரங்களில் மக்கள் தொகை அதிகரிப்பு,குடுமபங்களை பிரிந்த மனிதர்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வு,மனிதர்களிடையே அன்பு இல்லாமை,குறைந்த கூலிக்கு அதிக நேர உழைப்பு போன்றவை மனிதனை மிருகமாக மாற்றி விடும் என்பதே டெல்லி துன்பியல் சம்பவம் உணர்த்தும் சம்பவம்.

  இந்த பிரச்சினையின் பொருளாதார,சமூக அடிப்படைகளை உணர்ந்து தீர்வு காண முயல்வதே நல்லது.
  **
  பெண்ணின் கண்ணியமான ஆடை என்பதை வரையறை மடவாதிகளுக்கு புத்த்கத்தில் சொன்னது மட்டுமே!!!.அவர்களின் கருத்தை புறந்தள்ளி இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதே அவசியம்!!!

  நன்றி சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ,
   நான் சொல்ல வந்த, சொல்லாத உட்கருத்தை ஆழமாக உள்வாங்கி அருமையாக கூறியுள்ளீர்கள்.
   வறுமையே பல குற்றங்களுக்கு காரணமாக உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதை தங்கள் கருத்திலும் கூறியுள்ளீர்கள். உணவுப்பசியையும்,உடல் பசியையும் போக்கவேண்டும் அதே நேரத்தில் ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம் தரவேண்டும். இதை செய்தால் உலகத்தில் குற்றங்களே நிகழாது.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...