வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 9 ஜனவரி, 2013

இந்த முஸ்லிம் வெறியனை ஏன் யாரும் கண்டிக்கவில்லை?


காவல்துறை அகற்றப்பட்டால் நாங்கள் 25 கோடி முஸ்லிம்கள் 15 நிமிடத்தில் 100 கோடி இந்துக்களை கொன்றுவிடுவோம் என்று கூறிய இந்த முஸ்லிம் வெறியனை பதிவுலகில்  யாரும் கண்டித்த மாதிரி  எனக்கு தெரியவில்லை. 

இவனது பேச்சை சில  பல முஸ்லிம்கள் வழிமொழியமாட்டார்கள் என எனக்கு தெரியும் . ஆனால் சில  முஸ்லிம்கள் இதை வழிமொழிகிறார்கள் எனபது வேதனையான செய்தி.

நமது திராவிட,பகுத்தறிவு,கம்யுனிஸ்டு,தலித் தலைவர்கள் இதை ரசித்தார்களா என தெரியவில்லை. அவன் கூறிய அந்த 100 கோடி இந்துக்களில் தான் இவர்களும் உள்ளனனர் என்பதை அறிய இன்னும் கொஞ்சம் காலம் தான் இவர்களுக்கு தேவைப்படப் போகிறது.

பார்பனீயத்தை விட பல மடங்கு அபாயகரமானது இந்த வாகாபிய இசுலாமியம் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளும்பொழுது நிலைமை கை மீறியிருக்கும். வாகாபியம் பிற மத மக்களுக்கு  மட்டுமல்ல பல பிரிவு முஸ்லிம்களுக்கும் கூட அச்சுறுத்தல் தான்.

100 கோடி இந்துக்களை கொல்ல வேண்டும்,  கடந்த ஆயிரம் ஆண்டுகளில் கொல்லப்பட்ட இந்துக்களை விட நிறைய இந்துக்களை நாம் கொல்வோம்  என்று கூறிய அக்பருதீன் ஒவைசி ஒன்னும் சாதாரண ஆள் அல்ல.
ஆந்திர சட்டமன்ற உறுப்பினர்,முஸ்லிம் மக்களின் பிரதிநிதி. அவரின் கட்சி மஜ்லிஸ் இ இத்தேஹதுல் முஸ்லிமீன். அவரை(னை) உடனடியாக கைது செய்யாமல் அரசு காலம் கடத்தியது. தமிழ் படத்தில் வருவது போல உடம்பு சரியில்லை என்று மருத்துவமனையில் படுத்துக்கொண்டான். இன்று இவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

இவன் இப்படி பேசியது திசம்பர் 24 அன்று. ஆனால் கைது செய்யப்படுவதோ இன்றுதான். சமுதாய வலைத்தளத்தில் கருத்து சொன்ன இரண்டு பெண்களை உடனடியாக கைது செய்ததது (அதில் ஒரு முஸ்லிம் பெண் ,ஒரு இந்துப்பெண்), கார்த்தி சிதம்பரம் அதிக சொத்து சேர்த்துள்ளார் என்று கூறியதற்கு நள்ளிரவில் ஒருவரை கைது செய்தது அரசு.  இந்த இந்தியாவில் என்ன நடக்கின்றது?

சில முஸ்லிம்கள் உடனடியாக கேட்பது குஜராஜ் கலவரம் மட்டும் சரியா என்று. உண்மையில் அது நியாயம் இல்லைதான்.  அது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல்.அதில் ஈடுபட்டவர்கள் கடுமையான தண்டனைக்குஉள்ளாக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதே நேரத்தில் இந்த மாதிரி பேச்சு, சிந்தனை சரியா என்று சிந்தியுங்கள்.

இசுலாம் மதத்திற்காகவும்,நபிக்காகவும் உயிரை கொடுக்கலாம் என்ற மூளைச்சலவையை தயவு செய்து ஏற்காதீர்கள்.

இன்று பல ஹதீசுகளை இடைச்செருகல் என்று  கூறுகிறார்கள். அதுபோல யூதர்களையும், சிலை வணங்கிகளையும் பற்றிய 
5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்;
கருத்துக்களும் இடைச்செருகலாக இருக்கலாம் அல்லவா?  அப்படியே இல்லை என்றாலும். இந்த கருத்துக்கள் அந்த காலத்திற்கு மட்டுமே அவர் கூறினார் இந்த காலத்திற்கு அல்ல என்று ஒதுக்கி தள்ளுதல் தான் நியாயம் இல்லையா?

மனித குலத்திற்கு விரோதமான எந்த கருத்தையும் எக்காலத்திற்கும் பொருந்தும்படி எந்த இறைதூதணும் கூறி இருக்க முடியாது. அப்படி கூறி இருந்தால் அவர் இறைதூதானே அல்ல என்பதை மனதில் வையுங்கள்.

நான் முகமது நபியை பற்றி படித்த வரை அவர் யோக வழியில் சென்றுள்ளார் என்பது நன்கு விளங்குகிறது. ஆனால் அவர்  கூறியதாக கூறப்படும் சில கருத்துக்களை என்னால் ஏற்க்க இயலவில்லை. அவைகள்  இடைச்செருகலாக இருக்க வாய்ப்புள்ளது. 

மனித குலத்திற்கு நன்மை பயக்க கூடிய கருத்துக்களை எடுத்துக்கொண்டு பிற கருத்துக்களை நீக்கினால் தான் மனிதகுலம் செழிக்கும். எனவே எல்லாவற்றையும் இறைவேதம் என்று ஏற்காமல் நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த பதிவு நல்ல முஸ்லிம்கள் மனதை எந்தவிதத்திலும் புண்படுத்தாது என்று நம்புகிறேன்.  அக்பருதீன் ஒவைசி பேச்சை கண்டித்த சில முஸ்லிம் சகோதரர்களை நான் பாராட்டுகிறேன். இதை கண்டிக்காத போலி மதச் சார்பின்மை வாதிகளுக்கு என் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

முகமது நபி உண்மையில் தந்த மார்க்கம் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். 

இதை எழுத உதவிய கட்டுரைகள்:
http://www.4tamilmedia.com/newses/india/10861-2013-01-03-08-25-22
http://indianfusion.aglasem.com/akbaruddin-owaisi-hate-speech-video/

பதிவிட்டவுடன் படித்தது:

விஷுவ ஹிந்து பரிஷத்(VHP) தலைவர் பிரவீன் தொகடியா.
ஹைதராபாத் சார்மினார் அருகே உள்ள பாக்கியலட்சுமி கோவில் விவகாரம்தொடர்பாக டிசம்பர் 7 நடந்த பொதுக்கூட்டத்தில் இவர் பேசியது:
"பாக்கியலட்சுமி கோவிலுக்குள் பூஜை செய்ய அனுமதிக்காவிட்டால், ஹைதராபாத்தை அய்யோத்தியாக மாற்ற வேண்டிய நிலை வரும். இங்குள்ள முஸ்லிம்களுக்கு மறக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்டுவோம் "

இப்படி கூறிய  இந்து மத வெறி பிடித்தவனுக்கும் கடும் கண்டனங்கள்.இவனையும் அரசு உடனடியாக கைது செய்யட்டும்.

47 கருத்துகள்:

 1. ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; " என்கிறது அல் குர்ஆன். மேலும் கூறுவதை கேளுங்கள்...

  " 7:56. (மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்; அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள் - நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது. "

  இது மூமின்களை நோக்கி கூறுகிறது..இங்கு மக்கள் அமைதியாக ,சமரசமாக வாழும் இடத்தில இப்படி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது போன்ற கருத்துக்களை வெளியிடுவோருக்கு இஸ்லாமிய ஷரியத் மரணதண்டனை விதிக்கிறது...சமுதாய அமைதியை இஸ்லாம் பேணுகிறது...அது முஸ்லிம் கட்சி எம் எல் எ இருந்தாலும் சரி ,பிரவீன் தொகாடியாகளாக இருந்தாலும் சரி...அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்..அதுதான் மனித சமூகத்திற்கு நல்லது ..!!!

  ஒவைசி கூறியதை முஸ்லிம் சமூகமே ஒத்துக்கொள்ளாது..இது பைத்தியக்காரனின் பிதற்றலாகவே காண்கிறோம்..இதை இஸ்லாம் அல்லாத அன்பர்கள் பெரிதாக நினைக்க தேவை இல்லை என்பதை இக்கணம் இங்கு பதிவு செய்கிறோம்...

  தொக்காடிகளை பற்றி நீங்கள் வருத்தம் தெரிவிக்க தேவை இல்லை..இதுவும் பைத்தியக்காரனின் பிதற்றல் என்பதை நாங்கள் அறிவோம்..கண்டனங்களை மட்டும் பதிவு செய்தாலே போதுமானது ..

  நன்றி !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புரட்சிமணி,

   //ஒவைசி கூறியதை முஸ்லிம் சமூகமே ஒத்துக்கொள்ளாது..இது பைத்தியக்காரனின் பிதற்றலாகவே காண்கிறோம்//

   இப்படி நினைத்து தான் யாரும் பெருசாக எடுத்துக்கொள்ளவில்லை, ஓட்டை வாயன் சொன்னதை யாரேனும் ஆதரித்து இருந்தால் கண்டனம் செய்திருக்கலாம்,அப்படி இருக்க வீணாக பேசி முக்கியத்தும் கொடுக்க வேண்டாமே என ஒதுக்கிவிட்டாச்சு.

   எம்மதமாக இருந்தாலும் வன்முறையை தூண்டும் வகையில் பேசவதையும், செயல்படுவதையும் யாரும் ஆதரிக்க கூடாது.

   நீக்கு
  2. வாங்க நாகூர் மீரான்,
   //ஒவைசி கூறியதை முஸ்லிம் சமூகமே ஒத்துக்கொள்ளாது..இது பைத்தியக்காரனின் பிதற்றலாகவே காண்கிறோம்..இதை இஸ்லாம் அல்லாத அன்பர்கள் பெரிதாக நினைக்க தேவை இல்லை என்பதை இக்கணம் இங்கு பதிவு செய்கிறோம்...//
   எனக்கு என் தமிழ் முஸ்லிம்களை பற்றி தெரியும். அவர்களுக்கு மதவெறி இல்லை. அவர்கள் மனித நேயத்துடன்தான் பிற மதத்தினருடன் பழகுகின்றனர்.(ஒரு சிலர் மார்க்கத்தை தவறாக புரிந்துள்ளனர் அவர்கள் தவறை நாம் திருத்த முயல்வோம்) ஆனால் நான் ஒரு ஆங்கில் தளத்தில் பார்த்த பின்னூட்டம் என்னை மிகவும் அதிர்ச்சுக்குள்ளாக்கியது. மேலும் இது பற்றி நமது மதச்சார்பின்மை வாதிகளின் மௌனம் தான் என்னை இந்த பதிவு எழுத தூண்டியது.

   முஸ்லிம்களைதவறான பாதையில் தனது அரசியல் லாபத்திற்காக இவன் திசை திருப்ப முயலுகிறான் என்பது நன்கு விளங்குகிறது.
   உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
  3. வாங்க வவ்வால்,
   அவன் சாதாரண ஆளாக இருந்திருந்தால் மௌனிப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால் அவன் ஒரு சட்டமன்ற உறுப்பினர். அவனுடைய கடந்த காலம் மேலும் அச்சத்தை வரவழைக்கும் வகையில் உள்ளது.
   //எம்மதமாக இருந்தாலும் வன்முறையை தூண்டும் வகையில் பேசவதையும், செயல்படுவதையும் யாரும் ஆதரிக்க கூடாது.//
   இதைத்தான் நாம் வரவேற்க்கிறோம்.மதம், ஜாதி,மொழி,இனம் ஆகியவற்றின் பெயரால் வன்முறை என்பதை துளியும் ஜீரணிக்க முடியவில்லை.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 2. //வாகாபியம் பிற மத மக்களுக்கு மட்டுமல்ல பல பிரிவு முஸ்லிம்களுக்கும் கூட அச்சுறுத்தல் தான்.// True!

  பதிலளிநீக்கு
 3. இந்து ஒருவன் இப்படி பேசி இருந்தால் பதிவுலகமே கொந்தளித்திருக்கும். இப்ப எல்லாரும் செவிட்டூமை ஆகிவிட்டார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ் நாளிதழ்கள் இதுபற்றி ஒழுங்கான செய்தி வெளியிட்டதா என தெரியவில்லை. இது கள்ள மௌனமா, அறியாமை மௌனமா என்ற சந்தேகம் எனக்கும் இருந்தது என்பதால் தான் இந்த விருப்பமில்லா பதிவு.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 4. நிச்சமாக அக்பருதீன் உவைஸியின் வகுப்புவாத வெறியை தூண்டும் பேச்சு கண்டிக்கத்தக்கது கண்டனத்துக்குரியது. இது பிரவீன் தொகாடியா, வருன் காந்தி, அசோக் சிங்கால் போன்றவர்களின் முஸ்லிம் மதவெறி பேச்சின் வகையினை சேர்ந்தது. இந்த மூவரையும் இவர்களைப் போன்றோர்களையும் கண்டிக்கும் சான்றோர்கள் யாவரும் இந்த உவைஸியையும் கண்டிக்க வேண்டும். இது மாதிரியான பேச்சுக்களுக்கு பாரபட்சமில்லாமல் தண்டிக்கும் நிலை வரவேண்டும்.

  இதுவரை சங்பரிவார்கள் தான் இப்படியான மதவெறி பேச்சுக்களை பேசி வந்துள்ளனர். அந்த புகழை உவைஸி தட்டிப் பறிக்க நினைப்பது இந்திய முஸ்லிம்களை படுகொலை செய்வதற்கு சமம். இந்தப் பேச்சின் மூலம் கலவரம் உருவாக்கப்பட்டால் , எங்கும் எப்போதும் பாதிப்புக்குள்ளாவது முஸ்லிம் சிறுபான்மைகளே.. ஒவ்வொரு கலவரத்திற்குப் பின்னும் முஸ்லிம் சமூகம் பத்து ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்கிறது. அவர்களது சொத்துக்கள் பறிக்கப்படுவதுடன் உயிர் மற்றும் உடைமைகள் இழந்து நடுத்தெருவில் நடைபிணமாக வாழ நேரிடுகிறது.

  குண்டு வெடிப்பின் பாதிப்பை விட"கலவர பதிப்பு" தான் ஒரு சமூகத்தை நிர்கதியாக்குகிறது. குண்டு வெடிப்பில் செத்தவர்களை விட , இந்தியாவில் மதகலவரத்தில் செத்தவர்களே அதிகம். அதனால் தான் சிலர் அதை திட்டமிட்டு நடத்துகிறார்கள்.

  இந்தியாவில் கலவரத்தில் சாவதற்கென்றே ஒரு இனம் உள்ளதென்றால் அது முஸ்லிம்கள் தான்.அதனால் இவர் பொறுப்புடன் அல்லவா பேசியிருக்க வேண்டும்.

  தொகாடியா போன்றோர்களின் மதவெறியூட்டும் பேச்சுக்களை பெரும்பான்மை இந்து சகோதரர்கள் எப்படி வெறுக்கிறார்களோ அப்படித்தான் இவரது பேச்சையும் முஸ்லிம் சிறுபான்மை மக்கள் வெறுக்கிறார்கள். இதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. வாங்க உதயம்,
   உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன்.
   //இந்தியாவில் கலவரத்தில் சாவதற்கென்றே ஒரு இனம் உள்ளதென்றால் அது முஸ்லிம்கள் தான்.அதனால் இவர் பொறுப்புடன் அல்லவா பேசியிருக்க வேண்டும்.//
   இந்தயாவில் கலவரத்தில் சீக்கியர்களும்,இந்துக்களும் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இந்த எண்ணத்தை கைவிடுங்கள் சகோ.

   உண்மையில் நடப்பது என்னவெனில் மக்களுக்குள் பகையை உண்டாக்கி அரசியல் கட்சிகள்தான் லாபம் பார்கின்றன என்பதுதான்.(இதுபற்றி விரிவான பதிவு விரைவில்)
   இதை நாம் புரிந்துகொண்டால் கொல்லப்படுவது மக்கள்,அழிக்கப்படுவது மனித இனம் என்ற உண்மை புரியும்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

   நீக்கு
  3. வாங்க aroosi75,
   உங்கள் கருத்தை தாரளமாக பதிவு செய்யுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் கூறுவது இவ்வுலகிற்கு கேட்கும்,புரியும்.
   தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

   நீக்கு
  4. //வாங்க உதயம்,
   உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன்.
   //இந்தியாவில் கலவரத்தில் சாவதற்கென்றே ஒரு இனம் உள்ளதென்றால் அது முஸ்லிம்கள் தான்.அதனால் இவர் பொறுப்புடன் அல்லவா பேசியிருக்க வேண்டும்.//
   இந்தயாவில் கலவரத்தில் சீக்கியர்களும்,இந்துக்களும் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இந்த எண்ணத்தை கைவிடுங்கள் சகோ.//

   என் சமூகத்தின் வலியையும் வேதனையும் என்னால் வேறு எப்படி வெளிப்படுத்த முடியும்.?

   நீக்கு
 5. பதில்கள்
  1. அது உங்கள் விருப்பம் பூந்தளிர். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

   நீக்கு
 6. சலாம் சகோ.புரட்சிமணி,

  //இந்த முஸ்லிம் வெறியனை ஏன் யாரும் கண்டிக்கவில்லை?//

  கண்டித்தால் மட்டும் போதுமா..?
  வெறுமனே கண்டித்து கண்டனத்துடன் கண்டுகொள்ளாமல் விட்டுவிட இவன் என்ன ஹிந்துத்துவா இயக்கத்திலா இருக்கிறான்..?

  இவன் தண்டிக்கப்பட வேண்டும்..!

  குறைந்தது ஒரு வருஷமாவது சிறையில் கம்பி எண்ண வேண்டும். அப்போதுதான் இவனுக்கு புத்தி வரும் என்பது மட்டும் அல்ல மேட்டர். இவனைப்போலவும் இவனைவிடவும் மோசமாக பேசிவிட்டு... பொதுக்கூட்ட அரசியல் மேடை, சட்டமன்றம், நாடாளுமன்றம், வருங்கால பிரதமர் கனவு... என்று ஜம்பமாக திரியும் மற்ற ஹிந்துத்துவா தலைவர்களை தலையில் வைத்து கூத்தாடும் கூட்டத்தின் கும்மாளம் கொட்டம் எல்லாம் சற்றாவது அடங்கும் என்று நம்பலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ~முஹம்மத் ஆஷிக் citizen of world~,
   நாம் போன பொங்கலில் விவாதித்தது இன்னும் என் நினைவில் உள்ளது. மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

   //வெறுமனே கண்டித்து கண்டனத்துடன் கண்டுகொள்ளாமல் விட்டுவிட இவன் என்ன ஹிந்துத்துவா இயக்கத்திலா இருக்கிறான்..?//
   இந்து,இசுலாம்,கிருத்துவம் ஆகிய எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் இந்த மாதிரி பேச்சுக்கு அவனுக்கு கடுமையாக தண்டனை தரப்படவேண்டும் சகோ.இனி சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும்.

   மோடி இந்தமாதிரி பேசியதாக தெரியவில்லை. ஆனால் பேசாமலே பல முஸ்லிம்கள் பலிக்கு மோடி காரணம் என்றால்
   நிச்சயம் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

   தங்கள் வருகைக்கும் கருத்த்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
  2. //மோடி இந்தமாதிரி பேசியதாக தெரியவில்லை.//-------------அன்றைய அஹ்மதாபாத் DCP சஞ்சீவ் பட் M.Tech., (Bombay IIT), IPS., அந்த குஜராத் கலவர நாட்களின் துவக்கத்தில், காவல் அதிகாரிகள்-முதல்வர் மீட்டிங்கில் மோடி அதிகாரிகளிடம் என்ன கட்டளை சொன்னாருன்னு அவர் சொல்றத கொஞ்சம் கேட்டுட்டு வந்தா நல்லா இருக்குமே சகோ..!?

   அப்போது குஜராத் தினசரிகள் மற்றும் பாஜக அரசியல்வாதிகளின் பேச்சுக்களை எல்லாம் படித்ததே இல்லையா..?

   எந்த கொலையும் நடக்காத பட்சத்திலேயே... இந்த ஹைதராபாத்காரனின் பேச்சுக்கே அவனை ஒரு வருஷம் உள்ளே போடலாம் என்றால்...

   ரெண்டாயிரம் அப்பாவிகளின் கொலைக்கு தங்கள் பேச்சு மூலம் காரணமானவர்களை எத்தனை வருஷம் உள்ளே போடலாம் என்று நீங்கள் சொல்லுங்கள் சகோ.

   அப்புறம்... "முஸ்லிம்களை இப்படி கொன்றோம்... இப்படி கொளுத்தினோம்.... இப்படி வெட்டினோம்... இப்படி அறுத்தோம்... இப்படி வன்புனர்ந்தோம்... எல்லாமே எங்க ஐயா மோடி சொல்லித்தான் செஞ்சோம்... " என்று பெருமையாக தெஹல்கா வீடியோவில் சொன்னவர்களுடன் சேர்த்து மோடியையும் அல்லவா தூக்கில் தொங்க விட சுப்ரீம் கோர்ட் உடனடி தீர்ப்பு வழங்க வேண்டும்..!? சரிதானே சகோ..?

   நீக்கு
  3. ~முஹம்மத் ஆஷிக் ,
   இப்பொழுதுதான் இந்த பின்னூட்டத்தை பார்த்தேன்.தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்.
   மோடி கலவரத்தில் ஈடுபட சொல்லி இருந்தால் நிச்சயம் அவருக்கும் தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை சகோ. ஏன் காங்கிரஸ் இதை செய்யவில்லை?. உச்ச நீதிமன்றத்தில் நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லையா? இதுபற்றி இனிமேல்தான் விரிவாக படிக்கப்போகிறேன்.

   நன்றி சகோ

   நீக்கு
 7. மதங்கள் கொடுமையானது, அவற்றிலும் கட்டமைக்கப்பட்ட மதங்கள் கொடுமை, அதிலும் வன்முறை வளர்க்கும் மதங்கள் மிகக் கொடுமை.. இந்திய அரசு வாக்குக்காக எல்லாவித மதக் கொடூரர்களையும் சகிக்கும், மக்களும் தான். அண்மையக் காலமாக அமெரிக்காவின் துணையொடு வகாபியம் படுவேகமாய் தீவிரவாதம் வளர்க்கின்றது. உலகெங்கும். கனடாவில் கூட மாற்று மதத்தவர் கையை வெட்டுங்கள், யூதரைக் கொல்லுங்கள் என்றெல்லாம் சில பள்ளிவாசல்கள் போதித்து வருகின்றன.. மதங்களில் உள்ள மிதவாதிகள் தீவிரவாதிகளை எதிர்க்காமல், களையாமல் மவுனம் காப்பதால், மறைமுகமாக தீவிரவாதங்களை வளர்க்கவே செய்கின்றனர். இஸ்லாம் மட்டுமல்ல இந்து, பவுத்தம், கிரிஸ்தவத்தில் கூட. என்ன இஸ்லாம் உலகளாவிய ரீதியில் தீவிரமாய் செயல்படுகின்றது.. விழிமின் மதங்களின் வளர்ச்சி உலக நாகரிகங்களின் அழிவாக அமையும். உவைசியின் பேச்சை நானும் கேட்டேன், ஆனால் பதிவுலகில் இதனை கொண்டு வந்த உங்களுக்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இக்பால் செல்வன்,
   //மதங்களில் உள்ள மிதவாதிகள் தீவிரவாதிகளை எதிர்க்காமல், களையாமல் மவுனம் காப்பதால், மறைமுகமாக தீவிரவாதங்களை வளர்க்கவே செய்கின்றனர்//

   நீங்கள் கூறும் கருத்துக்கள் யாவும் உண்மையே.
   எண்ணெய் பணம் வளர்க்கும் வெறுப்பு தீவிரவாதம் நெருப்பைவிட வேகமாக பரவுகிறது.
   நீங்கள் கூறுவதுபோல இங்கு இசுலாமை மட்டும் குறை சொல்வது நியாயம் இல்லை. இந்து மதவெறி இந்திய அளவில் பிரச்சனை.
   இசுலாமிய மத வெறி உலக அளவில் பிரச்சனை.இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்.
   இசுலாமியர்கள் பலர் இந்தியாவில் மகிழ்ச்சியாய் இருக்கும்பொழுது ஒரு சில இடங்களில் வன்முறை என்பது ஒட்டுமொத்த இசுலாமியர்கள் மனதையும் பாதிக்கின்றது. வங்காள தேசத்திலும்,சிங்களத்திலும் இசுலாமியர்கள் தாக்கப்படுகின்றனர். இது ஒரு புறம்.
   மறுபுறம் பாகிஸ்தானில்,சில இசுலாமிய நாடுகளில் இந்துக்களும்,கிருத்துவர்களும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். அதுமட்டுமல்ல பல இசுலாமிய நாடுகளில் ஷியா பிரிவு இசுலாமியர்களும் துன்பத்திற்கு ஆளாகின்றனர் இப்பொழுது சுபி வழியில் செல்பவர்களுக்கும் வாகாபியம் தலைவலி கொடுக்க ஆரம்பித்துள்ளது.எண்ணெய் பணம் தமிழ்நாட்டிலும் இறங்குகின்றது என்பது அதிர்ச்சியான செய்தி.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 8. அயோத்தி மசூதி இடிப்பு மற்றும் குஜராத் படுகொலைகள் என்ற இரண்டு காரணங்களை காட்டி இன்னும் பல தீவிரவாத பேச்சுக்களுக்கு நாம் தயாராக இருக்கவேண்டும். இந்த வெறியன் பேசியது அவர்களின் மத வழக்கத்தின் படி நியாயமானதே.ஒசாமா பின் லாடனையும் கசாபையும் ஹீரோவாக கொண்டாடும் ஒரு கூட்டத்தினரிடையே வேறு எதை எதிர்பார்க்கமுடியும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க காரிகன்,
   ஒருசில இசுலாமிய அமைப்புகள் ஆதரிக்கின்றன என்பதற்காக நாம் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் குறை கூற கூடாது. இந்து மதவெறியை நாம் ஆதரிக்காதது போல இசுலாமிய மதவெறியை ஆதரிக்காத முஸ்லிம்களும் இருக்கவே செய்கின்றனர். ஆனால் என்ன பிரச்சனை எனில் அவர்களால் மத வெறியர்களுக்கு எதிராக குரல் கொடுக்க இயலவில்லை.துரப்ஷாவுக்கு,செங்கொடிக்கு, மாலலாவுக்கு என்ன நேர்ந்தது என்பதை நாம் அறிவோம். ஆனால் அவர்கள் குரல் கொடுக்கும் நேரம் வந்துவிட்டதாகவே நான் நினைக்கின்றேன்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 9. இதை வெளியே கொண்டுவந்ததிற்கு பாராட்டுகள் நண்பர்.

  பதிலளிநீக்கு
 10. வாங்க வேகநரி,
  போலி மதச் சார்பின்மை வாதிகளுக்கு உங்கள் பாராட்டை சமர்ப்பிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. அஜ்மல் கசாப் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட போது பல மனித உரிமை வாதிகள் பொங்கி எழுந்தனர்.
  பல இஸ்லாமிய மத வெறியர்கள் அஜ்மல் குற்றமற்றவன். அவன் தாக்குலில் ஈடுபட்டதாக கூறியது ஒரு அரசியல் நாதம் என்று ஒரு இஸ்லாமிய எழுத்தாளர் கட்டுரை போட்டார். (கீற்று தளத்திலும் வெளிவந்தது)
  அதை நம்ம வாகாபி கூட்டம் தங்கள் தளங்களில் மறு பிரசுரம் செய்தன. ஒரு மதவெறி பெண் பதிவரும் அதை முக்கியமாக மறு பிரசுரம் செய்தார்.
  முக்கியமாக நேற்று சிறிலங்காவை சேர்ந்த முஸ்லிம் பணிப்பெண் ஒருவர் சவுதியில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவர் பெயர் ரிஸானா நபீக். அவர் முஸ்லிம் தான்.

  உலகில் எங்காவது முஸ்லீம்க்கு தண்டனை வழங்கப்பட்டாலும் ஒப்பாரி வைக்கும், அல்லது யூத சதி என்று சொல்லும் இஸ்லாமிய சமுதாயம் இந்த விடயத்தில் கள்ள மௌனம் சாதிக்கின்றது. ஏனென்றால் தண்டனை வழங்கியது சவூதி. வகாபிகளின் சொர்க்க புரி.
  ரிஸானா நபீக் கைது செய்யப்படுகையில் அவருக்கு 17வயது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை பதிவர் எழுதிய பதிவின் ஒரு பகுதியை பகிர்கின்றேன்.

  "சிறுமியின் தவறொன்றை, “தவறுதலாக நிகழ்த்தப்பட்டுவிட்ட மரணத்தை“ஐந்து ஆண்டுகள் கழித்தும் மன்னிக்க முடியாத மனிதர்களுக்கிடையிலேயே நீவாழ வேண்டியேற்பட்டிருக்கிறது. சகோதரி நீ அனுபவித்த மனவேதனைகளும்-துன்புறுத்தல்களும், சிறைகளில் வாழ்ந்த அந்த ஐந்து வருடங்களில் ஆயிரம்முறை மரணத்தை அனுபவித்துவிட்ட வலியை தந்திருக்கும். உன்னைகொன்றுவிட்டு சரியான தீர்ப்பு எழுதிய திருப்தியில் இருக்கிறவர்கள் ஒன்றும்சாதனையாளர்கள் கிடையாது. அதுபோல, அவர்கள் மனிதத்தை உணர்ந்தவர்களாக இருக்கவும் முடியாது. ஏனென்றால் அமெரிக்காகாரர்களுக்கு அதே சட்டம் வேறு தீர்பையும் எழுதுகிறதாம்."

  இந்த விடயம் தொடர்பாக கள்ள மௌனம் சாதிக்கும் வாகாபிய வெறியர்கள் என்ன பதில் சொல்ல போகின்றார்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏழை இலங்கை பெண் ரிசானா நபீக்கிக்கை ஏழு வருடங்கள் வரை சிறையில் வைத்திருந்துவிட்டு இப்போ இஸ்லாமிய சவூதி அரேபியா மரண தண்டனை கொடுத்ததிருக்கிறது. இலங்கை பாராளுமன்ற எம்பி சொன்ன உண்மையை கவனித்தீர்களா.
   "சவூதி மன்னரின் நிர்வாகம் ஒருபோதும் ஐரோப்பியருக்கோ அமெரிக்கருக்கோ மரணதண்டனை கொடுத்ததில்லை ஆசிய ஆபிரிக்கர்களுக்கு மட்டுமே."
   ஒரு பத்திரிக்கை எழுதியிருந்தது. அமரிக்காவின் ஆசியோடு நடத்தப்படும் இஸ்லாமிய சவூதி அரேபியா ரிசானா நபீக்கிக்கை கொலை செய்துவிட்டது.உண்மை. அமரிக்காவின் ஆசியோடு நடத்தப்படும் இஸ்லாமிய சவூதி அரேபியா ஆனா அமரிக்கா இஸ்லாமிய நாடா மாறப் போகிறதாம் என்று இங்கே பிரசாரம் செய்கிறார்கள். அஜ்மல் கசாப்புக்காகவும், குண்டுவைத்தவர்களுக்காகவும் பொங்கி எழுகிறார்கள்.

   நீக்கு
  2. வாங்க குமுதினி,
   //அஜ்மல் கசாப் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட போது பல மனித உரிமை வாதிகள் பொங்கி எழுந்தனர்.
   பல இஸ்லாமிய மத வெறியர்கள் அஜ்மல் குற்றமற்றவன். அவன் தாக்குலில் ஈடுபட்டதாக கூறியது ஒரு அரசியல் நாதம் என்று ஒரு இஸ்லாமிய எழுத்தாளர் கட்டுரை போட்டார். (கீற்று தளத்திலும் வெளிவந்தது)
   அதை நம்ம வாகாபி கூட்டம் தங்கள் தளங்களில் மறு பிரசுரம் செய்தன. ஒரு மதவெறி பெண் பதிவரும் அதை முக்கியமாக மறு பிரசுரம் செய்தார்.//
   இதன் சுட்டி தரமுடியுமா....
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
  3. http://suvanappiriyan.blogspot.com/2012/12/blog-post_17.html

   http://mydeartamilnadu.blogspot.com/2012/12/blog-post_18.html

   அந்த பெண் பதிவர் போட்ட பின்னூட்டம். கீழே

   "பகுத்தறிவுள்ள எல்லா மனிதரும் சொல்வதேதான் நானும் சொல்கிறேன். அஜ்மல் கசாப்தான் தீவிரவாதி என்பதற்கான வலுவான ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டால் கசாபுக்கு தூக்கு தண்டனை ரகசியமாய் அல்ல, மக்கள் முன்னிலையிலேயே செய்யப்பட வேண்டும் என மனுவே எழுதியிருப்பேன். ஆனால் எதற்கு இத்தனை நாடகம், அவசரம், ரகசியம், தடுமாற்றம்.... இதெல்லாம் Something is fishy என்றுதான் உரைக்கின்றன. என் நாடு, என் தாய்நாடு என்னும் பற்றும் ஆசையும் இன்னும் சிறிது நாளில் காணாமலே போய் விடுமோ என்றுள்ளது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன்."

   " என் நாடு, என் தாய்நாடு என்னும் பற்றும் ஆசையும் இன்னும் சிறிது நாளில் காணாமலே போய் விடுமோ " இதுவரை எதோ இருந்த மாதிரி பேசுறாங்க?

   "அவசரம்" இதில் எங்கே அவசரம் வந்தது??


   http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22309

   நீக்கு
 12. //ஏனென்றால் தண்டனை வழங்கியது சவூதி.//-----------அல்ல..! கொல்லப்பட்ட தங்கள் பிஞ்சு குழந்தையின் பெற்றோர்தான்..!

  இஸ்லாமிய தண்டனை சட்டத்தின் அடிப்படையை நீங்கள் முதற்கொண்டு முன்னர் மன்மோகன் சிங்... இன்று மகிந்தா ராஜ பக்ச... மற்றும் பல விளங்காத முஸ்லிம் & முஸ்லிம் அல்லாதவர்கள் வரை முக்கியமான ஒன்றை புரிந்து கொள்ள வில்லை.

  இந்த தண்டனையை தடுக்கும் ஆற்றல் அந்த பெற்றோருக்கு மட்டுமே உள்ளது. அவரிடம் எத்தனை பேர் சென்று மன்னிப்பு கேட்டார்கள் என்று தெரியவில்லை.

  முட்டாள்த்தனமாக மன்னர் அப்துல்லாவுக்கு கடிதம் எழுதுகிறார் ராஜா பக்சே. இதே முட்டாள்த்தனத்தைதான் முன்னர் மண் மோகன் சிங்க்கும் கிங் பகதிடம் ஒரு கேரளா கார் டிரைவருக்காக மனுச்செய்தார்.

  //“தவறுதலாக நிகழ்த்தப்பட்டுவிட்ட மரணத்தை“//-----இப்படி மட்டும் நீதி மன்றத்தில் அந்த பணிப்பெண் சார்பாக நிரூபிக்க பட்டு இருந்திருந்தால்.... எந்த தண்டனையும் எவரும் வழங்க சட்டத்தில் அனுமதி இலை. கொலை என்றுதான் நிரூபிக்க பட்டுள்ளது. அதற்கான தண்டனை வழங்க்கப்பட்டுள்ளது.

  //சிறுமி//-----------இதே 'மைனர்' வாதத்தை டெல்லி பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்த மைனருக்கு எவரேனும் சொல்லியதுண்டா..? வன்முறை காட்சி நிறைந்த ஹிந்தி படம் பார்த்த எப்பக்டில், ஒரு டீச்சரை வகுப்பறையிலேயே குத்திக்கொன்ற மாணவனுக்கு மரண தண்டனை தர வேண்டும் என்றுதான் பலர் சொன்னார்கள். ஆனால், சகோ.ரிஸானா வின் சவூதி பதிவுகளும் கடவுச்சீட்டு விபரங்களும் அப்படி இல்லை. மருத்துவ ரீதியில் நிரூபிக்க பாடவும் இல்லை. எனவே அவள் 'சிறுமி' என்ற வாதத்திற்கே இடமில்லை.

  //ஏனென்றால் அமெரிக்காகாரர்களுக்கு அதே சட்டம் வேறு தீர்பையும் எழுதுகிறதாம்//-----------அதுசரி, அமெரிக்காவில் எந்த பணிப்பெண் வந்து சவூதி வீட்டில் வேலை பார்த்தார்..?
  இப்படி பொய் அவதூறாக கூறாமல் ஆதாரத்தோடு கூறி இருந்தால் கூட இந்த தண்டனை ரத்தாகி இருந்திருக்கும்.

  இறுதியாக,

  அந்த சவூதி தம்பதியின் குழந்தை இழப்பின் வலி ஐந்து வருடம் ஆகியும் தீரவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அவ்வளவு பாசமாக கூட இருக்கலாம். அந்த பெற்றோர் ரிசானாவை மன்னித்தாலும்... மன்னிக்காவிட்டாலும்... அவர்கள் மீது குற்றம் இல்லை. மன்னார் அப்துல்லா முதற்கொண்டு எவரும் அவர்களை 'ஏன் மன்னிக்க வில்லை' என்று கேட்கவும் இஸ்லாத்தில் அதிகாரம் இல்லை.

  ஒருவேளை மன்னித்து இருந்தால்... மறு உலகில் தங்கள் அந்தஸ்தை இறைவனிடம் மிக அதிகமாக பெற்றுக்கொண்டு இருந்திருப்பார்கள். அந்த மிகப்பெரிய அறிய நல்ல வாய்ப்பை நழுவ விட்ட முட்டாள்கள் & கல் நெஞ்ச காரர்கள் அந்த அரபி பெற்றோர்..!

  ரிஸானாவின் தண்டனை விடயத்தில் சவூதி ஊடகங்களும் சமூகமும் 80முதல் 90 வீதமான அபிப்பிராயங்கள் அவளது விடுதலையையே ஆதரிக்கின்றன.

  சவூதியை மறந்து விடுங்கள். இலங்கையை மறந்து விடுங்கள். எதோ ஒரு நாட்டில் இதே வழக்கு நடப்பதாக நினையுங்கள். அந்நாட்டின் பணக்கார அப்பா அம்மா... அதேநாட்டின் ஏழை பணிப்பெண் மீது (தங்கள் பிஞ்சு மழலையை கொன்ற) கொலை புகார் தெரிவித்து... தக்க ஆதாரம், தகுந்த வக்கீல் வாதம் இவற்றுடன்... 'கொலைதான்' என்று கோர்ட்டில் நிரூபித்து வழக்கை வென்றும் விட்டார்கள். இது எந்த நாட்டிலும் நடக்கும். நம் நாட்டிலும் பல முறை நடந்துள்ளது. இங்கே ஒரே விஷயம்... பணிப்பெண் வேறுநாடு என்பது மட்டுமே. அதுதான் இந்த விஷயம் இவ்வளவு தூரம் பெரியதாக ஆகி உள்ளது. தண்டனையை அடைய செய்வதை விட அந்த தம்பதி அந்த பணிப்பெண்ணை மன்னித்து மறுமையில் இன்னும் உயர்ந்து இருக்கலாம்.

  இப்போது இவ்வளவு பேசும் எவராவது அந்த பெற்றோரிடம் மன்னிக்க சொல்லி ஒருமுறையாவது இந்த ஐந்து வருடத்தில் கெஞ்சி உள்ளார்களா..? ஒரே நிமிஷத்தில் தண்டனையை நிறுத்தி இருந்திருக்கலாமே..?

  ஆக, தீர்ப்பிலும் பிழை இல்லை. தண்டனையிலும் பிழை இல்லை. இஸ்லாமிய சட்டத்தில் பெரும்பாலானோரின் புரிதலில் தான் பிழை..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் சவூதி வந்த புதிதில்... 2005 இல் ஒரு செய்தி.

   மலையாளி டிரைவர் ஒருவர் தன் சவூதி முதலாளியை அடித்த போது அவருக்கு ஒரு கண் குருடாகிப்போய் விட்டது.

   ஆதாரங்கள் வாக்குமூலங்கள் சாட்சிகள் இரு தரப்பு வாதங்கள் அடிப்படையில் கோர்ட் தீர்ப்பு...

   'கண்ணுக்கு கண்' என்று அந்த மலையாளியின் ஒரு கண்ணை நொண்டி எடுக்க தீர்ப்பு சொல்லி விட்டார்கள்.

   அப்போது, உலக ஊடகமே சவூதியை 'காட்டுமிராண்டி தர்பார்' என்றது.

   தண்டனை நிறைவேற்றும் காலம் நெருங்கியது.

   கேரளாவின் மத்திய மந்திரி வயலார் ரவி வந்து மன்றாடி மறு அப்பீல் கேட்டார். ம்ஹூம். ஒன்னும் நடக்கவில்லை.

   நம்ம மன்மோகன் சிங், கிங் பஹதிடம் மன்னிப்பு வழங்குமாறு கருணை மனு போட்டு பேசினார்.

   இதில், 'நான் ஒன்னும் பண்ண முடியாது; எனக்கு மன்னிக்க அதிகாரம் இல்லை'ன்னுட்டார் மன்னர் பஹத்.

   இந்தியாவில் இருந்து பணிபுரிய சென்ற பலரும் தாங்கள் எல்லாம் சேர்ந்து, அவர் கேட்கும் அளவுக்கு இழப்பீடு வசூல் தயார் செய்து தந்து அவரை மன்னிக்க சொல்லி மன்றாடினார்கள்.

   நாளை கண் பிடுங்கும் ஆபரேஷன் (தண்டனை) மருத்துவ மனையில் நிறைவேற போகிறது. எல்லா நியூஸ் பேப்பரிலும் இதுதான் செய்தி.

   இன்று... அந்த முதலாளி திடீரென பிரஸ் மீட் கூப்பிட்டு... 'அவனை நான் மன்னித்து விட்டேன்; எந்த இழப்பீடும் வேண்டாம், எனக்கு மறுமையில் உயர்ந்த அந்தஸ்து போதும்' சொல்லிவிட...

   உடனே விசா...
   உடனே டிக்கட்...
   உடனே கேரளா வந்து இறங்கி விட்டார் டிரைவர்.

   இதுபோல நல்ல புத்திசாலி முதலாளிகளும் சவூதி அரேபியாவில் உள்ளனர்.

   இப்போது இவ்வளவு பேசும் எவராவது அந்த பெற்றோரிடம் மன்னிக்க சொல்லி ஒருமுறையாவது இந்த ஐந்து வருடத்தில் கெஞ்சி உள்ளார்களா..?

   'தன் குழந்தைக்காக எவ்வளவு இழப்பீடு தந்தால் அவர்கள் மன்னிப்பார்கள்' என்று ராஜபக்ஸே அல்லது முஸ்லிம் & முஸ்லிம் அல்லாத அமைப்புகள் கேட்டுள்ளார்களா..?

   இதில் ஏதாவது ஒன்று நடந்திருந்தால்...
   ஒரே நிமிஷத்தில் இந்த தண்டனையை நிறுத்தி இருந்திருக்கலாமே..?

   நீக்கு
  2. வாங்க ~முஹம்மத் ஆஷிக் citizen of world~,
   //////ஏனென்றால் அமெரிக்காகாரர்களுக்கு அதே சட்டம் வேறு தீர்பையும் எழுதுகிறதாம்//-----------அதுசரி, அமெரிக்காவில் எந்த பணிப்பெண் வந்து சவூதி வீட்டில் வேலை பார்த்தார்..?
   இப்படி பொய் அவதூறாக கூறாமல் ஆதாரத்தோடு கூறி இருந்தால் கூட இந்த தண்டனை ரத்தாகி இருந்திருக்கும். ////

   நீங்க சொல்வதை பார்த்தால் பணிப்பெண்களுக்கு மட்டும்தான் தண்டனையா....

   //ஆக, தீர்ப்பிலும் பிழை இல்லை. தண்டனையிலும் பிழை இல்லை. இஸ்லாமிய சட்டத்தில் பெரும்பாலானோரின் புரிதலில் தான் பிழை..!
   //
   காலத்திற்கு ஏற்றார்போல மாறாத இசுலாமிய சட்டத்திலும் பிழை உள்ளத்தாக நான் உணர்கிறேன் சகோ.


   //'அவனை நான் மன்னித்து விட்டேன்; எந்த இழப்பீடும் வேண்டாம்,//

   இவரது மன்னிப்பை நான் வரவேற்கிறேன். நல்ல செயல்.

   ////எனக்கு மறுமையில் உயர்ந்த அந்தஸ்து போதும்' ///

   //ஒருவேளை மன்னித்து இருந்தால்... மறு உலகில் தங்கள் அந்தஸ்தை இறைவனிடம் மிக அதிகமாக பெற்றுக்கொண்டு இருந்திருப்பார்கள். //


   அது என்ன உயர்ந்த அந்தஸ்து சகோ?. சுவனத்தில் கூட ஏற்றத் தாழ்வு காட்டுவாரா அல்லா?

   நீக்கு
  3. //சுவனத்தில் கூட ஏற்றத் தாழ்வு காட்டுவாரா அல்லா?//---------நிச்சயமாக காட்டத்தான் வேண்டும் சகோ.புரட்சி மணி. அது தான் சம நீதி.

   35% மார்க் வாங்கி பாஸ் பண்ணினாலும், 100% மார்க் வாங்கி பாஸ் பண்ணி சாதித்தாலும் ஒரே வெகுமதிதான் கிடைக்கும் என்றால் நமது மனம் அதனை சரிதான் என்று ஏற்குமா..?

   நீக்கு
  4. சகோ ,
   இதுபற்றி விரிவான ஆதாரப்பூர்வமான கட்டுரை ஏதேனும் கிடைக்குமா?
   சரியாக நினைப்பவற்றை ஏற்றுக்கொள்வேன்,தவறாக நினைப்பவற்றை விமர்சிப்பேன் :)

   நீக்கு
 13. இங்கே கமெண்ட் போட்ட எல்லாரும் அவசியம் இந்த இடுகையிலும் ஒரு கமெண்ட் போட்டு விடுங்கள்.....!


  மிக முக்கியமாக பதிவு போட்ட சகோ.புரட்சிமணியின் கமெண்டை இந்த தளத்தில் நான் எதிர்பார்க்கிறேன்.


  http://rsgurunathan.blogspot.in/2013/01/blog-post_9.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மிக முக்கியமாக பதிவு போட்ட சகோ.புரட்சிமணியின் கமெண்டை இந்த தளத்தில் நான் எதிர்பார்க்கிறேன்.//
   சகோ நான் என் பதிவிலிருந்து ஒரு சுட்டியே அந்த பதிவிற்கு கொடுத்துள்ளேனே...
   /பதிவிட்டவுடன் படித்தது: என்பதில் சுட்டி உள்ளது.
   ஒருவேளை இது சுட்டி மாதிரி தெரியலையோ.
   அந்த பதிவிலிருந்துதான் கடைசி பத்தியை தந்துள்ளேன். இதன் மூலம் அந்த பதிவை நான் வரவேற்கிறேன் என்பது தங்களுக்கு புரியும் என நினைக்கின்றேன்.
   இதற்க்கு மேல கமெண்ட் தேவையா?
   இருப்பினும் உங்கள் விருப்பத்திற்கு இணங்க ஒரு கமெண்ட் போட்டுவிடுகிறேன்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
  2. அச்சச்சோ... நான் படிக்கும் போது அது ஏற்கனவே இருந்தும் நான் கவனிக்க வில்லையா..? எனது கண்ணை டெஸ்ட் பண்ணனும் போல இருக்கே..!இப்போதுதான் பார்க்கிறேன். நன்றி சகோ..!

   நீக்கு
  3. உங்கள் கண்ணில் பிரச்சனை என்று சொல்வதற்கில்லை. அது ஒரு தலைப்பு போல உங்களுக்கு தோன்றி இருக்கலாம்.
   வருகைக்கு நன்றி சகோ

   நீக்கு
 14. யாரு...அந்த நக்கூர் நாகப்பன? அந்த ஆளூ ஓரு வெறியனா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ராவணா,
   அவர் யார் என்று எனக்கு தெரியுமே :)
   அவருக்கு வெறி இருக்கோ இல்லையோ...அவரை அன்புடையவராக மாற்றுவதே நமது கடமை ராவணா.

   நீக்கு
 15. சகோ புரட்சி மணி அவர்களுக்கு.

  தங்களது இந்த பதிவின் மூலம் நடந்த நிகழ்வை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.

  பேச மைக்கும், கேட்க ஒரு கூட்டமும் இருந்தால் எப்படியும் பேசலாம் என்ற அரசியல் வியாதிகளின்,மதவெறியர்களின் அடிச்சுவட்டில் தன்னையும் இனைத்துக் கொண்டுள்ளார் இந்த ஒவைசி.

  கதாநாயகன் சினிமாவில் வீர வசனம் பேசுவது போல்.... இவர் மேடையில் வீரமாக உளறியுள்ளார், அவரது கட்சிக்காரர்கள் வேண்டுமானால் கரகோஷம் எழுப்பி இருக்கலாம், ஆனால் நடுநிலையான இஸ்லாமியர்கள் இவரது பேச்சை கண்டிக்கவே செய்வர்.

  திரிசூலத்திற்கு புது விளக்கம் சொன்ன இந்து மத வெறியர் தொகாடியா, இந்து முன்னணியினர் போன்றவர்களின் பேச்சுக்கள், இதை விட மிக கடுமையாக மதவெறியை தூண்டி மதநல்லினக்கத்தை பாழ்படுத்தும் வகையில் உள்ளவை, ஆக விஷம் கக்கும் மதவெறி பேச்சுக்களுக்கு தண்டனை கிடைக்காதவரை இவர்களை ஒன்றும் செய்ய இயலாது.

  என்றும் அன்புடன்,
  அ. ஹாஜாமைதீன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அ. ஹாஜாமைதீன்,
   //ஆனால் நடுநிலையான இஸ்லாமியர்கள் இவரது பேச்சை கண்டிக்கவே செய்வர். //
   எனக்கு நிச்சயம் தெரியும் சகோ. இருப்பினும் அந்த நடுநிலையான இஸ்லாமியர்கள் எண்ணிக்கையை நாம் அதிகப்படுத்தவேண்டும்.
   அதற்காக நீங்களும் முயற்சி செய்யுங்கள் சகோ.

   //விஷம் கக்கும் மதவெறி பேச்சுக்களுக்கு தண்டனை கிடைக்காதவரை இவர்களை ஒன்றும் செய்ய இயலாது.//
   நிச்சயமாக. இப்படி பேசுபவர்களுக்கு கடுமையான தண்டனை தரவேண்டும். ஆனால் சகோ இரண்டு மதவெறியர்களுக்கும் இரண்டு பெரும் கட்சிகள் ஆதரவு அளிக்கும் என்பதே வேதனையான விடயம்.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   நீக்கு
 16. //வாகாபியம் பிற மத மக்களுக்கு மட்டுமல்ல பல பிரிவு முஸ்லிம்களுக்கும் கூட அச்சுறுத்தல் தான்.//

  பாக்கிஸ்தானில் வியாழக்கிழமை மட்டும் சுன்னி முஸ்லிம்கள் குண்டு வைத்து 100 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையாக இருக்கிற காரணத்தாலேயே பிற மத மக்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர்களும் பாதுகாப்பாக உள்ளனர். பாக்கிஸ்தானில் உள்ள அமைதி வாழ்வை விரும்பும் இஸ்லாமியர்கள் தங்கள் நாடும் இந்தியா மாதிரி ஜனநாயக நாடக மாற விரும்புவதை காணலாம்

  பதிலளிநீக்கு
 17. //இந்தியாவில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையாக இருக்கிற காரணத்தாலேயே பிற மத மக்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.//
  சரியாக சொன்னீர்கள் வேகநரி. இந்த சுன்னி-வாகபி பெரும்பான்மை முஸ்லிம்கள் ஷியாக்களை மட்டும் கொல்ல வில்லை,சுபிக்களையும் கொல்கின்றனர். இந்த காலத்திலும் ஒரு புத்தகத்தை நம்பி உயிர்களை கொல்பவர்களை என்னவென்று சொல்ல. நமது மார்க்கவாதிகளிடம் இதுபற்றி கேட்டால் புனித போரில் இறந்தால் அல்லா சுவனம் தருவாரு என்பார்கள்.இவர்களின் அறியாமை இருள் என்று அகலுமோ அன்றுதான் அமைதி பிறக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நமது மார்க்கவாதிகளிடம் இதுபற்றி கேட்டால் புனித போரில் இறந்தால் அல்லா சுவனம் தருவாரு என்பார்கள்.//

   ! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!

   நல்லா வெளங்கிரும்..! ஹூம்..!

   நீக்கு
  2. //////
   ~முஹம்மத் ஆஷிக் citizen of world~January 14, 2013 1:10 AM

   //நமது மார்க்கவாதிகளிடம் இதுபற்றி கேட்டால் புனித போரில் இறந்தால் அல்லா சுவனம் தருவாரு என்பார்கள்.//

   ! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!

   நல்லா வெளங்கிரும்..! ஹூம்..!//////

   வாங்க சகோ, அப்படி சொன்னது அல்லாதான் என்கிறீர்களா?

   நீக்கு
 18. ##காவல்துறை அகற்றப்பட்டால் நாங்கள் 25 கோடி முஸ்லிம்கள் 15 நிமிடத்தில் 100 கோடி இந்துக்களை கொன்றுவிடுவோம்## சொன்னது தவறு. எதர்க்காக அப்படி சொன்னான்? ok..
  முஸ்லீம் வெறியன் என்றால் மற்ற மதத்தினறை கொல்வது என்று பொருளா!!!அவ்வாறு பொருள் கொள்ளும் எனில் அவ்வெறியன் முஸ்லீமாக இருக்க முடியாது. இங்கு தலைப்பே சரியில்லை போன்று இருக்கிறது.. இதுவும் ஒருவகை வன்முறை தூண்டல் தான்.முஸ்லீம்கள் யார் என்று தெரியாதவர்களெல்லாம் இஸ்லாமிய சட்டங்களை பற்றியும் மார்க்கத்தை பற்றியும் விமர்சிக்க கிளம்ம்பி விட்டனர் போலும். அன்பானவர்களே இவ்வுரையை தொடர வேண்டாம். அறியாமை தவறான கருதுக்களை வெளிப்படுத்தும்..இவர்களின் அறியாமை கருதுக்கள் இன்னும் தொடரும். நீங்கள் தொடர வேண்டாம். ஒருவேளை நீங்கள் ஆவேசதில் கூறும் வார்த்தைகள், அவர்களுக்கு தவறாக சென்று பொய் முடியும். சகோதரர்களே இம்மார்க்கமும் சட்டமும் மற்றவர் விமர்சிப்பதற்க்கு அல்ல. உருவம் அல்லாத இறைவனை என்றும் வழி படவும் அவனது நெறியை பின்பற்றுவதுமாகும். நன்றி!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...