வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 2 ஜனவரி, 2013

இறைவனுக்கும் ஒளிக்கும் என்ன சம்பந்தம்?


எல்லா மதங்களிலும் ஒளியை இறைவனோடு தொடர்பு படுத்தியிருப்பார்கள். இந்து,கிருத்துவம், இசுலாம் என்று எதுவும் விதிவிலக்கல்ல.

இறைமறுப்பாளராக கருதப்படும் புத்தர்,ஓஷோ  போன்றவர்களும் ஒளியை பற்றி குறிப்பிடுகின்றனர். புத்தரின் இறுதி செய்தியே ஒளி பற்றித்தான். வள்ளலாரும்  'அருட்பெருஞ்சோதி' என்று ஒளியைப்பற்றித்தான் கூறுகிறார்.

இந்த ஒளி என்பவற்றை பலரும் புற ஒளியாக கருதுகின்றனர் அல்லது அறியாமை எனும் இருளை அகற்றும் அறிவாக  பார்க்கின்றனர் அல்லது இந்த இறைவன்கள்,மதங்கள்,தூதர்கள்,யோகிகள் -சித்தர்கள் உலகிற்கு வழிகாட்டியாக இருப்பார்கள் என்ற பொருளிலே ஒளியை பார்க்கின்றனர். 

ஆனால் இங்கே ஒளி என்பது அக ஒளியையே குறிக்கும்.  அதாவது புருவமத்தி வழியாகவோ தலை உச்சியின் வழியாகவோ காணும் ஒளியைத்தான் குறிக்கின்றது. இந்த ஒளி தரும் அறிவே உண்மையான அறிவு. அதுவே மெய்ஞானம். மெய்யில்  (உடலில்) இருந்து இந்த அறிவை பெறுவதால் இது மெய்ஞானம் எனப்படுகிறது.

கண்களால்தானே ஒளியை காண முடியும் அது எப்படி புருவமத்தியில் ஒளியைக்கான முடியும் என்று பலர் கேட்கலாம். ஆனால் தியானத்தின் மூலம் இது சாத்தியமே.

கண் தெரியாதவர்கள் புற ஒளியைக்கான முடியாது. அவர்களுக்கு ஒளியை பற்றி புரிய வைக்கவும் முடியாது. அதுபோலத்தான் தியானம் செய்யாமல் அக ஒளியைக்கானமுடியாது. பிறருக்கு இதை சொல்லி புரிய வைப்பதும் கடினமாகிறது. 

இந்த அகஒளியை காணும் நிலையைத்தான் நெற்றிக்கண் திறத்தல் என்று சிலர் கூறுகிறார்கள்.
ஏன் நெற்றியில் விபூதி இடுகிறார்கள், ஏன் நெற்றியில் சிலுவை இடுகின்றனர்,ஏன் தொழுகையில்  நெற்றியை   அடிக்கடி தரையில் தொடுகின்றனர்  என்று சிந்தித்து பார்த்தால் இதன் பின்னணியில் இருக்கும் உண்மை புரியும்.

நமது சித்தர்கள், ஏசு, முகமது நபி, ஓஷோ, வள்ளலார்,அரவிந்தர், அன்னை  பார்த்த ஒளியை நீங்களும் பார்க்கவேண்டுமா?
தியானம் செய்யுங்கள். 

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற்
சந்தியி லான சமாதியிற் கூடிடும்
அந்த மிலாத அறிவின் அரும்பொருள்
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே.  –  (திருமந்திரம் – 619)

8 கருத்துகள்:

  1. இறைவன் இருக்கிறானா இல்லையா என்பதில் இரு வித கருத்துள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சிலரின் நம்பிக்கை ஒளியின் மூலமாக இறைவனைக்காணலாம் என்று,பஞ்ச பூதங்கள் ஐம்புலன்கள் என்று ஒவ்வொன்றையும் சிந்தித்துப்பார்த்தால் மேன் பவரை விட சக்தி வாய்ந்த சுப்ரீம் பவர் ஒன்று இருக்கத்தான் செய்கிறது. சிலர் அதை கடவுள் என்று நம்புகிறார்கள் சிலர் இயற்கை என்று நம்புகிறார்கள். அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பூந்தளிர்,
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

      நீக்கு
  2. ஆழமான சிந்தனை
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரமணி ஐயா,
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி :)

      நீக்கு
  3. பதிவில் உள்ள ஒளியைப் பார்த்து கண்ணு ரொம்ப கூசுதே...........!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூக்கத்திலிருந்து விழித்து ஒளியை கண்டால் கொஞ்சம் கூசத்தானே செய்யும் :)

      தங்கள் வருகைக்கும் மிக்க நன்றி :)

      நீக்கு
  4. அந்த ஒளியினைக் கண்டவர்கள் அந்த ஒளியே தான் என உணர்வார்கள்.இதுவே தன்னை அறிதல் ஆகும். தன்னை அறிபவர்கள் தன் தலைவனை அறிகிறார்கள். இங்கு இறைவனே அவனாக இருப்பதில் அறிந்து உணர்ந்து பேரின்பத்தில் திளைக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...