வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

இந்து, இஸ்லாம், கிருத்துவம் இவற்றிற்குள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்ன தெரியுமா?


இன்றைய நிலையில் மிகப்பெரிய மதங்களாக கருத்தப்படுவது இந்து, இஸ்லாம், கிருத்துவம். இவற்றிற்குள் பல ஒற்றுமைகள் உள்ளது. இங்கே நான் சொல்லப்போவது ஒரே ஒரு ஒற்றுமை.

அந்த ஒற்றுமை சொல்வது மிகப்பெரிய மிக சூட்சுமமான உண்மை. இது சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

அது என்ன ஒற்றுமை?
அதுதான் அ உ ம். இது அனைத்து மதங்களிலும் முக்கிய இடம் பெறுகின்றது. இது இல்லையேல் உலகமும் இல்லை உயிரும் இல்லை
என்பது சிலரின் கருத்து. இது இந்து மதத்தில் ஓம் என்று அழைக்கப்படுகின்றது.
இது இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தில் ஆமின் என்றழைக்கபடுகின்றது.

இந்த மதத்தில் ஓம் என்பது எதற்கும் முதிலில் உபயோகப்படுத்தப் படுகின்றது. இதேபோல் கிருத்துவம் மற்றும் இஸ்லாமில் ஆமின் என்பது எதற்கும் முடிவில் உபயோகப்படுத்தபடுகின்றது.

இந்த ஓம் என்பதன் முக்கியத்துவம் இந்து மதத்தில்  உள்ள பலருக்கு தெரியும் என்று நினைக்கிறேன். ஆனால் ஆமின் என்பது எப்படி ஏன் வந்தது என்பது இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தினருக்கு தெரியமா எனபது சந்தேகமே.

கிருத்துவம் மற்றும் இஸ்லாமில் உள்ள மிகப்பெரிய குறை என்னவெனில் அவர்கள் பைபிள் மற்றும் குரானை  தாண்டி சிந்திப்பதே இல்லை. அப்படி சிந்தித்தாலும் அதை தன் மதத்திற்கு மட்டும் எப்படி சாதகமாக்குவதே என்று சிந்திக்கின்றனர். இதை எப்படி மனித சமுதயாத்திற்கு சாதகமாக்குவது என்று சிந்திப்பதே இல்லை.


அ உ ம் என்பது மிகப்பெரிய ரகசியம் பொருந்திய உண்மையான  ஒற்றுமை. இதை ஏன் அனைத்து மதங்களும் பயன் படுத்த வேண்டும்?
அனைத்தின் மூலம் இதுதான் எனபதை அவர்களின் முன்னோர்கள் உணர்ந்திருந்தனர் என்பதையே காட்டுகின்றது.

மூலமே ஒன்றாக இருக்கும் பொழுது
நான் வேறு நீ வேறு என்பது எப்படி சாத்தியம்?
என் கடவுள் வேறு உன் கடவுள் வேறு என்பது மூடத்தனம் அல்லவா?
அனைத்து மக்களும் ஒருவனின் படைப்பே எனும் பொழுது....
என் சமூகம் உனக்கு முன்பாக  செல்லும் எனபது மூடத்தனத்தின் உச்சம் அல்லவா?

சிந்தியுங்கள் மக்களே...சிந்தியுங்கள்.

இது சம்பந்தமான இரு  பதிவுகள் உங்கள் பார்வைக்கு 

எல்லா மொழியின் முதல் எழுத்தும் அ என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்து, இஸ்லாம் இரண்டுக்கும் உள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்ன தெரியுமா?

 


9 கருத்துகள்:

  1. அப்பா புரட்சிமணி உங்க ஆராய்ச்சியோ ஆராய்ச்சி போதும் எங்களை உட்ருங்கப்பா உங்களுக்கு புண்ணியமா போகட்டும். மதங்களுக்கிடையில் பெரிய புரட்சியே பண்ணிர்ரதுன்னு முடிவு பண்ணிட்டு இப்படி எழுதறீங்களோ என்னமோ. ஐந்து விரல்களும் சமமாகவா இருக்கிறது. வீட்டுக்கு வீடு வாசப்படி. அவரவர் மதங்கள் அவரவர்களுக்கு உயர்வானது. இதில் ஏன் தேவையில்லாத சர்ச்சை. மதங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். ஆனால் மனிதநேயம் மட்டும் என்றும் நிலைத்திருக்க வேண்டும். அதுவே இந்த உலகம் உய்ய வழி.

    பதிலளிநீக்கு
  2. அருமை சகோ,
    ஆமென் என்பது ஹீப்ரூ சொல் ,இதன் பொருள் "அப்படியே ஆகக் கடவது".இது யூத கிறித்தவ மதத்தவரால் பலவாறு பயன் படுத்தப் படுகிறது. இதன் இணை அரபி சொல்லாகிய 'ஆமீன்' இதுவும் அதே பொருளிலேயே பயன் படுத்தப் படுகிறது.
    http://en.wikipedia.org/wiki/Amen
    ஓம்,ஆமென்,ஆமீன் என்ற மூன்று சொற்களும் ஒரே மாதிரியாக் ஒலித்தாலும்.ஓம் என்னும் சொல்லின் பொருள் இதர இரு சொற்களின் பொருளில் இருந்து மாற்ரம் உடையதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
    **************
    /ஓம் பற்றி உபநிடதங்கள்/

    ஓம் என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது. ஓம் என்ற சொல்லில் அ, உ, ம என்ற மூன்று எழுத்துக்கள் பிணைந்திருக்கின்றன.இவைமூன்றும் மனிதனுடைய மூன்று உணர்வு நிலைகளைக் குறிப்பதாகவும், பிரம்மம் என்ற பரம்பொருளாகவே இருக்கும் நிலை இம்மூன்று நிலைகளையும் (அ-து, விழிப்பு நிலை, கனவு நிலை, தூக்கநிலை) தாண்டிய நான்காவது நிலை என்றும், அந்நிலை ஓம் என்ற உச்சரிப்பின் முடிவில் வரும் மவுனநிலை என்றும் மாண்டூக்கிய உபநிடதம் கூறுகின்றது.
    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D

    பொருள் வித்தியாசப் படுகிறதா என்பதை படிக்கும் நண்பர்களின் கருத்துக்கே விட்டு விடுகிறேன்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  3. //

    MANI said...

    அப்பா புரட்சிமணி உங்க ஆராய்ச்சியோ ஆராய்ச்சி போதும் எங்களை உட்ருங்கப்பா உங்களுக்கு புண்ணியமா போகட்டும். மதங்களுக்கிடையில் பெரிய புரட்சியே பண்ணிர்ரதுன்னு முடிவு பண்ணிட்டு இப்படி எழுதறீங்களோ என்னமோ. ஐந்து விரல்களும் சமமாகவா இருக்கிறது. வீட்டுக்கு வீடு வாசப்படி. அவரவர் மதங்கள் அவரவர்களுக்கு உயர்வானது. இதில் ஏன் தேவையில்லாத சர்ச்சை. மதங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். ஆனால் மனிதநேயம் மட்டும் என்றும் நிலைத்திருக்க வேண்டும். அதுவே இந்த உலகம் உய்ய வழி.//
    ஹா ஹா....வாங்க மணி சார், உங்க மனநிலை எனக்கு புரிகிறது. மனிதன் மதத்தை தாண்டி சிந்திக்க வேண்டும் எனபதே என் ஆசை. டாபிக்க மாத்திடுவோம் விடுங்க :)

    பதிலளிநீக்கு
  4. @சார்வாகன்
    சகோ,
    ஒரு பொருளுக்கு பல பொருட்கள் இருக்கலாம் அது தவறில்லை. தமிழில் ஒரு உணவைக்குறிக்கும் சொல் மலையாளத்தில் ஒரு கெட்ட வார்த்தை. அவர்கள் ஆமென் என்ற வார்த்தைக்கு என்ன பொருள் வேண்டுமானால் வைத்து கொள்ளட்டும். அது பொருளை தாண்டி ஒரு உண்மையை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதே என் கருத்து.
    உங்கள் மூச்சு ஏன் ஓம் என்று சொல்ல வேண்டும்...சிந்தியுங்கள் சகோ. விடை கிடைக்கும்.
    தங்களின் மேலதிக தகவலுக்கு மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  5. /அது பொருளை தாண்டி ஒரு உண்மையை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதே என் கருத்து./
    வணக்கம் சகோ,
    நீங்க அப்ப்டி வர்ரீங்களா!!!!!!!!!!
    அப்ப சரி!!!!!!!!!!!.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. //

    சார்வாகன் said...

    /அது பொருளை தாண்டி ஒரு உண்மையை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதே என் கருத்து./
    வணக்கம் சகோ,
    நீங்க அப்ப்டி வர்ரீங்களா!!!!!!!!!!
    அப்ப சரி!!!!!!!!!!!.
    நன்றி.//
    தங்களுடைய புரிதலுக்கும் வருகைக்கும் நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  7. கிறிஸ்து பிறப்பாலும் வளர்பாளும் முஸ்லிம்

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...