காவல்துறை அகற்றப்பட்டால் நாங்கள் 25 கோடி முஸ்லிம்கள் 15 நிமிடத்தில் 100 கோடி இந்துக்களை கொன்றுவிடுவோம் என்று கூறிய இந்த முஸ்லிம் வெறியனை பதிவுலகில் யாரும் கண்டித்த மாதிரி எனக்கு தெரியவில்லை.
இவனது பேச்சை சில பல முஸ்லிம்கள் வழிமொழியமாட்டார்கள் என எனக்கு தெரியும் . ஆனால் சில முஸ்லிம்கள் இதை வழிமொழிகிறார்கள் எனபது வேதனையான செய்தி.
நமது திராவிட,பகுத்தறிவு,கம்யுனிஸ்டு,தலித் தலைவர்கள் இதை ரசித்தார்களா என தெரியவில்லை. அவன் கூறிய அந்த 100 கோடி இந்துக்களில் தான் இவர்களும் உள்ளனனர் என்பதை அறிய இன்னும் கொஞ்சம் காலம் தான் இவர்களுக்கு தேவைப்படப் போகிறது.
பார்பனீயத்தை விட பல மடங்கு அபாயகரமானது இந்த வாகாபிய இசுலாமியம் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளும்பொழுது நிலைமை கை மீறியிருக்கும். வாகாபியம் பிற மத மக்களுக்கு மட்டுமல்ல பல பிரிவு முஸ்லிம்களுக்கும் கூட அச்சுறுத்தல் தான்.
100 கோடி இந்துக்களை கொல்ல வேண்டும், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் கொல்லப்பட்ட இந்துக்களை விட நிறைய இந்துக்களை நாம் கொல்வோம் என்று கூறிய அக்பருதீன் ஒவைசி ஒன்னும் சாதாரண ஆள் அல்ல.
ஆந்திர சட்டமன்ற உறுப்பினர்,முஸ்லிம் மக்களின் பிரதிநிதி. அவரின் கட்சி மஜ்லிஸ் இ இத்தேஹதுல் முஸ்லிமீன். அவரை(னை) உடனடியாக கைது செய்யாமல் அரசு காலம் கடத்தியது. தமிழ் படத்தில் வருவது போல உடம்பு சரியில்லை என்று மருத்துவமனையில் படுத்துக்கொண்டான். இன்று இவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
இவன் இப்படி பேசியது திசம்பர் 24 அன்று. ஆனால் கைது செய்யப்படுவதோ இன்றுதான். சமுதாய வலைத்தளத்தில் கருத்து சொன்ன இரண்டு பெண்களை உடனடியாக கைது செய்ததது (அதில் ஒரு முஸ்லிம் பெண் ,ஒரு இந்துப்பெண்), கார்த்தி சிதம்பரம் அதிக சொத்து சேர்த்துள்ளார் என்று கூறியதற்கு நள்ளிரவில் ஒருவரை கைது செய்தது அரசு. இந்த இந்தியாவில் என்ன நடக்கின்றது?
சில முஸ்லிம்கள் உடனடியாக கேட்பது குஜராஜ் கலவரம் மட்டும் சரியா என்று. உண்மையில் அது நியாயம் இல்லைதான். அது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல்.அதில் ஈடுபட்டவர்கள் கடுமையான தண்டனைக்குஉள்ளாக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதே நேரத்தில் இந்த மாதிரி பேச்சு, சிந்தனை சரியா என்று சிந்தியுங்கள்.
இசுலாம் மதத்திற்காகவும்,நபிக்காகவும் உயிரை கொடுக்கலாம் என்ற மூளைச்சலவையை தயவு செய்து ஏற்காதீர்கள்.
இன்று பல ஹதீசுகளை இடைச்செருகல் என்று கூறுகிறார்கள். அதுபோல யூதர்களையும், சிலை வணங்கிகளையும் பற்றிய
5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்;
கருத்துக்களும் இடைச்செருகலாக இருக்கலாம் அல்லவா? அப்படியே இல்லை என்றாலும். இந்த கருத்துக்கள் அந்த காலத்திற்கு மட்டுமே அவர் கூறினார் இந்த காலத்திற்கு அல்ல என்று ஒதுக்கி தள்ளுதல் தான் நியாயம் இல்லையா?
மனித குலத்திற்கு விரோதமான எந்த கருத்தையும் எக்காலத்திற்கும் பொருந்தும்படி எந்த இறைதூதணும் கூறி இருக்க முடியாது. அப்படி கூறி இருந்தால் அவர் இறைதூதானே அல்ல என்பதை மனதில் வையுங்கள்.
நான் முகமது நபியை பற்றி படித்த வரை அவர் யோக வழியில் சென்றுள்ளார் என்பது நன்கு விளங்குகிறது. ஆனால் அவர் கூறியதாக கூறப்படும் சில கருத்துக்களை என்னால் ஏற்க்க இயலவில்லை. அவைகள் இடைச்செருகலாக இருக்க வாய்ப்புள்ளது.
மனித குலத்திற்கு நன்மை பயக்க கூடிய கருத்துக்களை எடுத்துக்கொண்டு பிற கருத்துக்களை நீக்கினால் தான் மனிதகுலம் செழிக்கும். எனவே எல்லாவற்றையும் இறைவேதம் என்று ஏற்காமல் நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த பதிவு நல்ல முஸ்லிம்கள் மனதை எந்தவிதத்திலும் புண்படுத்தாது என்று நம்புகிறேன். அக்பருதீன் ஒவைசி பேச்சை கண்டித்த சில முஸ்லிம் சகோதரர்களை நான் பாராட்டுகிறேன். இதை கண்டிக்காத போலி மதச் சார்பின்மை வாதிகளுக்கு என் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
முகமது நபி உண்மையில் தந்த மார்க்கம் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.
இதை எழுத உதவிய கட்டுரைகள்:
http://www.4tamilmedia.com/newses/india/10861-2013-01-03-08-25-22
http://indianfusion.aglasem.com/akbaruddin-owaisi-hate-speech-video/
பதிவிட்டவுடன் படித்தது:
பதிவிட்டவுடன் படித்தது:
விஷுவ ஹிந்து பரிஷத்(VHP) தலைவர் பிரவீன் தொகடியா.
ஹைதராபாத் சார்மினார் அருகே உள்ள பாக்கியலட்சுமி கோவில் விவகாரம்தொடர்பாக டிசம்பர் 7 நடந்த பொதுக்கூட்டத்தில் இவர் பேசியது:
"பாக்கியலட்சுமி கோவிலுக்குள் பூஜை செய்ய அனுமதிக்காவிட்டால், ஹைதராபாத்தை அய்யோத்தியாக மாற்ற வேண்டிய நிலை வரும். இங்குள்ள முஸ்லிம்களுக்கு மறக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்டுவோம் "
இப்படி கூறிய இந்து மத வெறி பிடித்தவனுக்கும் கடும் கண்டனங்கள்.இவனையும் அரசு உடனடியாக கைது செய்யட்டும்.