வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

இந்து மதம், இந்திய நாடு என்ற பெயர் எப்படி வந்தது?


சிந்து நதியின் பெயரிலிருந்து  இந்து, இந்தியா என்ற பெயர் வரவில்லை மாறாக அது நாடு சார்ந்தது, மதம் சார்ந்தது என்பதை பற்றி பார்ப்போமா? 

 சிந்து கருத்து என்னவெனில் சிந்து நதிக்கு அப்பால் இருந்தவர்கள் சிந்து நதியோரம் வசித்தவர்களையும், அதை தாண்டிய நிலப்பரப்பையும் அவர்கள்  மொழியில் ஹிந்த் என்று சொல்ல ஆரம்பித்து, அது கிரக்கேர்கள் மூலம், ஐரோப்பிய   மொழிகளுக்கு சென்று ஆங்கிலேயர்களால் இந்தியா என்று அழைக்கப்பட்டது . 

ஆனால் இந்த கருத்து தவறானது  இந்து மதம், இந்திய நாடு என்பதற்கு மூலம் வேதத்தில் உள்ளது என்பது  மாற்று கருத்தாகும். 

 பழமையான ரிக் வேதத்திலேயே(கி. மு. 1700 முதல் 1100 வரை)  இந்து, இந்துஸ்தான் என்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்கான ஆதாரம் இதோ 

-------------------------------------------------------------------------------------------------------------
हिमालयं समारभ्य यावदिंदुसरोवरम् ।
तं देवनिर्मितं देशं हिंदुस्थानं प्रचक्ष्यते ।।
"The land created by the gods which stretched from the Himalayas to the Indu (i.e. Southern) ocean is called Hindusthan
 -----------------------------------------------------------------------------------------------------------

Himalyam Samarabhya
Yavadindusarovaram
Tam Deonirmitam Desham
Hindusthanam Prachakshate
Translation: "The country which starts from Himalayas and the borders of which reach till the Indian Ocean (Indu Sarovaram), has been created by devas and its name is Hindusthan.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இமயமலையில்  தொடங்கி  இந்திய பெருங்கடல்  வரை எல்லை  கொண்டிருக்கும்  நாட்டை  தேவர்கள் (இறைவன்கள் )  படைத்தனர் அதன் பெயர்  இந்துஸ்தான்  என்று ரிக் வேதம் கூறுகின்றது.



வேதங்களின் படியும் இந்திய அரசிலமைப்பின்படியும்  இந்து, இந்தியா என்ற பெயர் எப்படி, யாரை குறிக்கின்றது  என்று பார்த்தோம். மற்றொரு பதிவில் இந்து மதம் என்பது உலகெங்கிலும் எப்படி இருந்தது, இருக்கின்றது, எப்படி உலகில் பெரும்பாலான மக்கள் இந்துக்களே என்பதை பற்றி பார்ப்போம். 

என்றும் அன்புடனும் உண்மையுடனும் 
இராச.புரட்சிமணி

பிற்சேர்க்கை: 
ரிக் வேதத்தில் விக்கி கூறும் பிரகஸ்பதி சுலோகம் இல்லை. எனவே விக்கியில் தவறு நிகழ்துள்ளது.  பிரகஸ்பதி சுலோகம் எப்பொழுது இயற்றப்பட்டது என்பதற்கான விவரங்கள் தெரியவில்லை. 

சிந்து நதியின் பெயரால் தான் இந்து/இந்தியா என்ற பெயர் வந்திருந்தாலும் அது ஆங்கிலேயேர்கள் கூறுவது போல  எட்டாம் நூற்றாண்டில் முதன் முதலில் அராபியர்களால்  இது பயன்படுத்தப்படவில்லை. அதற்கு  .முன்பே  இந்து, இந்தியா என்ற பெயர் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது என பின்வரும் கட்டுரை கூறுகிறது. இந்து, இந்தியா என்ற சொல்லானது கிரேக்கர்களாலும் ஏன் அசோகர் காலத்தில் கூட இந்து, இந்தியா என்பதற்கு ஒப்பான சொல் புழக்கத்தில் இருந்துள்ளது.


சௌரட்டியர்களின் புனித நூலான பால்வி அவெஸ்தா என்ற நூலில் 'சப்த சிந்து' என்று சொல்லுக்கு பதிலாக 'ஹப்த ஹிந்து' என்று குறிபிடப்பட்டுள்ளது. இந்த அவெஸ்தா கி.மு. 1000 முதல் 5000 ஆண்டுகளில் இயற்றப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனவே ரிக் வேதத்தை போல ஹிந்து என்ற சொல்லும் பழமையானதே என்று இக்கட்டுரை கூறுகின்றது. 

வியாழன், 27 செப்டம்பர், 2012

மீண்டும் முதல்வராக அம்மா என்ன செய்ய வேண்டும்?


சில அரசியல் தந்திரங்களை பற்றி அம்மாவிற்கு தெரிவிக்கலாம் என்ற எண்ணத்தில் இப்பதிவை எழுதுகிறேன். 

அவர்களுக்கு தெரியாததா எனக்கு தெரியப்போகிறது? உண்மைதான். இருப்பினும் நான் மனதில் நினைப்பவைகளை    பதிவு செய்யலாம் என்ற எண்ணம்தான்.

௧. விஜயகாந்தை கழட்டி விடவேண்டும்....(நான் நினைத்தேன் இதை அம்மா செய்து விட்டார்கள்)

௨.தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க கூட்டணி,தி.மு.க கூட்டணி என்று கண்டிப்பாக  அமைய அனுமதிக்க கூடாது. மூன்றாவது அணி  அமைவதுதான் அம்மாவிற்கு நல்லது. 

௩.  விஜயகாந்தும், தி.மு.கவும் கூட்டணி வைக்க கண்டிப்பாக அனுமதிக்க கூடாது. 

௪. மூன்றாவது அணியாக, காங், தே.மு.தி.மு.க, ம.தி.மு.க, கம்யுனிஸ்ட், பா.ம. க,இ .ஜ .க  என அமைய கண்டிப்பாக அனுமதிக்க  கூடாது. மூன்றாவது அணியும், இரண்டவாது அணியும் சமபலத்துடன் இருக்க வேண்டும். அம்மா  பலத்தை விட குறைவாக. முடிந்தவரை சில கட்சிகளை கூட்டணிக்குள் இழுத்துக்கொள்ள வேண்டும். 

௫. தேர்தலுக்கு முன்பு கண்டிப்பாக மின்வெட்டை முற்றிலும் ஒழிக்க வேணும்.

௬. ஊழலற்ற அரசை தர வேண்டும்.

௭. பெரும்பாலான மக்கள் மனம் கோணாமல் ஆட்சி நடத்த வேண்டும்.

இவை நடந்தால் அம்மா மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.......
அவசரமாக வெளியே கிளம்புவதால் சில மணித்துளிகளில் எழுதிய  பதிவு இது.....உங்கள் ஆலோசனைகளையும் நீங்கள் தரலாம். 
மற்றொரு பதிவில் தி.மு.க எப்படி ஆட்சியை பிடிக்கலாம்  என்பது பற்றி பார்ப்போம்.

திங்கள், 24 செப்டம்பர், 2012

இசுலாமிய சவுதியில் (அரசியல்) தீண்டாமை இல்லையா?


சவுதியில் வசிக்கும் ஒரு சில வாகாபிய இசுலாமிய பதிவர்கள் இந்து மதத்தில் தீண்டாமை உண்டு அதனால் இசுலாமிற்கு மாற வேண்டும், தீண்டாமையை ஒழிக்க இசுலாம்  தான் அருமருந்து என்று பிரச்சாரம் செய்வதை படித்திருப்பீர்கள். 

சவுதியில் இருக்கும் தீண்டாமை பற்றி இவர்கள் இதுவரை வாய் திறந்திருப்பர்களா? ஏன் இசுலாமினால் அந்த தீண்டாமையை  ஒழிக்க முடியவில்லை?. தீண்டாமைக்கு காரணமே வாகாபிய  இசுலாம்தானே பின்பு எப்படி இசுலாம் தீண்டாமையை ஒழிக்கும்?.

இசுலாமில் ஷியா, சுன்னி என்று இரு பிரிவுகள்  (பல பிரிவுகள் இசுலாமில் உள்ளது என்பது வேறு விடயம்) உள்ளன. சவுதியில் பெரும்பான்மையானோர் சுன்னி பிரிவை  சேர்ந்தவர்கள். சுன்னி பிரிவை  சேர்ந்தவர்கள் கையில் தான் ஆட்சி அதிகாரம்  உள்ளது.வாகாபிய இசுலாமை சவூதி அரசு ஊக்குவிக்கிறது. வாகபிய இசுலாம் என்பது சுன்னி பிரிவின்  அங்கம் . இந்த வாகபிய இசுலாமை வளர்க்கும் சுன்னி  பிரிவினர்/ அரசாங்கம்   பத்து சதவீதம் முதல்  பதினைந்து சதவீதம்  உள்ள ஷியா சிறுபான்மையினருக்கு எந்த வித உரிமையும் தருவதில்லை. 

அது பொருளாதார ரீதியாக ஆகட்டும், அரசியல் ரீதியாக  ஆகட்டும், அரசாங்க வேலையாக ஆகட்டும் ஷியா பிரிவு மக்களை இவர்கள் கிட்டயே நெருங்க விடுவதில்லை.

அதுமட்டுமல்ல மத ரீதியாகவும் ஷியா பிரிவு மக்களுக்கு இவர்கள் தொந்தரவு செய்கிறார்கள்.

ஷியா பிரிவு மக்கள்  மசூதி கட்ட  கூட இவர்கள்  அனுமதிப்பதில்லை. அதே நேரத்தில் ஷியா பிரிவு மக்கள் வசிக்கும் இடங்களில் அரசு சுன்னி மசூதி கட்டுகிறது.

இந்த ஷியா பிரிவு மக்கள் வசிக்கும் பகுதியில் தான்   சவுதியின் பெரும்பான்மையான எண்ணெய் வளம் உள்ளது. இவர்களுக்கு எண்ணெய் முக்கியம் ஆனால் இந்த ஷியா பிரிவு மக்கள் முக்கியம் அல்ல.

முகமது நபி அவர்கள் பிறந்த நாட்டிலேயே இசுலாமியர்க்கு ஏன்  இந்த அவல நிலை  என்றால் நீங்கள் தான் சிந்தித்து பார்க்க வேண்டும். ஷியா சுன்னி இரண்டுமே இசுலாமின் பிரிவுகள் தான். மொத்தத்தில் இருவரும் கும்பிடுவது என்னவோ அல்லாவைத்தான் பிறகு ஏன் ஷியா பிரிவினர் மீது இந்த தீண்டாமை?

வாகாபிய இசுலாமியர்கள் இப்பொழுது தமிழகத்திலும் தங்கள் கொள்கைகளை பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள் .
இவர்கள் தர்க்காவிற்கு  செல்வதையும்,சுபி ஞானிகள் வழிகளையும் குறை கூறுகின்றனர். ஏன் என்று  கேட்டால் அவர்கள் இணை வைக்கிறார்கள் எனவே அல்லா அவர்களுக்கு நரகம் தான் தருவார்  என்பர். இது தூய இசுலாம் அல்ல,நாங்கள் இசுலாமை சீர்திருத்தம் செய்கிறோம்    என்று புலம்புவர். 

வாகபிய இசுலாமிய பதிவர்களை நான் கேட்கிறேன் (ஒரு இசுலாமியர் வேறுமாதிரி கேட்டதுதான்)  வாகபிய இசுலாம் பதினெட்டாம் நூற்றாண்டில் தான் வந்தது அதற்க்கு முன்பு இருந்த அனைத்து இசுலாமியர்களுக்கும் நீங்கள் சொல்வதை பார்த்தல் நரகம் தான் அல்லா அளிப்பாரா? சுவனம் கிடைக்கும் என்று எண்ணி கிட்டத்தட்ட பன்னிரண்டு நூற்றாண்டுகள் வாழ்ந்த இசுலாமியர்கள்  கதி அவ்வளவுதானா? 

ஏன் இனில்  சூஃபி   பிரிவாக  இருந்தாலும் சரி சுன்னி பிரிவாக இருந்தாலும் சரி இரண்டு பிரிவினருமே இணை வைத்துத்தான் வழிபட்டனர். புரியும்படி சொல்லவேணும் என்றால் தர்க்காவிற்கு செல்வதை இருவருமே கடைபிடித்தவர்கள் தான். 

வகாபிய பதிவர்கள்   நல்லவர் என்று போற்றும் ஒளரங்கசீப்பும் சுன்னி பிரிவை சேர்ந்தவர் தான். ஆனால் அவரும் தர்க்காவிற்கு சென்றவர் தான். தர்க்காவிற்கு பண உதவி செய்தவர்தான். எனவே அவருக்கும் சுவனத்தில் இடம் இல்லையோ? (பின்னே பிறர் அல்லாவுக்கு இணை வைக்க உதவி இருக்கிறார் அல்லவா?)  பாவம் நமது சகோக்கள். ஒருவேளை இவர்களுக்குத்தான் சுவனத்தில் முதல் இடம் கிடைக்கப்போகின்றதோ என்னவோ.  

தனிமனிதர்கள் தவறு செய்தால் அரசாங்கத்திடம் செல்லலாம் இசுலாமிய அரசாங்கமே தவறு செய்தால் ஷியா மக்கள் எங்கு போவார்கள் என்ன செய்வார்கள்?

நமது தமிழ் முஸ்லிம்களும்  சுன்னி பிரிவை  சேர்ந்தவர்கள் தான் ஆனால் என்ன சுபி ஞானிகளின்  தாக்கம்  இவர்கள் மத்தியில் அதிகம் உண்டு. இதுதான் அவர்கள் நல்ல தன்மைக்கு காரணம். அதுமட்டுமல்ல இந்திய/இந்து   கலாச்சாரத்தில் இருக்கும் மத சகிப்புத்தன்மை அவர்கள் மனதிலும் உள்ளது. 

தமிழர்களுக்கு ஏன் இந்தியாவிற்கே பெருமை தேடி தந்த  நமது  ரகுமான்  சூஃபி   ஞானிகளின் பாதையில் செல்பவர். சேர்ந்தவர். (அவர் ஒருமுறை சொன்னார் என் முன்னே வெறுப்பு அன்பு என்று இரு வழிகள் இருந்தன நான் அன்பு வழியைத் தேர்ந்தெடுத்தேன் என்று)  அப்படிப்பட்ட நல்ல இசுலாமியர்கள்   மனதில் வாகபிய இசுலாமை(அதாவது வெறுப்பை)  பரப்புவதை  இப்பொழுது  சவுதியில் இருக்கும் நமது சகோதரர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.(சில பலருக்கு ஏற்க்கனவே பரப்பி விட்டார்கள் என்பது வேதனையான செய்தி)  இதற்கு எதிராக பிற  சகோதரர்கள் ஏதும் செய்வதாக தெரியவில்லை. ஏதோ இசுலாம் வளர்ந்தால் போதும் என்று நினைக்கின்றார்களா அல்லது வாகபிய இசுலாமியர்களை  கண்டு பயப்படுகிறார்களா என்று தெரியவில்லை. 


  சூஃபி  இசுலாமின் ஆன்மீக மார்க்கம் என்று  சொல்லலாம். மதங்களை சாடிய ஓஷோ  தன்னை    சூஃபியாகத்தான் பார்த்தார்.  சூஃபி ஞானிகள்   மதத்திற்கு அப்பாற் பட்டவர்கள் என்பது அவரின் கருத்து.  பல இசுலாமியர்களும் சில பல இந்துக்களும் செல்லும் நாகூர் தர்க்கா, அஜ்மீர் தர்க்கா போன்றவை  சூஃபி ஞானிகளின் சமாதிதான். இந்த தர்க்காக்களை இடிக்க வேண்டும் என்பது வாகபியத்தின் ஒரு கொள்கை.  வாகபிய இசுலாம் என்பது அடிப்படை வாதம்.  இது மனிதத்திற்கும் அவர்களின் உணர்வுகளுக்கும்  முக்கியத்துவம் தருவதில்லை. ஆன்மீகம் என்பது அதில் இல்லை. 

இந்துக்கள்  எல்லா  மதங்களும் இறைவனை அடையும் வழிகள் என்று ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் கிருத்துவமும் இசுலாமியமும் இது ஒன்றே இறைவனை அடையும் வழி என்று வம்பு செய்கிறது. வாகாபியமோ இது ஒன்றே அல்லாவை அடையும் வழி என்று இன்றைய இசுலாமிலும் பல குறைகளை சொல்லி பிடிவாதம் பிடிக்கின்றது அனைவரையும் மதமாற்றம் செய்ய துடிக்கின்றது. 

இந்து மதத்தில் இந்தியாவில் அது அப்படி இருந்தது இது எப்படி இருந்தது  என்று  எழுதி மதமாற்றம் செய்ய முயலுபவர்கள் இங்கே ஏற்ப்பட்டுள்ள மாற்றத்தை கண்டுகொள்வதே  இல்லை.  இங்கே அந்த உரிமையை தந்தது தன்னை இந்து நாடு என்று கூறிக்கொள்ளாத இந்தியா. தன்னை இசுலாமிய நாடு என்று கூறிக்கொள்ளும் சவூதி இசுலாமியர்கலையே இரண்டாம் தர குடிமகன்களாக நடுத்துகின்றது. இதுதான் நம் தாய் திருநாடான மதசார்பற்ற இந்தியாவிற்கும்  மதசார்புள்ள சவுதிக்கும் உள்ள  வித்தியாசம்.

சவுதியில் ஷியா மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள அரசியல் தீண்டாமை,தமிழகத்தில் தர்க்கா வழிபாடு மற்றும் சூஃபி வழிமுறைகளின் மீது ஆரம்பித்துள்ள  எதிர்ப்பு  ஆகியவை  நாளை உலகம் முழுக்க பரவும் அபாயம் உண்டு. இதற்கு நமது வாகபிய இசுலாம் சகோதரர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்ன செய்யப்போகிறார்கள்? தவறான கேள்வியோ?அவர்களுக்கும் மனசாட்சி இருக்கும் என்பதால் தான் கேட்கிறேன் ஏன் எனில் அவர்களும் தமிழர்கள் தானே.  ஷியா,சூஃபி  பிரிவு மக்கள் தான் தங்களது சுதந்திரத்தை காக்க  முயல வேண்டும்.பல  இந்துக்கள் இந்துக்களாக இருக்கும் வரை இந்தியாவில் ஷியா,சூஃபி  பிரிவு மக்க்ளுக்கானாலும் சரி எந்த மததிற்க்கானாலும் சரி மதத்தை  தாண்டி  மனித நேய அடிப்படையில் ஆதரவாக நிற்பர் என்பதை  அனைவரும் அறிவர். ஆனால் அது அவர்கள் இந்துக்களாக இருக்கும்வரைதான். 

என்னதான் இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை என்றாலும் எந்த  மதத்தினர்களானாலும்   சரி அவர்களுக்கு  சகல  உரிமைகளும் உண்டு. இந்துக்களை விட ஒரு படி மேல் என்று கூட சொல்லலாம். (ஒரு சிலரால் ஓரிரு அசம்பாவிதங்கள் நடந்ததை மறுப்பதற்கில்லை)  பிற மதத்தினருக்கு எந்த பிரச்சனை என்றாலும் முதலில் குரல் கொடுப்பவன் ஒரு இந்துவாக இருப்பான். மோடியின் மீது வழக்கு தொடர்ந்தது ஒரு இந்துப் பெண்.  இதற்கு காரணம் பலரும்  தங்களை இந்துவாக நினைப்பதில்லை மாறாக மனிதர்களாகத்தான் பார்க்கின்றனர். ஆனால் சில பல இசுலாமியர்கள்  தங்களை மனிதன் என்று கூறிக்கொள்வதை  விட முஸ்லிம் என்று கூறிக்கொள்வதில் தான் பெருமைப்படுகின்றனர்.  இசுலாமிலும் தங்களை மனிதர்களாக பார்ப்பவர் இல்லை என்று சொல்லவில்லை மாறாக அவர்களின் குரல்  சரியாக கேட்கவில்லை என்றே சொல்கிறேன். 

இந்தியாவில் இந்து மதத்தில் ஜாதி ஒரு பெரிய  பிரச்சனைதான் மறுப்பதற்கில்லை. ஆயினும்  பல இந்து இந்திய தலைவர்கள் ஜாதியை எதிர்த்தனர். இன்று தீண்டாமையின் வீச்சு  பன்மடங்கு குறைந்துள்ளது.அரசியல் ரீதியாக எந்த ஒரு தீண்டாமையும் பாராட்டப்படுவதில்லை. பல தனி மனிதர்களும் ஜாதி பார்க்காமல் தான் இன்று பழுகுகின்றனர்.  இந்து மதம் இவ்வாறு தன்னை சீர் திருத்திக் கொள்கிறது அதற்கு வழி வகுக்கின்றது. ஆனால் இசுலாமில் சீர்திருத்தம் என்பது 1400 ஆண்டுகள் பின்னோக்கி செல்வதாகத்தான் உள்ளதே தவிர காலத்திற்கு ஏற்றார் போல் அல்ல.  அரசியல் ரீதியாகவே சவூதி இசுலாமில் இன்று தீண்டாமை தலை  விரித்தாடுகின்றது . 

அமெரிக்காவில்  மசூதிகள் நிறைய வந்துள்ளன அதனால் இசுலாம் வளர்கிறது என்று பெருமை பட்டுக்கொள்ளும் பதிவர்கள் சொந்த நாட்டிலேயே ஷியா பிரிவு மக்களுக்கு சவூதி இசுலாமிய அரசு மசூதி கட்டிக்கொள்ள அனுமதி தருவதில்லையே இதுதான் இசுலாமின் சிறப்பா? வளர்ச்சியா? அமெரிக்காவில் மசூதிகள்  கட்டிக்கொள்ள அனுமதி அளித்த அமெரிக்க அரசின் பெருமையும் கிருத்துவர்களின் பெருமையும் அல்லவா இதில் தெரிகிறது. இங்கே இசுலாமின் பெருமை தெரியவில்லை வாகபிய இசுலாமியர்களின் சிறுமையும் குறுகிய மனப்பான்மையும் தான் தெரிகிறது. எங்கே போனது இசுலாமின் மத சகிப்புத்தன்மை?

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.’ (அல்-குர்ஆன் 109:6) இறைவனின் வார்த்தைகளாக நம்பும் இவற்றை நீங்கள் ஏன் கடைபிடிப்பதில்லை ?  இது பொய்யா அல்லது  நீங்கள் பொய்யர்களா?  

இப்பதிவின் நோக்கம் இசுலாமியர்களை  (நமது வாகபிய சகோக்கள் உட்பட) புண்படுத்துவது அல்ல மாறாக சிந்திக்க வைக்க வேண்டும் என்பதே. இப்பதிவில் தவறு இருப்பின் சுட்டி காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்.
என்றும் அன்புடனும் உண்மையுடனும்
இராச.புரட்சிமணி 

இதை எழுத உதவிய கட்டுரைகள்: 
http://dargahsharif.com/KGN_DARGAH%20SHARIF.htm

பிற்சேர்க்கை: இசுலாமிய  சவுதியில்  தீண்டாமை இல்லையா? என்று முதலில் இப்பதிவிற்கு தலைபிடப்பட்டது. சகோ அ. ஹாஜாமைதீன்  விருப்பப்படி  (அரசியல்) தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

மகாபாரதத்தில் அணுகுண்டு?


மகாபாரதத்தில் அணுகுண்டு பயன் படுத்தப்பட்டிருக்கலாம்  என்று சிலர் கூறுகிறார்கள். போர்க்காட்சிகளை விவரிக்கும் சில பாடல்கள் அணுகுண்டு வெடிப்பால் உண்டாகும் விளைவை விவரிப்பது போன்று உள்ளது என்கிறார்கள் அவர்கள்.

இதுபற்றி ஆங்கிலத்தில் படிக்க 

இதுபற்றி சில வரிகள்  கூறும் தமிழ்  கட்டுரை  படிக்க 

இரண்டையும் படித்து பார்த்து நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க.

மாகாபாரதம் உண்மையா பொய்யா  என்று இன்னும் தெரியவில்லை. மகாபாரதம் உண்மை நிகழ்வு என்று சிலபல இந்துக்களும், இல்லை அது ஒரு கற்பனைக்கதை என்று சிலபல பகுத்தறிவாள   இந்துக்களும் கூறுகின்றனர். 


காலம் செல்ல செல்ல மாகபாரதம் நிகழ்வுகளுடன் தொடர்புடைய சான்றுகள் கிடைத்த வண்ணம் உள்ளன.  இப்படி ஒரு நிகழ்வு நடந்து இருக்கலாம். ஆனால் என்ன... கதை வடிவில் எழுதும் பொழுது கொஞ்சம் மசாலா சேர்த்து எழுதி இருக்கலாம். 

இந்திய    பெருமை   பற்றி   படிக்கும்   பொழுது தமிழனை பற்றி படிக்காமல் இருக்க முடியுமா  தொல் தமிழனை பற்றி  ஒரு கட்டுரை படிக்க   


''proud of our Sanskrit-speaking ancestors of the Vedas; proud of our Tamil-speaking ancestors whose civilization is the oldest yet known''
-swami vivekananda 

சமஸ்கிருதம்    தமிழிலிருந்து   தமிழர்களால் வழிபாட்டிற்கு  உருவாக்கப்பட்டது  (தோன்றவில்லை )  என்று சிலர் கூறுவதுண்டு (சமஸ்கிருதத்தை ஏற்க்க செய்யும் சதியா இது? ) உண்மையை  ஆராய்ந்தால்  தான் தெரியும். 

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

அஜ்மால் கசாப் தூக்கு தண்டனையை ஏன் ரத்து செய்ய வேண்டும்?



பல குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் பொழுது மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய குரல் கொடுக்கும் பொழுது  ஏன் அஜ்மல் கசாப் தூக்கு  தண்டனையை  ரத்து  செய்யக்கூடாது? நாமெல்லாம் மனிதர்கள் தானே? காட்டு மிராண்டிகள் இல்லையே? 

உணர்ச்சிவசப்படாதீங்க   தோழர்களே, மேற்கூறியது நான் கூறியது அல்ல. இந்த தொனியில் ஒரு மனிதாபமுல்லவர்  பதிவிட்டுள்ளார். 

தூக்கு தண்டனை குற்றத்தை பொறுத்து அமையவேண்டும் என்ற கொள்கை கொண்டிருந்தவன்தான் நான். பேரறிவாளன் உட்பட மூன்று தமிழர்கள் தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் எழுந்த பொழுது.
மனதளவில் மிகவும் பாதிப்படைந்தேன். சரியான முடிவிற்கு என்னால் வரவில்லை.
அவர்கள் குற்றம் புரிந்திருக்கவில்லை குற்றத்திற்கு தன்னை அறியாமல் உடந்தையாக இருந்தார்கள் என்று சிலர் வாதிடும்பொழுதுதான்  இந்த உண்மையை நீதிமன்றத்தில்  உறுதிசெய்து அவர்களது தூக்கு தண்டனையை யாராவது தடுக்க வேண்டும் என்று  மனதளவில் ஒரு முடிவிற்கு வந்தேன். 

மீண்டும் சொல்கிறேன் அவர்கள் தங்களை அறியாமல் கொலைக்கு உடந்தையாக இருந்திருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக தூக்கு தண்டனை வழங்கக்கூடாது. 

அஜ்மல் கசாப் விடயம் முற்றிலும் வேறானது.  அவன் தான் செய்வது என்ன என்பதை தெரிந்தே பல இந்தியர்களை கொன்று குவித்தான். அவன் கொலை செய்தான் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் உண்டு. அதை அவனும் ஒப்புக்கொண்டான். அவன் இந்தியாவின் மீது போர் புரிந்ததாகத்தான் தீர்ப்பு கூறுகிறது. மேலும் இது அவர்களைப்பொறுத்த வரை புனிதப்போர். 

அவர்கள் வரும்பொழுதே தெரியும் அவர்கள் இங்கே இறப்பார்கள் என்று. அவர்கள் தற்கொலைப் படைகள்தான். இந்தப் புனித்தப்போரில் இறந்தால் சுவனத்தில் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றே அவர்கள் வந்திருப்பார்கள். அவன் புனிதப்போருக்கு செல்வதாக தன் தாயிடம் கூறி ஆசி கேட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

எனவே அஜ்மல் கசாபின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைப்பது எனபது அவனது உல்லாச வாழ்க்கைக்கு இந்தியா தடையாக இருக்கும் என்பதாகவே  நான் கருதுகிறேன். 

சட்டம் அனைவருக்கும் சமம் என்றாலும் நடைமுறையில் உண்மையில் அப்படி இல்லை.

ஜாதி ரீதியாக, மத ரீதியாக சில சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
மேலும் இந்தியருக்கு ஒரு சட்டம் வெளி நாட்டினருக்கு  ஒரு சட்டம் என்றே நமது சட்டம் உள்ளது.
பேரறிவாளன் உட்பட அந்த மூன்று பேர் இந்தியர்கள் தானே அப்படி இருக்க இவர்களை  அஜ்மல் கசாபினுடன்  ஒப்பிடுதல் முற்றிலும் தவறானது. ( சரி இதே தவறை ஒரு இந்தியன் செய்திருந்தால்? குற்றைத்தினை பொறுத்து அவனுக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்படவேண்டும். அது தூக்கா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். )

மேலும் நான் ஏற்க்கனவே குறிப்பிட்டதுபோல் குற்றத்திற்கு தன்னையறியாமல்  உடந்தையாய் இருந்ததற்கும் களத்தில் இறங்கி குற்றம் புரிந்த வெளி நாட்டவனுக்கும்  வித்தியாசம்  உண்டு.

தீர்ப்பு என்ன கூறுகிறது. கசாப் போர் குற்றம் புரிந்ததாக. மனிதாபிமானம் பற்றி பேசுபவர்களிடம் நான் கேட்கிறேன் கசாபிர்க்கு  தூக்கு என்பது காட்டு மிராண்டித்தனம் என்றால் நமது நாட்டின் எல்லையைக்கடந்து நம்மை தாக்க வரும் எதிரிகளை கொல்லாமல் விட்டுவிடலாமா? அல்லது நமது வீரர்களை பலி கொடுத்தாவது அவர்களை பிடித்து ஆயுள் தண்டை வழங்க வேண்டுமா? கொலை செய்ய வரும் எதிரிகளிடம் மனிதாபிமானம் பற்றி பேசி புரிய வைக்க முடியுமா?

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். கொலை என்பது வேறு போர் என்பது வேறு. 
இது நமது தேசத்தின் மீது நிகழ்த்தப்பட்ட போர்.  கொலைக்கும் போருக்குமான வித்தியாசத்தை புரிந்து கொண்டால் யாரும் கசாபிர்க்கு  வக்காலத்து வாங்க மாட்டார்கள் என நினைக்கின்றேன்.உங்கள் மனிதாபிமானத்தை நான் மெச்சுகிறேன்.அதே நேரத்தில் நீங்கள் இதையும் கருத்தில் கொள்ளுங்கள்.
மேலும் ஏதேனும் கருத்து இருந்தால் தெரியப்படுத்துங்கள் தெரிந்துகொள்வோம்.


ஜாதி, மதம், இனம், மொழி, நாடு இவற்றை கடந்து மனிதம் (முடிந்தால் உயிர்கள்)  என்ற ஒரு புள்ளியில் நாம் அனைவரும் இணையவேண்டும் என்பதே எனது (மனித நேயம் விரும்பும் அனைவரது) ஆசை. அனைத்து நாட்டையும் ஒன்றாக இணைக்கும் பொழுது போர் என்பதே இருக்காது. (குறைந்த பட்சம் விரோதம் இல்லாமல் இருக்கும் பொழுது)அப்பொழுது போர் பொருட்டு எந்த உயிர்களும் கொல்லப்படாது. அதுவரை  போர் நடக்காமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொரு நாட்டின் கடமை.

மனிதேயம் ஓங்கி ஒலிக்கட்டும்.....மனித நேயம் காப்பதற்கு மட்டும்.... போரை ஊக்குவிப்பதற்கு அல்ல.

எல்லா உயிர்களுக்கும் மனம் இறங்குவதுபோல் எனது(பலரது) மனம் க்சாபிர்க்காகவும் மனம் இறங்குகிறது. ஆயிரம் தான் இருந்தாலும் அவனும் ஒரு மனிதன், ஒரு உயிர், அவனுக்கும் குடும்பம் உண்டு.அவன் இறப்பும் பலருக்கு துன்பம் தரும் என்பதை மறுப்பதற்கில்லை.  புனிதப்போரால் பல கோடி இந்தியர்கள் கொன்று  குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை தடுப்பது யார் கடமை. சிந்தித்து செயல் படுத்த வேண்டியவர்கள் சிந்திப்பார்களா...புனிதப்போரை தடை செய்வார்களா? 

என்றும் அன்புடனும் உண்மையுடனும்
இராச.புரட்சிமணி 

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

பதிவர் திருவிழாவில் இப்படி ஒரு பேச்சு -வாசிப்பு சரியா?


நேற்று நடந்து முடிந்த பதிவர் திருவிழா மாபெரும் வெற்றி திருவிழாவாக மாறியுள்ளது.இருப்பினும்  ஒருவரின் வாசிப்புதான் சரியா தவறா என்று எனக்கு சரியாக தெரியவில்லை. 

இது கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும் பெண்பால் பதிவர்கள், மென்மையான ஆண்பால் பதிவர்கள்  தவிர்க்க விரும்பினால் தவிர்த்து விடலாம்.

ஒருவர் கவிதை வாசிக்கின்றேன்  என்று இப்படி ஒரு கேவலமான கவிதையை வாசித்து  அதுவும் பல பெண்கள் கூடி இருந்த  இடத்தில் இதை வாசித்தது சரியா எனபதை நீங்களே சொல்லுங்கள்.

இதோ அவரின் கவிதை 

இயற்கையும் பெண்ணும் ஒன்றுதான்
இருவர்க்கும் எல்லாமே அழகு !

மேகம் மூடிய மலை  இயற்கைக்கழகு  
ஆடை மூடி மேனி பெண்ணுக்கழகு! 

இயற்கையையும்  பெண்ணையும் சுரண்டக்கூடாது 
அவ்வாறு செயின் அழிவு மாக்களுக்கும் மக்களுக்குமே!

இயற்கை  சீற்றம் கொண்டால் பேரழிவு 
பெண் சினம் கொண்டால் கலாச்சார சீரழிவு!

இயற்கையையும் பெண்ணையும்  பேணி காத்திடுவோம் 
இன்பமான வாழ்வை அடைந்திடுவோம்!

---------------------
இதைவிட ஆன்மீக கவிதைனு பின்னாடி சொல்றாரு பாருங்க....

பெட்டிக்காகவும்
புட்டிக்காகவும்
குட்டிக்காகவும்
 உழைக்கும் மனிதா
நீ
உன் தலையை 
அமுதச்  சட்டியாக்க உழைப்பது எப்போது?
----------
மண்ணோடு விளையாடுவதும்
பெண்ணோடு விளையாடுவதும்
விண்ணோடு விளையாடுவதும் 
விளையாட்டல்ல
உன்னோடு விளையாடுவதே  விளையாட்டு.

(மண்ணிலே,பெண்ணிலே, விண்ணிலே, உன்னிலே என்பதே சரி என நினைக்கின்றேன்)
------------------
பெண்ணோடு விளையாடினால் 
    சக்தி விரையமாகும் 
உன்னோடு விளையாடினால்
   சக்தி அமுதமாகும் 
எனவே தியானம் செய்வீர் 
பேரின்ப வாழ்வை அடைந்திடுவீர்.  (இப்படி  இருக்கணும் ஆனா படிச்சது 'திறம்பட வாழ்வீர்')
--------------
இது நல்ல கவிதையா? கெட்ட கவிதையா? அல்லது கவிதையே இல்லையா?
ஒரு பொது இடத்தில் பல பெண்கள் இருந்த இடத்தில் இதை வாசித்தது சரியா தவறா எனபதை நீங்களே சொல்லுங்கள். 

அவரிடம் இது பற்றி கேட்ட பொழுது 
"பெண்ணும், ஆன்மீகமும் மனித வாழ்க்கைக்கு  மிக முக்கியமானது. பலரும் பெண்ணில் திளைப்பதொடு விட்டுவிடுகிறார்கள். அவர்கள் தியானம் செய்ய  வேண்டும் என்று அறிவுறுத்து வதற்காகவே இவ்வாறு வாசித்தேன். இது சித்தர்கள் கவிதையின் தாக்கத்தால் எழுந்தது. அவர்களில் சிலர் பெண்கள் மேல் அதாவது சிற்றன்பத்தில்  வெறுப்பு வருமாறு எழுதி இருக்கிறார்கள்.  அவர்களின் நோக்கம் சிற்றின்பத்தை வெறுப்பது அல்ல மேலாக அதில் சிக்கிகொள்ளாமல் பேரின்பத்தை நோக்கி மனித வாழ்க்கை அமைய வேண்டும் என்பதுதான். அதுபோல் தான் என்னுடைய இந்த முதல் கவிதை வாசிப்பும். இந்த கவிதை தவறானது, இது வாசிக்கப்பட்ட இடம் தவறானது என்று எண்ணினால் அதற்காக என் மன வருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன். மாறாக இது சரி என்றால் எல்லாப்  புகழும் சித்தர்களுக்கே " என்று கூறிவிட்டார்.

இப்பொழுது சொல்லுங்கள் இவர் செய்தது சரியா? தவறா? இதை முடிவு செய்து விட்டு மேற்கொண்டு படியுங்கள். 
--------------------------

சரி யார் அவர் என்று தெரிந்து கொள்ளவேண்டுமா?
அது வேறு யாரும் அல்ல 

நான் தான்
 :) :) ஹா ஹா ஹி ஹி 

பதிவர் திருவிழாவில் பல பேரை இத வாசிச்சு கொன்னாச்சு வராதவங்களும் அந்த துன்பத்த அனுபவிக்கனும் இல்ல அதுக்குத்தான் இந்த பதிவு :)

மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறேன் ....இக்கவிதை தவறாக இருப்பின் மன்னிக்கவும் :)
----------------
சரி  பதிவர் திருவிழா எப்படி இருந்தது?
அருமையோ அருமை.
மூத்த பதிவர்கள் உரை 
பதிவர்கள் சுய அறிமுகம்  (குறிப்புரை கேபிள் சங்கர், பட்டிக்காட்டான் ஜெய், அட்ராசக்க சிபி செந்தில்குமார், பிருந்தானமும் நொந்தகுமாரனும் ஜாக்கிசேகர்)
சாப்பாடு 
மூத்த பதிவர்களை இளைய பதிவர்களை கொண்டு மரியாதை செய்தல் 
தென்றல் சசிகலா அவர்களின் நூல் வெளியீடு  விழா
கவியரங்கம்
சிறப்பு விருந்தினர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் உரை
கவிஞர் சுரேகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது என
விழா சீரும் சிறப்புமாக இருந்தது.

பெயர் மட்டுமே, முகம் மட்டுமே  தெரிந்த மற்றும் பெயர் முகம் தெரியாத  பலரை பார்த்து பேச நேர்ந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.. இருக்கின்றது. 

 இரவு பகல் பாரமால் உழைத்த விழா குழுவினருக்கும் (புலவர் செ.இராமனுஜம், கவிஞர் மதுமதி,பட்டிக்காட்டான் ஜெய், வீடு திரும்பல் மோகன் குமார், மெட்ராஸ் பவன் சிவா, தோத்தவண்டா ஆரூர் மூனா செந்தில்,  அஞ்சா சிங்கம் செல்வின், பிலாசபி பிரபாகரன்,டீக்கடை சிராஜுதீன் மற்றும் எனக்கு பெயர் தெரியாத பலருக்கும்(பலரின்  பெயர்  எழுத  வில்லையே  என்று  யாரும்  தவறாக  எண்ணவேண்டாம்  எனக்கு  ஞாபகம்  இருந்த  அளவிற்கு   மட்டும்  எழுதி இருக்கிறேன் பதிவர் சந்திப்பிற்கு வருகை புரிந்து திருவிழாவை வெற்றியடைச்செய்த பதிவர்களுக்கும் எனது நன்றியையும் பாராட்டையும் :)  தெரிவித்துக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்
இராச.புரட்சிமணி 



வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

மது ஒழிப்பு பற்றி பேசும் சகோதரர்கள் இதையும் சிந்திப்பார்களா ?


தங்களுடைய மார்க்கத்தை பிரச்சாரம் செய்துவந்த சகோதரர்கள்  இப்பொழுது மது ஒழிப்பை கையில் எடுத்திருக்கிறார்கள்.  ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதையோ இது?  

ஒரு நண்பர் ஒரு பதிவில் அழகாக பின்னூட்டமிட்டிருந்தார் திருவள்ளுவர் தெளிவுரை கொடுத்து  மது வேண்டாம் என்பவர்கள் வள்ளுவர் கூறிய புலால் உண்ணாமையை ஏன் கடைபிடிப்பதில்லை  என்று.
அவர்கள் சிந்திக்க வேண்டிய ஒன்று. சிந்திப்பார்களா? 

வள்ளுவர் பொய் கூட பேசக்கூடாது என்று சொன்னார். அதை கேட்கிறார்களா?

மதம் வரும் பொழுது அங்கே மனிதம் அழிகிறது. பல மனிதர்களை கொன்றுதான் மதத்தையே பரப்புகிறார்கள் என்பது வேறு விடயம்.

இசுலாமிய மன்னர்களில் ரொம்ப நல்லவர்னு சொல்லக்கூடிய அக்பர் கூட பத்தாயிரம் இந்தியர்களை கொன்றதாக வரலாறு கூறுகிறது. அப்ப மத்தவங்க எத்தனை கோடி இந்தியர்களை கொன்று குவித்திருப்பார்கள் என்பதை நான் கூறத்தேவை இல்லை.  அந்த கொடூராத்தை மீண்டும் படிக்க, எழுத நான் அவ்வளவு கொடூரமானவன்  அல்ல. 

இசுலாம் மட்டும் அல்ல இசுலாமிற்கும் கிருத்துவர்களுக்கும் நடந்த சண்டைகள், பாகிஸ்தானில் இந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய திருமணம் மற்றும் மதமாற்றம், கோத்ரா எரிப்பு, குஜராத் படுகொலை  (இப்படி  சொல்ல ஆயிரம் உதாரணங்கள் உண்டு)என மதமே மனிதத்தையும் மனிதர்களையும்  அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

மதங்களினால் சில நன்மைகள் உண்டு என்றாலும் அதனால் ஏற்ப்படும் இழப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் இப்படிப்பட்ட மதங்கள் தேவையா என்று சிந்தனை எழுவதை தவிர்க்க இயலவில்லை.


இசுலாமில் மதுவிற்கு தடை என்கிறார்கள். ஏன் எதற்கு அவ்வாறு கூறப்பட்டது  என்று ஆராய்ந்தால் தான் அதற்க்கான உண்மையான காரணம் தெரியவரும்.

வள்ளுவர் மதுவின் தீமையை வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி கூறி இருக்கிறார்.
முகமது நபி அவர்கள் மது அருந்தினால் பாவம் வந்து சேரும் என்று பூச்சாண்டி  காட்டுகிறார்.
உயிர்களை கொல்வதால், தின்பதால்  பாவம் வராதா? 
பூச்சாண்டி எப்பொழுது காட்டப்படும் தெரியுமா மக்கள் அறியாமையில் இருக்கும்பொழுது, சில விடயங்கள் சொன்னால் புரியாது எனும்பொழுது.

திருடினா சாமி கண்ண குத்திடும், நீ சாப்பிடலேன்னா பூச்சாண்டிக்கிட்ட புடிச்சி கொடுத்திடுவேன் என்று அறியாத குழந்தைகளிடம் கூறுவார்கள். அதுபோல் தான் அன்று அறியாமையில் இருந்த அரபியர்களுக்கு அல்லா  கூற  முகமது நபியால் அருளப்பட்டது தான் குரான் என்று மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள் . அதனால் தான் அதில் நிறைய பூச்சாண்டி விடையங்கள் இருக்கும். 

கவனிக்க: வள்ளுவர் அனைத்து தீமைகளையும் வாழ்வியலோடு தொடர்பு படுத்தி இது செய்தால் இது விளையும் என்று கூறுவார். ஏன் அப்படி கூறினார்? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள் சிறப்பான சிந்திக்கும் ஆற்றலை பெற்றிருந்தார்கள் அவர்களிடம் எல்லாவற்றிற்கும் பூச்சாண்டி  காட்ட முடியாது என்பதால் தானே?.

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு அறியாமையில் இருந்த அரேபியர்களிடம் காட்டிய பூச்சாண்டியை  இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நம்ப வேண்டும் என்பதை அவர் அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதுவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறப்பான சிந்திக்கும்  திறனை கொண்டிருந்த தமிழர்களின் சந்ததிகள்  சிந்திக்க வேண்டாமா?  

இசுலாமில் ஏன் மது மறுக்கப்படுகிறது?

முதலில் குடித்து விட்டு தொழுகைக்கு வரக்கூடாது என்றுதான் நபிகள் கூறுவார்கள். பிறகுதான் இவனுங்க திருந்தான் மாட்டானுங்க போல என்று மதுவிற்கு தடை விதிப்பார்.(அல்லா கூறியதாக ).   

சொர்க்கத்தில் 'wine'  வழங்கப்படும்  என்றுதான் இசுலாம் சொல்கிறது. அதில் ஆல்கஹால் அளவு பற்றி எல்லாம்  சொல்லவில்லை. ஏன் சொர்க்கத்தில்  மட்டும் 'wine'   வழங்கப்படும் என்று நபிகள் கூறினார் என்பதை அவரின் வரலாற்றோடு சிந்தித்து பார்த்தால் தான்  உண்மை புரியும். 

௦௦௦௦ஹலால் பீர் குடிக்கலாமாம்... யார் அந்த ஆல்கஹால் அளவை நிர்ணயித்தது அல்லாவா...? (இந்த கேள்வியும் ஒரு நண்பர் கேட்டதுதான்)

மதுவினால் தீமையே அதிகம் அதை மறுப்பதற்கில்லை அதே நேரத்தில் மனிதத்தை ஒழிக்கும் மதத்தை /மார்க்கத்தை (இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்)  பிரச்சாரம் செய்துகொண்டு மது ஒழிப்பு பற்றி பேசுவதுதான் வேதனை தருகிறது.


நபி அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும்.(அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: முஸ்லிம்)

இந்த கூற்றுப்படி பார்த்தால் மதமும்/மார்க்கமும் ஹராமாகும். இதை கடைபிடிப்பார்களா? 
(மதுவை விட மதமே அதிக போதை என்று ஒரு நண்பர் அருமையான பதிவை தந்திருந்தார்.)

இப்பதிவில் தவறான, கடுமையான கருத்துக்கள்  இருந்தால் தாராளமாக் தெரியப்படுத்தவும் அது நீக்கப்படும்.(வெளியே செல்வதால் உடனடியாக சாத்தியம் இல்லை)  இது ஒரு விழிப்புணர்வு பதிவேயன்றி வெறுப்புணர்வு பதிவல்ல. 

இசுலாமிய சகோதரர்களுக்கு சற்றே கடந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள் :). (மதமே வேண்டாம்னு சொல்லல , பரப்ப வேண்டாம்னு தான் சொல்றேன். (ஐ நா சொல்லுது ஆட்டுக்குட்டி சொல்லுதுன்னு சொல்லக்கூடாது) மதத்தை தாண்டி மனிதத்தை தழுவ வேண்டும் என்று தான் சொல்கிறேன் :) . மதம் மனிதத்திற்கு தடையாக இருக்கும்பொழுது அது தேவையா எனபதையும் சிந்தித்து அது மனிதத்தை பாதிக்காத அளவிற்கு  சீர்திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மனித இனம் சீரழிவதை யாராலும் தடுக்க முடியாது. அதற்கு நீங்கள் துணைபோக வேண்டுமா எனபதை சிந்தியுங்கள்.

தெரியதவர்களுக்காக:
என்னடா இப்படி ஒரு பதிவு என்று சிலர் நினைக்கலாம். சமீபத்தில் ஒரு இசுலாமிய ஐயா  இட்ட பதிவு, நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பை கெடுக்க சதி என்பது சிலரின் குற்றச்சாட்டு. இல்லை அது நல்ல நோக்கத்திற்காக என்பது பல இசுலாமிய சகோதரர்களின் வாதம். அதைத்தொடர்ந்து பல பதிவுகள் வந்தது அதுபோல் இதுவும் ஒரு பதிவு அவ்வளவே. 

மிக முக்கியம் 
வரும் ஞாயிறு அன்று  சென்னையில் பதிவர் திருவிழா நடக்கின்றது. அனைவரும் பங்கேற்கலாம். வர விருப்பமுள்ளவர்கள் பின்வரும் விழா குழுவினரை அழைத்து உங்களது வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள். 

மதுமதி(தூரிகையின் தூறல்)-98941 24021
      பால கணேஷ்(மின்னல் வரிகள்)-73058 36166
      ஜெயக்குமார்(பட்டிக்காட்டான்)-9094969686
      சிவக்குமார்(மெட்ராஸ்பவன்)9841611301

 பெண் பதிவர்களின் தொடர்புக்கு

      சசிகலா(தென்றல்)-99410 61575

 மின்னஞ்சல்

kavimadhumathi@gmail.com
pattikkattaan@gmail.com


இது  நாடு, மதம், ஜாதி, இனம்  கடந்த திருவிழா அனைவரும் பங்கேற்ற்று பயனடையுங்கள்.

வெள்ளி, 18 மே, 2012

இறைவன்களும் இறைத்தூதர்களும் இதுவரை சாதித்தது என்ன?



பல இறை அவதாரங்கள் நிகழ்ந்துள்ளது என்றும் பல இறைதூதர்களை இறைவன் அனுப்பியுள்ளான் என்றும் சில பல மதங்கள் கூறுகின்றன. இந்தஇறைவன்களும் இறைத்தூதர்களும் சாதித்தது என்ன
என்று சற்று திறந்த மனதுடன் சிந்தித்து பார்த்தால் இவர்கள் இறைவன்களும்  அல்ல இறைத்தூதர்களும் அல்ல என்ற முடிவிற்கு நம்மால் வரமுடிகிறது. அல்லது அவர்கள் போல நம்மாலும் இறைவனாகவும், இறைத்தூதர்களாகவும் வரமுடியும் என்ற அபரிமிதமான நம்பிக்கையை அளிக்கின்றது.

முதலில் இறைவன்கள்,இறைத்தூதர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்.
௧.இறைவனின் அவதாரங்கள் என்று கூறப்படுபவர்கள் சிலபல அரக்கர்களை கொன்றதாக
நாமறிவோம். அரக்கர்களை கொன்று மக்களுக்கு நன்மை செய்தனர்.
இன்று இந்த வேலையைத்தானே நமது காவல் துறையும் , நீதித்துறையும்  செய்கிறது.

௨ .நல்ல நீதிகளை, போதனைகளை கூறினர்.
 நம்மால் இவற்றை கூற முடியாதா? வள்ளுவர் கூறவில்லையா, ஒளவையார் கூறவில்லையா?

௩  . சமூகத்தில் மாற்றத்தை ஏற்ப்படுத்தினார்.
நல்ல சமூக சீர்திருத்தவாதிகள் சமூகத்தில் மாற்றங்களை  ஏற்ப்படுத்தவில்லையா?

உலகில் அடிமை முறையை எந்த இறைவனாவது இறைத்தூதராவது  எதிர்த்தார்களா?  ஒழித்தார்களா? . அதை முற்றிலும் ஒழித்தது யார் மனிதர்கள்  தானே?

உலக நாடுகள் போர் புரிய கூடாது என்று எந்த இறைவனாவது  இறைத்தூதராவது   எதிர்த்தார்களா?
மனிதர்கள் தானே அந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் சதி, பலதார மணம், குழந்தைத்திருமணம், தீண்டாமை,  இவற்றை எதிர்த்தது ஒழித்தது யார்? மனிதர்களே.
.
சமூக மாற்றத்தையும் நல்ல போதனையும் தந்தவர்கள் இறைதூதர்கள் என்றால் நல்ல காரியங்கள் பல செய்த இவர்களை என்னவென்று கூறுவது. இவர்களும்   இறைவன்கள்தானே இறைத்தூதர்கள் தானே.

பல உயிர்க்கொல்லி நோய்களுக்கு மருந்தை கண்டுபிடித்தது இறைவனோ இறைதூதர்களோ அல்ல மனிதர்களே.

நான் கூறுவது என்னவெனில் இதுவரை இது இறைவன் செய்தது, இது இறைதூதன் செய்தது என்று எவையெல்லாம் கூறப்படுகிறதோ,அது உண்மையாக செய்யப்பட்டிருப்பின் அவற்றை நம்மாலும் செய்ய முடியும். அதுமட்டுமல்ல இறைவன்களும் இறைதூதர்களும் செய்யாததையும் நம்மால் செய்யமுடியும்.

இறைவனும் இறைதூதர்களும் உண்மை என்று வாதிடுபவர்கள்
முதல் உலகப்போரின் போதோ , இரண்டாம் உலகப்போரின் போதோ, இஸ்ரேல் பாலஸ்தீன சண்டையின் போதோ, யூதர்கள் அழிக்கப்பட்ட போதோ, இலங்கையில் தமிழர்கள் அழிக்கபட்டபோதோ ஏன் இறைவன் வரவில்லை? ஏன் இறைத்தூதர்களை அனுப்பவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்வார்களா?

இதைவிட என்ன பெரிய கொடுமை நடக்கவேண்டும் அவன் வருவதற்கு?. இதுவரை அவன் என்ன
சாதித்து விட்டான் இனி இறைதூதர்களை அனுப்பக்கூடாது என்று முடிவெடுப்பதற்கு?

இன்றும் பட்டினியால் பலர் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள், சிசுக்கொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது, நோயால் பலர் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள்,  நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊழல் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.  
இறைவன் இறைவன் என்று சொல்லி அவன்பெயராலும் எத்தனை கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதை சிந்தித்து பார்க்க வேண்டாமா?

சற்று சிந்தித்து பாருங்கள் நான் சொல்ல வரும் உண்மை உங்களுக்கு புலப்படும்.
(உங்களில் பலருக்கு இந்த தெளிவு ஏற்க்கனவே இருக்கும் என்பது வேறு விடயம் :)  )

இவற்றை பலரும் ஒப்புக்கொண்டாலும் இறைவன்கள், இறைதூதர்கள் என்று
கூறப்படுபவர்கள் செய்த அற்புதங்களை மனிதனால் செய்ய முடியுமா என்ற எண்ணம் சிலபலருக்கும் வரலாம். சில சிந்திக்க  தெரிந்த மனிதர்கள் கூட இது கட்டுக்கதை தவறு என்று எண்ணலாம்.(அவற்றில் பல கதைகளும் கலந்து மனிதனுக்கு தீமைகள் விளைந்ததுதான் காரணமோ? )  அற்புதங்களை பற்றி அறிய பகுத்தறிவு போதாது. அதற்கு தேவை அகத்தறிவு.

ஆம் அகத்தறிவு உடையவனே தன்னை உணர்ந்தவன், இறைவனை உணர்ந்தவன், பிரபஞ்சத்தை உணர்ந்தவன்.இவனால் பல ஆன்மீக அற்புதங்களை நிகழ்த்த முடியும். யோகத்தினால் பெரும் அறிவைத்தான் நான் அகத்தறிவு என்கிறேன்.
(ஆன்மீக பாதையில் செல்லும் அனைவரும் மக்களுக்கு நன்மை தான் செய்வார்கள் என்பது ஒரு தவறான கருத்து. அரை குறையாக அறிந்துகொண்டு, புரிந்து கொண்டு  ஆன்மீக பாதையிலிருந்து விலகியவர்களால் வரும் பிரைச்சனை மிகவும் அதிகம்) .

அற்புதத்தை பொறுத்தவரை எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை. அவர்கள் செல்லும் யோக பாதையை பொறுத்து சக்திகள் வேறுபாடும்.(இதுவும் ஒரு குறிப்பிட்ட நிலை வரையே என நினைக்கின்றேன் அதற்கு பிறகு ஒருவனால் எல்லாம் செய்ய முடியும்.  அதே நேரத்தில் அவன் எல்லாமாகவும் மாறிவிடுவான்).

இது உண்மை என்று உணர ஒரு வினாடிதான் தேவை. ஆனால் அந்த ஒரு வினாடி அனைவருக்கும் கிடைப்பதில்லை அல்லது பலர் அந்த உண்மையை உணர எந்த முயற்சியையும் எடுப்பதில்லை.

புறத்தறிவு (அறிவியல்) மூலமும் பல விடயங்களை நம்மால் சாதிக்க முடியும்.  சாதிக்கிறோம். சாதிப்போம். ஆனால் புறத்தறிவை விட அகத்தறிவே மேலானது, சுலபமாக டையக்கூடியது. (தக்க வழிகாட்டியுடன். சரியான வழிகாட்டி இல்லாததால் இது இன்று பொய் என்ற அளவில் உள்ளது )

பிரபஞ்சத்தில் என்னென்ன உள்ளதோ அது நம்மிலும் உள்ளது. நம்மில் என்னென்ன உள்ளதோ அது பிரபஞ்சத்திலும் உள்ளது.இதைத்தான் அன்று அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றனர்.  உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களோடும், உயிர்களோடும் அனைத்து
உயிர்களுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. இதை பயன்படுத்திதான் உண்மையான
ஆன்மீகவாதிகள், சித்தர்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர்.  இதை நாளை அறியவியல் நன்று விளக்கும்.

ஆம் சொந்தங்களே நம்மாலும் இறைவனாகவும்,  இறைதூதர்களாகவும் மாறமுடியும். அவர்கள் புரிந்த அற்புதங்களை நல்ல செயல்களை நாமும்   புரிய முடியும். அவர்கள் செய்யாத நல்ல விடயங்களையும் செய்ய வேண்டிய கடமை நமக்கு உண்டு.


குறிப்பு: மனிதர்களும் இறைவனாகவும் இறைதூதனாகவும் மாற முடியும் என்பது தான் என் நிலைப்பாடு. மற்றபடி இறைவன் அவதாரம் எடுத்தான், இறைதூதனை அனுப்பினான்,  இனி அனுப்ப மாட்டான்,கடைசியாக இறைவன் அவதரிப்பான் எனபதில் எனக்கு நம்பிக்கை
இல்லை. ஆன்மீகத்தின் படி பார்த்தாலும் இதுவரை பலர் இறைவனை உணர்ந்தார்கள் இனியும் பலர் இறைவனை உணர்வார்கள். (அதாவது இறைவன் என்றால் என்ன? அப்படி ஒன்னு இருக்கிறதா என்ற உண்மையை).
ஏற்கனவே இறைவன் இறைதூதன் என்று கூறப்படுவபவர்களும் ஓரளவிற்காவது இறைவனை உணர்ந்திருப்பார்கள் அல்லது அந்த பாதையில் ஓரளவிற்கு    பயணம் செய்திருப்பார்கள் எனபதை மறுப்பதற்கில்லை.  

தனக்கு மிஞ்சிய சக்தியை இறைவன் என்று வணங்குவதில் எந்த தவறும் இல்லை. மாறாக இதில் நன்மைகளே உண்டு. பிறருக்கு பிரச்சனை வராமல் இந்த வழிபாடு இருக்க வேண்டும்.   ஆனால் இவனே உண்மையான  இறைவன், இதுவே உண்மையான மதம், மார்க்கம்,  என்ற வார்த்தைகள் தான் உண்மையில் உண்மையற்றது. இறைவனுக்காக சண்டையிடுவதை
விட மிகப்பெரிய மடமை ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.  எல்லா
உயிர்களையும் தம்முயிர் போல் எண்ணி வாழாவிட்டாலும், பிற உயிர்களுக்கு முடிந்த வரை துன்பம் விளைவிக்காமல், உண்மையுடனும் , நேர்மையுடனும்   வாழவதே இறைவனுக்கு செய்யும் உண்மையான வழிபாடாகும்.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு வலைப்பூவிற்கு விடுமுறை. வந்தவுடன் இறைவனை பற்றிய, இயற்கையை பற்றிய உண்மையை தொடர்ந்து ஆய்வோம்.

என்னுடைய கருத்துக்கள் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக  நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். எதிர்காலத்திலும் அனைவரின் மனம் புண்படாத கருத்துக்களையே எழுதுவேன். இப்பதிவில் ஏதேனும் குறைகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள்.

 மதத்தை ஒதுக்கிவிட்டு பார்த்தாலும் ஒதுக்காமல் பார்த்தாலும் நமது மூலம்
ஒன்றே. நாம் மனிதர்கள் மனதில் அன்பையும், நல்ல சிந்தனையையும்  மட்டும் வளர்ப்போம்.

என்பதிவை படித்த, படிக்கும், ஆதரவு அளித்த, அளிக்கும் சொந்தங்கள்  அனைவருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் :)


வியாழன், 26 ஏப்ரல், 2012

இசுலாமிய பெண்மணியின் மிரட்டல்களுக்கு பதில் சொல்வோமா?



சமீபத்தில் ஒரு இசுலாமிய பெண்மணி சில மிரட்டல்களை விடுத்திருந்தார். அதற்கடுத்து பெண்களை அடிமைபடுத்தும் இசுலாம் என்ற தலைப்பில் இசுலாமில் பெண்கள் அடிமையில்லை என்ற அழகிய பதிவை தந்திருந்தார். அவர் பதிவில் கூறியிருந்தது யாவும் உண்மை என்பதை குரான் வசனங்கள்  மூலமும் ஹதீஸ் ஆதாரங்கள் மூலமும் விளக்கியிருந்தார். இவையாவும் இசுலாமிய நூல்களில்  இருக்கின்றது என்பதில் எந்த மாற்று கருத்தும்  இருக்க முடியாது. அப்புறம் ஏன் இந்த பதிவு என்று நீங்கள் கேட்கலாம். இவையாவையும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே தந்தது இசுலாம் என்று அந்த பெண்மணி கூறுகிறார். ஆனால் இந்த உரிமைகளை  முதலில் தந்தது இசுலாம் அல்ல இசுலாமிற்கு முன்பே இவை யாவும் அரேபியாவில் இருந்தது. இதை தந்தது இந்து மதம்,இந்திய சிந்தனை  (சரிவிடுங்க இத பத்தி அப்புறம் பார்ப்போம்)  அல்லது சிலையை வழிபட்டவர்கள் வழங்கியது என்ற உண்மையை கூறுவதே இப்பதிவின் நோக்கம். 

அந்த பதிவில் திருமண சம்மதம், மறுமண உரிமை ஆகியவற்றை இசுலாமே தந்ததாக கூறுகிறார். ஆனால் உண்மையில் பெண்களுக்கு விரும்பியவர்களுக்கு திருமணம் செய்யும் உரிமையும், மறுமண உரிமையும் இசுலாமுக்கு முன்பே அரேபியாவில் இருந்தது. 

அதற்கு மறுக்க முடியாத உதரணமாக கதீஜா என்ற பெண்மணியை குறிப்பிடலாம். இந்த கதீஜா என்பவரின் மூன்றாவது கணவர் தான் முகமது நபி அவர்கள். இவர் தான் முகமது நபியை மணமுடிக்க முடிவு செய்கிறார். அவருக்கு ஏற்க்கனவே இரண்டாவது திருமணம் நடந்தது என்பதன் மூலம் மறுமண உரிமை இசுலாமிற்கு முன்பே அரேபியாவில் இருந்தது தெரியவருகிறது.   

இந்த கதீஜா ஒரு மிகப்பெரிய செல்வந்தர். இவர் வியாபாரமும் செய்துவந்துள்ளார். இதன் மூலம் பெண்களுக்கு சொத்துரிமையும் மேலும் பல உரிமைகளும் இசுலாமிற்கு முன்பே அராபியாவில் இருந்தது என்பதை  இது காட்டுகிறது. ஆனால் இன்று சவூதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை கூட கிடையாது என்பது வருத்தமான விடயம். 

அந்தபதிவில் பெண்கல்வியையும்  இசுலாமே 1400 வருடங்களுக்கு முன்பு தந்தது என்று கூறுகிறார். இசுலாமுக்கு முன்பே அங்கு பெண் கல்வி இருந்ததாகத்தான் தெரிகிறது . கதிஜா கல்வி கற்றிருந்தார்களா   என்று தெரியவில்லை. இருப்பினும் அவர் மிகப்பெரிய அளவில் வணிகம் செய்து வந்ததால்  அவரும் கல்வி கற்றிருக்கலாம் என்றே தோன்றுகிறது.


இசுலாமின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவராக கருத்தப்படுபவர் உமர்.இவர் முகமது நபியை கொல்ல நினைத்தவர். இவரின் சகோதரி இசுலாமிற்கு மாறியதை அறிந்து கோபம் கொள்ளும் அவர் சகோதரிய அடித்து விட்டு, குற்றத்தை உணர்ந்து பிறகு நீ ஓதி கொண்டிருப்பதை என்னிடம் காட்டு என்கிறார். அவரின் சகோதரி குரானின் ஒரு அத்தியாத்தின் வசனங்கள்  அடங்கிய தாளை அவரிடம் தருகிறார்.  ("asked his sister to give him what she was reciting. She gave him the paper on which was written the verses of the chapter Ta-Ha." அதை படித்து அதில் மயங்கும் உமர் இசுலாமிற்கு மாறினார் என்று வரலாறு கூறுகிறது.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் அந்த பெண் ஓதிக்கொண்டிருந்தார் என்பது, அவர் தாளை படித்து கொண்டிருந்தார் என்ற பொருள் தருகிறது. அவர் கல்வி கற்றிருந்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை அதே நேரத்தில் அவர் கல்வி கற்றிருக்கவும் வாய்ப்புகள் உண்டு என்பதை மறுப்பதற்க்கில்லை.

சில காலங்களுக்கு முன்புவரை இந்தியாவில் நிலவி வந்த உடன்கட்டை ஏறுதல், விதவை  திருமணத்தை எதிர்த்தல் போன்ற தீய விடயங்கள் பண்டைய அரேபியாவில் இருந்ததாக தெரியவில்லை. அராபிய இந்து மதத்தை, இந்திய சிந்தனையை ஏற்று கொண்ட நாடு என்பதை பிறகு பார்ப்போம். இந்தியாவில் இந்த தீய விடயங்கள் எப்பொழுது ஏன் வந்தது என்பதையும் நாம் ஆய்வு செய்யவேண்டும்.

 பண்டைய இந்தியாவில்  பல பெண்கள் அரசர்களை எதிர்த்து போர் புரிந்ததாகவும் வரலாறு உண்டு. 

அந்த காலத்தில் பெண்கள் சகல உரிமைகளோடுதான் இருந்துள்ளனர். தமிழகத்திலும் ஒளவையார் என்ற புலவர் செய்யுள்கள் பல  இயற்றி உள்ளார் என்பதை நாம் அறிவோம்.  பல பெண் பால் புலவர்கள் ஒளவையார் என்ற புனைப்பெயரில் இருந்ததாகவும் படித்த ஞாபகம். 

இன்றும் பெண்களை மையாமாக வைத்து திரைப்படங்கள் வருவதில்லை. ஆனால் அன்றே மணிமேகலை என்ற பெண்ணை மையமாக கொண்டு காப்பியம் படைத்தவன் தமிழன். அந்த பெண்ணிற்கு மதம் மாறும் உரிமையும், சந்நியாச வாழ்வை ஏற்கும் உரிமையும் இருந்தது.  இந்தியாவை, தமிழகத்தை பொறுத்த வரை பெண்கள் அடிமை பட காரணம் ஆணாதிக்கம் என்பதைவிட அந்நிய படை எடுப்புகள் தான் காரணம் என்று நினைக்கின்றேன். 

ஏற்க்கனவே இருந்த உரிமைகளைத்தான் இசுலாம் அங்கீகரிக்கின்றது என்பதன் மூலம் இசுலாமை நான் களங்கப்படுத்துவதாக சகோதரர்கள் என்ன வேண்டாம். உண்மையை நேர்மையான இசுலாமியர்கள்  ஏற்றுக்கொள்வார்கள் என்றே எண்ணுகிறேன். 
இசுலாம் பெண்களுக்கு வழங்கும் இந்த உரிமைகள் போற்றத்தகுந்தது என்பதில்  யாருக்கும் எந்த மாற்று கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது. 

இப்பதிவில் தவறு இருப்பின், இது இசுலாமியத்தை தவறாக விமர்சனம் செய்வது போல் இருந்ததாலும் சகோதரர்கள் சுட்டிகாட்டுங்கள்.  இப்பதிவில் இருக்கும் விடயங்கள் பெரும்பாலும் இசுலாமியர்கள் அறிந்திருப்பார்கள் என்பதால் தான் நிறைய ஆதாரங்கள் தரவில்லை. எதற்கு ஆதாரம் வேண்டும் என்று  கேட்டால் கண்டிப்பாக தருகிறேன். மீண்டும் கூற விரும்புகிறேன் இப்பதிவின் நோக்கம் நான் உண்மையாக நினைப்பவற்றை கூறுவதுதானே தவிர இசுலாமை விமர்சிப்பது அல்ல.

அனைத்து பெண்களுக்கும் (ஆண்களுக்கும்)  நான் கூற விரும்புவது ஒன்றுதான் உங்கள் குழந்தைகளுக்கு மதத்தை ஊற்றி வளர்க்காமல் மனிதத்தை ஊற்றி வளருங்கள். நீங்கள் மதத்தை ஊட்டி வளர்த்தால்  உங்கள் குழந்தை மதவாதியாக, மனிதவெடிகுண்டாக மாறலாம். நீங்கள் மனிதத்தை ஊற்றி வளர்த்தால் உங்கள் குழந்தை மனிதநேயம் உள்ளவராக, மகாத்மாவாக வரலாம் .  முடிவு உங்கள் கையில். 

வியாழன், 19 ஏப்ரல், 2012

இந்து மதம் என்றால் என்ன? யார் இந்து?



இருப்பதிலேயே மிகவும் சுலபமானதும் சிக்கலானதும் இதற்க்கான பதில்தான். இந்து மதம் என்றால் என்ன அதற்க்கான இலக்கணத்தை வகுப்போமா?

நான் படித்த வரை சிந்து நதிக்கு அப்பால் இருந்தவர்கள் இப்பால் இருந்தவர்களை :) , சிந்து நதியோரம் வசித்தவர்களை ,  அன்றைய அகண்ட பாரதத்தை சேர்ந்தவர்களை இந்து என்று அழைத்தனர். அதாவது ஆரம்பத்தில்  இந்து என்பது மதம் சார்ந்த பெயர் அல்ல. இந்து என்று ஒரு மதமும் அன்று இல்லை. அது நிலப்பரப்பையும் இங்குள்ள  மக்களையும்  குறிக்கும் சொல்லாகத்தான் இருந்து வந்துள்ளது. இது ஒரு வாதம். அனைவருக்கும் தெரிந்த மற்றும் பெரும்பாலானோர் ஒப்புக்கொண்ட வாதம். 

சமஸ்கிருத சொல்லான சிந்து பெர்சியாவில்  இந்து என்று உருமாற்றம் கொண்டது என்பது சிலரின் கருத்து.  அன்றைய அராபியர்கள் அல்-ஹிந்த் என்றே அன்றைய அகண்ட பாரதத்தின்  பகுதியினையும், இங்குள்ள மக்களையும் குறிப்பிட்டுள்ளனர். அராபிய அல்-ஹிந்த் ஐரோப்பிய மொழியில் இந்து என்று உருமாறியது என்பது சிலரின் கருத்து.(மூலம்)
இந்த கருத்துக்களின் அடிப்படையில் தான் மேற்கூறிய  வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த வாதத்தின்படி அன்றைய அகண்ட பாரதத்தில் வாழ்ந்த அனைவரும் இந்துக்கள்.
இந்தியாவில் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் அவன் வெளி நாட்டவரால் இந்து என்றே அறியப்படான்.

இங்கே இருந்த அனைத்து மதங்களையும் அவன் இந்து மதம் என்று அழைத்துள்ளான். இந்த நிலபரப்பை சார்ந்த அனைவரின் மதங்களும் இந்து மதம் என்று பெயர் பெற்றது  இப்படித்தான்.

சமண புத்த மதங்கள் உருவாக பல காரணங்கள் இருந்தாலும்  வேதங்களும், பிராமணர்களும் ஒரு காரணம். வேதம் வேதம் என்று அதையே கட்டி கொண்டு மனிதத்திற்கு  முக்கியத்துவம் தராமல் இருந்ததால் ஆன்மீகத்திற்கு, மனிதத்திற்கு, உயிர்களுக்கு  முக்கியத்துவம் தரும் சமணமும், புத்தமும் பிறந்தது. 

இன்றைய இசுலாமிய, கிருத்தவ மதவாதிகளும் அன்றைய  பிராமண மதவாதிகள்  போல மனிதத்திற்கு முக்கியத்துவம் தராமல் தங்களுடைய மத புத்தகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர்.

அன்றைய இந்துக்களை மூன்று வகையாக பிரிக்கலாம் (பிரிக்கிறேன்  :) )

1.  வேதங்களுக்கு, உபநிடதங்களுக்கு, மனுவிற்கு  மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தவர்கள் பிராமணர்கள்.
2. வேதங்களுக்கு எதிராக கிளம்பியவர்கள் சமண, புத்த மதத்தினர் 
3. வேதங்களுக்கு முக்கியத்துவம் தராதவர்களும் , அதற்கு எதிராக கிளம்பாதவர்களும் இவர்களுக்கு  இடையே வாழ்ந்து வந்துள்ளனர்.  இவர்கள் பிராமணர் அல்லாத இதர வர்ணங்களையும், புத்த சமண மதத்தை சாராதவர்களும் ஆவர்.

இந்து என்ற சொல்லானது முதலில் இவர்கள் மூவரையும் குறிக்க பயன்பட்டது.

பிறகு வேதத்திற்கு எதிராக இருந்தவர்களை சமணம்,புத்தம் என்று தனியாக  குறிப்பிட ஆரம்பித்தனர். அதனால் மீதம் இருந்த இரண்டு  பிரிவினரும் தொடர்ந்து இந்துக்கள் என்றே அழைக்கப்பட்டனர் ...அழைக்கப்படுகின்றனர்.

தொடரும்......................
தமிழர்களின் நிலையையும் , இந்து மதத்திற்கு இலக்கணத்தையும் அடுத்த பதிவில் காண்போம் 

Related Posts Plugin for WordPress, Blogger...