சிந்து நதியின் பெயரிலிருந்து இந்து, இந்தியா என்ற பெயர் வரவில்லை மாறாக அது நாடு சார்ந்தது, மதம் சார்ந்தது என்பதை பற்றி பார்ப்போமா?
சிந்து கருத்து என்னவெனில் சிந்து நதிக்கு அப்பால் இருந்தவர்கள் சிந்து நதியோரம் வசித்தவர்களையும், அதை தாண்டிய நிலப்பரப்பையும் அவர்கள் மொழியில் ஹிந்த் என்று சொல்ல ஆரம்பித்து, அது கிரக்கேர்கள் மூலம், ஐரோப்பிய மொழிகளுக்கு சென்று ஆங்கிலேயர்களால் இந்தியா என்று அழைக்கப்பட்டது .
ஆனால் இந்த கருத்து தவறானது இந்து மதம், இந்திய நாடு என்பதற்கு மூலம் வேதத்தில் உள்ளது என்பது மாற்று கருத்தாகும்.
பழமையான ரிக் வேதத்திலேயே(கி. மு. 1700 முதல் 1100 வரை) இந்து, இந்துஸ்தான் என்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்கான ஆதாரம் இதோ
-------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------हिमालयं समारभ्य यावदिंदुसरोवरम् ।
तं देवनिर्मितं देशं हिंदुस्थानं प्रचक्ष्यते ।।
"The land created by the gods which stretched from the Himalayas to the Indu (i.e. Southern) ocean is called Hindusthan
- Himalyam Samarabhya
- Yavadindusarovaram
- Tam Deonirmitam Desham
- Hindusthanam Prachakshate
Translation: "The country which starts from Himalayas and the borders of which reach till the Indian Ocean (Indu Sarovaram), has been created by devas and its name is Hindusthan.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இமயமலையில் தொடங்கி இந்திய பெருங்கடல் வரை எல்லை கொண்டிருக்கும் நாட்டை தேவர்கள் (இறைவன்கள் ) படைத்தனர் அதன் பெயர் இந்துஸ்தான் என்று ரிக் வேதம் கூறுகின்றது.
வேதங்களின் படியும் இந்திய அரசிலமைப்பின்படியும் இந்து, இந்தியா என்ற பெயர் எப்படி, யாரை குறிக்கின்றது என்று பார்த்தோம். மற்றொரு பதிவில் இந்து மதம் என்பது உலகெங்கிலும் எப்படி இருந்தது, இருக்கின்றது, எப்படி உலகில் பெரும்பாலான மக்கள் இந்துக்களே என்பதை பற்றி பார்ப்போம்.
என்றும் அன்புடனும் உண்மையுடனும்
இராச.புரட்சிமணி
பிற்சேர்க்கை:
ரிக் வேதத்தில் விக்கி கூறும் பிரகஸ்பதி சுலோகம் இல்லை. எனவே விக்கியில் தவறு நிகழ்துள்ளது. பிரகஸ்பதி சுலோகம் எப்பொழுது இயற்றப்பட்டது என்பதற்கான விவரங்கள் தெரியவில்லை.
சிந்து நதியின் பெயரால் தான் இந்து/இந்தியா என்ற பெயர் வந்திருந்தாலும் அது ஆங்கிலேயேர்கள் கூறுவது போல எட்டாம் நூற்றாண்டில் முதன் முதலில் அராபியர்களால் இது பயன்படுத்தப்படவில்லை. அதற்கு .முன்பே இந்து, இந்தியா என்ற பெயர் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது என பின்வரும் கட்டுரை கூறுகிறது. இந்து, இந்தியா என்ற சொல்லானது கிரேக்கர்களாலும் ஏன் அசோகர் காலத்தில் கூட இந்து, இந்தியா என்பதற்கு ஒப்பான சொல் புழக்கத்தில் இருந்துள்ளது.

சௌரட்டியர்களின் புனித நூலான பால்வி அவெஸ்தா என்ற நூலில் 'சப்த சிந்து' என்று சொல்லுக்கு பதிலாக 'ஹப்த ஹிந்து' என்று குறிபிடப்பட்டுள்ளது. இந்த அவெஸ்தா கி.மு. 1000 முதல் 5000 ஆண்டுகளில் இயற்றப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனவே ரிக் வேதத்தை போல ஹிந்து என்ற சொல்லும் பழமையானதே என்று இக்கட்டுரை கூறுகின்றது.
.