வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

என்னுடைய ஓட்டு இரட்டை இலைக்கு உங்கள் ஓட்டு யாருக்கு?

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான்  இரட்டை இலைக்கு வாக்களிக்கப் போகிறேன். இரட்டை இல்லை அந்த தகுதியை பெற்றுள்ளதா என பார்த்தால். இரட்டை இலை அந்த தகுதியை பெறுகின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

காங்கிரசுக்கும், தி மு க விற்கும் இனி  எக்காலத்திலும் நான் வாக்களிக்க மாட்டேன் என்றுதான் நினைக்கின்றேன்.  ராஜபக்சே கொத்து கொத்தாய் ஈழத்தமிழர்களை கொன்று  குவிக்க காரணமாக இருந்த இந்த இரண்டு கட்சிகளும் இனி ஆட்சிக்கே வரக்கூடாது என்பதே என்னுடைய ஆசை.

இந்திய அளவிலும் உலக அளவிலும் தமிழனை தலைகுனிய வைத்த 2ஜி ஊழல் செய்த திமுகவுக்கும் பல ஊழல் புரிந்த காங்கிரசுக்கும் ஒட்டுபோடுபவர்களின் அறியாமயை என்னவென்று சொல்ல?

இன்று திமுகவிற்கும் காங்கிரசுக்கும் ஒட்டுப்போடுபவர்கள் சொல்லும் ஒரே காரணம். மதசார்பின்மை.  அது என்ன மண்ணாங்கட்டி மதசார்பின்மை என தெரியவில்லை. பாஜ கவிற்கு ஆதரவு தருவார்கள், மந்திரி பதவி பெற்றுக்கொள்வார்கள் ஆனால் மதசார்பின்மை என்று சொல்லி இப்பொழுது அவர்களுக்கு ஒட்டுபோடவேண்டாம் என்பார்கள்.

குஜராத் கலவரத்தின் போதும் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தவர்கள் தான் இந்த் சிறுபான்மையினர் நலவாதிகள். ஆனால் அம்மா  பொடாவால் பயம் காட்டியவுடன்   உதவிக்கு பாஜக  வராததால் கூட்டணியை முறித்து  கொண்டு அடுத்து காங்கிரசுடன் கூட்டணி கண்டு ஊழல் புரிந்தவர்கள் தான் இவர்கள்.

இப்பொழுது கூட மோடி எனது நல்ல நண்பர், உழைப்பாளி என்று கூறி பாஜக கூட்டணிக்கு தயாராக இருந்த இவர்களுக்கு முஸ்லிம்கள் ஓட்டாம். கேட்டால் மதசார்ப்பின்மையாம்.

தமிழகத்தை பொருத்தவரை திமுக தரை மட்டமாக்கப்பட வேண்டும். கடந்த ஆட்சியில் திமுக வின் ரௌடிகளினால் மக்கள் பட்ட பாடு போதும்.

அம்மா ஆட்சியை பொருத்தவரை முதன் முதல் முதல்வரான பொழுது செய்த ஊழல்தான் அவர் செய்த ஒரே குற்றம்.

தன்னுடைய இரண்டாவது ஆட்சியில் எந்த  பிரச்சனையும் இல்லை. இன்று சென்னையில் தண்ணீர் பிரச்சனை இல்லை என்றால் அதற்க்கு அம்மாதான் காரணம்.

இன்றைய அம்மாவின் ஆட்சியில் பிரச்சனை இல்லையா என்றால் உண்டு. மின்வெட்டு தான் இந்த ஆட்சியின் மிகப்பெரும் குறை. 8000 மெகா வாட்டிலிருந்து  12000 மெகா வாட்டாக உற்பத்தியை பெருக்கி  இருந்தாலும் எத்தனை மணி நேரம் மின்சாரம் வீட்டிற்கு வருகிறது என்பதே பொது மக்களின் கணக்கு. அந்த விதத்தில் இது ஒரு குறையே.

மற்றபடி அம்மாவின் இந்த ஆட்சி திருப்தியாகவே உள்ளது. எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. மலிவு விலை உணவகம், மலிவு விலை குடி நீர்,சிற்றுந்து  என்பன மக்களுக்கு பெரிதும் பயன் அளிக்கின்றது. விலையில்லா மடிக்கணினி,வீட்டு உபயோக பொருட்கள், தானே புயல் நிவாரனத்தால் பலரும் பயன் அடைந்துள்ளனர்.

திமுகவின் ஆட்சியை போல மனஉலைச்சலை அம்மாவின் ஆட்சி தரவில்லை என்பதால் இரட்டை இலைக்கே  என்னுடைய ஓட்டு.

தமிழர்களை கொன்ற திமுகவிற்கா உங்கள் ஒட்டு?
பாஜக கூட்டணிக்கு நீங்கள் ஒட்டளித்தாலும் அது திமுகவுக்கு சாதகமாக அமையும். திமுக வெற்றி பெறவா உங்கள் ஓட்டு?

ஊழல் பற்றி கேள்வி கேட்டதினால்தான் எம்ஜிஆர்  வெளியேற்றப்பட்டார் அன்று முதல் இன்றவரை ஊழலில் திளைக்கும் திமுகவிற்கா உங்கள் ஒட்டு?

சிந்தித்து வாக்களியுங்கள். திருடர்கள் கையில் ஆட்சியை கொடுத்து விடாதீர்கள்.

என்னுடைய ஓட்டு இரட்டை இலைக்கு..உங்கள் ஓட்டு யாருக்கு?

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

பறையர்கள் பூர்வகுடிகளா? வந்தேறிகளா?

சென்ற பதிவில் திராவிடர்கள் வந்தேறிகள் அவர்கள் பூர்வகுடிகளான பறையர்களை அடிமைபடுத்திவிட்டனர் என்ற ஸ்டான்லி கருத்தை பார்த்தோம். இந்த பதிவில் பறையர்களும் வந்தேறிகளாக இருப்பதற்கான காரணங்களை ஆய்வோம்.

தீண்டாமையை பற்றி பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன/மறைக்கபடுகின்றன. அதற்க்கு என்ன காரணம் என தெரியவில்லை. யாரையோ காப்பாற்ற இது நடக்கின்றது. சில நேரங்களில் உண்மை கசக்கும். அதனால் அதை மறைக்க முயலுகின்றனர்.  தீண்டாமை பற்றிய ஆதி காலத்து கல்வெட்டுக்கள் கிடைத்தால் அதை அழித்து விட வேண்டும் என்று  கல்வெட்டு துறைக்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி காலம் காலமாக தீண்டாமை பற்றிய கல்வெட்டுக்கள் அழிக்கப்படுகின்றன.


இந்த பதிவில் ஒரு ஆதாரமற்ற கருத்தை முன் வைக்கிறேன். இதுவரை இவ்வாறு யாரும் சிந்தித்துள்ளார்களா இது சரியா தவறா என்றுகூட எனக்கு தெரியாது. ஆனால் இவ்வாறு இருக்கவும் வாய்ப்பு உள்ளது என்பதே அது.

மனுநீதியில் ஒரு வாசகம் வருகிறது. வர்ணங்கள் என்பது நான்குதான் ஐந்தாவது வர்ணத்திற்கு இடமில்லை என்பதுபோல ஒரு வாசகம்.

மனுநீதி இங்கு யாரோ சிலரை தன்னுடைய சட்ட புத்தகத்தில் அங்கீகரிக்க மறுக்கிறது. அது பறையர்களா என்பது தெரியவில்லை. அதேநேரத்தில் இவர்கள் நான்கு வர்ணங்களுக்குள்ளும் வரவில்லை. எனவே இது அவர்களை பற்றியதாக இருக்கலாம் என்று யோசிக்க வேண்டியதுள்ளது.

மனுநீதி ஆரியர்களால் எழுதப்பட்டது எனில் அவர்கள்  வந்தேறிகளான திராவிடர்களை மட்டும்  அங்கீகரித்துவிட்டு  பூர்வகுடிகளான  பறையர்களை  அங்கீகரிக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை. இந்த இடத்தில் இந்த நிலத்திற்கு அந்நியமானவர்களாக அவர்கள் இருக்க கூடும்.


இப்பொழுது சென்னையிலும் மேலும் பல பெரிய நகரங்களிலும்  நாம் காண்பது என்னவெனில் வேலைக்கு வெளியூரிலிருந்து வெளி மாநிலங்களிலிருந்து பலரும் வருகின்றனர். இவர்களில் நிறைய பணம் உள்ளோர் வசதியாக நகரத்தின் மத்தியில் வாடகை வீட்டிலும்,பணம் இல்லாத ஏழைகள் தனியாக ஒதுக்குபுறமாக தங்கி அது ஒரு காலனியாக மாறிவிடுகிறது.

அந்த காலத்திலும் செழிப்புற்ற இந்தியாவில் வெளிநாடுகளிலிருந்து மக்கள் பிழைப்புக்காக வந்திருக்க கூடும். அவர்களை ஊருக்கு ஒதுக்கு புறமாக தங்க வைத்திருக்கலாம். ஒவ்வொரு ஊரிலும் நீங்கள் பார்க்கலாம் பறையர்ககளுக்கு என்று தனியாக ஒதுக்குபுறமாக ஒரு தெரு இருக்கும். அங்குதான் அவர்கள் வசிப்பிடம்.

எனவே இன்றைய பறையர்கள் ஒரு காலத்தில் வெளிநாட்டிலிருந்து அல்லது வெளியிடங்களிலிருந்து வேலை செய்ய இங்கு வந்திருக்கலாம். இங்குள்ளவர்களுக்கு வேலை செய்ய ஒவ்வொரு ஊரிலும் அவர்களுக்கு என்று தங்க ஒதுக்குபுறமாக தங்க இடமளித்திருக்கலாம்.

இல்லை அவர்கள் பூர்வகுடிகள் தான் திராவிடர்கள்தான் அவர்களை அடிமைபடுத்திவிட்டனர் என்று ஸ்டான்லி என்னோடு வாதிடலாம். அடிமை படுத்தி இருந்தால் அவர்கள் ஒன்று திரண்டு திராவிடர்களுடன் சண்டையிட்டு இவர்களுக்கு என்று ஒரு நிலத்தை கைப்பற்றி இருக்கலாம். அவ்வாறு நடந்ததாக தெரியவில்லை (அல்லது ஆவணப்படுத்தப்படவில்லையா?).  மேலும்  பறையர்கள் ஏன்  இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஊரிலும் ஒதுக்கு புறத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஒவ்வொரு ஊரிலும் திராவிடர்கள் கூட்டம் கூட்டமாக வந்து இவர்களை சண்டையிட்டு ஒதுக்குபுறமாக தங்கவைத்து விட்டார்களா?


ஒவ்வொரு ஊரிலும் ஒரு பறையர் தெரு உள்ளது இது அடிமைப்படுத்தப்பட்டு ஏற்ப்பட்டிருக்க வாய்ப்புண்டா அல்லது அவர்களாகவே ஏற்றுக்கொண்டு அவ்வாறு தங்கிவிட்டார்களா என்று சிந்திக்க வேண்டும்.  அவர்கள் பூர்வகுடிகளாகவே இருந்தாலும் அடிமைபடுத்தித்தான் இருக்க வேண்டும் என்று அவசியமல்ல. மாறாக வசதியில்  ஒரு கூட்டத்தினர் முன்னேறும் மொழுது ஒரு சிலர் தானாகவே பின்தங்கிவிடுவதுண்டு. அவ்வாறு கூட அவர்கள் பின்தங்கி இருக்கலாம்.

இங்கு நான் கூற வருவது என்னவெனில் இன்று  பறையர் (தீண்டாமைக்கு உள்ளானவர்கள்) என்பவர்கள் அக்கால ஏழை மக்களே. அவர்களில் சிலர் பூர்வகுடிகளாகவும் சிலர் பிழைப்புக்காக வந்தவர்களாகவும் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் அவர்கள் அனைவரயும் அடிமைபடுத்தித்தான் வைத்திருந்தார்கள் என்பதைவிட அது ஏழை பணக்காரன் என்ற  வித்தியாசத்தால் உருவாகியிருக்கவேண்டும்.

இன்றும் பெரு  நகரங்களில் காலனி உருவாவது இந்த இரண்டுமுறையில் தான். அதாவது அந்த ஊரில் உள்ளவர்கள் கல்வியிலும் வசதியிலும் பின் தங்குவதால் தனித்து விடப்படுவது மறுபுறம் வெளியூரிலிருந்து வரும் ஏழைகளும் வசதியின்மையால் காலனியில் குடியேறுவது. இதில் மூன்றாவது ஒரு காரணமும் இருக்க வாய்ப்புண்டு. அது பற்றி வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்.


 வரலாற்றின் படியும் பரிணாமத்தின் அடிப்படையிலும் பூர்வகுடிகள் என்று யாரையும் கூற முடியாது. ஏன் ஏனில் எல்லோரும் ஒரே மூலத்திலிருந்து வந்துள்ளோம். எல்லோரும் ஒரே இடத்திலேதான் தோன்றியுள்ளோம். அது கிழக்கு ஆப்ரிக்கா என்று அறிவியலும் லெமூரியா கண்டம் என்று தமிழ்சார் அறிஞர்களும் கூறுகின்றனர்.

இவர்கள்  பூர்வகுடிகள் இவர்கள் வந்தேறிகள் என்பது என்னைப்பொருத்தவரை எந்த ஒரு இனத்திற்கும் எந்த ஒரு நிலப்பகுதிக்கும் பொருந்தாது. வேண்டும் என்றால் முதலில் குடியேறிவர்கள் என கூறி கொள்ளலாம். அப்படியே இருந்தாலும் ஒருவனுக்கு ஒருவன் சொந்தக்காரன் தானே? எந்த நிலப்பகுதியும் யாருக்கும் சொந்தம் இல்லையே?


குறிப்பு: இப்பதிவில் பறையர் என்பதை ஒரு சாதியை மட்டும் குறிக்காமல் தீண்டாமையால் பாதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த மக்களை குறிக்க பயன்படுத்தியுள்ளேன். தீண்டாமைக்கான சில காரணங்களை இப்பதிவில் தவிர்த்துள்ளேன்.  இப்பதிவின் நோக்கம் உண்மை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றுணர வேண்டும் என்பதே.  சாதியை ஒழிக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. எந்த ஒரு காரணத்திற்காகவும் சாதியை காட்டி காக்க அனுமதிக்க கூடாது, இட ஒதுக்கீடு உட்பட. அது  நம்மிடையே பிரிவினையையும் மோதலையும்  உண்டாக்குமே தவிர ஒற்றுமையை அல்ல.

வியாழன், 10 ஏப்ரல், 2014

மோடியின் வேட்பு மனு நிராகரிக்கப்படுமா?


வதோதராவில் போட்டியிடும் மோடி தன்னுடைய மனைவியின் பெயர் jashodapen (யசோதாபென்?) என்ற குறிப்பிட்டுள்ளார்.  மனைவயின் சொத்து விவரங்களை அளிப்பது கட்டாயம் எனில் அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும். ஏன் எனில் தன்னுடைய மனைவியின்  சொத்து விவரம் பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியுள்ளார்.

இதுவரை வேட்புமனுவில் திருமணமானவரா இல்லையா என்ற இடத்தை வெற்றிடமாகவே விட்டு வந்தார் மோடி. ஆனால் இம்முறை அந்த இடத்தை பூர்த்தி செய்துள்ளார். இதற்க்கு கூட ஏதேனும் தேர்தல் விதிதான் காரணமாக இருக்கும் என நினைக்கின்றேன்.

பிரிந்து வாழ்வது அவரவர் தனிப்பட்ட உரிமை. மோடியும் அவரது மனைவியும் அவ்வாறுதான் பிரிந்து வாழ்கிறார்கள் . ஆனால் சட்டப்படி விவாகரத்து ஆகாததால் மோடிக்கு மனைவி உண்டு  அதை அவரும் ஒப்புக்கொண்டுளார். எனவே மனைவியின் சொத்தை கணக்கில் காட்டாததால் முறைப்படி அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும். என்ன நடக்கின்றது என பார்ப்போம்.

குறிப்பு: மனைவியின் சொத்து விவரத்தையும் காட்ட வேண்டும் என்றே விதி உள்ளதாக அறிகிறேன். அப்படி ஒரு விதி இல்லையென்றால் மோடியின் வேட்புமனுவை நிராகரிக்க இயலாது என்பதை ஏற்கிறேன். இதற்க்கு சட்டம் பதில் சொல்லும் என நினைக்கின்றேன்.

புதன், 2 ஏப்ரல், 2014

நீங்கள் ஓட்டு போடும் கட்சி வெற்றி பெறுமா?

பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் பல முனை போட்டி நிலவுகின்றது. இதில் யாருக்கு எவ்வளவு தொகுதி  கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எந்த ஒரு கருத்து கணிப்பும் உண்மையாகாது என்றே தோன்றுகிறது.

அதிமுக அதிக ஒட்டு வங்கியை வைத்துள்ளது. அந்த தைரியத்தில் தான் அது தனியாக களத்தில் இறங்கியுள்ளது.   மோடி அலை அதிமுகவை கொஞ்சம் பாதிக்கவே செய்யும். அதிமுக பாஜக கூட்டணி அமைந்திருந்தால் நாற்பதும் இவர்களுக்கே கிடைத்திருக்க கூடும்.

திமுகவும் அதிமுகவிற்கு இணையாக ஒட்டு வங்கி வைத்துள்ளது. அதிமுக அதிருப்தி ஓட்டுக்கள் பிரிவதால் அது நிச்சயமாக திமுகவிற்கு சாதகமாக அமையாது.

பாஜக கூட்டணியை குறைத்து மதிப்பிடுவதற்க்கில்லை. மோடி அலை என்பது நிஜம். ஆனால் அது எத்தனை ஓட்டுக்களை அல்லது தொகுதிகளை கைப்பற்றும் என்பது யாருக்கும் தெரியாது.

காங்,இடதுசாரி, ஆப் அனைத்துக்கும் பெரிய ஆப்புதான்.

இருப்பினும் நீங்கள் ஒட்டு போடும் கட்சி வெல்லுமா இல்லையா என்பதை நீங்களே தெரிந்து கொள்ள ஒரு சிறிய  கருத்து கணிப்பு இங்கே. மேலே வலது பக்கம் உங்களது வாக்கை தவறாமல் செலுத்துங்கள். சில நாட்களில் உங்கள் கட்சியின்  நிலைமை இங்கே உறுதி செய்யப்படலாம்.

செவ்வாய், 25 மார்ச், 2014

தமிழக ஜிகாதிகள் சிரியாவில்?

இன்றைய் இந்து நாளிதழில் வந்துள்ள செய்தி  மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றது. தமிழத்தை சேர்ந்த இருவர் ஜிகாதிகளாக சிரியாவில் பயிற்சி பெறுகிறார்கள் என்பதுதான் அந்த செய்தி. அதுமட்டுமல்லாமல் ஜிகாதி அமைப்புகள் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியிலிருந்து ஆள் சேர்ப்பதாகவும் அது தெரிவிக்கின்றது.ஜிகாதிகளின்  தொடர்பு தலை நகரத்தோடு மட்டுமல்லாமல் கடலூர் வரை சென்றுள்ளது என்பது மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

மதத்தின் பெயரால் மூளை சலவை செய்யப்பட்டு இவர்கள் பலிகடா ஆக்கப்படுகின்றனர். மதப்பிரச்சாரம் செய்வதாக கூறிக்கொண்டு ஜிகாதிகளுக்கு சிலர் ஆள் பிடிக்கின்றனர். வலையுலகிலும் சிலர் ஜிகாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது நமக்கு தெரிந்ததே.


இதற்க்கு எதிராக ஏன் யாருமே குரல் கொடுப்பதில்லை? ஏன் யாரும் இதை தடுத்து  நிறுத்த முன்வரவில்லை?
ஏற்க்கனவே  சிலர் முஸ்லிம் தீவிரவாதிகள் என்கின்றனர் இதில் நாமும் குரல் எழுப்பினால் அவர்களை புண்படுத்தும் என்று நினைக்கிறார்களா? பயமா?அல்லது நமக்கு யாரும் ஒட்டு போட மாட்டார்கள் என்று நினைக்கிறார்களா என தெரியவில்லை.


எல்லா மதத்திலும் மத வெறியர்கள் உள்ளனர். இதை எல்லா மதத்தினரும் ஒத்து கொள்ள வேண்டும்.
இந்து மதத்தில் மத வெறியர்கள் தலை தூக்கும் பொழுது அவர்கள் கண்டிக்கப்படுகிறார்கள் தண்டிக்கப்படுகிறார்கள் . ஆனால் சில முஸ்லீம்கள் தண்டிக்கப்ப்படும்போழுது இது சதி என்று அவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.

முஸ்லீம்கள்  தங்கள் மதத்தில்  ஜிகாதிகள் உள்ளனர் என்பதை ஒத்துக்கொண்டு அவர்களை எப்படி நல்வழிப்படுத்துவது என்று சிந்திக்க வேண்டும். ஜிகாதிகள் தண்டிக்கப்படும்பொழுது அதை வரவேற்க முடியவில்லை என்றாலும் அது அது பார்ப்பன யூத சதி என்று உண்மையை மறைக்க முயல வேண்டாம்.

அந்த மதத்தில் இல்லையா? இதை அவர்கள் செய்யவில்லையா என்று பேசுவது உங்கள் மக்களின் தலையில் நீங்களே  மண் அள்ளிப்போடுவதாகத்தான் அர்த்தம்.

இப்பதிவின் நோக்கம் இதுபற்றி விளம்பரம் கொடுப்பதல்ல...முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதே இப்பதிவின் நோக்கம். இப்பதிவு உங்கள் மனதை புண்படுத்தினால் என்னை மன்னிக்கவும்.நாளை உங்கள் மகன் ஜிகாதியாக மாறாமல் இருக்கவேண்டும் அதற்காக சிந்தியுங்கள்...செயல்படுங்கள்.

இதைபடிப்பவர்களில் ஒரு சிலர் என் மகன் ஜிகாதி ஆனால் எனக்கு பெருமைதான் என்று கூட நினைக்கலாம் உங்கள்  இனத்தை நீங்களே  அழிக்க நினைத்தால் அதற்க்கு பிறர் என்ன செய்ய இயலும்? ஜிகாதிகளுக்கு சுவனம் என்பது வெறும் கட்டு கதை என்பதை குரானையும் ஹதீசுகளையும்  நன்றாக படித்து பார்த்தலே புரியும். படித்து புரியவில்லை என்றால் ஜிகாத் பற்றிய உண்மையை  உணர்ந்த ஒருசில முஸ்லிம்கள் எழுதியவை இணையத்தில் உள்ளன அதை தேடிப் படிக்கவும். சுவனப்பிரியர்கள் ஜிகாத் ஒழிப்பாளர்களாக மாறவேண்டும். சிந்திப்பார்களா?

சுட்டி 1
சுட்டி 2

புதன், 19 மார்ச், 2014

என்னது? தீண்டாமைக்கு காரணம் திராவிடர்களா?

நமது திராவிடவாதிகள் தீண்டாமைக்கு காரணம் ஆரியர்கள் எனப்படும் பார்பனர்கள் தான் என எங்கும் முழக்கமிடுவதை  நாம் அறிவோம்  ஆனால் தீண்டாமைக்கு காரணம் திராவிடர்கள்தான் என்று ஸ்டான்லி ரைஸ் என்ற அறிஞர் கூறியுள்ளார்.

அவர் என்ன கூறினார்   எனில் பறையர்கள்தான் இந்த நிலப்பகுதியின் பூர்வகுடிகள். வந்தேறிகளாக வந்த திராவிடர்கள் இவர்களை வென்று சிறுமைபடுத்திவிட்டார்கள் அல்லது அடிமையக்கி  விட்டார்கள் .இதற்க்கு பிறகு ஆரியர்கள் வருகிறார்கள். அவர்கள் திராவிடர்களை வென்று சிறுமைபடுத்தி விட்டார்கள். இருப்பினும் அசுத்தத்தை சுத்தம் செய்யும் வேலைகளை அனைவரும் பூர்வகுடிகளான பறையர்கள் மேல்   திணித்து விட்டார்கள். தீண்டாமை எனபது  அடிமைபப்டுத்தப்பட்ட இனம்  மற்றும் அசுத்தம் சம்பந்தப்பட்ட தொழில்களால்தான் வந்தது என்றார் ஸ்டான்லி ரைஸ்.

ஆனால்  அம்பேத்கர் இது தவறான கருத்து என்று கூறிவிட்டார். அம்பேத்கரை  பொருத்தவரை ஆரியர் திராவிடர் என்ற இன பாகுபாடையும் அவர் ஏற்கவில்லை.அனைவரும் ஒரே இனத்தை சார்ந்தவர்கள் என்பதே அவரின் வாதம்.

இதை நான் இங்கு பதிய காரணம் இப்படியும் ஒரு வாதம் இருந்தது என்று நாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே.இதை வைத்து புதிய வெறுப்பை வளர்க்க வேண்டும் என்பது  எனது நோக்கம் அல்ல. அனைவரும் உண்மை எப்படியும் இருக்கலாம் என்றுணர்ந்து வெறுப்பை விட வேண்டும் எனபதே எனது நோக்கம். நடந்தது ஏதோ நடந்தது. அதை ஏற்றுக்கொண்டு இனி எப்படி ஒற்றுமையாக,அமைதியாக,மகிழ்ச்சியாக வாழ்வது என்பதில் மட்டுமே அனைவரது கவனமும் இருக்க வேண்டும்.

என்னைபொருத்தவரை மேலே கூறியது முழுமையான உண்மையும்  அல்ல அதே நேரத்தில் அது முற்றிலும் தவறான கருத்தும் அல்ல.

ஸ்டான்லி ரைஸ் மற்றும்  அம்பேத்கர்  இருவர் கூறுவதிலும்
கொஞ்சம்  உண்மையும் உள்ளது  கொஞ்சம் தவறும் உள்ளது.

என்னுடைய கருத்தை மற்று ஒரு நாளில் பதிவு செய்கிறேன்.
அல்லது எப்பவும் போல அப்படியே விட்டாலும் விட்டுடலாம் :)

இது தொடர்பான சுட்டி 

வெள்ளி, 18 அக்டோபர், 2013

ஊடகங்கள் இசுலாமியத் தீவிரவாதம் என்றழைப்பது சரியா தவறா?

இசுலாமியத்  தீவிரவாதம் என்றழைப்பது  சரியா தவறா என்று உலகின் எந்த
மூலையில் விவாதம் நடந்தாலும்  அது சரியே என்று வாதிட்டு என்னால் வெல்ல முடியும். ஆனால் சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.

உலகில் உயிரோடு இருப்பவர்கள் முஸ்லிம்களாக மட்டுமே இருக்கவேண்டும்.
அப்படி முஸ்லிம் அல்லாதவர்கள் மதம் மாற்றப்பட வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என்று குண்டு வைப்பவர்கள் தீவிரவாதிகள்,மதப் பிரச்சாரம்
செய்பவர்கள் மதவாதிகள். இப்படி செய்பவர்கள் வெகு சிலரே.

ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் இதனோடு எந்த விதத்திலும் தொடர்பு
கொள்ளாமல் அமைதியாக வாழ்கிறார்கள்,அமைதியை விரும்புகிறார்கள். ஊடகங்கள்
இசுலாமியத் தீவிரவாதம் எனும் பொழுது இந்த பெரும்பாலான முஸ்லிம்களையும்
இது கடுமையாக பாதிக்கும்.

என்னடா நம்ம மதத்தை தீவிரவாதம் என்கிறார்கள், நம்மையும் தீவிரவாதியை பார்ப்பது போல பார்க்கிறார்கள் என்று ஒருவனின் மனது  பல இன்னல்களுக்கு உள்ளாகும். ஒரு கட்டத்தில் ஏன் நான் தீவிரவாதி ஆக கூடாது என்று  எண்ண ஆரம்பிக்கலாம்.

எனவே இசுலாமியத்  தீவிரவாதம் என்ற சொல்லை இனி ஊடகங்களும், யாரும் பயன்படுத்துவதை கைவிட வேண்டும்.

முஸ்லீம்களில் சிலர் தீவிரவாதிகளாக இருப்பது உண்மை. இவர்களை, இவர்கள் செய்யும் செயலை எவ்வாறு  அழைப்பது என்ற கேள்வி எழுகிறது. குரானில் ஜிகாத் என்று கூறப்படும் ஒரு விடயத்தை மனதில் வைத்துத்தான் இவர்கள் கொடிய செயல்களில்  ஈடுபடுகிறார்கள். எனவே இந்த மாதிரி குற்றங்களை, குற்றம் புரிபவர்களை ஜிகாத் தீவிரவாதம்,ஜிகாத் தீவிரவாதி என்று  அழைக்கலாம். அல்லது வேறு ஒரு சொல்லை
பயன்படுத்தாலாம்.

தயவு செய்து மதத்தோடு தீவிரவாதத்தை தொடர்பு படுத்தி ஒட்டுமொத்த சமுதாயத்தையும் துன்புறுத்த வேண்டாம் என்று ஊடகங்களை கேட்டுக்கொள்கிறேன்.

செவ்வாய், 8 அக்டோபர், 2013

காங்கிரசுக்கும், திராவிட கட்சிகளுக்கும் ஞானி சொம்பு தூக்காமல் திருந்துவாரா?


தன்னுடைய சமீபத்திய கட்டுரையில் ராமதாசும் மணியனும் எப்பொழுது திருந்துவார்கள்  என்று ஞானி கேள்வி எழுப்பியுள்ளார். எனக்கு என்ன சந்தேகம் எனில் இவர் காங்கிரசுக்கும் திராவிட கட்சிகளுக்கும், கம்யுநிச தோழர்களுக்கும் மறைமுகமாக சொம்பு தூக்காமல் திருந்துவாரா என்பதே.

ரமாதாசும் தமிழருவி மணியனும் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.ஞானி என்ன செய்கிறார் என்பதை முதலில் அவர் அறிகின்றாரா  என்பதே தெரியவில்லை.

சாதி ரீதியில் ராமதாசும் மத ரீதியில் மோடியும் வேண்டாம் என்கிறார் ஞானி. இது ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

சரி இவர்களுக்கு மாற்றாக அவர் யாரை வழிமொழிகிறார் என்பதே இங்கே சிக்கல்.

மத்தியில் இமாலய ஊழலில் திளைக்கும் காங்கிரசை இவர் ஆதரிக்கிறாரோ என்ற சந்தேகம் வருகிறது. காங்கிரசு ஆட்சிக்கு வந்தால் தான் இவருடைய சிவப்பு சட்டை தோழர்களும் ஆட்சிக்கு வரமுடியும். இதனால் அவர் மோடியை எதிர்க்கிறாரா?

இல்லை தமது இடதுசாரி கட்சிகளுக்கு மூன்றாவது அணி அமைக்க முயல்கிறாரா என தெரியவில்லை.

ஆண்டவனுக்கு அடிமை என்பது மதங்களின் கூற்று. அரசாங்கத்திற்கு அடிமை என்பது இடதுசாரிகளின் மறைமுக கூற்று.
எனவே இடதுசாரிகளின் கொள்கைகளும் எனக்கு ஏற்ப்புடையது அல்ல.

தமிழகத்தில் சாதிக் கட்சி நடத்தும் ராமதாசு வேண்டாம் என்கிறார்.இவர் மட்டும்தான் இவர் கண்ணுக்கு தெரிவார். ஆனால் இன அரசியல் செய்த,செய்யும் திராவிட கட்சிகள் வேண்டும் என்று மறைமுகமாக கூறுகிறார்.

சாதி,மத கட்சிகள் வேண்டாம் என்பதே என்னுடைய நிலைப்பாடும். இவைகளுக்கு  மாற்றாக யாருக்கு ஒட்டு போடுவது என்பதையும் ஞானி கூறினால் பலருக்கு உதவியாக இருக்கும்.

ஒருவேளை எல்லா மக்களும் நோட்டா என்ற தோட்டாவை  மட்டும்  பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறாரோ என்னவோ.

நடைமுறையில் இருக்கும் எந்த சித்தாந்தமும் தற்போதைய உலக  சூழலுக்கு ஏற்ப்புடையதல்ல.

சரி வேறு எந்த சித்தாந்தம் தேவை என்பதை நான் சொல்லியா தெரியவேண்டும்.


திங்கள், 7 அக்டோபர், 2013

பெரியாரும் ராமதாசும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா?


பெரியாரின் செய்கையும் ராமதாசின் செய்கையும் ஒன்று போலவே தெரிகிறது.பெரியார் என்ன முட்டாள்தனத்தை செய்தாரோ அதேபோல ஒரு முட்டாள்தனத்தைத் தான் ராமதாசும் செய்கிறார்.

பெரியார் பார்பனர்கள் எனும் இனத்திற்கு எதிராக செயல்பட்டார்.
ராமதாசு தலித்துகளுக்கு எதிராக செயல்படுகிறார்.

இருவர் செய்கையிலும் சிலருக்கு நன்மை சிலருக்கு தீமை. இருவர் செய்கையையும் நான் ஆதரிக்கவில்லை.

பார்பனர்களிடம் தவறு இருந்திருந்தால் தவறு செய்யாத நல்ல பார்ப்பனர்களை அரவணைத்துக் கொண்டு அவர்களைக்கொண்டே பார்ப்பனர்களை திருத்த முயன்றிருக்க வேண்டும். மாறாக அவர் பார்ப்பன இனத்தையே அழிக்கும் எண்ணம்  கொண்டதாக தெரிகிறது.ஒட்டுமொத்த இனத்தையும் எதிரியாக சித்தரித்துள்ளார்.

இதேபோலத்தான் தலித்துகளில் சிலர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் ஒட்டுமொத்த தலித்துகளுமே தவறு செய்வதுபோல ஒரு பிம்பத்தை ராமதாசு ஏற்ப்படுத்துகிறார்.

எல்லா ஜாதிகளிலும் மதங்களிலும் தவறு செய்பவர்கள் இருக்கின்றார்கள் அதே நேரத்தில் எல்லா ஜாதிகளிலும் மதங்களிலும் தவறு செய்யாதவர்களும் உள்ளார்கள். எனவே  ஒட்டுமொத்த இனத்திற்கு, ஜாதிக்கு,மதத்திற்கு எதிராக மக்களை திரட்டுவது என்பது மகா முட்டாள்தனம். அது மனிதத்திற்கு எதிரானது.

தவறை திருத்துவதுதான் சீர்திருத்தமே தவிர தவறு தவறு செய்பவர்களின் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் எதிரியாக பார்ப்பது அல்ல. சீர்திருத்தவாதிகளாக விரும்புபவர்கள் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

தவறு செய்பவர்களை எப்படி மனிதர்களாக மாற்றுவது என்று ஆராய்வதே,  சிந்திப்பதே, அந்த வழியில் செயல்படுவதே உண்மையான மனிதம்.

ராமதாசை எதிர்மறையாக நான் பெரியாருடன் ஒப்பிட்டேன் ஆனால் அவரை நேர்மறையாக ஒப்பிட்டதே பல தலித்துகள்தான். பெரியாருக்கு அடுத்தபடியான நல்ல தலைவராக ராமதாசு சிலபலரால் பார்க்கப்பட்டுள்ளார் எனபது மறுக்க முடியாத உண்மை.

 தன்னுடைய  தவறை உணர்ந்து ராமதாசு தலித்துகளுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்காமல் தவறு செய்பவர்களுக்கு எதிராக மட்டும் மக்களை ஒன்றிணைத்து தவறு செய்பவர்களை திருத்துவார் எனில் அவரை மனிதம் போற்றும். இல்லையேல் சிலர் அவரை ஜாதி தலைவராகவும் பலர் ஜாதி வெறியராகவும் பார்ப்பர். முடிவு அவர் கையில்.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

பகுத்தறிவுக் குருடர்கள் எங்கே?

சாதிக்கொரு சுடுகாடு ஏன் என்று பகுத்தறிவுக் கேள்வி எழுப்பிய பகுத்தறிவுவாதிகள் மதத்திற்க்கொரு சுடுகாடு கேட்கப் படும் பொழுதும், ஒதுக்கப்படும் பொழுதும் அதையொட்டி பிரச்சனை நடக்கும் பொழுதும் ஒன்றுமே,நடக்காதது போல் குருடர்களாகவும், செவிடர்களாகவும் இருப்பது ஏன்?

இந்துமதம் என்றால் மட்டும்தான் பகுத்தறிவு வேலை செய்யும் பிற மதங்கள் என்றால் மூளை மழுங்கிவிடுமோ.?
மதக்கலவரம் வரும்வரை காத்திருந்து அதைவைத்து ஒட்டு அறுவடை செய்ய பகுத்தறிவுவாத , கம்யூநிச, தலித்திய கட்சிகள் காத்திருப்பதாகவே தெரிகிறது.
ஜாதியை  ஒழிக்க பாடுபடுவதாக கூறும் இவர்கள் மதங்களுக்கு துணைபோவதன் மூலம் இவர்களின் உண்மையான முகத்திரை கிழிகிறது.

இவர்கள் அறியாமையில் இருந்தால் உண்மையில் மதங்களை ஒழிக்கவும் பாடுபடவேண்டும். செய்வார்களா?.

 
Related Posts Plugin for WordPress, Blogger...