முகமது நபிக்கு 25 வயதில் திருமணம் நடந்தது. அவர் தன்னை விட பதினைந்து வயது மூத்த பெண்ணை மணந்து கொண்டார். இந்தப்பெண் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் இப்பெண்ணை மணக்க வசதி ஒன்று தான் காரணமோ அல்லது விதவைக்கு மறுவாழ்வு தர வேண்டும் என்ற நல்லெண்ணமா என்று தெரியவில்லை.
ஒரே நாளில் குரான் வழங்கப்படவில்லை. அந்த ரமலான் மாதம் ஆரம்பித்து அவர் உயிரோடு இருந்தவரை (23 ஆண்டுகள் )ஜிப்ரேல் கூறியவைகளாக நபிகள் கூறியவைகள் தான் குரான்.
திருமணத்திற்கு பிறகு தான் இவர் தியானம் அல்லது தவத்தில் ஈடுபடுகின்றார்.
இறை தரிசனமும் பெறுகிறார். குரானின் வரிகள் ரமலான் மாதத்தில் தான் அவருக்கு முதல் முதலில் கிடைக்கின்றது. அதை ஜிப்ரேல் அல்லது கப்ரியல் தான் தனக்கு சொல்வதாகவும் கூறுகிறார்.
ஒரே நாளில் குரான் வழங்கப்படவில்லை. அந்த ரமலான் மாதம் ஆரம்பித்து அவர் உயிரோடு இருந்தவரை (23 ஆண்டுகள் )ஜிப்ரேல் கூறியவைகளாக நபிகள் கூறியவைகள் தான் குரான்.
உண்மையை சொல்ல வேண்டும் எனில் ஜிப்ரேல் அவருக்கு தோன்றிய சில காலங்களில் முகமது நபி தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் வரலாறு கிடைக்கின்றது.
இறை தரிசனம் அல்லது குண்டலி விழித்தெழுதல் சாதாரண விடயம் கிடையாது. அது மனிதனுக்கு முதலில் தரும் துன்பங்களும் பிறகு தரும் இன்பங்களும் மிக மிக அதிகம்.
முதலில் வரும் துன்பத்தால் சிலருக்கு பித்து பிடித்து பைத்தியம் ஆன கதையும் உண்டு. சிலருக்கு நோய்களும் ஏற்ப்படுவதுண்டு. சிலர் தூக்கம் கெட்டு திரிவதும் உண்டு.
முகமதுவுக்கு அருகில் சொல்லிக்கொள்ளும் படி குரு யாரும் இல்லாததால் துன்பத்தை தாங்க முடியாமல் அவர் தற்கொலைக்கு முயன்று இருக்கின்றார் என நினைக்கின்றேன்.(ஆதலால் தான் குரு இல்லாமல் சில தியானங்களை செய்யக்கூடாது என்பர்).
இவர் கவலையாக இருந்த காலங்களில் அவரது மனைவி ஊக்கம் தந்து தொடர்ந்து தியானம் செய்ய வைத்திருக்கின்றார். தற்க்கொலைக்கு முயன்ற காலங்களில் ஜிப்ரேல் தடுத்ததாகவும் கூறப்படுகின்றது.
அந்த ரமலான் மாத நிகழ்விற்கு பிறகு அவர் தியானம் செய்தாரா என தெரியவில்லை ஆனால் தொழுகை செய்ய ஆரம்பித்து விட்டார். இவரது மனைவி மற்றும் சுற்றத்தார்கள் என தனியாக சென்று தொழுகை செய்கின்றனர். இவர்கள் வேறு மதத்திற்கு செல்வதால் அங்கே பிரச்சனை ஆரம்பாகின்றது. பிறகு சண்டை, இசுலாமை எதிர்த்தவர்கள் இசுலாமில் சேருதல், வேறு நாட்டிற்க்கு பயணித்தல், போர் என்று வாழ்க்கை பயணிக்கின்றது. இசுலாமும் வளருகிறது.
மக்கள் மத்தியில் இவர் சில அற்புதங்களை நிகழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.
ஒருமுறை நபி நிலவை இரண்டாக பிரித்து காட்டியதாகவும், தொடர்ந்து சில நாட்கள் மழை பொழிய வைத்ததாகவும், கம்பை பாம்பாகவும் வெள்ளை கயிறாகவும் மாற்றியதாக சொல்லப்படுகிறது.(கம்பை மாற்றியது மோசேஸ் நபி என்று கூறுகிறார்கள். தவறை சுட்டிகாட்டிய சகோதரர்களுக்கு என் நன்றிகள் )
இந்த அற்புதங்கள் மூலம் அவருக்கு இறைசக்தி கிடைத்துள்ளது உறுதியாகிறது. இவர் ஒரு யோகி என்பதும் உறுதியாகிறது.
இவ்வாறு யோக, ஆன்மீக வழியில் சென்ற முகமது நபி தொடர்ந்து அந்த வழியில் பயனிக்கவில்லையோ என்ற சந்தேகம் எழுதவதை தவிர்க்க முடியவில்லை.
அதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களாக கூறப்படும் சில நிகழ்வுகளும், சில குரான் வசனங்களும் தான் காரணமாகின்றன.
அல்லா விரும்பினால் தொடரும்........