வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

புட்டபர்த்தி சாய் பாபா ஏன் சந்நியாசி ஆனார்?



(நேயர் விருப்பம்: வாசகி சுந்தரி அவர்கள் புட்டபர்த்தி சாய் பாபா ஏன் சந்நியாசி ஆனார்? என்ற கேள்வி எழுப்பினார், அந்த கேள்விக்கான ஒரு சிறு அலசலே இது.நேற்று தவிர்க்க முடியாத காரனங்களால் பதிவிட முடியவில்லை. நேற்றைய பதிவை எதிர்பார்த்தவர்கள் மன்னிக்கவும்.)
.
சாய் பாபாவின் ஜாதகம்: விருசிக லக்னம், லக்னத்தில் சனி, சுக்கிரன், சூரியன் மற்றும் புதன்.  இரண்டில் கேது, மூன்றில் குரு, ஆறில் செவ்வாய்,எட்டில் ராகு மற்றும் சந்திரன். 

அவருடைய ஜாதகத்த பார்த்த  உடனே கண்ணுக்கு தெரிவது...அவருடைய லக்னத்தில் நான்கு கோள்கள் உள்ளது.
யாருடைய ஜாதகத்தில் நான்கு அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட கோள்கள் ஒரே வீட்டில் உள்ளதோ  அவர்கள் சன்னியாசியாய் ஆவார் என்பது ஒரு விதி. அந்த விதி இவருக்கு சரியாக நடந்துள்ளது. (இவருக்கு மட்டும் அல்ல பெரும்பாலானோருக்கு இந்த விதி பொருந்தியுள்ளது. இந்த அமைப்புள்ளவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டுள்ளனர். .....இந்த அமைப்புள்ள சிலர் திருமணத்திற்கு பிறகு கூட சந்நியாச வாழ்க்கைக்கு மாறிவிடுவர்.)

யாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்படும்? என்ற பதிவில் தியான அனுபவம் யாருக்கு ஏற்படும் என்று குறிப்பிடிருந்தேன்.  

அதில் சொல்லாத ஒரு விடயம் .  லக்னாதிபதியும், லக்னமும் ஐந்தாம் வீடு, ஐந்தாம் அதிபதி, கேது மற்றும் குரு இவர்களுடன் சம்பந்தம் பெற்றாலும் ஒருவருக்கு ஆன்மீக ஈடுபாடு ஏற்படலாம்.

கொஞ்சம் ஆழமாக சென்று பார்த்தால்... ...
விருசிக லக்னத்தில் பிறந்த சாய் பாபாவின் லக்னாதிபதி செவ்வாய்,  மேஷத்தில் கேதுவின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். ஐந்தாம் அதிபதியான  குரு, லக்னாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். இந்த தொடர்பும்  அவருக்கு ஆன்மீக மற்றும் சந்நியாச வாழ்க்கையை  அளித்திருக்கும். தங்கள் கருத்து?

சாய் பாபா பற்றிய மற்றொரு பதிவிற்கான  சுட்டி


வியாழன், 28 ஏப்ரல், 2011

யாருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்கை அமையும்? பகுதி-2

முந்தைய பதிவு முன்னோட்டம்...இது  கொஞ்சம் ஆழம்.
விட்டு கொடுத்து வாழ்வதிலும் சிக்கல் வரலாம். நான் மட்டும் தான் விட்டு கொடுக்கனுமா ஏன் அவள்/அவன் விட்டு கொடுக்க கூடாதா என்ற கேள்வி அடுத்து எழும். இரண்டு பேருமே விட்டு கொடுத்து போக வேண்டும். விட்டு கொடுப்பதிலே போட்டி வருவதுதான் நல்லது. உனக்காக நான் இத கூட செய்யா மாட்டேனா என்று ஒருவர் மாறி ஒருவர் விட்டு கொடுப்பதிலே தான் மகிழ்ச்சியே . 

இங்கே ஒருவர் மட்டும் விட்டு கொடுக்க மற்றவர் இப்படியே அவர் நம் வழிக்கு வந்து விடுவார் என்று நினைப்பது அரக்கத்தனம்.   அவர்களுக்கு எடுத்த சொல்ல வேண்டியது தான் அடுத்த வேலை. மனம் திறந்து பேசுங்கள். புரிய வைக்க முயலுங்கள். பேசினாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்.("அதுல" கொஞ்சம் அகிம்சையும் முயற்சி பண்ணி பாக்கலாம்)  நீங்கள் விட்டு கொடுப்பது மற்றவர்க்கு தெரிய வேண்டும் அப்பொழுதுதான் அவர்களும்...நமக்காக இவ்வளவு விட்டு கொடுத்திருக்கார் ஏன் நாமும் விட்டு கொடுத்து போக கூடாது என்ற நல்லெண்ணம் வரும். 


ஜாதக ரீதியாக பார்த்தால் ஏழாம் வீடுதான் திருமணத்திற்கு ரொம்ப முக்கியம்.
ஏழாம் வீட்டில் எந்த கோள்களும் இல்லாமல் இருத்தலே நலம்.(அப்படின்னு தாங்க நினைக்கிறேன்). ஏழாம் வீட்டில் சுப கோள்கள்  இருந்தாலும் அதனாலயும் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. அப்படி கோள்கள் இருக்கிற பட்சத்தில் அது சுப கோள்களா இருந்தா கொஞ்சம் பரவாயில்லை .  சுபர்  பார்வை மிக நல்லது.
பாவிகள் அமர்ந்தால் கொஞ்சம் சிக்கல் அதிகம் தான்.

அதேபோல் ஏழாம் வீட்டு அதிபதியும் சுபராக இருத்தல் நலம். இது மகிழ்ச்சியான மணவாழ்க்கையும், அழகிய  துணையையும் தரும்.

உங்க லக்னத்துக்கு ஏழாம் வீடு பாவி வீடா இருந்தா கொஞ்சம் சிக்கல் தான்.

ஏழாம் வீட்டு அதிபதி சுபரின் நட்சத்திரத்தில் இருத்தல் நல்லது, பாவியின் நட்சத்திரத்தில் இருந்தால் கொஞ்சம் சிக்கல் வரும்...வரலாம்.

அதேபோல் சுக்கிரனும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். சுபர் பார்வை நலம், பாவர் பார்வை சிக்கல் தரும். சுபர் சேர்க்கை நலம், பாவர் சேர்க்கை சிக்கல் தரும்.


ஏழாம் வீடு, ஏழாம் அதிபதி, சுக்கிரன் இவர்கள் இரண்டு தீய கோள்களுக்கு நடு வீட்டில் மாட்டினால்  சிக்கல் தான்.


அதிபதி மற்றும் சுக்கிரன் சுபர், நட்பு கோள்கள் நட்சத்திரத்தில் இருத்தல் மிக்க நன்று.
  இந்த கோள்கள் நவாம்சத்திலும் நல்ல நிலையில் இருத்த்தல் மிக்க நன்று.
(நடக்கிற தசை புத்திய பொறுத்து, கோள்சாரத்தை பொறுத்து இந்த விதிகள் வேலை செய்யும் அல்லது செய்யாமல் போகலாம்)

எது எப்படி இருந்தாலும் மனம் விட்டு பேசி, கடவுள் மேல பாரத்த போட்டுவிட்டு, விட்டு கொடுத்து யாரு போறாங்களோ அவங்களுக்கு  திருமண   வாழ்க்கை  மகிழ்ச்சியாக    அமையும்.

புதன், 27 ஏப்ரல், 2011

யாருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்கை அமையும்?



இந்த காலத்துல பல பேருக்கு திருமணம் நடக்கிறதே குதிர கொம்பா இருக்கு. அப்படியே நடந்தாலும் அதில் பல பேருக்கு அந்த அளவுக்கு மகிழ்ச்சி கிடைப்பதில்லை. ஏன் என்றால் திருமணம் எனபதே "அந்த" சுகத்த அனுபவிக்க தான் என்ற மன நிலை பல பேருக்கு இருக்கு. கொஞ்சம் நாள் "அந்த" சுகத்தினால் வண்டி நல்லா ஓடும்.  (சிலருக்கு முதல் நாளே ஏமாற்றம் தான்.."அது" அப்படி இருக்கும் "இது " இப்படி இருக்கும் என்ற அதீத கற்பனைகளால். ஏப்படி இருந்தாலும் பரவாயில்ல அப்படின்னு மனநில இருந்தா தான் எல்லோர்க்கும் நல்லது)

ஆனா அதுவே கொஞ்ச நாளைக்கு அப்புறம் இதுதானா? இவ்வளவு தானா? என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது.
இதே நேரத்தில் இருவருக்கும் உள்ள நல்ல கெட்ட பழக்கங்கள் இருவருக்கும் தெரியவர ஆரம்பிக்கின்றது.
ஒருவருக்கு உள்ள பழக்க வழக்கம் மற்றொருவருக்கு பிடிப்பதில்லை. அவள் தான் நமக்கு தகுந்த மாதிரி மாற வேண்டும் என்று இவனும், அவன் தான் நமக்கு தகுந்த மாதிரி மாற வேண்டும் என்று இவளும்  நினைக்கின்றனர்.

இரண்டு பெரும் விட்டுக்கொடுத்து போனால் தான் வண்டி ஓடும் இல்லாட்டி கொட சாஞ்சிடும். ஜாதகத்த மீறி மனதில் வைக்க வேண்டியது இந்த செய்தி தான். 

ஜாதக ரீதியா
யாருடைய ஜாதகத்தில் ஏழாம் அதிபதி உச்சம் அல்லது ஆட்சி பெறுகிறானோ அவனுக்கு திருமணத்தின் மூலமும் மனைவி மூலமும் மகிழ்ச்சி பொங்கும். ஏழாம் அதிபதிக்கு சுபர் பார்வை இருத்தல் ரொம்ப நல்லது. அசுபர் பார்வை இருப்பின் கொஞ்சம் பிரச்னை ஏற்படலாம். 

ஏழாம் அதிபதி சுபர் சேர்க்கை, நட்பு ராசியில்  இருத்தல் நலம். ஏழாம் அதிபதி அசுபர் சேர்க்கை, பகை வீட்டில் இருத்தல் கொஞ்சம் சிக்கல் தரலாம். 

இதுவே ஏழாம் அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மாட்டிக்கொண்டால் மனைவிக்கு  சிக்கல் தான். அது அவர்களின் ஆட்சி உச்ச வீடுகளாக இருந்தால் பரவாயில்லை. 

ஜாதகத்துல ஆயிரெத்தெட்டு விஷயம் இருந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்து வாழ ஆரம்பிசிங்கனா...
பரவாயில்லையே
  இவங்க...இவங்களுக்கு  ஏன் நல்லது செய்ய  கூடாதுன்னு கடவுள் நினைக்கலாம். 
 
யாரு விட்டு கொடுத்து வாழ்கிறார்களோ அவர்களுக்குத் தான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 
ஹும்
...இது எங்களுக்கு தெரியாதான்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது)

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

தேர்தல் ஆணையத்தின் அறிவீனம் என்ன? 2


தேர்தல்  ஆணையத்தின்  இந்த  அறிவீனத்தினை ஊடகங்களோ அல்லது சம்பந்த பட்ட கட்சியோ ஏன் என்று கேட்காதது வியப்பாகவே உள்ளது.
(ஒருவேளை நான்தான் சரியாக படிக்கவில்லையா? )

இந்த தேர்தலில் போட்டியிட்ட அங்கிகரிக்கப்பட்ட கட்சிகளே சில. அப்படி இருக்கும் பொழுது அவர்களின் சின்னத்தை ஏன் தேர்தல் ஆணையம் சுயேச்சைகளுக்கு வழங்கியது என்பது வியப்பாகவே உள்ளது.

நான் சொல்வது தே.மு. தி. க. வின் முரசு சின்னத்தை பற்றி. எனக்கு தெரிந்தே இந்த சின்னம் இரண்டு தொகுதிகளில் சுயேச்சைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.  எத்தனையோ சின்னங்கள் இருக்கும் பொழுது இவர்கள் ஏன் மற்றொரு அங்கீகரிக்கப் பட்ட கட்சியின் சின்னத்தை சுயேச்சைகளுக்கு வழங்கவேண்டும்.
 
இதை சில எதிர் கட்சிக்காரர்கள் தவறாக பாயன்படுத்தியுள்ளனர்.  இதைப்பற்றி அந்த கட்சியும் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை. 
இது தெரியாமல் சிலர்  நான் தே.மு.தி.க. வுக்கு வாக்களிக்கிறேன் என்று சுயேச்சைகளுக்கு வாக்களித்தனர். 

இது தேர்தல் ஆணையத்தின் அறிவீனம் தானே மக்களே? சொல்லுங்கள். 

திங்கள், 25 ஏப்ரல், 2011

காற்று வந்ததால் கொடி அசைந்ததா? அல்லது கொடி அசைந்ததால் காற்று வந்ததா?

காற்று வந்ததால் கொடி அசைந்ததா? அல்லது கொடி அசைந்ததால் காற்று வந்ததா?
காலம் காலமாக இந்த கேள்வி இருக்கிறது, இதெற்கென்ன பதில் தெரியுமா?

காற்று வந்ததால் தான் கொடி அசைந்தது.
கொடி அசைவதினாலும் காற்று வரும். ஆனால் காற்றில்லாமல் கொடி அசையாது.

அறிவியல் பூர்வமாகவோ அல்லது ஆன்மீக பூர்வமாகவோ எப்படி பார்த்தாலும் முதலில் தோன்றியது காற்றுதான் மரம் அல்ல. மரம் இருந்தாலும் இல்லையென்றாலும் காற்று இருக்கும். (சரி இத விடுவோம்)

கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக காற்று உருவாகின்றது அல்லவா. இங்கே மரத்திற்கு எந்த வேலையும் இல்லை. அதே போல் மரம் இல்லாத பாலைவனத்திலும் புயல் வரும்.

ஆதலால் தான் சொல்கிறேன் காற்று வந்ததால் தான் கொடி அசைந்தது.
கொடி அசைவதினாலும் காற்று வரும். ஆனால் காற்றில்லாமல் கொடி அசையாது(அப்படித்தான் நினைக்கிறேன்)
என்ன நான் சொல்வது சரிதானே?

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

புட்டபர்த்தி சாய் பாபாவுக்கு மறு பிறவி உண்டா?

ஆன்மீகத்திற்கு செல்வதன் நோக்கமே மறுபிறவியை இல்லாமல் செய்வதற்குத்தான். பலராலும் தெய்வமாக பாவிக்கப்பட்ட சாய்பாபாவுக்கு மறுபிறவி உண்டா இல்லையா?

ஒருவனது உயிரானது அவனுடைய அனுமதியுடன் பூத உடலை விட்டு வெளியே வருமாயின், அவனுக்கு மறுபிறவி இல்லை என்பது ஒரு சிலரின் கருத்து. இந்த கருத்தின் படி பார்த்தால் இவருக்கு மறுபிறவி உண்டு என்றே தோன்றுகிறது. ஏன் எனில் இங்கே இவர் இறந்துள்ளார்.

ஒருவன் எப்பொழுது இருக்கிறான் என்பதை பொருத்தும் அவனுக்கு மறுபிறவி உண்டா இல்லையா என்று சொல்லலாம்.

உத்திராயனத்தில் இறப்பவர்கள் என்னை வந்து அடைவர் என கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார். சித்திரை மாதம் உத்திராயனத்தை சேர்ந்த்தது. இந்த விதிப்படி பார்த்தல் இவருக்கு மறுபிறவி கிடையாது.

எவன் ஒருவன் சனி திசை முழுவதும் வாழ்கிறானோ அவனுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஒரு விதி.
இந்த விதிப்படியும் அவருக்கு மறுபிறவி கிடையாது.

ஒருவன் இறக்கும் பொழுது விழிப்புணர்வுடன் இருந்தாலும் அவனுக்கு மறுபிறவி இல்லை என்பது சிலர் கருத்து. இவர் எந்த நிலையில் இறந்தார் என்பது இறைவனுக்கே தெரியும்.


சாய் பாபா பிறந்தது விருசிக லக்னம். பன்னிரெண்டாம் வீட்டுக்கு சுக்கிரன் அதிபதி. அவர் இறந்த லக்னம் ரிஷபம். இதற்க்கு அதிபதியும் சுக்கிரனே. இவர் இறந்ததின் கூட்டு தேதி ஆறு இதுவும் சுக்கிரனுக்கு உரியதே.
இவர் சுக்கிரன் கோளுக்கு சென்று இருப்பாரோ என்று எனக்கு ஒரு எண்ணம்.

இவருக்கு மறுபிறவி இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம் அது அவர் செய்த பாவ புண்ணியத்தை வைத்தும் முடிவாகலாம்.
எல்லாம் இறைவனுக்கே வெளிச்சம்.

சனி, 23 ஏப்ரல், 2011

யாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்படும் ?

இன்றைய நிலையில் பல பேர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டுள்ளனர். அனைவருக்கும் ஆன்மீக அனுபவம் ஏற்படுமா?.யாருக்கு ஏற்படும் என்று சுட்டிக்காட்டுவதே இந்த பதிவின் நோக்கம்.


முதலில் யாரால் ஆன்மீக அனுபவம் ஏற்ப்படும் என்று பார்ப்போம்.

ஒன்று. ஆன்மீகத்திற்கு முக்கியமான கோள் கேது - ஏன் எனில் இவனே குண்டலினிக்கு காரகன்.

இரண்டு. ஐந்தாம் வீடு.- ஏன் எனில் இந்த வீடே தியானத்தை குறிக்கும்.
மூன்று. ஐந்தாம் வீட்டின் அதிபதி.
நான்கு. குரு - இவன் சிவனை குறிப்பவன். ஆன்மீகத்திற்கு முக்கியமானவன்.(சிவனின்றி ஏது தியானம்)
ஐந்து - ஐந்தாம் வீட்டில் அமர்ந்த கோள்கள் மற்றும் அதிபதியுடன் சேர்ந்த கோள்கள்.

இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம்.
ஆன்மீகத்திற்கு உகந்த சில முக்கிய கோள் நிலைகள் கீழே:

௧.லக்னத்தில் குரு இருப்பத்து மிக சிறப்பு. ஏன் எனில் இங்கே இருக்கும் குரு ஐந்தாம் வீட்டை பார்க்கிறான் மற்றும் குருவிற்குரிய ஒன்பதாம் வீட்டை பார்கிறான். அதுமட்டுமல்ல அவன் ஐந்து, ஒன்பது மற்றும் பதினொன்றாம் வீடுகளில் இருப்பதும் சிறப்பே ஆகும். ஏன் எனில் இங்கிருந்தும் அவன் ஐந்தாம் வீட்டை பார்க்கிறான். இங்கே இருக்கும் குரு கேது மற்றும் ஐந்தாம் வீட்டு அதிபதியை பார்த்தல் இன்னும் நலம்.

௨. கேது ஐந்தாம் வீட்டில் இருத்தல், ஐந்தாம் வீட்டு அதிபதியின் நட்சத்திரத்தில் இருத்தல் அல்லது குருவின் நட்சத்திரத்தில் இருத்தல், ஐந்தாம் வீடு அதிபதியுடன் இணைந்த்திருத்தல், குருவின் பார்வை பெற்றிருத்தல்.

௩. ஐந்தாம் அதிபதி- குரு, கேது ஆகியவைகளுடன், சேர்க்கை அல்லது பார்வை அல்லது நட்சத்திர தொடர்பு கொண்டிருத்தல்.
(இன்னும் நிறைய சொல்லலாம்)

சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில்
யாருடைய ஜாதகத்தில் கேது,ஐந்தாம் வீடு, ஐந்தாம் வீட்டின் அதிபதி மற்றும் குரு - இவர்களுக்குள் சம்பந்தம் இருக்கிறதோ இவர்களுக்கு "தியான"ஆன்மீக அனுபவம் ஏற்ப்பட வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
இங்கே சம்பந்தம் என்பது இணைவு, பார்வை, நட்சத்திர அமர்வு ஆகியவற்றை குறிக்கும். (பரிவர்த்தனை கூட இருக்கலாம்...வேறு ஏதேனும் சம்பந்தம் இருந்தாலும் சேர்த்துக்குங்க)

இதுவே என்னுடைய "குட்டி" ஆய்வின் முடிவு.

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

நியூட்டன்- பூனை கதை, நியூட்டன் முட்டாளா?

காலம் காலமாக ஒரு பூனை கதை சொல்லி நியூட்டன் முட்டாள் தனமாக செயல் பட்டார் என்று கூறுவார்கள். அந்த கதைப்படி அவர் முட்டாளா?

பெரும்பலோனருக்கு இந்த கதை தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

கதையின் சுருக்கம் என்னவெனில் "பெரிய பூனை வந்து போக ஒரு ஓட்டை கதவில் இருக்கும், அதற்கு ஒரு குட்டி பிறந்தவுடன் அதுவும் வந்து போக அதற்கு அருகே ஒரு சிறிய ஓட்டையை நியூட்டன் போட்டார். பெரிய பூனை வந்து போகும் பெரிய ஓட்டை வழியே சின்ன பூனையும் வராதா அவர் இந்த இடத்தில் முட்டாள் தனமாக செயல் பட்டார்" என கதை முடியும்.

உணமையிலேயே அவர் அறிவாளி தான் என்பதை அந்த கதை சொல்பவரும் ஏற்றுக்கொள்வார், இருப்பினும் எவ்வளவு பெரிய அறிவாளியும் முட்டாள் தனமாக நடந்து கொள்வான் என்பதற்காக சொல்லப்படும் கதை.

அந்த கதை உண்மையோ பொய்யோ தெரியாது. அந்த கதைப்படி அவர் முட்டாளாகவும் செயல் பட்டிருக்கலாம். அப்புறம் ஏன் இந்த பதிவு ஏன்று நீங்கள் கேட்கலாம். எனகென்னவோ அவர் செய்தது புத்திசாலித்தனமாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது.
எப்படி?

என்னைப்பொருத்த வரை நியூட்டன் ஓட்டையை எங்கே போட்டார், ஏற்க்கனவே ஓட்டை எங்கே இருந்தது என்பதை பொறுத்துதான் அவர் எப்படி செயல் பட்டார் என்பதை முடிவு செய்ய முடியும்.

ஒருவேளை பெரிய பூனை வருவதற்கான ஓட்டை சற்று உயரத்தில் இருந்தது என்று வைத்து கொள்வோம். சிறிய கால்களை உடைய பூனை உயரத்தில் இருக்கும் ஓட்டையில் நுழைய சிரமப்படும் இல்லையா?

சிறிய பூனை சுலபமாக சென்று வர அவர் கீழே சின்ன ஓட்டை போட்டிருக்கலாம் என எனக்கு தோன்றுகிறது. இந்த கோணத்தில் பார்த்தால் அவர் புத்திசாலி தானே?

வியாழன், 21 ஏப்ரல், 2011

அன்ன ஹசாரே-வுக்கும் அஜித்துக்கும் என்ன சம்பந்தம்?

அன்ன ஹசாரே-வுக்கும் அஜித்துக்கும் ஒரு சம்பந்தம் உள்ளது. சற்று சிந்திந்தால் உங்களுக்கே தெரியவரும். 
என்ன கண்டுபிடித்து விட்டீர்களா?

சிட்டிசன் படத்தில் அஜித் ஊழலுக்கு எதிராக போராடுவார். அன்ன ஹசாரே உண்மையிலேயே போராடுகின்றார்.

 அது மட்டும் அல்ல அஜித்  படத்தில் வைத்த கோரிக்கையும் அன்ன ஹசாரே உண்மையில் வைத்த கோரிக்கையும் ஒன்றுதான்.
அது என்ன கோரிக்கை?

ஊழல் செய்தவர்களை தண்டிப்பதோடு மட்டுமல்லாது அவர்கள் சம்பாதித்த சொத்துக்களையும் கையகப்படுத்த வேண்டும் என்பதே அது .

அது மட்டும் அல்ல படத்தில் ஊழல் செய்தவர்களின் சொந்தங்களுக்கும் தண்டனை தர வேண்டும் என்று கூறுவார்.

இதையும் வரப்போகும் சட்டம் ஏற்றுக்கொண்டாள் நன்றாக இருக்கும். ஊழல் செய்ய ஒவ்வொருவனும் பயந்து நடந்குவான்.

ஒருவன் ஏன் ஊழல் செய்கிறான்? தானும் தன சொந்தங்களும் வசதியாக இருக்க வேண்டும் என்பதால் தானே. ஊழல் செய்தால் அனைவருக்கும் தண்டனை எனும்போது எவனாவது ஊழல் செய்யா முன் வருவானா?

(சிட்டிசன் படத்தின் மூலம் சிறந்த கருத்தை முன் மொழிந்த இயக்குனர் சரவண சுப்பையாவுக்கும், தயாரிப்பளருக்கும், தல அஜித்துக்கும் இந்த வலைப்பூவின் மூலம்  சிறப்பு வாழ்த்துக்கள் . அதேபோல் இந்த லோக் பால் சட்டம் சிறப்பாக வர அந்த குழுவுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.)

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

மனித வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன?-பாகம் - 3

குழந்தை பிறப்பது மனிதன் நினைத்தால் தான் நடக்கும், உயிரையும் மனிதனால் உருவாக்க முடியும் என்று சென்றைய பதிவுகளில் பார்த்தோம். (முந்தைய பதிவிற்கான வழிகாட்டி).இந்த பதிவில்

பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா? என்பதை நிர்ணயிப்பது யார் என்பது பற்றி பார்ப்போம்.

குழந்தை ஆணா பெண்ணா என்பதை ஆண்டவான் தான் தீர்மானிக்கிறான் என்பது பெரும்பாலானோரின் கருத்து. இறைவனை நம்புபவ்ரின் கருத்து.

எக்ஸ், ஒய் குரோமோசோம்கள் என்பது அறிவியலாளர்களின் கருத்து. மற்றும் பகுத்தறிவாளர்கள் , நாத்திகர்கள் என்று சொல்பவரின் கருத்து.

மேலோட்டமாக பார்த்தால் இருவர் சொல்வதுமே சரிதான். ஆனால் சற்று ஆழ்ந்து சென்றால் இங்கே இருவர் சொல்வதுமே தவறுதான் என்று தெரியவரும்.

ஒரு குழந்தை ஆணாக பிறக்க வேண்டுமா இல்லை பெண்ணாக பிறக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் சக்தி மனிதனிடம் உள்ளது. (உண்மையில் மனிதனே தீர்மானிகின்றான்). ஆனால் அவன் அதை அறிவதில்லை, உண்மையில் அவன் அறிந்திருந்தாலும் நாட்டில் பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம்.
அவன் "அந்த" நேரத்தில் "எங்கே" "எந்த நிலையில்" இயங்குகிறான் என்பதை பொறுத்தே ஒருவனுக்கு ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பது முடிவாகிறது. ( இதை நான் சொல்லவில்லை ஒரு சித்தர் சொன்னது. அனுபவ பூர்வமாக சிலரும் சொல்வது).
ஆக இங்கே இந்த வாதத்தில் பங்கு பெற்ற இருவருமே தோற்க்கின்றனர்
தொடர்ந்தது யார் தோற்கிறார்கள் என்பதை பார்ப்போம்.......


Related Posts Plugin for WordPress, Blogger...