வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

சனி, 28 மே, 2011

எந்த தானியங்களை என்று சாப்பிட வேண்டும்?



ஒவ்வொரு கோளும் ஒரு தானியத்தை குறிப்பதாக சொல்கின்றனர்.

சூரியன்- கோதுமை
சந்திரன்- நெல்
செவ்வாய்- துவரை
புதன்- பச்சைப்பயிறு
வியாழன் - கடலை 
வெள்ளி - மொச்சை 
சனி- எள்ளு
ராகு- உளுந்து
கேது- கொள்ளு
 உங்கள் ஜாதகத்தில் எந்த கோள் வலிமையாக இருந்தாலும் வலிமையற்று இருந்தாலும், இந்த தானியங்களை நீங்கள் உண்ணும் பொழுது அந்த கோள்களினால் உங்களுக்கு நன்மையே கிடைக்கும் ....தீமை  குறையும் என்று கூறுகின்றனர்.
 இந்த தானியங்களை அதற்குறிய   நாட்களில் உண்ணுவது இன்னும் சிறப்பான பலன்களை தரும் என்பது என் எண்ணம்.


செவ்வாய், 24 மே, 2011

உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்படுமா?


ஜாதகத்தில் உங்களைக் குறிப்பது லக்னாதிபதி. ஆன்மீகத்தில் ஈடுபாட்டை  உண்டாக்கும் சக்தியும் ஞானத்தை அளிக்கவல்ல சக்தியும் கேது பகவானுக்கு உண்டு. 

கேதுவுக்கும் லக்னாதிபதிக்கும் உங்கள் ஜாதகத்தில் தொடர்பு இருந்தால் உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்ப்படும். 

லக்னத்தில் அல்லது லக்னாதிபதி அமர்ந்த வீட்டுக்கு அல்லது பத்தாம் அதிபதி அமர்ந்த வீட்டுக்கு  ஒன்று, ஐந்து அல்லது ஒன்பதாம் வீடுகளில் கேது பகவான் இருந்தால் உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு  உண்டாகும். 


லக்னாதிபதி அல்லது பத்துக்குடையவன் அமர்ந்த வீட்டிற்கு இரண்டில் கேது பகவான் இருந்தாலும்  ஆன்மீகத்தில் ஆர்வம் உண்டாகும். 

 வக்கிரம் பெற்ற லக்னாதிபதி அல்லது வக்கிரம் பெற்ற பத்தாம் வீட்டுக்காரர் இவர்களுக்கு பன்னிரெண்டில் கேது பகவான் இருந்தாலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும்.
இவற்றை நான் சொல்லவில்லை சப்த ரிஷி நாடி எனும்  புத்தகத்தில் பார்த்தேன் அதை சற்று உல்டா செய்து இங்கே கொடுத்துள்ளேன். இது உண்மை போலத்தான் தோன்றுகிறது.
நன்றி: சப்தரிஷி  நாடி  

இது சம்பந்தமான  மற்றும் ஒரு பதிவிற்கான சுட்டி


தி.மு.க வின் தோல்விக்கும் அ.தி.மு.க வின் வெற்றிக்கும் ஒரே காரணம் தான்...அது என்ன?



தேர்தல் முடிவைப் பற்றி பல ஊடகங்களும் பல காரணங்களைக் கூறுகின்றன. 
மின் வெட்டு, குடும்ப அரசியல், பல துறைகளில் குடும்ப ஆதிக்கம்,விலை வாசி உயர்வு, மக்கள் இலவசங்களை விரும்ப வில்லை, ஈழத்தமிழருக்கு செய்த துரோகம், ஜாதி அரசியலை மக்கள் விரும்ப வில்லை, என்று பலரும் பல காரணங்களை கூறுகின்றனர். 

சிலர் அன்ன ஹசாரேயின்  உண்ணா   விரதமும் ஒரு காரணம் என்றனர். இதெல்லாம் படித்தால் எனக்கு சிரிப்பு தான் வருகின்றது. அவர்கள் சொன்ன காரணங்களை ஆய்வு செய்து பார்த்தால் அந்த காரணிகளின் தாக்கம்  குறைவே. 

எல்லா காரணங்களும் ஏதோ ஒரு விதத்தில் இந்த தேர்தல் முடிவுக்கு காரணமாய் இருந்தாலும் தி.மு.க வின் படு தோல்விக்கும் அ.தி.மு.க வின் மகத்தான வெற்றிக்கும் ஒரே காரணம் அ.தி.மு.க, தே. மு. தி.க கூட்டணிதான்.

ஒருவேளை அ.தி.மு.க வும்  தே. மு. தி.க வும் தனித்து நின்றிருந்தால் கண்டிப்பாக தி.மு.க தான் வென்றிருக்கும். மேலே சொன்ன அனைத்து காரணத்தினால் எழுந்த அதிருப்தி ஓட்டுக்கள் இரண்டாக பிரிந்து அது தி.மு.க வுக்கு வெற்றியை பெற்று தந்திருக்கும். ஒவ்வொரு    தொகுதியிலும்    தி. மு.க கூட்டணி பெற்ற   ஓட்டுக்கள் மற்றும் வெற்றி வித்தியாச ஓட்டுக்கள் இதைத் தெள்ள தெளிவாக காட்டுகின்றன. 

ஆக தி.மு.க வின் படு தோல்விக்கும் அ.தி.மு.க வின் மகத்தான வெற்றிக்கும் ஒரே காரணம் அ.தி.மு.க, தே. மு. தி.க கூட்டணிதான்.
 

ஞாயிறு, 15 மே, 2011

ஜெ பதவியேற்கும் நேரம் நல்ல நேரமா? அரசின் செயல்பாடு எப்படி இருக்கும்?


ஜெ அவர்கள் பதினாறாம் தேதி பன்னிரண்டு மணிக்கு பதவி ஏற்கிறார் . இது நல்ல நேரமா? அரசின் செயல்பாடு எப்படி இருக்கும்?

ஜெ அவர்கள் சிம்ம லக்னத்தில் பதவி ஏற்கிறார், இந்த அரசும் அன்றே பதவி ஏற்பதாக கொள்ள வேண்டும். 
சிம்ம லக்கினம் அரசாங்கம்  அதிகாரத்திற்கு பெயர் போனது. அந்த விதத்தில் இது அருமையான லக்னம்.
எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் லக்னம் வலுப்பெற வேண்டும். அந்த விதத்தில் குரு பகவானின் ஐந்தாம் பார்வை லக்னத்திற்கு கிடைப்பது அருமையிலும் அருமை.
அடுத்ததாக லக்னாதிபதி பத்தில் இருக்கின்றார். பத்து என்பது தொழில், பணிகளை குறிக்கும். இங்கே லக்னாதிபதி இருப்பதால் அரசாங்க பணிகள் சிறப்பாக நடைபெறும் என்று சொல்லலாம். கண்ணும் கருத்துமாக வேலைகள் நடக்கும் என்றும் சொல்லலாம்.

ஆறாம் அதிபதி சனி  இரண்டாம்  வீட்டில்  இருப்பதால் கஜானா   காலி. கடன் வாங்கியே அரசாங்கத்தை  நடத்த வேண்டிய நிலை ஏற்படலாம். தேர்தல் வாக்குறுதிகளை  நிறைவேற்றுவதில் சற்று சிரமம் ஏற்படலாம். வெளித்தொடர்புகளால்  கடைசி நேரத்தில் நன்மை கிடைக்கலாம். வார்த்தைகளால்  பலரை  வருத்தெடுக்கலாம்.

செல்வுக்காரன் சந்திரன் மூன்றாம் வீட்டில், அரசின் தைரியம்  ஏற்ற இறக்கமுடன் காணப்படும். சுப கோள்களின் பார்வை ஒன்பதாம் வீட்டில் இருந்து கிடைப்பதால் சற்று ஆறுதல் தான். 

குருவும் நான்காம் அதிபதி சுக்கிரனும் அவர்களுக்குள் கேந்திரத்தில் இருப்பதால் வலிமையான தைரியம் பொருந்தியா அரசாக இருக்கும். கூடவே அவர்களுக்கு தேவையானதை தந்திரத்தனமாக அடைய வைக்கலாம். இது மக்களுக்கு நல்லதா அல்லது அரசாங்கத்துக்கு மட்டுமே நல்லாதா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

சரி மக்கள் எப்படி இருப்பாங்கனு கேட்பது தெரியுது. 
ஐந்தில் ராகு இருப்பது கொஞ்சம் சரியில்லை என்று சொன்னாலும் , அவர் லாப வீட்டில்  இருக்கும்  கேதுவின் நட்சத்திரத்தில் இருப்பதால் நன்மையே . மேலும் அதிபதியான  குரு பாக்கிய வீட்டில் இருப்பதால் சகல பாக்கியங்களும் வந்து சேரும் .( அப்புறம் எவ்வளவு இலவசம் வரப்போகுது மிக்சி, மின் ஆட்டுக்கல், மின் விசிறி, மடிக்கணினி இத்யாதி இத்யாதி.) 
குருவின் பார்வை ஐந்தாம் வீட்டில் படுவதால் மக்களுக்கு கூடுதல் நன்மையே.  
எந்த ஜாதி எந்த மதத்துக்கு நன்மை தீமைனு சொல்ல முடியுமான்னு நீங்க கேட்பது தெரியுது.

ஐந்து மற்றும் பதினொன்றில் ராகு கேது இருப்பதால் இஸ்லாம் மற்றும் கிருஸ்த்துவ மதத்தினருக்கு லாபம் நிறைய கிடைக்கலாம்.   தலித் இனத்தவருக்கு நிறைய குடும்ப உபயோக பொருட்கள் கிடைக்கும் .(இரண்டில் சனி அதான்.)

மற்ற  இனத்தவருக்கு கல்வி, புதிய வேலைவாய்ப்பு, தொழில் தொடங்க ஊக்கம் இவற்றின் மூலம் நன்மை கிடைக்கும். ஆன்மீகவாதிகளுக்கும்  இது சற்று அனுகூல அரசாகவே அமையும்.

அப்படி இப்படி சில சமாச்சாரங்கள் இருந்தாலும் இவ்வாட்சி நல்லாட்சியாக இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.  அப்புறம் எல்லாம் இறைவன் செயல். 


சனி, 14 மே, 2011

ஓ...இதுதான் அமைதிப் புரட்சியா?


பெரும்பாலான கருத்து கணிப்புக்களை பொய்யாக்கி அ.தி.மு. க. தனிப்பெரும்பான்மையுடன்  ஆட்சி அமைக்கபோகின்றது.
இது யாரும் எதிர் பார்க்காத வெற்றி. இத்தேர்தலில் யாருக்கும் எந்த ஒரு அலையும் வீசவில்லை என்று ஊடகங்கள் கூறியிருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகளோ சுனாமி வந்ததுபோல் அல்லவா உள்ளது.

கலர் டிவி, வீடு, பணம் கிடைத்தும்  மற்றும் மேலும் இலவசங்கள் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கிடைக்கும் என்று தெரிந்தும் மக்கள் அ.தி.மு.கவுக்கு வாக்களித்துள்ளனர். 

இதற்கு  என்ன காரணம்?
அலைக்கற்றை ஊழல்....அ.தி.மு.க + தே.மு. தி.க கூட்டணி.
கருணாநிதி  குடும்பத்தின் ஆதிக்க ஆட்சி... மின் வெட்டு , ஈழத் துரோகம் இத்யாதி இத்யாதி.

கடந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 77 இடங்களை கைப்பற்றியது...ஆனால் இந்த தேர்தலில் தோல்வி அடைந்த தி.மு.க  கூட்டணி வெறும் 31 இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளது. 

இது கடந்த அ.தி. மு.க ஆட்சி தற்போதைய தி.மு. க ஆட்சியைவிட சிறப்பாக நடந்துள்ளதாகவே காட்டுகின்றது. 
மேலும் கடந்த தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டியிட்டு ஓட்டுக்களை பிரித்தது. இல்லையென்றால் அ.தி.மு. கவே    வெற்றி பெற்றிருக்கும் என்று தோன்றுகின்றது.

இதில் கவனிக்கப் பட கூடிய செய்தி என்னவெனில் ஐந்து ஆண்டுகள் முதல்வரான கருணாநிதி ஒரு முறை கூட தான் செய்த ஆட்சியால் அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியவில்லை. 

இதை விட பேரிடியாக தி.மு.க இம்முறை பிரதான எதிர்க்கட்சியாகும் வாய்ப்பையும் இழந்துள்ளது.

மக்களுக்கு எவ்வளவு தான் இலவசங்கள் கிடைத்தாலும் அதற்கும் மிஞ்சிய நல்லாட்சியை அவர்கள் எதிர் பார்க்கின்றனர் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 

மக்கள் இலவசங்களால் தி.மு.க. வுக்கு  வாக்களிப்பார்கள் என்று தி.மு.க வினர் ஆர்ப்பரித்தனர் , இதே செய்திகளை ஊடங்களிலும் பரப்பினர்.மேலும் பணமும் பட்டுவாடா செய்தனர்.  ஆனால் மக்களோ அனைத்தையும் பெற்றுக்கொண்டு அமைதியாக அதி.மு.க கூட்டணிக்கு வாக்களித்து விட்டனர். 
ஓ...இதுதான் அமைதிப் புரட்சியா?

சனி, 7 மே, 2011

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்றால் என்ன?


காலம் காலமாக இந்த பழமொழி வழக்கத்தில் உள்ளது. இதன் பொருள் என்ன?
நல்லவை ஆவதும் பெண்ணாலே கேட்டது அழிவதும் பெண்ணாலே என்று சொல்கிறார்கள்...

எனக்கு  தெரிந்த  ஒரு ஜோதிடர்  என்ன சொல்றார்...
மிருகமா இருக்கிற மனுஷன் மனுஷனா “ஆவதும் பெண்ணாலே”
மனுஷனுக்குள்ள இருக்கிற மிருகம் “அழிவதும் பெண்ணாலே”

அவர் ரொம்ப நல்ல விதமாக ஒரே பக்கமா  சிந்தனை செய்திருக்கின்றார்.

நான் என்ன சொல்கிறேன்...
ஒருவன் உருவாவதும் பெண்ணாலே ....அழிவதும் பெண்ணாலே!
ஒரு குடும்பம்  உருவாவதும் பெண்ணாலே.. ...அழிவதும் பெண்ணாலே!!
ஒரு சமுதாயம்,கலாச்சாரம், பண்பாடு   உருவாவதும் பெண்ணாலே.. ..அழிவதும் பெண்ணாலே!!!

இது பெண்ணுக்கு மட்டுமே பொருந்துவது இல்லை. ஆணுக்கும் தான்.
ஆவதும் ஆணாலே...அழிவதும் ஆணாலே. என்றும்   சொல்லலாம் .
இருந்த   போதிலும்  ஒரு  சமுதாயம்,கலாச்சாரம், பண்பாடு உருவாக பெண்ணின் பங்களிப்பு ஆணை விட சற்று கூடதலாகவே உள்ளதாக  நான் உணர்கிறேன.


எந்த  ஒரு   கலாசாரத்தையும்  பண்பாட்டையும்  கட்டிக்  காக்க   கூடிய  சக்தி  பெண்ணுக்கு சற்று  அதிகமாகவே  உள்ளது . (அவளுக்கு மட்டுமே உள்ளது என்று கூடசொல்லலாம்)

ஆங்கிலத்தில்  பெண்களை "weaker" செக்ஸ் என்று சொல்வார்கள். அது உடல் ரீதியாக வேண்டும் என்றால் பொருந்தலாம். உள்ளத்து ரீதியாக  பார்த்தல்  ஆணே "weaker" செக்ஸ் . especially in sex.  

ஒரு பெண் சற்று ஜாடை காட்டினால் போதும்  ஒன்பது ஆண்கள் அவனது குடும்ப அழிவிற்கு காரணமாக ஆகிவிடுவார். 

இதுவே ஒரு ஆண் சற்று ஜாடை காட்டினால் ஒன்பது பெண்கள் அவர்களது குடும்ப அழிவிற்கு காரணமாக ஆகிவிடுவார் என்று சொல்ல முடியாது. (இன்று சில நகரங்களில் சில பெண்களும் அப்படி மாறிக்கொண்டு வருகிறார்கள் என்பது வருத்தமளிக்கும் செய்தி).

குடும்பம், கலாச்சாரம், பண்பாடு எல்லாமே பெண்ணை மையமாகவே வைத்து அமைந்துள்ளது.
அவளால் தான் மிருகம் மனிதனாவான்....மனிதன் மிருகமாவான்...(.சில நேரங்களில் தத்துவ ஞானியாக ஆவதும்  உண்டு).
நல்லது ஆவதும் பெண்ணாலே
கெட்டது அழிவதும் பெண்ணாலே !
 என்பதற்கு  இலக்கணமாக  எந்த  பெண்  இருக்கின்றாளோ  அப்படிப்பட்ட    பெண்களே தெய்வம்...(உங்கள் குல சாமி அவள் தான்)....அவள் இருக்கும்  வரை தான் இந்த பூமியில் அனைவரும் அமைதியாக வாழ முடியும்.

வாழ்க்கை எப்ப எப்படி இருக்கும் ? 2


சென்ற பதிவில் ஜாதகத்தை மூன்றாக பிரித்து, அது எந்தெந்த பருவத்தை குறிக்கும் என்று சொல்லி அதன் மூலம் எப்படி பலன் காண்பது என்று பார்த்தோம்.

அதில் ஒரு பகுதயில் எந்த கோள்கலுமே இல்லையெனில் என்ன செய்வது? இதற்க்கான விடையை பராசரர் சொல்லவில்லை.

என்னுடைய சிந்தனை ஜோதிடப்படி அந்தப்பகுதியில்தீய கோள்களின் பார்வை அதிகமாக விழுகின்றதா  அல்லது நல்ல கோள்களின் பார்வை அதிகமாக விழுகின்றதா என்று பாருங்கள்.  

தீமை தரும்  கோள்களின் பார்வை அதிகமாக விழுந்தால்  அந்தப்பருவத்தில் தீமைகள்  அதிகமாக இருக்கும்.

நல்ல கோள்களின் பார்வை அதிகமாக  விழுந்தால் நல்லது...அந்தப்பருவம் இன்பம் மிகுந்ததாக இருக்கும்.

தீமை மற்றும் நல்லது செய்யும் கோள்களின்  பார்வை  சரி சமமாக இருப்பின்..இன்பம் துன்பம் இரண்டும் சரி சமமாக இருக்கும்.

(இது வெறும் சிந்தனை ஜோதிடமே...உங்களுக்கு இதுபற்றி ஏதேனும் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்...அனைவருக்கும்  பயனுள்ளதாக இருக்கும்...பாசு உங்களையும் தான் கேட்கிறேன்)

(இந்த கேள்வி எனக்கும் ஏற்பட்டது இருப்பினும் யோகி என்ற பெயரில் உள்ளவர் கேட்டதால்...இது அனைவருக்கும் தெரியட்டும் என்ற எண்ணத்தில் பதிவிட்டுவிட்டேன்...நன்றி யோகி .)




வெள்ளி, 6 மே, 2011

வாழ்க்கை எப்ப எப்படி இருக்கும்?


உங்கள் ஜாதகத்தை மூன்றாக பிரியுங்கள். 1-4 வீடுகள்  ஒரு  பகுதி, 5-8வீடுகள்  ஒரு  பகுதி, 9-12 வீடுகள்  ஒரு  பகுதி என்று. 


1-4 குழந்தை பருவத்தைக் குறிக்கும்
5-8- வாலிப பருவத்தைக் குறிக்கும் 
9-12- முதுமை   பருவத்தைக்  குறிக்கும் . 

இதில் எந்த பகுதியில் நல்ல கோள்களை விட அதிக தீய கோள்கள் உள்ளதோ அந்த பருவத்தில் வாழ்க்கையில் சிக்கல் அதிகமாக இருக்கும், நல்ல கோள்கள் எந்த பகுதியில் தீய கோள்களை விட அதிகமாக  உள்ளதோ அந்த பருவம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தீய கோள்களும் நல்ல கோள்களும் ஒரு பகுதியில் சமமாக இருப்பின்...இன்ப துன்பமும் சமமாக இருக்கும். 

 இதை சொல்றது நான் இல்லை, பராசர மகரிஷி சொன்னதா சொல்றாங்க...இது
பொருந்துதா இல்லையானு நீங்க தான் சொல்லணும். 
(இன்னைக்கு மூளை சரியா ஒத்துழைக்க வில்லை , அதனால் தான் இந்த குட்டி சூத்திரம்)

வியாழன், 5 மே, 2011

ஆன்மீகத்திற்கு குரு அவசியமா?


குருவருள் இருந்தால் தான் திருவருள் கிடைக்கும் என்று சொல்வார்கள் அது உண்மையா? 

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்கிறார்கள். தாய்  ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து, செத்துப் பிழைத்து குழந்தையை பெற்று,  பாலூட்டி, சீராட்டி, ஈ, எறும்பு கடிக்காமல், நல்ல உணவு ஊட்டி அன்போடு வளர்க்கிறாள். 

தந்தை அக்குழந்தைக்கு பாதுகாப்பாய் இருந்து,  அறிவு புகட்டி வளர்க்கின்றார்.

அடுத்தது குருவானவர் அக்குழந்தைக்கு ஏற்ற சகல கல்வியையும், கலைகளையும் கற்று தருகிறார். குழந்தையின் ஆன்ம வளர்ச்சியை பொறுத்து அவனுக்கு தெய்வத்தை அடையும் வழியையும் காட்டுகின்றார்.(இது அந்த காலத்துல).
இந்த காலத்தில் ஒவ்வொரு கல்விக்கும் அல்லது  பாடத்திற்கும் ஒரு குரு. 
அந்த காலத்தில் அ ஆ கற்று கொடுத்த குருவே ஆன்மீக குருவாக இருந்திருக்கலாம் ஆனால் இந்த காலத்தில் இதற்க்கு என்று தனியாக ஒரு குரு தேவைப்படுகிறார்.

அன்று பெரும்பாலானோர் ஒன்றிரண்டு குருக்களுக்கு மேல் தாண்டாமல் ஆண்டவனை அடையும் பாதையில் சென்றார்கள்.

 இன்றோ தொழில் நுட்ப  வளர்ச்சியாலும், ஆன்மிகம் சம்பந்தமான நூல்கள் சுலபமாக கிடைப்பதாலும் ஒருவன் குரு இல்லாமலே ஆன்மீகத்தில் நுழைந்து விடுகிறான்.

பல புத்தகங்கள் படித்து தானாகவே யோகம் செய்தாலும் அனைவராலும் ஆன்மீகத்தில் தொடர்ந்து பயணிக்க முடியுமா என்று சொல்ல முடியாது.
இதுவே ஒரு நல்ல ஆன்மீக குரு மூலம் காற்றுக்கொண்டால் அவருடன் சேர்ந்தே பிறவிப் பெருங்கடலை சுலபமாக கடந்து விடலாம்.

ஆனால் எல்லோருக்குமே நல்ல குரு அமையும் பாக்கியம்  கிடைப்பதில்லை. ஜோதிட ரீதியாக பார்க்கையில் ஒன்பதாம் வீடு குருவைக் காட்டுகின்றது. யாருக்கு ஒன்பதாம் வீடும், சொந்தக்காரனும் நன்றாக உள்ளனரோ அவர்களுக்கு நல்ல குரு கிடைக்க வாய்ப்புகள் மிக அதிகம் .  
இந்த குரு ஆன்மீக குருவாக இருப்பார் என்று அறுதியிட்டு கூற  முடியாது.

இந்த ஒன்பதாம் வீடு மற்றும் அதிபதிக்கும் யாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்ப்படும்? பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள  , குரு, கேது, ஐந்தாம் வீடு மற்றும் புட்டபர்த்தி  சாய் பாபா ஏன்  சந்நியாசி ஆனார் ? என்ற பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள லக்னம்,லக்னாதிபதி இவர்களுக்குள் நல்ல தொடர்பு இருந்தால்  "அந்த ஒன்பதாம் வீட்டு  குரு"  ஒரு  நல்ல ஆன்மீக குருவாக வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

என்னைப்பொருத்த வரை(இன்றைய நிலையில்) ஐந்தாம் வீடு அதன் அதிபதி,கேது, குரு இவர்களே  ஒருவனுக்கு தியானம் அல்லது குண்டலினி மூலம் ஆன்மீக முன்னேற்றத்தை அளிக்கவள்ளவர்கள்.  ஒன்பதாம் வீட்டு குரு இவர்களுடன் சம்பந்தம் கொள்ளவில்லை எனில் அவர் வெறும்  சமயம்  அல்லது - மற்றும் ஆன்ம கோட்பாட்டினை எடுத்துரைக்கும் குருவாக மட்டுமே அமைந்துவிட வாய்புகள் உண்டு. 

மகர கடகத்தில் கேது ராகு இருந்தாலும் ஒருவன் குரு இல்லாமலே ஆன்மீகத்தில் பயணம் செய்வான் என்றும் படித்ததுண்டு. இதுவும் உண்மையாகவே தெரிகிறது. 

ஆன்மீக குரு கிடைக்காததும் ஒரு விதத்தில் நல்லதே. (ஒரு சிலருக்கு மட்டுமே இது பொருந்தும்). யாருக்கு ஆன்மீக குரு கிடப்பதில்லையோ அவர்களே புவியில் பலரது ஆன்ம எழுச்சிக்கு காரணமாய் இருந்திருக்கிறார்கள். 

உதாரனத்திற்க்கு வள்ளலார் மற்றும் புத்தர். இவர்களுக்கு நல்ல குரு கிடைத்திருந்தால் அவர்கள் மட்டுமே ஆன்ம எழுச்சி அடைந்திருப்பார். கிடைக்காத காரணத்தினாலே  தான் அவர்கள் பலரது ஆன்ம எழுச்சிக்கு காரணமாய் இருந்திருக்கிறார்கள்.  

 ஆதலால்  ஆன்மீக குருவை தேடிக் கொண்டு இருக்காதீர்கள்.
உங்கள் கண்ணுக்கு பட்டால் அவர் வழியில் செல்லுங்கள் "விழிப்புணர்வுடன்". இது மிக சுலபமான பாதை. (நல்ல பாதையாக மற்றும் நல்ல குருவாக  இருப்பின்).

ஆன்மீக குரு கிடைக்கவில்லையா....நல்லது...நாளை நீங்கள் பலருக்கு வழிகாட்டியாக இருக்கலாம்...சுயமாக முயன்று பாருங்கள். இது மிகவும் கடினமான பதை.

குருவின் மூலமோ அல்லது இல்லாமலோ முயன்று பாருங்கள், முக்தி அடையுங்கள்.

(குறிப்பு: இப்பதிவில் உள்ளது யாவும் என் சொந்த கருத்துக்களே ஆகையால் "எப்பொருள்" எனத் தொடங்கும் குறளை மனதில் வையுங்கள்).


புதன், 4 மே, 2011

தேர்தல் ஆணையத்தின் அறிவீனம் என்ன ? பகுதி 3


 தேர்தல் ஆணையம் எப்படி இப்படி ஒரு முட்டாள் தனமான முடிவெடுத்தது என்பது  பெரும் வியப்பை தருகிறது.

தேர்தலோ ஏப்ரல் 13 ம் தேதியே முடிவடைந்து விட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் தபால் ஓட்டுக்கு மட்டும் மே 12 ம் தேதி வரை கெடு வழங்கியுள்ளது.

தேர்தல் வேலையில் வெளி தொகுதிகளில் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு தபால் மூலமாக ஒட்டு போட தேர்தல் ஆணையம் வழி வகை செய்வது வழக்கம்.  இம்முறை  மே 12 ம் தேதி வரை ஒட்டு போட அவர்களுக்கு நாட்கள் ஒதுக்கியுள்ளது.  ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது ஆயிரம் முதல் இரண்டாயிரம் அஞ்சல் ஓட்டுக்கள் இருக்க வாய்ப்புகள் உண்டு.

என்னுடைய முதல் கேள்வி...ஏன் இவர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தை வேட்பாளர்கள் தவறாக பயன்படுத்திக் கொண்டால் என்ன செய்வது என்பது பற்றி தேர்தல் ஆணையம் சிந்தித்ததா?

இந்த ஒரு மாத இடைவெளியில் வேட்பாளர்கள் அரசு ஊழியர்களை "தனியாக" கவனிப்பதாக செய்தி  வெளியாகி உள்ளதே இதை பற்றி தேர்தல் ஆணையத்திற்கு தெரியுமா?

இவர்களின் ஓட்டுக்கு சிலர் ஏஜென்ட் போல ஓட்டுக்கு பேரத்தில் இறங்கியுள்ளனரே இது  தேர்தல் ஆணையத்திற்கு தெரியுமா?

என்ன தெரிந்து என்ன பயன் 
வாக்களிக்க அரசு ஊழியர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் கொடுத்தது தேர்தல் ஆணையத்தின் அறிவீனமே. 

முந்தைய பதிவிற்கான சுட்டி.



திங்கள், 2 மே, 2011

விவேகானந்தர் ஏன் ஆன்மீகவாதியாகி இளமையில் இறந்தார்?


விவேகானந்தர் காவி உடை அணியாமல் இருந்திருந்தால் அவரை இந்து மத துறவி என்று யாரும் கூற இயலாது. அவரது பெரும்பாலான கருத்துக்கள் அனைத்து மதத்தினராலும் ஏற்றுக்கொளும்படியாக உள்ளது. மதத்தை தாண்டி சீர்திருத்தவாதிகளின் நன் மதிப்பையும் பெற்றவர் அவர்.



"ஒரு  விதைவையின்   கண்ணீரைத்  துடைக்க  முடியாத , ஓர்  அனாதையின்  வயிற்றில்  ஒரு  கவளம்  சோற்றை  இட  முடியாத  கடவுளடித்திலோ,சமயத்திலோ  எனக்குக்  கொஞ்சம்  கூட  நம்பிக்கை  கிடையாது"  என்று  அவர்  கூறியுள்ளார். இதை வைத்து அவர் நாத்திகவாதி என்று கூட சொல்லலாம்.ஆனால்  உண்மையில்  அவர் ஒரு ஆன்மீகவாதியே.

அவரின் ஜாதகம்:  தனுசு லக்னம், லக்னத்தில் சூரியன், இரண்டில் சுக்கிரன் மற்றும் புதன், ஐந்தில் செவ்வாய் ஆட்சி,  ஆறில் கேது, பத்தில் சந்திரன் மற்றும் சனி, பதினொன்றில் குரு.
இவருக்கு ஆன்மீக ஈடுபாடு ஏற்ப்பட, தியானத்தில் மூழ்க காரணம்  பதினொன்றில் இருக்கும் குருபகவான் ஐந்தில் ஆட்சி பெற்று இருக்கும் தியான அதிபதியை பார்ப்பதுதான். அதுமட்டுமல்லாமல் லக்னாதிபதியான குரு ஐந்தாம் அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். .  (இதுவே என் கருத்து).

இவர் ஏன் இளமையில் இறந்தார் ?
இவர் இறக்கவில்லை. இவரே விரும்பித்தான் உடலை விட்டார். அதாவது மகா சமாதி அடைந்தார். 

இவரே நெருங்கியவர்களிடம் நான் நாற்பது வயது வரை வாழ மாட்டேன் என்று கூறியுள்ளதாக சில குறிப்புகள் உள்ளது. (இது அவரின்  தீர்க்க தரிசனத்தை காட்டுகின்றது) அதுபடியே அவர் நாற்ப்பது வயது பூர்த்தியாவதற்கு முன் பூத உடலை நீத்தார். அதாவது மகா சமாதி அடைந்தார் .

ஏன் அவர் நீண்ட காலம் வாழ்ந்திருக்க கூடாது என்ற கேள்வி எழலாம். எனக்கு தெரிந்து பிறவியின் உண்மையை, நோக்கத்தை உணர்ந்த எவரும் இந்த பூமியில் பூத உடலுடன் வாழ விரும்ப மாட்டார். 

ஏன் சந்நியாசிகள் மாமிசம் சாப்பிடுவதில்லை?


மாமிசத்திற்கும் காமத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. மாமிசம் உடலில் "அந்த" சக்தியை மிக அதிகமாக்குகின்றது. 
(மாபிள்ளைக்கு நாட்டுக்கோழி அடிச்சு கொழம்பு வைங்க அப்படின்னு சொல்றாங்க இல்ல அது இதுக்குத்தான். )

  அதை வெளியேற்றியே ஆகவேண்டிய நிலைக்கு ஒருவன் தள்ளப்படுகிறான். இந்த நிலையை தவிர்ப்பதற்க்காகவே சந்நியாசிகள் மாமிசம் புசிப்பதில்லை.  இந்த நிலைக்கு ஒருவன் தள்ளப்பட்டால் அவன் எப்படி சந்நியாசத்தை கடைபிடிக்க முடியும். நித்தியானந்தா மாதிரி  அல்லவா ஆக நேரிடும். 

(திபெத்திய துறவிகள் மாமிசம் மறுப்பதில்லை, அவர்கள் குளிரான பகுதியில் வசிப்பதால் உடலில் வெப்ப நிலையை சீர் செய்ய இது உதவுகின்றது. ஆதலால் அவர்கள் மாமிசம் மறுப்பதில்லை. )

உயிர்களை கொள்ளுதல் கூடாது என்பதும் ஒரு காரணம்.

மாமிசம் சாப்பிடுதல் உடலில் துர்நாற்றமுள்ள வியர்வையை உருவாக்குகின்றது.  இதை அவர்கள் விரும்புவதில்லை.
"நீ எதை புசிக்கிறாயோ அதுவாவாய்" என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை உள்ளது.( மாமிசம் உண்டால் அந்த மிருகத்திற்க்குண்டான மிருகத்தனமும், காமும் ஏற்ப்படும் .)

மாமிசம் மறுப்பதால் மனிதன்  நீண்ட காலம் இளமையுடன் வாழ முடியும்.  இன்னும் பல காரணங்கள் இருந்தும் இந்த சில காரணங்களினாலும் சந்நியாசிகள் மாமிசம் புசிப்பதில்லை. 
(உங்களில்  பல  பேருக்கு  இதை  பற்றி  தெரிந்திருக்கும்  என  நினைக்கின்றேன்)


ஞாயிறு, 1 மே, 2011

"கோ" இளைங்கர்களுக்கு சொல்லும் செய்தி என்ன?


"கோ" சில பல திருப்பங்கள் நிறைந்த படம். நல்ல படம் பார்க்கவேண்டும் என்ற ஆவல் உள்ளவர்கள் இதை பார்க்கலாம். 

படத்த்தின் மிகப் பெரிய பலமே விறு விறு திரைக்கதையும், இயக்கமும் தான். 

துவக்கமே பட்டய கிளப்புது...கொஞ்சம் நம்ப முடியலைனாலும் கூட.

ஜீவா புகைப்படக்காரரா நல்ல நடிச்சிருக்கார்...
அஜம்ல்....அரசியலில் ...இவருக்கு இது ஒரு நல்ல படமா அமைஞ்சிருக்கு 
கார்த்திகா...என்ன சொல்றதுனே தெரியல 
பியா...நல்ல நடிப்பு 

 எல்லோரும் அவங்க செயல செவ்வனே செஞ்சிருக்காங்க

படத்தின் மிகப் பெரிய எரிச்சல் பாடல்கள். கண்ட கண்ட நேரத்தில் வந்து உயிரை வாங்குது. 

 ஒரு பொடியன் பியாவை ஜொள்ளுவது போன்ற காட்சிகள் தவிர்த்திருக்கப்பட வேண்டிய காட்சிகள்.

இளைங்கர்கள் என்ன செய்தா ஆட்சிய புடிக்க முடியும் அப்படின்னு சொல்ல வராங்க ஆனா அத சொல்லமா(மறைமுகமா அவங்களுக்கு செய்தியும் இருக்கு...அத புரிஞ்சிக்கிறது  கொஞ்சம் சிரமம் தான் )...எது பத்திரிகை  தர்மம் அப்படின்னு சொல்றாங்க.


வள்ளுவர் சொன்ன குறளோட படம் முடியுது  அது என்ன குறள்
"பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்குமெனின்"

மேல சொன்ன குறள் தாங்கோ இந்த படம் இளைங்கர்களுக்கும், பத்திரிக்கைக் காரர்களுக்கும் சொல்லும் செய்தி.  

படம் தேர்தலுக்கு முன்ன  வந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்....ஓய்வு நேரம் உள்ளவர்கள் இந்த படத்த தைரியமா பார்க்கலாம்.


  




Related Posts Plugin for WordPress, Blogger...