(நேயர் விருப்பம்: வாசகி சுந்தரி அவர்கள் புட்டபர்த்தி சாய் பாபா ஏன் சந்நியாசி ஆனார்? என்ற கேள்வி எழுப்பினார், அந்த கேள்விக்கான ஒரு சிறு அலசலே இது.நேற்று தவிர்க்க முடியாத காரனங்களால் பதிவிட முடியவில்லை. நேற்றைய பதிவை எதிர்பார்த்தவர்கள் மன்னிக்கவும்.)
.
.
சாய் பாபாவின் ஜாதகம்: விருசிக லக்னம், லக்னத்தில் சனி, சுக்கிரன், சூரியன் மற்றும் புதன். இரண்டில் கேது, மூன்றில் குரு, ஆறில் செவ்வாய்,எட்டில் ராகு மற்றும் சந்திரன்.
அவருடைய ஜாதகத்த பார்த்த உடனே கண்ணுக்கு தெரிவது...அவருடைய லக்னத்தில் நான்கு கோள்கள் உள்ளது.
யாருடைய ஜாதகத்தில் நான்கு அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட கோள்கள் ஒரே வீட்டில் உள்ளதோ அவர்கள் சன்னியாசியாய் ஆவார் என்பது ஒரு விதி. அந்த விதி இவருக்கு சரியாக நடந்துள்ளது. (இவருக்கு மட்டும் அல்ல பெரும்பாலானோருக்கு இந்த விதி பொருந்தியுள்ளது. இந்த அமைப்புள்ளவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டுள்ளனர். .....இந்த அமைப்புள்ள சிலர் திருமணத்திற்கு பிறகு கூட சந்நியாச வாழ்க்கைக்கு மாறிவிடுவர்.)
யாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்படும்? என்ற பதிவில் தியான அனுபவம் யாருக்கு ஏற்படும் என்று குறிப்பிடிருந்தேன்.
அதில் சொல்லாத ஒரு விடயம் . லக்னாதிபதியும், லக்னமும் ஐந்தாம் வீடு, ஐந்தாம் அதிபதி, கேது மற்றும் குரு இவர்களுடன் சம்பந்தம் பெற்றாலும் ஒருவருக்கு ஆன்மீக ஈடுபாடு ஏற்படலாம்.
கொஞ்சம் ஆழமாக சென்று பார்த்தால்... ...
விருசிக லக்னத்தில் பிறந்த சாய் பாபாவின் லக்னாதிபதி செவ்வாய், மேஷத்தில் கேதுவின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். ஐந்தாம் அதிபதியான குரு, லக்னாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். இந்த தொடர்பும் அவருக்கு ஆன்மீக மற்றும் சந்நியாச வாழ்க்கையை அளித்திருக்கும். தங்கள் கருத்து?
சாய் பாபா பற்றிய மற்றொரு பதிவிற்கான சுட்டி.
சாய் பாபா பற்றிய மற்றொரு பதிவிற்கான சுட்டி.