பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது வானம் அல்லது ஆகாயம் என்று ஒரு பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் அதற்கு அடுத்து பிரபஞ்சத்தில் என்ன நிகழ்ந்தது என்று பார்ப்போம்.
நான் பல மத சமபந்தமான நூல்களை மேய்ந்த பொழுது அனைத்து நூல்களும் பிரபஞ்சத்தில் இரண்டாவது தோன்றியது நிலம் அல்லது பூமி என்றே கூறுகின்றது. ஆனால் அறிவியலின் படியும் ஆன்மீக உள்ளுணர்வின் படியும் இதில் எனக்கு உடன்பாடில்லை.
பிரபஞ்சத்தில் இரண்டாவது காற்றுதான் உருவாகியிருக்க வேண்டும்.(அந்த காற்று ஹைட்ரஜனாக இருக்கலாம்) அந்த காற்றானது காலப்போக்கில் வெப்பமடைந்து சில இடங்களில் நெருப்பு பிழம்பாக மாறியது. காலப்போக்கில் இந்த நெருப்பு பிழம்பே வெடித்து சிதறி இருக்கலாம். பிறகு சில காலம் கழித்து நீர்/மழை உண்டாகிறது(H2O- ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்தது தான் நீர்).
இந்த மழையானது நெருப்பு பிழம்பின் மீது படும்போழுது அது குளிர்ந்து நிலம் உருவானது. (அதாவது பூமி போன்றவை). இப்படி உருவான பிரபஞ்சமானது விரிந்து கொண்டே செல்கிறது. பிறகு சில காலத்திற்கு பிறகு அது சுருங்குகிறது. அனைத்தும் அணுவை விட மிகச்சிறிய புள்ளியாக சுருங்கிறது. அழுத்தம் காரணமாக அது வெடித்து சிதறுகிறது. அந்த வெடிப்புதான் பெரு வெடிப்பு எனும் "big bang".
மீண்டும் பிரபஞ்சம் விரிவடைகிறது பல காலத்திற்கு பிறகு மீண்டும் சுருங்குகிறது மீண்டும் பெரு வெடிப்பு . இவ்வாறு இது ஒரு தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது . என்பது ஒருவகையான பிரபஞ்ச தோற்றத்தை பற்றிய கருத்து.
இதைத்தான் கீதையில் கண்ணபிரான் நான் பிரபஞ்சத்தை உருவாக்கி அழித்து மீண்டும் உருவாக்குகிறேன் என்று சொல்வதாக வைத்துள்ளனர்.
இப்பொழுது இந்த கருத்தின் படி பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது ஆகாயம், இரண்டாவது காற்று, மூன்றாவது நெருப்பு, நான்காவது நீர், ஐந்தாவது நிலம். இதைத்தான் ஐம்புதங்கள் என்பர்.
இவை ஐந்தும் இல்லையேல் யாரும் இல்லை. இவை ஐந்துமே அனைத்திற்கும் முதலானது. அனைத்திற்கும் ஆதாரம் இதுவே. ஆதலால் தான் என்னவோ இதை தெய்வமாக வழி பட ஆரம்பித்தனர் பண்டைய மக்கள்.
இந்த பிரபஞ்சத்திற்கு, இயற்கை சக்திக்கு சிவம் என்று பெயரிட்டனர். அதுதான் இன்றைய முக்கியமான ஐந்து சிவன் ஆலயங்கள்.
அவற்றை பஞ்சபூத ஆலயங்கள் என்பர்
சிதம்பரம் எனும் திருச்சிற்றம்பலம் - ஆகாயம்
காலஹஸ்தி எனும் திருக்காளத்தி - காற்று
திருவண்ணாமலை- நெருப்பு
திருவானைக்காவல் - நீர்
காஞ்சிபுர ம் எனும் திருக்காஞ்சிபுரம் - நிலம்
இங்கே இந்த முதலில் உருவான எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற ஐந்து இயற்க்கை சக்தியை தான் மக்கள் சிவனாக வழிபடுகிறார்கள்.
எல்லாம் சிவமயம் என்பது இவற்றைத்தானோ?